Saturday, May 2, 2009

ஜெ தமிழீழம் குறித்து மகிழ்ச்சி, கையாலாகதவனோ இன்னும் சூது, சூழ்ச்சி,கபடம், பொய், பொறாமை, பித்த்லாட்டம் வயித்தெரிச்சலுடன்

லாரி, லாரியாக ஆயுதம் அனுப்பி தமிழர்களை கொல்பவர்களை ஆதரிக்கும் இந்த கொலைகார கூட்டணியை தமிழ் மக்கள் தோற்கடித்தே ஆக வேண்டும்.

இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில் - ஆக்கபூர்வமாக - துணிச்சலாக - பகிரங்கமாக - அச்சம் இன்றி - ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எனக்கு உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் பெருமிதம் வெளிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகெங்கும் இருந்து கடந்த சில நாட்களாக எனக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும், E-mail எனப்படும் மின்னஞ்சல்களும் செல்லிடப்பேசி வழியிலான குறுந்தகவல்களும் தொலைநகல் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ’

இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில், ஆக்கப்பூர்வமாக, துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சம் இன்றி, ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

"எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருவதாக, உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது", என்று நன்றி சொல்லி, கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும் நிலையில், நம் கைக்கு எட்டிய தூரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி, சிறிதும் அக்கறை இல்லாத, மத்திய, மாநில அரசுகள், கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போரில் கொல்லப்படுவதெல்லாம் அப்பாவி பொதுமக்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுதமும், பயிற்சியும் தருவதாக கூறப்படுகிறது. இது அநியாயம்; அக்கிரமம்; நம்முடைய பெருமைக்கு உகந்ததல்ல. இதைச் செய்யாதீர்கள் என்று எத்தனையோ முறை நாம் எடுத்துக் கூறினோம். அதற்கெல்லாம் இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

நம்முடைய வரிப் பணத்தில் இவ்வளவு உதவிகளையும் இந்திய அரசு இலங்கைக்குச் செய்தது. அதை தி.மு.க. தயக்கம் இன்றி ஆதரித்தது. தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசின் அத்தனை நடவடிக்கைகளையும் கருணாநிதி ஆதரித்தார்.

புதுடில்லியில் இருந்து தூதுவர்கள் கொழும்பு நகருக்குச் சென்றார்கள். ராஜபக்சவின் தூதுவர்கள் பல முறை டில்லிக்கு வந்தார்கள். இந்தப் பயணங்கள் எல்லாம் மூடு மந்திரமாகவே இருந்தன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களோ தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. செத்து மடிகிறார்கள் தமிழர்கள் அங்கே என்று உலகமே அழுத பொழுது, தந்தி கொடுப்பதும், தொலைபேசியில் பேசுவதும், கடிதம் எழுதுவதுமாக காலத்தைப் போக்கினார் கருணாநிதி.

கருணாநிதியின் முகத்திரை, கிழியும் நேரம் வந்தவுடன், 3 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இந்த நிமிடம் வரை போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்; அதை நிறுத்த வேண்டிய காரணம் இன்னும் வரவில்லை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்ச அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் உரிமை குடிமக்களாக தமிழர்கள் வாழ வேண்டும் என்றால், அங்கே தனி ஈழம் அமைவது தான் ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயம் என்றால், எங்கள் தமிழர் நலன் காக்க, இந்திய இராணுவத்தை அனுப்புவதும் நியாயமே, அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித் தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றிச் செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான், ஒன்றைச் சொன்னால் அதை செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழினம் நம்புகிறது. சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் பேரவை எனக்கு அனுப்பி இருக்கும் செய்தியைக் கேளுங்கள்.

"அம்மா, தாய்மை உள்ளம் கொண்ட நீங்கள், கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத, உறுதியான குணமுடையவர் என அறியப்பட்டவர். நீங்கள் கூறும் வார்த்தைகள், உங்கள் உதட்டில் இருந்து அல்லாமல், அடிமனதில் இருந்து வந்தவை என நாங்கள் முழு மனதாக நம்புகிறோம். உங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு பெரிய ஆன்ம பலம் கிட்டி இருக்கிறது. தங்களுக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றி" என்று Confederation of Tamil Diaspora Organizations in Switzerland என்ற அமைப்பு, எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு, நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, நீங்கள் எனக்கு உதவ வேண்டும். எனக்கு வாக்களித்து உதவ வேண்டும். செய்வீர்களா? உலகத் தமிழர்களுக்கெல்லாம், இருக்கின்ற உணர்வைப் போல, நீங்களும் உணர்வு கொண்டு, எழ வேண்டும். செய்வீர்களா?

இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்றால், என் கரத்தை நீங்கள் பலப்படுத்த வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாம் நாடாள வேண்டும். உங்கள் வாக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வேண்டும், வேண்டும், வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

0 Comments: