tag:blogger.com,1999:blog-2879977392643548119.post7369590334940172194..comments2023-10-17T14:11:12.789+01:00Comments on நிலவு பாட்டு: இதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2879977392643548119.post-64580388116794901752009-10-18T21:48:05.142+01:002009-10-18T21:48:05.142+01:00சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்...சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க வல்லுநர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்ரோபர் 2009, 09:06.26 AM GMT +05:30 ]
சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது.

ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர்.

அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.

வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை

- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது.

- குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.

- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.

இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்Anonymousnoreply@blogger.com