நீங்க இருதரப்பினை போர் நிறுத்ததிற்கு அழைத்தால் அப்படிதான், இந்த போரின் சூத்திரதாரியான எங்க ஊரு காங்கிரஸ்-ம், திமுக வையும் அழைத்தாலொழிய இப்பிரச்சனை தீராது. ராசபக்சே மடையன், அவன் இவனுங்க சொன்னததான் சொல்வானுங்க. முக்கியமாக எங்க ஊரு தாதா சோனியா மற்றும் கருணாநிதியினை அழைத்து பேசுங்கள் தலைவா. எங்க ஆளு 3 மணி நேரத்தில் மெரினால காத்து வாங்கினால் அங்கே பெரிய போர் நிறுத்தம் வரும் பாருமய்யா, எங்க ஆளு ஏற்கனவே போர் நிறுத்தம் வாங்கி விட்டான், நீர் என்னனா இன்னும் போர் நிறுத்தம் கேட்கறீர். அழகிரிட்ட சொல்லி உம்மை கவனிக்கனும் போல.
இலங்கையில் போர்நிறுத்தம்: பான்-கீ-மூன் வலியுறுத்தல்
நியூயார்க், மே 6: இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென இருதரப்பினரையும் ஐ.நா.பொதுச் செயலர் பான்-கீ-மூன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வின் மாதாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பான்-கீ-மூன், இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் தொலைபேசியில் பேசிய விவரங்களைத் தெரிவித்தார். போர்நிறுத்தம் செய்வதன் மூலம் அப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்களை விநியோகிக்க வழி ஏற்படும் என்றும், அங்குள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்கு ஐ.நா.வுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ராஜபட்சவிடம் கூறியதாக பான்}கீ}மூன் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கனரக ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் ராணுவம் பயன்படுத்த வேண்டாம் என ராஜபட்சவிடம் கேட்டுக்கொண்டேன். அதே நேரத்தில், சிறுவர்களை படைகளைச் சேர்ப்பதை விடுதலைப் புலிகள் தவிர்க்க வேண்டும், அதே சமயம் போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதையும் அவர்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் பான்-கீ-மூன் கேட்டுக்கொண்டார்.
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பான்-கீ-மூன் வலியுறுத்தினார்.
Wednesday, May 6, 2009
விவரம் தெரியாத பான்கீ, கிட்ட வாரும் காதை கொடும்
Posted by நிலவு பாட்டு at 5:55:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment