சிறிலங்கா அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள 150,000 மேற்பட்ட பொதுமக்களை வெளியேற விடாது மிகக்கடுமையான தாக்குதலினை தொடர்ந்து சிறிலங்கா படைகள் மேற்கொண்டுவருகின்றன.
இது இவ்வாறு இருக்கையில், பாதுகாப்பு வலயத்தில் தற்போது பொதுமக்கள் இல்லை என்றும், அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக சிறிலங்கா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதனை வைத்துப்பார்க்கும் போது அங்கு தங்கியிருக்கும் மக்கள் அனைவரையும் கொன்றெழிப்பதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாக உள்ளது.
தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் ஆனால் தங்களால் சிறிலங்கா அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு எந்த வசதியினையும் அல்லது எந்த வாய்ப்புக்களையும் வழங்காது சிறிலங்கா அரசு மிகக்கடுமையான தாக்குதலினை தொடர்ந்து நடாத்திக்கொண்டு இருப்பதாக தெரியவருகின்றது.
தற்போது வன்னிப்பகுதியில் மிகவும் வேதனை தரும் அளவுக்கு மனிதப்பேரவலம் ஒன்று நிகழ்ந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
Monday, May 18, 2009
தடயமின்றி வன்னி மக்கள் அனைவரையும் கொன்றொழிக்க முயலும் மகிந்த, அதன் ஒரு பகுதியே உலக கவனத்தை திசைதிருப்புகிறார் பிரபாகரன் இறந்ததாக கூறி
Posted by நிலவு பாட்டு at 9:58:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment