Thursday, May 14, 2009

முதன்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி தமிழர்களுக்காக குரல் வீடியோ

நன்றி ஓபாமா அவர்களே, உங்களுக்கு கூட தெரியும் இந்த இனப்படுகொலை எங்கள் அரசியல் வாதிகளுக்கு தெரியவில்லையே. அப்படியே எங்க ஊரு குடுமிகளையிம் பிடிச்சி ரெண்டு ஆட்டு, ஆட்டுனிங்கன்னா எல்லாம் சரி வரும்.

மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் பேரழிவு ஒன்றைத் தவிர்க்க முடியாது: இலங்கை விவகாரத்தில் ஒபாமா முதற் தடவையாக கடும் எச்சரிக்கை


மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சினை உருவாகியிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போர்ப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் கிடைத்த செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது.

இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லாமல், உணவு, குடிநீர், மருந்து மற்றும் வதிவிட வசதிகள் எதுவும் இல்லாமல் அகப்பட்டுள்ளார்கள். இது பாரிய அவல நிலையைத் தோற்றுவித்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரழிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த மனிதாபிமானப் பிரச்சினை ஒரு பேரழிவாக மாற்றமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டிய தருணம் இப்போது வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். பொதுமக்களை அவர்கள் பலவந்தமாககப் படைக்குத் திரட்டிக்கொள்வதும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறான செயல்கள், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒதுக்கப்படுவதற்கே வழிசெய்யும்.

1 Comment:

ttpian said...

பிரிட்டன்,பிரான்சு,இங்கிலாந்து,வெளி நாட்டு அமைசர்கல் கவலை!
என்ன கவலை?
இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத வியாபாரம் அதிகமாக அக வேண்டும்!
போன்கடா,திருட்டு வெள்ளை பண்றிகலே!
இனிமேல் என்னால் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கிடையாது!
கையாலாகாத தமிழன்!
100 ரூபாய் வான்கி கொண்டு கை சின்னத்துக்கு வோட்டு போட்ட சொரனை இல்லாத முண்டங்கலை நான் அறிவேன்