Sunday, June 7, 2009

இலங்கையின் ஒருமைப்பாடு என்பது தமிழர்களின் அவல நிலை யாரும் வெளிப்படுத்தகூடாது என்பதாம்

தமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால்----: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும், முகாமில் உள்ளவர்களையும் கண்டு அவர்களின் நிலையறிய ஊடகங்கள் முயர்ச்சித்தன.


ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதி மறுத்து வந்தது. அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தொடர்ந்து மறுத்து வந்தது.


இந்நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சே, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நடந்த இச்சந்திப்பில்,


’’தமிழர் பகுதிக்கு சென்று அவர்களின் நிலையை அறிய அனுமதி அளிக்கப்படும். தாங்கள் தாராளமாக சென்று பார்வையிடலாம். ஆனால் ஒன்று தாங்கள் ஒரு போதும் இலங்கை ஒருமைப்பாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிடக்கூடாது’’ என்று எச்சரித்துள்ளார்.


முகாம்களில் உள்ள அத்துமீறல்களை பற்றி எழுதக்கூடாது என்பதற்காத்தான் அதிபர் இவ்வாறு அறிவித்திருப்பதாக முனுமுனுக்கிறார்கள்.

1 Comment:

ஆ.ஞானசேகரன் said...

//முகாம்களில் உள்ள அத்துமீறல்களை பற்றி எழுதக்கூடாது என்பதற்காத்தான் அதிபர் இவ்வாறு அறிவித்திருப்பதாக முனுமுனுக்கிறார்கள்.//

உண்மைதான், இங்கே இந்தியாவில் இருக்கும் அத்துமீறல்களை யாரிடம் சொல்வது