Thursday, May 21, 2009

நண்பர் தீலிபன் அவர்களுக்கு முடிந்தால் உதவுங்களேன்

இவருடைய வலைப்பூ சில சிங்கள காடைகளால் திருடப்பட்டுள்ளது, விசயம் தெரிந்தவர்கள் தயவு செய்து அவருக்கு உதவவும்.

அவருடைய பின்னூட்டம்

நண்பரே எனக்கு ஒரு உதவி என்னுடைய வலைப்பூவை யாரோ சில விசமிகள் அழித்துவிட்டனர். தயவுசெய்து அதை நிவர்த்தி வழி முறைகளை சொல்லவும். என் மின்னஞ்சல் முகவரி satammu2003@yahoo.com அல்லது இந்த பதிவில் பின்னூட்டம் இட்டாலும் சரியே.
என்னுடைய வலைப்பூ தீலிபன்-இவன் உண்மை தமிழன்.

இவர் ஒரு தமிழ் உணர்வாளர் என்பது மட்டுமன்றி, உண்மைகளை எடுத்துரைப்பவர். நமது இந்த அஹிம்சை போராட்டத்திற்கு மேலும் துணை நிற்பவர்.

http://dilipan-orupuratchi.blogspot.com/

3 Comments:

நையாண்டி நைனா said...

ஐயா அந்த பதிவு திருடப் படவில்லை. அவர் அவரது பதிவிலே NTamil திரட்டியின் ஓட்டு பட்டியை இனைதிருந்திருப்பார், அதனூடாக வைரசு பரவுகிற காரணத்தினால் கூகுளே/பிலாகரே அந்த பதிவுகளை நீக்கி விட்டது.

வேண்டும் என்றால் சோதனை செய்து பாருங்கள், அவர் அவரது பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல் மூலம் அவரது முகப்பை(Dash board) அடைய முடியும். அங்கிருந்து பதிவு அப்படியே காணாமல் போய் இருக்கும். யாரவது அவரது பாலோயர்ஸ் அவரது பதிவுகளை சேமித்து வைத்திருந்தால் அவரிடமிருந்து பெற்று வேறொரு பதிவு தொடங்கி போட்டு கொள்ளலாம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நிலவுப் பாட்டு,

அவருடைய தளத்துக்குச் செல்லும்போது இவ்வாறான எச்சரிக்கை வருகிறது

//Warning: Visiting this site may harm your computer!
The website at dilipan-orupuratchi.blogspot.com appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that hosts malware can infect your computer.
For detailed information about the problems with this site, visit the Google Safe Browsing diagnostic page for dilipan-orupuratchi.blogspot.com.
Learn more about how to protect yourself from harmful software online.//

முதல்ல nTamil இனது ஸ்கிரப்டை தூக்கி எறிந்துவிட்டு கூகுளுக்கு மடல் வரையச் சொல்லுங்கள் காரண காரியங்களோடு.

தமிழன் said...

நண்பர் நையாண்டி நைனா அவர்களுக்கு தங்கள் பதில் மூலம் என்னுடைய பதிவுகள் பத்திரமாக இன்னொருவர் வலைப்பூவில் இருபது கண்டேன். தயவு செய்து அதை எப்படி என்னுடைய வலைப்பூவிற்கு கொண்டு வருவது மற்றும் எப்படி அந்த ஓட்டு பெட்டியை எடுக்க வேண்டும்.