ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டம் இரவில்தான் நடந்தது என்றாலும் வார்த்தைகள் உஷ்ணமாகவே வெளிப் பட்டன. பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ""நான் மதிக்கக்கூடிய வைகோ ஈழத் தமிழருக்கு எதிரான ராஜபக்சேவை முதல் எதிரியாகக் கருதாமல், கலைஞரை முதல் எதிரியாக சித்திரிக்கப் பார்க்கிறார். அவர் வழிநடத்தும் இயக்கம் போயஸ் தோட் டத்து இயக்கமாக நடைபெறுவதால் நாங்கள் தனியாக இயக்கம் நடத்த வேண்டியதாகிவிட்டது. நாங்கள் ஒரு காலமும் போயஸ் தோட்டத்தில் கால் மிதிக்க விரும்பாதவர்கள். தேர்தல் வரை தனி ஈழம் பற்றிப் பேசிய ஜெயலலிதா இப்போது எங்கே? கொடநாட்டிலா தனி ஈழம் காண்கிறார்?'' என்றார்.
சுப.வீ.யைத் தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேச வந்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. ""உலகில் 500 கோடி மக்கள் வாழ்கிறோம். அவர்களில் பிரபாகரனைப்போல ஒரு போராட்டத் தலைவனை உங்களால் கூற முடியுமா? அதனால்தான் அவரை மாவீரன் என்று அழைக்கிறோம்.
இலங்கையில் 6 மாதத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது போர் நிறுத்தம் வேண்டும் என குரல் ஒலித்தும், இந்தியா போரை நிறுத்தச் சொல்லாதது மன்னிக்க முடியாத குற்றம். நாடாளுமன்றத்தில் எனக்கு வழங்கப்பட்ட நேரத்தில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்று சொன்னேன். அந்த நேரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் இல்லை. சோனியாகாந்தி இல்லை. 543 எம்.பி.க்களில் வெறும் 35 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர்'' என்று கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்திய திருமா, தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு பற்றி பேசத் தொடங்கினார்.
""என்னிடம் சிலர், இன்னமும் இந்தக் கூட்டணியில் இருக்கிறீர் களா என்று கேட்கிறார்கள். கலைஞ ருடனான கூட்டணியில் நான் தொடர்ந்து இருக்கத்தான் செய்வேன். ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். இதற்காக கூட்டணியில் என்னை வைத்துக் கொள்ள விருப்பம் இருந்தால் வைத்துக் கொள்ளட்டும். இல்லையென்றால் முடிவை அவர்களே எடுக்கட்டும். இதற்கு நானோ விடுதலை சிறுத்தைகளோ பயப்படப் போவதில்லை. இலங்கை யில் நான்காம் கட்டப் போர்தான் முடிந்துள்ளது. இன்னமும் போருக்குப் புலிகள் தயாராக இருக்கிறார்கள். ஐந்தாவது போரில் பிரபாகரன் தோன்றுவார். போராடுவார். அவர்தான் போரை வழிநடத்துவார். அவர் வெற்றி அடைவார்'' என்று திருமா உரத்த குரலில் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச வந்தபோதும் அந்த ஆர்ப்பரிப்பு தொடர்ந்தபடியே இருந்தது. கி.வீரமணி தனது உரையில், ""எனக்கு முன்னால் திருமா நிறைய பேசிவிட்டார். நாங்கள் ஆரம்பித்த இயக்கம் யாருக்கும் எதிரி அல்ல. வைகோவும் இங்கு வரலாம். எங்களுக்கு ஒரே எதிரி ராஜபக்சேதான். தமிழர்களை மதம், சாதி என பிரித்து வைத்து பார்க்கவேண்டாம். நாம் தமிழுணர்வுடன் தமிழர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்'' என் றார் அழுத்தம் கொடுத்து.
மதுரை பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் வெளிப்படையாகப் பேசியவை, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியலைகளை உண்டாக்கி யிருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கும் நிலையில், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என நாடாளு மன்றத்தில் திருமா பேசியதுடன் அதை மக்கள் மன்றத்திலும் வெளிப்படுத்தியிருப்பதால் இது சர்ச்சையாக்கப்படும் என டெல்லி அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
கூட்டணி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஈழத்தமிழர் பிரச்சனையை இந்திய நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாகத்தான் எம்.பி. பதவி கிடைத்திருக்கிறது என நினைக்கிறார் திருமா. அவரிடமிருந்து தொடர்ச்சியாக வெளிப்படவிருக்கும் குரல்கள் காங்கிரசுக்கு நெருக்கடியை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நன்றி நக்கீரன்
Wednesday, June 17, 2009
மதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக் குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Posted by நிலவு பாட்டு at 6:24:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
In my opinion, Vaiko's stand is correct. Vaiko blamed the SL government and Rajapakshe, when he got opportunity to speak in UN, Oslo, and in UK parliament. He didn't speak anything about Kalaignar in all those places. Vaiko blamed UPA government during his fast in Delhi. He blamed Kalaignar in TN. Vaiko knows, who are responsible for the genocide and who helped the genocide to be carried out. I have respect for Suba. Vee, but he should abolish his hatred against JJ and work towards the betterment of SL tamils. It is time that people stop blaming the poor Vaiko. He has been honestly and relentlessly working hard for the welfare of tamils in general and SL tamils in particular.
ஐயா சுப.வீ அவர்களே, இந்த வைகோ, ஜெயலலிதா பற்றி பிதற்றுவதை கொஞ்சம் நிருத்துங்கள். தேர்தல் பிரச்சாரதின் பொழுது, தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்ற ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பதாக கண்டு பிடித்த நீங்கள், மருத்துவமனையில் இருந்து தனி ஈழம் அமைக்கும் பணியையும் நானே ஏற்றுக்கொள்கிறேன், இலங்கை தமிழர்க்கு நிவாரணம் கிடைக்கச் செய்தது போல, என்ற கலைஞர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி கேளுங்கள். அதை விடுத்து, எந்த பதவியிலும் இல்லாத, வைகோ மற்றும் ஜெயலலிதாவை கேள்வி கேட்பது, பழம் தரும் மரத்தை விட்டு புல்லிடம் பழம் கேட்பதற்கு சமம்!
வை.கோ இருக்கட்டும்.
இன்றைய நிலையில் சுப.வீ, திருமா, பழ.நெடுமாறன் எல்லாம் முழுக் கோமாளிகளாகத் தோற்றமளிக்கிறார்கள்.
பகுத்தறிவு என்பது துளியளவுமற்ற வெறும் மூடர்களாகத்தான் இருக்கிறார்கள். புலிகள், பிரபாகரன், ஈழப்போர் என்று அவர்கள் பிதற்றுவதை அவர்களே நம்கிறார்களா என்று தெரியவில்லை.
இதற்குள் முட்டாள்கள் தங்களுக்குட் சண்டைபிடிக்கும் நிகழ்வுதான் இவர்கள் வை.கோ வைச் சாடிக்கொண்டிருப்பது.
சரத் பொன்சேகா தமிழக அரசியல்வாதிகள் பற்றிச் சொல்லியது கருணாநிதிக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்த 'மோட்டு ஈழ ஆதரவாளர்களுக்கு' இருநூறு வீதமும் பொருந்தும்.
உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை நக்கீரன் இதழும் சொறிவிளையாட்டுக் காட்டிக்கொண்டுதான் இருக்கும்.
RAJAPAKSE ACCUSED NO 1
SONIYA ACCUSED NO 2
KARUNANITHI ACCUSED NO 3
HI...HI...VAIKO IS BLAMING ACCUSED NO 3 INSTEAD OF NO 1!
SUBA VEE AVARKALE!
RAJAPAKSE IS HAPPY ABT THE VICTORY OF KARUNANITHI AND SONIYA!U TOO HAPPY ABT THAT!YOU AND RAJAPAKSE BOTH ARE HAPPY ABT THE VICTORY OF M.K AND SONIYA!STILL U PRETEND UR ENEMY IS RAJAPAKSE!NO MORE DRAMA PLEASE!
Hey suba.veerapandiyan...you got arrested by Jayalalitha under POTA!Were you ever beaten up there in jail?Remember you enjoyed first class facilities there!
During MISA...Stalin was beaten up in jail!Chittibabu and Sathur Balakrishnan were dead!Arcot Veerasamy became deaf!Within two years....karunanithi said 'nehruvin makale varuka'!How Karunanithi forgot MISA memories easily?Remember MISA was worse than POTA...and Karunanithi forgot about that!You were lucky...coz you were not beaten up during POTA!
http://www.mdmkonline.com/news/latest/karunanithi-aanavam.html
ஐயா ஆதாய சிந்தனை வாதி சுப வீ அவர்களே , தமிழின கொலைஞர் எவ்வாறெல்லாம் ராஜபக்சே கூட்டாளிகளுக்கு உதவினார் என்று இங்கே மனசாட்சியோடு எண்ணிப்பாருங்கள் . இனியும் ஏன் பசப்பு வார்த்தைகளையும் பொய் பிரச்சாரத்தையும் ஊடகங்களில் பரப்பிகொண்டுள்ளீர்கள் .
பழங்கதைகளை பேசுவதில் மன்னர் நீங்கள் இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது என்பீர்கள் , ஆனால் உண்மை என்பது , ஒரு முறை ஊழலுக்கும் மறுமுறை உங்களின் இப்போதைய தோழமை கட்சியின் திமிர்த்தனத்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம்தான் எஅமாற்றி பிளைக்கபோகிறீர்கள்
. நாற்பது எம் பி களும் ராஜினமா என்றீர்கள் . பின்னர் தேவையில்லை என்றீர்கள்
. ஊரோடு எல்லாரையும் மழயில் நிற்க சொன்னீர்கள் . பின்னர் பிரணாப் முகர்கி வந்ததும் " அனைத்தும் திருப்தி" என்றீர்கள்.
ஈழ பிரச்சினைக்காக போராடிய வக்கீல்களை காடுமிராண்டித்தனமாய் அடித்தீர்கள் . அந்த போராட்டத்தையே திசை மாற்றினீர்கள்
. மாணவர் போராட்டம் வலுப்பெற்றபொழுது , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றீர்கள்
. பத்து முர்ரைக்கும் மேல் எம் கே நாராயணன் உங்களை சந்தித்தான் அந்த கயவாளி உங்களிடம் என்ன பேசியிருப்பான் என்பதை இப்போது நன்றாக உணரமுடிகிறது
.இலங்கை தமிழருக்கு ஒரு அமைப்பு உருவாகிநீர்கள் அது செய்ததென்ன ?
கடைசியாக உண்ணாவிரதம் என்றீர்கள் குடும்பத்தோடு காலைசாப்பாடை மட்டும் "கட" பண்ணி விட்டு
. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அப்பாவி தமிழனை ஏமாற்றினீர்கள்
.ராஜபக்சே அதுவெல்லாம் இல்லை என்றான் அதன் பின்புதான் கொடிய ஆயுதங்களை கொண்டு , புள் டோசர்களை மேலே ஏற்றி தமிழர்களை கொன்றான் . அதை நீ தூவானம் என்றாய்
. அதற்கும் முன் ஒரு பேரணி என்று வைத்து தமிழ் தேசிய தலைவனை "போர்ருஸ்" மன்னனைபோல் நடத்த வேண்டும் என்றாய்
. முல்லிவைக்காளில் நடந்த மனித படுகொலைகள் . இதுவரைக்கும் உலகம் பார்த்திராதது . அதை கண்டித்து இந்த நொடிபொழுது வரை ஒரு கண்டன வார்த்தையேனும் நீ பேசவில்லை
. ஏய் கருணாநிதி நாங்கள் நீதி தேவதை ஒன்று இருப்பதாய் நம்புகிறோம் . அது உனக்கும் உன் சந்ததிக்கும் சரியான தண்டனை யை கொடுக்கும் .
-www.mdmkonline.com
Post a Comment