Monday, May 25, 2009

flash news:மும்பை விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கி சூடு

மும்பை விமானநிலையத்தில் திடீரென்று சிலர், துப்பாக்கிகளுடன் நுழைந்து சரமாரியாக சுட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பத்தில் விமானநிலைய ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.

மும்பை விமான நிலைய சரக்குப் பிரிவு வளாகத்திற்குள் திடீரென்று ஆயுதம் தாங்கிய 3 பேர் கொண்ட கும்பல் இன்று காலை நுழைந்தது. பின்னர் அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளிகளைக் கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தீவிர விசாணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

0 Comments: