Friday, May 22, 2009

சிங்கள அரசின் போர்க்குற்றங்கள்:ஆராய்கின்றது அமெரிக்கா

இலங்கையில் ராணுவம் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது.


கிளி நொச்சி வீழ்ந்ததற்கு பிறகு நடந்த 3 மாத போரில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

போரில் இறந்தவர்களை அந்தந்த இடங்களிலேயே குழி தோண்டி புதைத்தனர். பல இடங்களில் கூட்டமாக ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர்.

இறுதியாக போர் நடந்த பாதுகாப்பு பகுதியை புதுமாத்தனன், முள்ளிவாய்க்கால் பகுதியில் தான் அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த இடங்களில் எங்கு பார்த்தாலும் புதை குழிகளாக இருக்கின்றன.

சர்வதேச விதிமுறைகளை மீறி சிங்கள ராணுவம் தாக்கியதால் இப்போது சர்வதேச குழுக்கள் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமுன் இன்று கொழும்பு செல்கிறார். அவரும் போர் பகுதிகளை பார்க்க விரும்பம் தெரிவித்து இருக்கிறார்.

எனவே ஏராளமானோர் கொல்லப்பட்டதை மறைப்பதற்காக புதைத்து இருந்த பிணங்களை தோண்டி எடுத்து எரிக்கின்றனர். இறுதி போர் நடந்த இடத்தில் ஏராளமானோர் பதுங்கு குழிக்குள்ளேயே பிணமாக கிடந்தனர். அவர்கள் உடல்களையும், வேக வேகமாக அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

பாதுகாப்பு பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த வில்லை என்று ராணுவம் கூறியது. ஆனால் கனரக ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக ஏராளமான வெடிகுண்டு சிதறல்கள் கிடக்கின்றன. குண்டு வீச்சில் ஏற்பட்ட பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களை மூடுகின்றனர். ரசாயண குண்டுகள் வீசப்பட்டதை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஆதாரங்கள் மறைக்கப்படுகின்றன.

போர் பகுதியில் இருந்த ஆஸ்பத்திரிகள் மீதும் சிங்கள ராணுவம் குண்டு வீசியது.இதை மறைப்பதற்காக ஆஸ்பத்திரி கட்டிடங்களையே முற்றிலும் இடித்து தரை மட்டமாக்குகின்றனர்.

இப்போது அங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை செயற்கைகோள் கேமரா மூலம் ஐ.நா.சபை படம்பிடித்து வருகிறது.

2 Comments:

puduvaisiva said...

நண்பா ஓர் உதவி

http://puduvaisiva.blogspot.com/2009/05/test1.html

puduvaisiva said...

நண்பா எனது வலை பதிவு இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது

it is happen one Date Widget now I am delete it so now is clear