Sunday, June 28, 2009

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் அட்டூழியம்

ராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதிக்குள் மீனவர்கள் நுழைந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர்.

இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முடியாத மீனவர்கள் பலர் மீன்பிடிக்காமல் நள்ளிரவில் கரை திரும்பினர். இதனால் மீனவர்களின் படகில் 10 கிலோவிற்கும் குறைவாகவே இறால் மீன்கள் பிடிபட்டு இருந்தது.

இதுபற்றி மீனவர்கள் கூறும்போது "மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க சென்றோம்.கடலுக்கு சென்று கரை திரும்பும் வரை கச்சத்தீவு கடல் பகுதிக்குள் எங்களை இலங்கை கடற்படையினர் அனுமதிக்கவில்லை.

மூன்று கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை உள்ளே விடாமல் விரட்டியடித்தனர். நமது கடல் எல்லைக்குள்ளும் வந்து விரட்டி விடுகின்றனர். இதனால் மீன்பாடு இல்லாமல் கரை திரும்பியதால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் நாளை முதல் யாரும் கடலுக்கு செல்லமாட்டோம். அரசு எங்களை கண்டுகொள்ளாமல் உள்ளது. இலங்கை கடற்படையினரால் மீண்டும் படகுகளை கட்டி போடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது' என்றனர்.

0 Comments: