Monday, June 1, 2009

சாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்

தமிழ் மக்களின் இறப்புகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியே கூற வேண்டும்

ஐ.நா.செயலாளர் நாயகம், பான் கி முன், கடந்த கிழமை சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்தார். தனது அதிகாரிகள் ஊடாக குறைந்தது 20,000 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. திரு. பான் இந்த எண்ணிக்கையை ஒருவருக்கும் ஒரு போதும் குறிப்பிடவில்லை என த ரைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலங்கு வானூர்தியில் பறந்துகொண்டே திரு. பான் அவர்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் சாட்சியான இடத்தைப் பார்வையிட்டுள்ளார். இருந்தும், இதே உலங்கு வானூர்தியில் இருந்து எடுத்த, அவலநிலை மற்றும் பாரிய தற்காலிகப் புதைகுழிகளை வெளிக்காட்டிய, புகைப் படங்களின் உண்மையை அவர் உறுதிப்படுத்தவில்லை என மேலும் த டைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பான் இனது இந்த மர்மமான அமைதிக்கு ஒரு பயங்கர அறிகுறி உள்ளது. ஐ.நா.வால் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஸ்றபிறநிகாவை பொஸ்நியன் சேர்ப் இராணுவம் கைப்பற்றிய அடுத்தநாள், திரு. பான் இனது மூதாதையரான போற்றஸ் காலியிடம், “இது ஐ.நாவினது ஒரு தோல்வியைக் காட்டுகிறதா” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருந்தார், “இல்லை, நான் இதைத் தோல்வியென்று நம்பவில்லை. கண்ணாடிக் குவளை அரைவாசி நிரம்பியுள்ளதா அல்லது அரைவாசி காலியாக உள்ளதா என்று தான் பார்க்கவேண்டும்”.

ஸ்றேபிறெனிகாவில் 8000 போஸ்னிக் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். இது ஐ.நாவின் தோல்வி. இந்தத் தோல்வி சிறிலங்காவில் வராமல் இருக்க பான் அவர்கள் தான் பார்த்ததை வெளியில் கூற வேண்டும். மேல் நிலை அதிகாரியென்பதைவிட அவர் ஒரு பொது நிர்வாக அதிகாரி.

பிரிச்சினையின் வரலாற்று உண்மையும், சர்வதேச ஆர்ப்பாட்டமும், அவர் பார்த்த உண்மையை ஐ.நா பாதுகாப்புக் குழுவுக்குத் தெரியப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

பிரித்தானியா வெளிவிவகாரச் செயலாளர், டேவிட் மிலிபாண்ட் கொழும்பு சென்றிருந்த போது நாட்டின் வடபகுதிக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. அவருக்கும் திரு. பான் அவர்களை உண்மைகளைக் கூறவைப்பதில், பிந்திய ஆனால் மிக முக்கியமான பங்கு உள்ளது என த ரைம்ஸ் ஒன்லைன் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்களுக்காக அது நிறையவே விளக்கம் கொடுக்க வேண்டும். பொது மக்களின் இறப்புகளை மறுத்துள்ளது சிறிலங்கா அரசு. புகைப்பட ஆதாரங்களை உண்மையற்றவை என்று கோரியுள்ளது.

திரு.பான் அவர்கள் உண்மைகளைக் கூறவேண்டும், ஐ.நா. விசாரிக்க வேண்டும். மனித வாழ்க்கைக்கான ஒரு ஒழுங்கான மரியாதையை இதைவிட வேறு ஒன்றும் தரப் போவதில்லை என்று த டைம்ஸ் ஆன்லைன் குறிப்பிட்டுள்ளது

1 Comment:

புரட்சிகர தமிழ் தேசியன் said...

அய்யா! நான் கடந்த முறை எழுதிய பதிவில் சில பிழைகள் இருந்தன..அதற்காக மன்னிக்கவேண்டும் ..இந்த முறை ஒரளவுக்கு சரியாக எழுதி உள்ளேன் என்னுடைய இந்த இடுகையை:http://siruthai.wordpress.com/2009/06/01/எதிர்காலத்தில்-உலகத்தமி/

பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன்

நன்றி
புரட்சிகர தமிழ் தேசியன்