சிறிலங்காவை இந்தியா ஆதரிக்கக்கூடாது: டி.ராஜா
இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது.
அதனை இந்தியா ஆதரித்தால் அது தமிழ் மக்களை கைவிட்டதாகவே கொள்ளப்படும். சிறிலங்காவுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்களை ஏனைய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன்வைப்பதற்கு எதிராகவே சிறிலங்கா இந்த தீர்மானத்தை முன்வைக்க உள்ளது.
இறுதியாக நடைபெற்ற போரில் பாரிய போரியல் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவளித்தால் அது சிறிலங்கா அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவே கொள்ளப்படும் என்றார் அவர்.
சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதம் ஒன்றை ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக் குழு நாளை மேற்கொள்ள உள்ளது.
47 அங்கத்துவர்களை கொண்ட சபையின் 17 அங்கத்துவ நாடுகளின் வேண்டுகோள்களைத் தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Monday, May 25, 2009
17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள், சிறிலங்காவை இந்தியா ஆதரிக்கக்கூடாது: டி.ராஜா
Posted by நிலவு பாட்டு at 5:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Good post.
But I don't think India would do the needful, to accuse Srilanka of crimes committed against humanity.
Post a Comment