Sunday, June 7, 2009

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து

சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல..
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக் குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மைமீதுதான்!

குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!

கவிஞர் வைரமுத்து

16 Comments:

மயாதி said...

யாவும் கற்பனை.

நிலவு பாட்டு said...

மாயாதி ஆரம்பத்திலே உன்னுடைய செய்கைகளில் சிங்கள ஜாடை தெரிந்தது, இப்போது அதை உறுதி பண்ணி விட்டாய், இனி நீ சென்று வரலாம். இனி இந்த் பண்ணாடை வேலைகளை பார்க்காதே.

Anonymous said...

வைரமுத்தின் நண்பர் கருணாநிதியும் ராஜபக்சே கும்பலுடன் இணைந்துவிட்டதை கவிப்பேரரசு மறந்துவிட்டார்

கோவி.கண்ணன் said...

வைர முத்து கவிதைக்கு உணர்ச்சி வசப்படாதிங்க. இந்த கவிதையைக் கூட எதோ ஒரு இதழுக்கு காசுக்கு விற்றதாகத்தான் இருக்கும்.

ஆயுதவியாபாரி அமைதிக்குப் பாடுபடுவதாகப் பேசுவது போன்றது. அவருடைய தொழில் கவிதை அதை எழுதுறார், இதுல பெருசா உணர்ச்சி வசப்பட ஒன்றும் இல்லை

Anonymous said...

ஆமா.. கோவி கண்ணனுக்கு வலைப்பதிவும் கிட்டத்தட்ட முழுநேரத் தொழில் தானே... அது தான் பார்த்தமே "தலைவர் வீரமரணம்" முதலில் போடத் துடித்ததை.. அதுக்கும் பிறகும் வந்த இன்னும் சிலதை...
வந்திட்டார் வைரமுத்து வித்திட்டாராம்.. (ஆமா.. வித்திட்டார் தான்.. என்ன இப்போ?)

Anonymous said...

கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.,பாவம் அவரைத் திட்டி என்ன பயன் ?மனத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவான எண்ணம் இருந்தாலும் பலரும் தங்கள் இருப்பையும் வயிற்றையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.ஒரு சில துணிச்சல் காரர்கள் மட்டும் வாய் திறந்து பேசுகிறார்கள்.
இன்னொரு விஷயம்,
நான் சமீபத்தில் அவதானித்த விஷயம் ,
திடீரென்று பலர் மே மாதத்தில் பதிவர்களாகப் உருவெடுத்து பின்னூட்டம் போட்டோ அல்லது கருத்து சொல்லிக் கொண்டோ இருக்கிறார்கள்
இவர்களில் பலர் புலிகளை விமர்சிப்பது மாதிரி வந்து தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை விதைக்கிறார்கள்.
இலங்கை அரசுக்கு தமிழர்களை ஆயுத போராட்டத்தில் வென்றதில் மட்டும் திருப்தி வரவில்லை போல இருக்கிறது.தமிழர்களை முழுவதுமே அடிமை இனமாக மாற்ற வேண்டும் என்று அவர்களைக் குழப்பி சிந்திக்கும் தன்மையே இல்லாத ஜடங்களாக மாற்ற நினைக்கிறார்கள் போல உள்ளது.
ஜாக்கிரதை,ஜாக்கிரதை.

Anonymous said...

தமிழர்கள் போல் வந்து பேசும் சிங்கள காடையர்களின் இப்போது தமிழ் மணத்தில் புகுந்துள்ளதாக நம்பதகுந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த காடைகள் முதலில் தமிழன் மாதிரி நடித்து பின் தனது நஞ்சுகளை கக்கும். மாயாதி, தமிழ்க்கீரன், வெத்து வேட்டு, வருண் மற்றும் தமிழரங்கம்தான் இவர்கள்.

இந்த நாய்களின் மேல் மிகக்கவனம்.

நிலவு பாட்டு said...

/* வைர முத்து கவிதைக்கு உணர்ச்சி வசப்படாதிங்க. இந்த கவிதையைக் கூட எதோ ஒரு இதழுக்கு காசுக்கு விற்றதாகத்தான் இருக்கும்.

ஆயுதவியாபாரி அமைதிக்குப் பாடுபடுவதாகப் பேசுவது போன்றது. அவருடைய தொழில் கவிதை அதை எழுதுறார், இதுல பெருசா உணர்ச்சி வசப்பட ஒன்றும் இல்லை
*/

வருகைக்கு நன்றி கண்ணன், சரி அவர் நிஜமாகவே தமிழ் உணர்வோடு எழுதியது என்பதை எப்படி நிருபிக்கலாம் சொல்லுங்கள் பார்க்கலாம். சும்ம அவர் பேசினால் அவர் நடிகன், இவர் எழுதினால் கவிஞன் என்று சொல்லி கொண்டே இருந்தால் யார்தான் குரல் கொடுப்பது தமிழர்களுக்கு. சிங்களர்களின், பாப்பான்களின் மற்றுமொரு தந்திரம் இவைகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாருமே தமிழர்களுக்கு உண்மையானவர்களாக இல்லை என்று கூறியே நமது தமிழின உணர்ச்சிகளை அடக்குவது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

யார் எழுதியது என்றால் என்ன, அவர் எழுதியது என்ன என்று பாருங்கள். அதன் கருத்து என்ன என்று பாருங்கள்

வைரமுத்து எழுதியவை அனைத்தும் 100% உண்மை.

அவரை பற்று பேசாதீர்கள் நமக்கு அது தைவையுமில்லை, குடுமிகள் மற்றும் சிங்களர்கள் பிரச்சினையை திசை திருப்ப பார்ப்பார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வைரமுத்து தமிழ் உணர்வாளர் தான் அதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அவரும் சிந்தனைகளைப் பரவலாக்க வேண்டும். பல்வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்பது நமது விருப்பம். ஓர் இனம் அழிக்கப் படும் போது அந்த இனத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் தங்கள் பணிகளை எவ்வாறு செய்து பங்காற்றினார்கள், எழுத்தாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள், என்ன எழுதினார்கள் என்பதை இந்த உலகம் அறியும். இதற்குமேல் எதுவும் கருத்து சொல்லத் தோன்றவில்லை.
வைரமுத்து அவர்களை பற்றிய எனது பதிவு.
http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_16.html

நிலவு பாட்டு said...

நன்றி ஜோதி பாரதி, நீங்கள் சொல்வது முழுவதும் சரியே, ஆனால் இன்று யாருமே நமக்கு இல்லாத ஒரு சூழ்நிலையில் தமிழினம் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது, தமிழர்கள் கோழைகளாக மாறி கொண்டிருக்கின்றனர். டிவியே கதி என்று கிடக்கின்றனர். இதை மாற்ற வேண்டும். இதில் வேறு சிங்களர்களின் ஊடுருவல் அனைத்து துறைகளிலும்.

Anonymous said...

மிகவும் வருத்தத்துடன் சொல்லிக்கொள்வது இதுதான்.
என்னைப் போன்ற உங்கள் போன்ற உள்ளங்கள் மனம் கேட்காமல் ஏதோ புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் ஈழத்தமிழரின் நிலைமை மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
அவர்களின் உரிமைப் போராட்டம் அழிக்கப் பட்டு விட்டது.
அங்கு சிங்கள அரசு என்ன கொடுமை செய்தாலும் தட்டிக் கேட்க ஆட்கள் இல்லாத படியால் தமிழர்கள் அங்கு முழுமையாக அடிமைப் படுத்தப் பட்டு விட்டார்கள்.
எஞ்சியிருக்கும் தமிழர்களில் சிலர் சிங்கள அரசின் கைகூலிகளாக மாறி விட்டார்கள் ,மற்றையோர் வாய் திறந்தால் உயிருக்கே ஆபத்து என்பதனால் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையைக் கழிக்கத் தயாராகி விட்டார்கள்.
பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய போர்த்துகீசர்களின் ஆட்சியோடு தொடங்கிய அடிமை வாழ்க்கை இன்னும் தமிழர்களுக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் ப்போர்த்துக்கீசர்,,டச்சுக்காரர்,பிரிடிஷ்காரார்களின் ஆட்சியை விட இப்போதைய ஆட்சி இன்னும் மோசம்.
அந்த வெள்ளைக்காரர்கள் தமிழரின் வளங்களை சுரண்டத்தான் நினைத்தார்களே ஒழிய தமிழரின் அடையாளங்களையோ அவர்களின் மொழியையோ அழிக்க நினைக்கவில்லை.
ஆனால் அவர்கள் இருந்த போது இல்லாத்த ஆபத்து இப்போது தமிழருக்கு ஏற்பட்டுள்ளது. சிங்களவர் தமிழரின் மண்ணை அபகரிக்கிறார்கள் ,ஈழம் என்ற பேரில் சொந்தக் கட்சிகள் வைத்திருக்காமல் தங்கள் கட்சிகளுடன் இணையுமாறு சொல்கிறார்கள் அடக்குமுறையும் கொலைகளும் தாராளமாக அரங்கேறுகின்றன.
ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் இருந்த மாதிரித்தான் இப்போதைய தமிழரின் நிலை.சொல்லப்போனால் நிலைமை இன்னும் மோசம்
ஹிட்லரை அன்று உலக நாடுகள் எதிர்த்து போர் செய்து யூதர்களை மீட்டார்கள் ஆனால் ஈழத்தமிழரோ மீட்பர் எவருமே இல்லாத நாதியற்ற இனமாகத்தான் இப்போது உள்ளது.
இந்த நூற்றாண்டில் அதுவும் மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றங்கள் இன் ஒழிப்பு போன்றவற்றை தடுப்பதற்கு எத்தனையோ அமைப்புக்கள் உலகில் பல இருந்தும் இந்தக் கொடுமைகள் எல்லாம் ஈழத்தமிழருக்கு நடப்பது ,மக்களுக்காக செயல் பட வேண்டிய ஐநா சபை கேலிக்கூத்தான சபையாக மாறியது எல்லாம்
ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் உண்மை நிலை அதுதான் .

எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்து இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக் கொண்டால் ஒழிய இன்னும் இரண்டு மூன்று தலை முறைகளில் ஈழத்தில் தமிழினம் என்று ஒன்று இருக்காது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஈழ மண்ணில் வாழ்ந்த எமது இனம் அழிந்து போவதை பார்ப்பதற்கு முன்பு கடவுள் எனக்கு சாவைத் தந்து விட வேண்டும் பிரார்த்தனை செய்கிறேன்,

--கண்ணீருடன் ஒரு ஈழத்தமிழன்

பாரதி said...

நிலவுப்பாட்டு நீங்க நல்லாப் பக்கப் பாட்டுப் பாடுவீங்களோ? இந்தா பாருங்கோ வைரமுத்துவை நான் நன்றாக அறிவேன். ஒருபுறம் ராஜபக்ஸக்குப் பாராட்டும்,மறுபுறம் செத்துவிழுந்த ஈழவருக்கு பச்சாதாபமும் காட்டவல்ல பிரபு.பைசா வருமெண்டா
எங்கேயும் பாடவல்ல படைப்பாளி.நயகாராவையும் அமெரிக்காவையும் புகழ்ந்துபாடிய அவர் இந்த இழவையும் பாடிப் பணம் பண்ணிப் போகட்டும்.
சுப்ரமணி

Anonymous said...

பாரதி மீண்டும் ஒரு முறை இதை படிக்கவும்.

யார் எழுதியது என்றால் என்ன, அவர் எழுதியது என்ன என்று பாருங்கள். அதன் கருத்து என்ன என்று பாருங்கள்

வைரமுத்து எழுதியவை அனைத்தும் 100% உண்மை.

அவரை பற்று பேசாதீர்கள் நமக்கு அது தைவையுமில்லை, குடுமிகள் மற்றும் சிங்களர்கள் பிரச்சினையை திசை திருப்ப பார்ப்பார்கள்.

mani said...

annai endru solli soniyavukku kavithaiy elutiya v/muthu konay endru karuna endra karunanitikku enn oru aram padi irukka villay