Friday, June 5, 2009

ஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத்த சகோதரன்

தமிழ் மக்களே நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியினை சில பிறவிகள் எப்படியெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள், அவரோட தலைப்பே

ஈழப்பதிவர்களுக்கு தமிழகப்பதிவர்கள் எதிரியா...?

இதை திருப்பி, தமிழர்களுக்கு பாப்பான்கள் எதிரியாகவே இருப்பதேன் என்று எழுத வேண்டும்.

நான் ஒரு தமிழ்ப்பதிவர்தான் எனக்கு தெரிகிறது ஈழத்தில் நடப்பது என்னவென்று, என் மனவலியில் எழுதுபவைதான் அனைத்தும். இந்த உணர்வு வெறும் ஈழத்தமிழர்களுக்கு உரியது என்றும், அதனால் அவர்கள் கருணாநிதி, மகிந்த எல்லாரையும் எதிர்த்து பேசுகிறார்கள் என்பது அறியாமை. 25000 தமிழ் மக்களை போர் என்ற பெயரில் மகிந்த பலி வாங்கியது பற்றி எழுத துப்பில்லாதவன் இப்படி ஒரு தலைப்பை வைத்து கொண்டு தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்த பார்க்கிறான்.

ஒரு தமிழனாக சொல்கிறேன், உலகில் எங்கும் உள்ள தமிழர்கள எனது சகோதரனே, ஈழத்தமிழன் எங்களது இளைய சகோதரன், மலேசிய தமிழன் மூத்த சகோதரன், எங்களுக்குள் பிளவு ஏற்படுத்த நினைக்கும் முட்டாளே, அது ஒரு நாளும் நடக்காது.


அந்த பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம் உங்களினது பார்வைக்காக

இந்த இடுகையை வாசித்ததும் ஒரு சலிப்பும் மனவருத்தமும் உண்டாகியது.
நான் ஒரு ஈழத்தமிழன்.

ஈழத்தில் நடப்பவற்றால் உணர்வு பூர்வமாக மிகவும் பாதிக்கப் பட்டு உள்ளவன்.
என் மாதிரி பலரும் பாதிக்கப் பட்டு ஒரு சமூகமே மன உளைச்சலில் உள்ளது.
ஒரு சில ஈழத்தமிழர்கள் இந்த நேரத்தில் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி உள்ளது உண்மைதான்.இவர்கள் சிறிய சதவீதம்தான்.தமது இனத்தின் அவலத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் இவர்களை நான் normal பிறவிகளாக கருதுவதில்லை.

ஈழத்தமிழர்கள் நாங்கள் ஒருவரும் உங்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை.ஏற்கனவே ஒரு லட்சம் மக்களையும் இருபத்தையாயிரம் போராளிகளையும் இழந்த நாங்கள் கடைசியாக நடந்த போரில் இன்னும் பல ஆயிரம் போராளிகளையும் ஐம்பதாயிரம் மக்களையும் அதுவும் கடைசி மூன்று நாட்களில் இருபந்தைதாயிரம் மக்களை இழந்து விட்டோம். எங்கள் மக்கள் மூன்று லட்சம் தடுப்பு முகாம்களில் சரியான உணவு பாதுகாப்பு இல்லாமல் வாடுகிறார்கள்.
எமது இளைய சமுதாயத்தினர் தமிழர் என்ற ஒரே காரணுத்துக்காக சித்திரவதை செய்யப் பட்டு படு கொலை செய்யப் படுகிறார்கள்.எல்லா தமிழருமே அடிமை நிலையில்தான் நடத்தப் படுகிறார்கள்.

இந்த நிலையில் துக்கம் தாளாமல் சில ஈழத்தமிழர்கள் இங்கு வந்து புலம்பினால் அது உங்கள் போன்றோருக்கு போர் அடிக்கிறது போல உள்ளது.

நான் ஈழத்தமிழருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்
இப்படியே எத்தனை நாட்களுக்கு விழுந்த படியே புலம்பிக் கொண்டு இருப்பது.
இது எமது இருண்ட காலம்தான்,ஆனால் தப்பி பிழைத்து உயிருடன் இருப்பவர்களை காப்பாற்ற நாங்கள் எழத்தான் வேண்டும்.
சும்மா இங்கே வந்து புலம்பாமல் அடுத்த காரியத்தை நாங்கள் பார்க்க வேண்டும்
தன் கையே தனக்கு உதவி.

இந்த இடுகையை பார்த்ததுமே புரிகிறது. இதை எழுதியவருக்கு எங்கள் வரலாறோ அல்லது மனத்தின் வலியோ புரிந்த மாதிரித் தெரியவில்லை.
இத்தனை லட்சம் மக்கள் கொல்லப் பட்டதோ ,குண்டு மழை பொழியப் பட்டு கொடுமைக்கு உள்ளானதோ குழந்தை முதல் கர்ப்பிணி பெண் வரை கொல்லப் பட்டதோ இவர் போன்றவர் மனத்தை கரைத்தாகத் தெரியவில்லை.

சோனியா செய்தது என்ன தவறு என்று கேட்கிறார்.
இங்கு வந்து புலம்பும் ஈழத்தமிழர்களே !
நீதி இரக்கம் என்பதெல்லாம் எதிர்பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் அடுத்து செய்ய வேண்டிய வேலையை தொடங்குங்கள்.
அத்துடன் தேவையில்லாமல் இழிவான வார்த்தைகள் பயன்படுத்தி எங்கள் மரியாதையை நாங்களே கெடுக்கக் கூடாது.

சும்மா வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுக்காதீர்கள்.
ஈழத்தமிழர்கள் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை
இந்த நேரத்தில் கூட உங்கள் நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்லும் இரக்க சுபாவம் கொண்டவர்களை நம்பி ஏதோ தார்மீக ஆதரவு கிடைக்கும் என்று நம்பி புலம்புவதோ கோபம் கொள்வதோ பயன் அற்றது.

1 Comment:

ttpian said...

i am always tamilian:hate to be an Indian!
no more one india business:
hell with ur indian loyalty:
i will not forgive&forget India's dirty role in killing tamil community
k.pathi
karaikal