இவருடைய தடாலடி, வீரமிகு நடவடிக்கைகள் நமக்கு அனைவருக்கு தெரிந்ததே. அண்ணனின் மகுடத்தில் மேலும் ஒரு கல் வைத்தாற் போல் இருக்கும் அவர் ராசபக்சேயினை அடக்குவது. இது அவருக்கு ஒரு சவாலாக விடப்படுகிறது.
அண்ணன் அஞ்சா நெஞ்சன் தடாலடி அழகிரி இலங்கைக்கு ஏதும் ஆப்பு வைப்பாரா, அல்லது வெறும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதில் மட்டும் வீராதி வீரனாக இருப்பாரா. ஒரு ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதற்கே ரயில்வே அமைச்சரையே கேள்வி கேட்டவர் என்றால், 20000 தமிழ் மக்கள் கொன்ற இலங்கை அரசாங்கத்தை அண்ணன் என்ன பண்ணுவாரோ, பயமா இருக்குது, எதுக்கும் அண்ணண்ட்ட இந்த விசயத்தை கொஞ்சம் மெதுவாகவே சொல்லுங்கள் கழக குஞ்சுகளே.
கண்டிப்பாக இந்த முயற்சியில் இறங்குவாரானால், அழகிரிக்காக களம் இறங்க தயாராக உள்ளோம், அல்லது அண்ணனிடம் கேட்டு அடுத்து வரும் ரஜினி படத்துக்கு ஒரு டிக்கெட் கொடுப்பதற்கு கழக கண்மணிகள் உதவ வேண்டும்.
Sunday, May 31, 2009
அஞ்சா நெஞ்சன் அழகிரி வெறும் ரயில் டிக்கெட் கொடுப்பதுடன் நின்று விடுவாரா?
Posted by நிலவு பாட்டு at 5:23:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
ஈழத்தமிழர் பிரச்சனை தீர்வு - இலட்சியம்.
ரஜினி பட டிக்கெட் - நிச்சயம்.
இது தானே கழகங்களின் கதை?
Post a Comment