மதிபாலா நீங்கள் ஒரு தமிழின உணர்வாளர் என்று நினைத்த எனக்கு, இன்னும் நீங்கள் உண்மை நிலைமை தெரியாத மாதிரி கருணாநிதியினை ஆதரிப்பது, உங்களின் மேல் சந்தேகத்தினை எழுப்புகிறது. ஏதும் மாமன், மச்சான் எவனும் கட்சியில காண்ட்ராக்ட் எடுத்திருக்கார்களா.
கொஞ்சம் நாட்டுல என்ன நடக்குது தெரியாவிடில் உங்களை மாதிரி ஆட்களுக்காகவே என்னுடைய வலைப்பதிவில் 'சிந்திப்போம், செயல்படுவோம்' என முன் பக்கத்தில் போட்டு வைத்துள்ளேன். அதை கொஞ்சம் சென்று படித்து வருகிறீர்களா.
இப்பொழுதான் புரிகிறது ஏன் தமிழின உணர்வாளர்களை துரத்துவதில் அப்படி பேயாய் ஆடினீர்கள் என்று. அதுக்கு ஒரு பதிவு வேறு அவர்களை துரத்துவதற்கு. தமிழன் மடையனல்ல, எங்களுக்கு துரோகிகளையும், எதிரிகளையும் நன்றாகவே இனம் காண தெரியும்.
ஒரு முறை சாத்திரி எழுதிய உடன்பிறப்பு பதிவினை படித்து வாருங்கள் நண்பரே. சித்தம், பித்தம் அனைத்து தெளியும் ஒரு நடுநிலையாளராக இருந்தால், கட்சியில் காண்ட்ராக்ட் ஏதும் எடுத்திருந்தால் நீங்கள் எழுதுவதில் தவறில்லை தொடருங்கள் தமிழின கொலைகார கூட்டணி ஆதரிப்பதினை தொடருங்கள்.
சாத்திரி அவர்களின்
உடன் பிறப்பே..
Tuesday, May 5, 2009
மதிபாலா அவர்களின் கருணாநிதி மோகம் எதுவரை
Posted by நிலவு பாட்டு at 8:09:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ம்ம். ரசித்தேன்.
நன்றி.
மதிபாலா நீங்கள் ஒரு தமிழின உணர்வாளர் என்று நினைத்த எனக்கு, இன்னும் நீங்கள் உண்மை நிலைமை தெரியாத மாதிரி கருணாநிதியினை ஆதரிப்பது, உங்களின் மேல் சந்தேகத்தினை எழுப்புகிறது. ஏதும் மாமன், மச்சான் எவனும் கட்சியில காண்ட்ராக்ட் எடுத்திருக்கார்களா.//
மாமன் மச்சான் காண்டிராக்ட் எடுத்திருக்கிறார்களா என்ற கேள்வியின் ஆழத்தை அறிந்து வியந்தேன்.
*****
கொஞ்சம் நாட்டுல என்ன நடக்குது தெரியாவிடில் உங்களை மாதிரி ஆட்களுக்காகவே என்னுடைய வலைப்பதிவில் 'சிந்திப்போம், செயல்படுவோம்' என முன் பக்கத்தில் போட்டு வைத்துள்ளேன். அதை கொஞ்சம் சென்று படித்து வருகிறீர்களா.//
எல்லா பதிவினையினையும் படித்திருக்கிறேன் நண்பரே. நன்றி.
சிந்தித்தேன் , அதன்படியே செயல்படுகிறேன்.
*****
இப்பொழுதான் புரிகிறது ஏன் தமிழின உணர்வாளர்களை துரத்துவதில் அப்படி பேயாய் ஆடினீர்கள் என்று. அதுக்கு ஒரு பதிவு வேறு அவர்களை துரத்துவதற்கு. தமிழன் மடையனல்ல, எங்களுக்கு துரோகிகளையும், எதிரிகளையும் நன்றாகவே இனம் காண தெரியும்.//
இதில் என்ன தவறு. நீங்கள் அன்னப்பறவை போல , நாங்கள் அவ்வளவு ஷார்ப் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவாக மிகச்சரியாக அடையாளம் காணத்தெரியவில்லை என்றுதான் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியினை.
*****
ஒரு முறை சாத்திரி எழுதிய உடன்பிறப்பு பதிவினை படித்து வாருங்கள் நண்பரே. சித்தம், பித்தம் அனைத்து தெளியும் ஒரு நடுநிலையாளராக இருந்தால், கட்சியில் காண்ட்ராக்ட் ஏதும் எடுத்திருந்தால் நீங்கள் எழுதுவதில் தவறில்லை தொடருங்கள் தமிழின கொலைகார கூட்டணி ஆதரிப்பதினை தொடருங்கள்./
படித்தேன். நன்றிகள்.
ஆனால்.....உங்களால் இன எதிரியை ஒரே ஒரு உறுதிமொழியினால் நம்ப முடிகிறது. எங்களால் இயலவில்லை...அவ்வளவுதான். கடந்து வந்த பாதையை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் என்கிறேன். நீங்கள் பார்க்கத் தேவையில்லை என்கிறீர்கள்.
இருவரும் அவரவர் நிலையிலேயே இருக்கப் போகிறோம். இதற்கு எதற்கு விவாதம் ???
உங்கள் நம்பிக்கையை நான் தடுக்கவில்லை. தவறான பாதை என்று சுட்டிக்காட்ட மட்டுமே செய்கிறேன். வேறென்ன சொல்ல?
இருப்பினும் என்னையும் ஒரு சக மனிதனாக , தமிழனாக , பதிவராக மதித்து இப்படியொரு பதிவினை இட்டு என் நோக்கத்தை நோக்கி கேள்வியெழுப்பி இருக்கும் உங்களுக்கு எனது வணக்கங்கள்...
மிகுந்த நன்றிகள்.
அப்புறம் சொல்ல மறந்த இன்னொரு விடயம். என் பதிவினை தொடர்ச்சியாக படித்து வந்திருந்தீர்களானால் நான் நடுநிலையாளன் அல்லன் , முற்றிலும் திமுகவின் அனுதாபி , கலைஞர் மேலும் , கழகத்தின் மேலும் தீவிரப் பற்றுக்கொண்டவன் என்ற உண்மையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஆனால் , இச்சூழலில் நான் நடுநிலையாளனாக இருந்தாலும் கூட இதே நிலையைத் தான் எடுத்திருப்பேன்.
என் நிலை எதுவென்று உடனே கேட்காதீர்கள்.
எதற்குமே உதவாத குழப்பகரமான நிலை அது.
"""முற்றிலும் இந்தப் பழியை கலைஞர் மேல் போட்டு ஓட்டுவேட்டைக்காக ஈழத்தை தன் தலையில் தூக்கிச் சுமக்கிறது அதிமுக + பாமக + மதிமுக கூட்டணி என்பதே என் கருத்து. முற்றீலும் சரியான மாற்று அது அல்ல என்பதே சரி என்று எண்ணுகிறேன்.
அப்படி ஒரு கூட்டணிக்கு திமுக விற்கு மாற்றாக வாக்களிப்பது என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஈழத்தமிழர்களின் அவல நிலையை தொடரச்செய்யும் என்பதே என் கருத்தாக இருக்கிறது. அதே சமயம் ஈழத் தமிழர் அவல நிலையில் காங்கிரசின் பங்கினை குறைத்து மதிப்பிடவும் இல்லை.
கலைஞரை தீவிரமாக விமர்சித்த எனக்கு இந்த மாற்றம் என்னுள் வந்ததற்கு மிக முக்கியக் காரணம் , ஒரு வீடியோ , அதற்கான இணைப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை.
ஆனால் வணங்காமண்ணைக் கூட கருணாநிதிதான் வராமல் தடுப்பதாக ஒரு ஈழத்தமிழர் கதறுகிற ஒரு காட்சி. அத்தகையதொரு தவறான எண்ணம் கலைஞரின் பால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் போது ஏன் கலைஞரின் பால் நீள வேண்டும் என்ற கேள்வியின் வெளிப்பாடே அது.....
அவர்கள் / ஈழத்தமிழர்கள் கலைஞரை எதிரியாகக் கருதுகிறார்கள் போலும். எதிரி எதுவுமே செய்யவில்லை என்று வருத்தப்படுவது வீண்தானே ? அவர்கள் எதிரியாகக் கருதுபவர்களை இங்கே உள்ளவர்கள் துரோகிகளாக உருவகம் செய்து கொள்கிறார்கள்.
அதனால் இன்றைக்கும் ஈழத்தமிழினம் அழிவினை தினந்தோறும் சந்திக்கும் போதும் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள் ஈழத்துக்காக என்ன செய்தார்கள் என்று சொல்லி வாக்குக்கேக்காமல் கலைஞர் எதுவும் செய்யவில்லை என்று வாக்குக் கேட்பது மட்டும் துரோக அரசியல் இல்லையா என்பதே கேள்வியின் சாராம்சம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஏன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பேரில் எதுவித கவன் ஈர்ப்போ , போராட்டமோ நடை பெறவில்லை என்பதும் எனது அடுத்த கேள்வி.
எம்மால் இன்று செய்ய முடிந்ததெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு நாம் விடும் இரண்டு சொட்டுக் கண்ணீர். அதைத்தான் செய்து வருகிறோம்.
அந்தக் கண்ணீருக்காக செய்ய வேண்டியவைகளைச் செய்வதெல்லாம் உங்களைப் போன்ற தமிழுணர்வு மிக்கவர்கள் , உண்மையான தமிழுணர்வாளர்கள் , உண்மையான ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது. ஆகவே , நீங்கள் செய்யுங்கள் .....நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.!
இதற்கு மேலும் எழுத என் மனம் நீளுகிறது.
என் மூளை தடுக்கிறது.
வருகைக்கு நன்றி மதுபாலா, கோபத்தில மப்புல வருவீங்கன்னு பார்த்தால் இப்படி சொதப்பிட்டீங்களே.
ஆனாலும் இந்த கருணாநிதி மேல் ரொம்பதான் பாசமாக இருக்கிறீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
நம்முடைய் இன்றைய தேவை கொலைகார கூட்டணியை துரத்துவதே. ஒத்துழைப்பு கொடுங்கள்.
Post a Comment