Wednesday, May 27, 2009

ராஜ‌ப‌க்சே ‌‌மீது ‌விசாரணை நட‌த்த இ‌ந்‌தியா உதவ வே‌ண்டு‌ம்: ‌கி.‌‌வீரம‌ணி

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே மீது ஐ.நா. சபையில் விசாரணை நடத்துவதற்கு இந்திய உதவ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை படுகொலை செய்தது பச்சையான இனப்படுகொலையாகும். இது மிகப்பெரிய போர் குற்றமாகும்.

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர ஆயத்தமாகி இருக்கிறது.

இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசை கண்டித்து வெளிப்படையாக எடுக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசும் ஏற்று ஆதரவு தர வேண்டும். ராஜபக்சே அரசை காப்பாற்ற முயல கூடாது.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளையே இலங்கை அரசு பெரிதும் நம்புகிறது. இந்த நாடுகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும்.

தமிழ் மக்களது அதிருப்தியை சம்பாதித்துள்ள மத்திய அரசு அந்த பழியை துடைக்க இதுவே நல்ல சந்தர்ப்பம். இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது.

மனித உரிமை மீறல் பிரச்சனைகளில் ஒரு தெளிவான திட்டவட்டமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 Comments: