Sunday, May 31, 2009

20,000 மக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொன்ற மகிந்த: தி டைம்ஸ், பிரிட்டன்

வன்னியில் 20 ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டதாக 'தி டைம்ஸ்' நாளேடு' நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இலங்கையில் இறுதியாக நடைபெற்ற மோதல்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முனின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னர் அவரின் முதன்மை அதிகாரியான விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், பான் கீ மூன் தனது பயணத்தின்போது அதனை தெரிவிக்கவில்லை.

இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தவறானவை எனவும், பிரசுரிக்கப்பட்ட படங்கள் பொய்யானவை எனவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

ஆனால், போர்க் குற்றம் மீதான விசாரணைக்கான கோரிக்கைகள் அனைத்துலகத்தில் வலுப்பெற்று வருவதுடன், மனிதாபிமான அமைப்புக்களை மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. அங்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

கணிப்பீடு செய்யப்பட்ட தொகையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட வேண்டும் என மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அது போர்க் குற்றம் மீதான விசாரணைகளுக்கு உதவும் எனவும் அது தெரிவித்துள்ளது.

'தி டைம்ஸ்' நாளேட்டில் வெளிவந்த 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. அவர்கள்தான் அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்.

20 ஆயிரம் இலங்கையில் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' நாளேடும் வெளியிட்டுள்ளது. அவர்களும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் இருந்தே தகவல்களை பெற்றுள்ளனர்.

இந்த தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டால் சிறிலங்காவுடனான உறவுகள் முறிவடைந்துவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: