Friday, May 8, 2009

ஒரே நோக்கம், 16 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டும்

பாரதிராஜா தலைமையில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டிருக்கும் இயக்குநர் களின் ஒரே நோக்கம், 16 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டும் என்பதுதான். அவர்களின் இந்தப் பயணத்திற்கு அ.தி.மு.க.தரப்பிலிருந்து நிதியுதவி தர முன்வந்த போது, ""யாரிடமும் பணம் வாங்கவேண்டாம். நம் இனத்திற் காக நாம் குரல்கொடுப்போம்'' என்று சீமான் சொல்ல, அதன்படியே பிரச்சாரம் தொடங்கியது. அண்ணா பிறந்த காஞ்சியிலிருந்து தொடங்குவதாக இருந்த பயணத்திட்டம் பெரியார் பிறந்த ஈரோட்டில் 4-ந் தேதி ஆரம்பமானது.

எல்லையிலேயே பாரதிராஜா அணிக்கு பெரியார் தி.க.வினரும் ம.தி.மு.கவினரும் பெரும் வரவேற்பு தந்தனர். பம்பரம் சின்னம் வரையப்பட்ட கொடிகள் கட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பெரியார் நகரில் பாரதிராஜா, சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி, கவுதமன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் மேடையேற்றப் பட்டனர். உணர்வாளர்கள் திரண்டிருந்த கூட்டத்தில், ""பெரியாரின் பேரன் இளங்கோவனே, முத்துக்குமார் யார் என்று கேட்கிறாய். வயலார் ரவியை வைத்துக் கொண்டு இவருக்கு பாரதிராஜாவை தெரியுமா? என்று கேட்கிறாய். எனக்கும் வயலார் ரவிக்கும் 25 ஆண்டு கால நட்பு என்பது உனக்குத் தெரியுமா? நாங்கள் இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்க வரவில்லை. காங்கிரசை தோற்கடியுங் கள் எனக் கேட்க வந்திருக்கிறோம்'' என்றார் பாரதிராஜா ஆவேசமாக.

அடுத்து பேசிய சீமான், ""காங்கிரஸை ஒழிப்பேன் என்றார் பெரியார். அந்த வேலையை நான் இப்போது செய்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு. அது அமைய எல்லா ஆதரவையும் கொடுப்பேன் என்று சொன்ன பெருமைக்குரிய பெருமகளை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்'' -என ஜெ.வை பாராட்டியவர் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்வேன் என்று சிலர் சொல் கிறார்கள். மலர்வதற்கு அது என்ன பூவா? என கலைஞரை விமர்சித்தார். காங்கிரஸ் போட்டியிடும் மற்ற தொகுதிகளிலும் இதேபாணியில் தீவிர பிரச்சாரம் செய்கிறது பாரதிராஜா அணி.

-ஜீவா

4 Comments:

Anonymous said...

இந்த கும்பலால் 50 ஓட்டுகள் கூட யாருக்கும் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.
--ராஜா.

Anonymous said...

//Anonymous said...

இந்த கும்பலால் 50 ஓட்டுகள் கூட யாருக்கும் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.
--ராஜா//

நெத்தியடி

நிலவு பாட்டு said...

/* //Anonymous said...

இந்த கும்பலால் 50 ஓட்டுகள் கூட யாருக்கும் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.
--ராஜா//

நெத்தியடி */

நெத்தியடி எப்படி இருக்குதுன்னு மே-16 ல் பாருங்கள் நண்பரே, 50 வாக்குகளா இல்லை 50 லட்சம் வாக்குகள் மாறியுள்ளதா பாரும்.

Anonymous said...

இந்த வாய்க்கொழுப்பு இளங்கோவனுக்கு எந்தத் தமிழனும் ஓட்டளிக்க முடியாது.

அவர் சொல்லின் செலவர் சம்பத்திற்கு
நிச்சய்மாகப் பிறந்திருக்க முடியாது.

இந்த ஜென்மத்தைப் பெற்றதற்கு அவனது அம்மா அவமானப் பட வேண்டியுள்ளதுதான் வேதனை!!!