டெல்லியைச் சேர்ந்த சி.எம்.எஸ். என்ற ஊடக ஆய்வு மையம் தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் ஆபத்தான போக்கு என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் பணத்திற்காக ஓட்டை விற்பவர்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடம் வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பீகார், மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஓட்டை விலை பேசுபவர்கள் குறைவாகவே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Thursday, December 25, 2008
பணம் கொடுத்து ஓட்டுவாங்குதல் : கர்நாடகம் முதலிடம்
Posted by நிலவு பாட்டு at 11:17:00 PM 0 comments
பாகிஸ்தானை பாதுகாப்பது எப்படி? கிலானி திட்டம்
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் என்று ஆதாரஙகளுடன் இந்தியா எடுத்துக் கூறியது. ஆனால் பாகிஸ்தான் அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை.
நிலைமை இப்படியிருக்க முப்படை தளபதிகளுடன் இந்தியப் பிரதமர் ஆலோசனை நடத்தினார். போர் காலங்கள் மற்றும் அவசர காலங்களில் மட்டுமே இந்த ஆலோசனை நிகழும் என்று பேசப்பட்டது.
மேலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்களின் தயார் நிலையை அறிந்து வருவதற்காக ராணுவ தளபதி தீபக் கபூர் சென்றார். ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டி உள்ளடங்கிய சில பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
போர் வந்தால் உடனடியாக எப்படி செயல்படுவது குறித்து கமாண்டர்களுடன் தளபதி ஆலோசனை நடத்தினார். போர் நடந்தால் எல்லைப் பகுதிக்கு உடனடியாக வீரர்களை அழைத்துச் செல்ல விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இப்போது, இந்திய போர் விமானங்கள் பொக்ரான் பகுதிகளில் குறி தவறாமல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்துள்ளன. ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் குண்டு வீச்சில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கான ஒத்திகையையும் செய்து பார்த்துள்ளது இந்திய ராணுவம்.
இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் என்கிற நிலை இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி,
மும்பை தாக்குதல் சம்பவத்தால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்குமாறு இந்தியாவை சர்வதேச சமுதாயம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
மும்பை சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசுக்கு மக்களிடம் இருந்து வற்புறுத்தல்கள் இருந்து வருகின்றன. இதனால் இந்தியா ஏதாவது சாகச முயற்சியில் ஈடுபடலாம். ஆனால் பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்பதை இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால் இந்தியா ஏதாவது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாகிஸ்தானை பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும். அதறகான திட்டம் இருக்கு. எனவே பாகிஸ்தானை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடவேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Posted by நிலவு பாட்டு at 11:17:00 PM 0 comments
வாஜ்பாய்க்கு கலைஞர் வாழ்த்து தந்தி
முன்னாள் பிரதமர் வாய்பாய் தனது 85வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். மும்பை தாக்குதலில் ஏராளமானோர் பலியானதால் தனது பிறந்த நாளை பெரிதாக கொண்டாடப்போவதில்லை என்று முடிவெடுத்திருந்தார் வாஜ்பாய்.
ஜனாதிபதி,பிரதமர், அத்வானி, உட்பட முக்கிய தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தந்தி அனுப்பினார்.
Posted by நிலவு பாட்டு at 11:12:00 PM 0 comments