பழ.நெடுமாறன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு
இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இயக்குநர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், ‘’பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்த போது இரவு 10 மணிக்குள் கூட்டத்தை முடித்து விடுவோம் என்று கூறியிருந்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி இரவு 10.50 வரை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பழ.நெடுமாறன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
Saturday, May 30, 2009
நேரம் தவறியதால்(punctuality) நெடுமாறன் மீது வழக்கு, கலைஞர் காமெடி அளவே இல்லை, எங்கே சென்று முட்டி கொள்வது
Posted by நிலவு பாட்டு at 8:51:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நல்ல வேளை தே.பா போடாமல் இருந்தாரே, அது நினைத்து சந்தோச பட்டு கொள்ள வேண்டும்.
எங்கள் ஊரில் பிரச்சாரத்துக்கு கலைஞர் வரவேண்டிய நேரம் இரவு பத்து ஆனால் கலைஞர் வந்ததோ மறுநாள் அதிகாலை 4.
இதென்ன லூசுத்தனமான பதிவு.. பத்து மணிக்கு மேல கூட்டம் நடத்த கூடாதுன்னு பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்ட ஒரு ஆணை அதை இவங்க மீறினால் கைது செய்யாம வேற என்ன செய்வாங்களாம்? தேர்தல் சமயத்திலேயே இதுக்கு பயந்து யாரும் இப்பொழுது பத்து மணிக்கு மேல கூட்டம் நடத்துறது இல்ல.. இது கருணாநிதி என்ன செய்வாரு? பரபரப்புக்காக இது மாதிரி தலைப்பு வெச்சிட்டு திரியாதிங்க..
அது சரி, சொல்ல வந்ததை சுருக்கமாக, அழகாக பதிவு செய்துள்ளார் நிலவுபாட்டு, லூசுத்தனமாக சந்தோஷ் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
நெடுமாறன் மேல் உள்ள கோபத்தில் இப்படி ஒரு லூசுதனத்தை கருணாநிதி எடுத்துள்ளார்.
எங்கள் ஊரில் திமுக வெற்றி விழா 2,3 நாட்களாக இடைவிடாமல் கொண்டாடப்படுகிறது.
இவர்கள் மேலும் வழக்கு போடுவார்களா.
Post a Comment