Wednesday, May 27, 2009

பிரிட்டன் பத்திரிக்கை கடும் குற்றச்சாட்டு, சிறிலங்கா அரசு தமிழர்களை இனச் சுத்திகரிப்புச் செய்கிறது

அரசுக்கு ஆதரவான ஆயததாரிகளால் நடாத்தப்படும் கொலைகள் மற்றும் கடத்தல்கள் மூலம் சிறிலங்காவின் வட-கிழக்கான தமிழர்களின் இடங்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்,

என உதவி நிறுவன அதிகாரிகள், மனித உரிமை சேவகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர், என்று பிரித்தானியா ரெலிகிறாவ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
காலி செய்யப்பட்ட கிராமங்களில், ஒரே நேரத்தில் தெற்கில் உள்ள சிங்களப் பெரும்பான்மையோரினரை நகர்த்துவதற்கு ஊக்கமளிக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக மேலும் ரெலிகிறாவ் செய்தி குறிப்பிட்டுள்ளது.


ஒரு வெளிநாட்டு கருணை இல்லப் பணியாளர் குறிப்பிடுகையில், "கடைசிச் சண்டை நடந்த முல்லைத்தீவில் இருந்து 50 மைல்கள் தெற்கே உள்ள திருகோணமலையிலும், அதற்கு வெளியிலும், காணாமல் போகும் தமிழர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் மிகவும் அதிகரித்துள்ளது" என்று டெய்லி ரெலிகிறாவ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.


காணாமற் போனவர்களில் 15 பேரைத் தனக்குத் தெரிந்திருந்தது என்றும், அதில் 3 பேர் இறந்து கண்டெடுக்கப்பட்டார்கள் என்றும் அப்பணியாளர் கூறியுள்ளார். இறந்த 3 பேரின் சடலங்களிலும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அடையாளங்கள் இருந்தன என்றும், இரண்டு நபர்களின் தலைகள் பின்னுக்குக்கட்டுப்பட்டு தலையில் தோட்டாக் காயங்கள் தலைகளில் இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழர்களை அவ்விடங்களில் இருந்து வெளியேற்ற நடாத்தும் ஒரு செயற்திட்டமானது கொலைகள் என்று இன்னுமொரு பணியாளர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையோராக உள்ள தமிழர்கள் மிக விரைவில் சிறுபான்மையோராக மாறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் என ரெலிகிறாவ் மேலும் குறிப்பிட்டுள்ளது.



0 Comments: