நண்பர்களே வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லியாச்சா, இந்த கொலைகார கூட்டணியை எதிர்த்து வாக்களிப்பதற்கு, இல்லையென்றால் இப்போதே இந்த வேலையினை ஆரம்பியுங்கள். உங்களால் முடிந்த அளவு எத்தனை வாக்குகளை மாற்ற முடியுமோ அத்தனை வாக்குகளை மாற்றுங்கள். இன்னும் ஒரே ஒரு நாள்தான் இந்த கொலைகார கூட்டணியின் சகாப்தம் முடிவதற்கு.
நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக்கைப்பற்றி வெற்றி வாகை சூடும் வாய்ப்புகள் இருப்ப தாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் தோல்வியைத் தழுவும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து களமிறங்கியுள்ள தேசிய கட்சியான பிஜேபி இரண்டு இடங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 40 தொகுதிகளிலும் முதல் முறை யாக போட்டியிடும் தேமுதிக 2-வது இடத்துக்கு கடுமையாக போராடுவ துடன் ஒன்றிரண்டு தொகுதிகளை கைப்பற்றி நாடாளுமன்றத்தில் கால் பதிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வும் கூறப்படுகிறது.
15-வது மக்களவைத் தேர்தல் 5 கட்டமாக நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவு பெற்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (13-ம் தேதி) நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதிக்கும் நாளை ஒரே நாளில் வாக்குப்பதிவு நடை பெறுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. இதில் அதிமுக 23 இடங்களிலும் பாமக 7 இடங்களி லும், மதிமுக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தலா 3 தொகுதிகளிலும் போட்டி போடுகின்றனர்.
திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றனர்.
இது தவிர, முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம், இதுவரையிலும் எந்த அரசியல் கட்சியும் முன் வராத வகையில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
மத்தியில் புதிய கட்சியை உருவாக்க முனைப்புடன் செயல்படும் பிஜேபி இம்முறை தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளையும் தவிர்த்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகளின் ஆதரவோடு 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி, கொங்குநாடு பேரவை, சமாஜ்வாதி கட்சி, பாமமுக, இலட்சிய திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன. முதலாவதாக கூட்டணி பலம். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்குள்ள ஓட்டுகள் அதிமுகவின் நிரந்தரமான ஓட்டு களோடு சேரும்போது, அதன் பலம் கணிசமாக உயர்ந்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
இந்த முறை தேர்தல் பிரச்சாரமும், அதிமுக அணிக்கு ஒரு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. நாற்பது தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா தேசிய பிரச்சனைகள், மாநில பிரச்சனைகள், உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசி உறுதி அளித்ததுடன், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் விளக்கமாக பேசி வந்தார். கூட்டணிக்கட்சிகளின் சார்பிலும், பிரகாஷ்காரத், டி.ராஜா, ஏ.பி.பரதன், வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், என்.வரதராஜன் என பல முனைப்பிரச்சாரம் இந்த அணிக்கு பலம் சேர்த்தது.
திமுக அணியில் இந்த முறை முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் மட்டுமே பிரதான பிரச்சாரகராக வலம் வந்தார். 1957 முதல் பல ஆண்டுகளாக பல்வேறு தேர்தல் களங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் கருணாநிதி இம்முறை உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, திருச்சி தவிர வேறு எங்கும் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை.
ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக பேராசிரியர் அன்பழகன் பிரச்சாரம் செய்தாலும் அது போதுமானதாக இல்லை என்றே கருதப்படுகிறது. மேலும் காங்கிரசும், கட்சியின்அகில இந்திய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் வருகை வந்தார்கள், சென்றார்கள் என்ற அளவில்தான் இருந்ததே தவிர, இதனால் எந்தப் பயனும் இல்லை என்றே கூறப் படுகிறது. மொத்தத்தில் பிரச்சாரத்திலும் அதிமுக அணியை விட திமுக அணி பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் திமுக அணியைவிட அதிமுக கூட்டணி இரு மடங்கு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கூறப் படுகிறது. தவிரவும் மத்திய, மாநில ஆளும் கட்சிகளின் மீது மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகளில் கோபங்கள் உள்ளன. குறிப்பாக மின்தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் மத்திய, மாநில ஆளும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதைவிட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சனை தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதில் அதிமுக அணிக்கே அதிக ஆதரவு இருப்பது கண்கூடாக தெரிகிறது. ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பகிரங்கமாக இந்த அணிக்கு ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்று பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன.
40 தொகுதிகளில் 30 தொகுதிகள் அதிமுக அணிக்கு கிடைக்கக்கூடும் என்று அந்த கணிப்புகள் கூறுகின்றன. இந்த அலையில் சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் திமுக மூழ்கும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் தனி அணி அமைத்துப் போட்டியிடும் பிஜேபி கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல தொகுதிகளில் 2-வது இடத்துக்கு கடுமையாக போராடும் தேமுதிக, ஓரிரு தொகுதிகளில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் முதல் முறையாக கால்பதிக்கக்கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றன.
இது வரையிலும் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கான பண விநியோகம் தாராளமாக இருப்பதாக ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், ஜனநாயகமே வெல்லும் என்று மக்கள் உறுதியோடு நம்புகிறார்கள்.
Tuesday, May 12, 2009
அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னணி
Posted by நிலவு பாட்டு at 1:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ஈழத்து நாய்களே நாளைக்கு உங்களுக்கு தமிழ்நாட்டில் சூத்தடிக்கும் நாள். வரிசையாக வந்து சூத்து கொடுங்கோ.
சிங்கள நாயே, செருப்பால் அடி வாங்க போற ஓடி பொயிடு
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி
Post a Comment