பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை நடத்திக் கொல்லப்பட்டது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்துகொண்டோம்'' என்றும் புருடா விட்டது. ஆனால் டி.என்.ஏ.சோதனை குறித்த உண்மைத் தகவல்களை தமிழக அறிவியல் துறையும் மருத்துவத்துறையும் நக்கீரன் மூலம் அம்பலப்படுத்தி ராஜபக்சேவின் முகத்திரையை கிழித்த நிலையில், 1 வாரம் கழித்து மீண்டும் டி.என்.ஏ.சோதனையை நடத்தியதாக கூறி உலகத் தமிழர்களை ஏமாற்றியிருக்கிறார் ராஜபக்சே. இந்நிலையில் பிரபாகரனைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் இருந்துள்ளார் என்கிற தகவல்கள் இலங்கை முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற் படுத்திக்கொண்டிருக்கிறது.
கொழும்பு கொட்டாஞ் சேனை புதுத்தெருவை சேர்ந்தவர் சற்குண ராஜா. அந்தப் பகுதியில் மிகப்பெரிய வணிகர் இவர். உலகத்தில் ஒருவரின் உருவம்போல 7 பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப, பிரபாகரனின் உருவத்தை ஒத்தவராக இருந்துள்ளார் சற்குணராஜா. இதனாலேயே சற்குணராஜா அந்தப் பகுதி மக்களிடம் பிரபலமாகவு மிருந்துள்ளார். இந்தச் சூழலில் பிரபாகரனோடு சற்குணராஜா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் கைப்பற்றியதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்தபோது, ""கிளிநொச்சியைப் பிடித்தபின் அங்கிருந்து பதுங்கு குழிகளுக்குள்ளும் தேடுதல் வேட்டையை நடத்தியதில் நிறைய புகைப்படங்களைக் கைப்பற்றியது ராணுவம். அதில் சில புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ராணுவத்தினர். காரணம் பிரபாகரனோடு அவரது உருவத்தை ஒத்த இன்னொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் அவை. இந்தத் தகவல் ராணுவத்தின் உயரதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. உடனே அந்த நபரை பற்றி விசாரித்தபோதுதான் அவர் சற்குணராஜா என்றும் கொழும்பு கொட்டாஞ்சேனை புதுத்தெருவில் வணிகராக இருக்கிறார் என்றும் எங்கள் அதிகாரிகள் அறிந்துகொண்டனர். ஆனால், அந்த பகுதிக்கு ராணுவத்தினர் சென்றபோது, தனது வணிகத்தை இழுத்து மூடிவிட்டு எங்கேயோ அவர் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு போய்விட்டார் என்பதனை அறிந்து அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதேசமயம் சற்குணராஜாவை தேடும் முயற்சியை ராணுவம் கைவிடவில்லை'' என்றனர்.
தமிழர்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு எவ்வளவு வேகத்தில் நடத்தியதோ, அதே அளவு வேகத் தை பிரபாகரனின் உருவத்தை ஒத்த சற்குணராஜாவை கண்டுபிடிப் பதிலும் தீவிரம் காட்டியது இலங்கை அரசு. இந்தச் சூழலில் வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட இறுதிப் போருக்கு ஓரிரு நாள் முன்பாக கொட்டாஞ்சேனைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் விமலவன் என்கிறவர் படுகாயமடைந் தார். அவரை கொழும்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் இலங்கை காவல்துறையினர் விசாரித்தபோது, தனது தந்தை சற்குணராஜா என்றும் பிரபாகரனின் உருவத்தை போலவே இருப்பார் என்றும் சொல்லியுள்ளார். காவல்துறையினர் மேலும் விசாரித்தபோது தன் தந்தையை தேடி ராணுவம் வந்த விசயத்தையும் அதனால் கொட்டாஞ்சேனை பகுதியிலேயே இடம் மாறிவிட்ட தாகவும் தன் தந்தை இருக்குமிடத்தை விமலவன் கூறிவிட்டதாகவும் தற்போது கொழும்பில் தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. இதனைத்தொடர்ந்து சற்குண ராஜாவைத் தேடிக் கண்டுபிடித்து அவரை ராணுவம் கைது செய்துவிட்டதாகவும் ராணுவ வட்டாரங்களி லேயே எதிரொலிக்கிறது. தற்போது இந்தத் தகவல்கள் இலங்கை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறி இலங்கை அரசு காட்டிய உடலுக்கு சொந்தக்காரர் சற்குணராஜாவா? என்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆக பிரபாகரன் விவகாரத்தில் இலங்கை அரசு நடத்திய புருடாக்கள் ஒவ்வொன்றாக அணி வகுக்கத் துவங்கிவிட்டன.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு எதிராகத் திரண்டு எழுந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு... ராஜபக்சே, அவரது சகோதரர்கள் மற்றும் இலங்கை அரசின் கட்டளை பீட அதிகாரிகள் அனைவரும் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்கவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தின. இது தொடர்பாக ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா, சீனா, பாகிஸ்தான் உதவியுடன் தோற்கடித்தார் ராஜபக்சே.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள உலக போர்க்குற்ற வழக்குகளுக்கான நீதிபதி ஜெப்ரி ராபர்ட்சன், ""ஐ.நா.மன்றம் ஒரு அரசியல் அவை போல மாறிவிட்டதுதான் இதற்கு காரணம். ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை ஆர்வ லர்கள்தான் முழுமையாக இருக்கவேண்டும். ஆனால் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத பல்வேறு நாடுகளின் அரசியல் தூதுவர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இலங்கைக்கு இத்தகைய நாடுகள் உதவியதால்தான் அந்த தீர்மானம் தோற்கடிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ஐ.நா.மனித உரிமை அதிகாரிகள் நினைத்தால் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து தாராளமாக விசாரணை நடத்த முடியும். அதற்கு அதிகாரம் உண்டு. சர்வதேச மனித உரிமைச் சட்டம் குறித்த உடன்பாட்டில் இலங்கை அரசு கையெழுத்து போட்டிருப்பதால் இந்த விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும் இலங்கை அரசு'' என்று உரத்து சொல்லியுள்ளார் ஜெப்ரி ராபர்ட்சன். அதனால் ராஜபக்சேவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நிறுத்த மனித உரிமையில் அக்கறைகொண்ட நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
இத்தகைய விசாரணையை எதிர் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந் துள்ள ராஜபக்சே, இறுதிநாளில் இலங்கை ராணுவம் நடத்திய 20 ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங் களை அழித்து வருகிறார். அதற்கானப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது ராணுவம்.
-கொழும்பிலிருந்து எழில்
நன்றி நக்கீரன்
Friday, June 5, 2009
பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி?
Posted by நிலவு பாட்டு at 8:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
தலைவன் இருக்கின்றான்.
இத்தகைய விசாரணையை எதிர் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந் துள்ள ராஜபக்சே, இறுதிநாளில் இலங்கை ராணுவம் நடத்திய 20 ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங் களை அழித்து வருகிறார். அதற்கானப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது ராணுவம்.
ஆமா எல்லா தடங்களையும் அழித்த பின் , சொல்லி அனுப்புவார்கள் அப்போது வரும் எல்லா விசாரணைகளும். அதுவரைக்கும் தாக்குபிடிக்கத்தான் இந்தியா இருக்கிறதே!( இந்திய அரசிலும் கொஞ்ச தமிழர்கள் இருக்கிறாங்க போல... பாவம் அவர்களுக்கு இந்த விடயம் தெரியுமோ தெரியாது...
ஒரு சிறிய திருத்தம் சற்குணராஜா கொழும்பு புதுச் செட்டித் தெருவைச் சேர்ந்தவர். அவரது முகம் தலைவர் பிரபாகரனது போன்றே காணப்பட்டது எனக் கூறப்படினும் அவர் தலைவர் பிரபாகரனை விடவும் மிகவும் உயரமானவர் என்பது இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட புகைப்படப் பிரதிகளில் இருந்து புலனாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரச படைகள் நந்திகடற் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்தே பிரபாகரன் போன்றதொரு நபரின் உடலினைக் கைப்பற்றினர் எனக் கூறப்படுகிறது. பல வகைகளில் அவ்வுடல் பிரபாகரன் போன்று காணப்பட்டது என்பது வெள்ளிடைமலை. ஆயினும் அத்தகைய உருவக்கட்டமைப்புக் கொண்ட நபர் ஒருவர் விடுதலைப் புலிகளுக்குள் இருந்து நடமாடி வந்துள்ளார் என்பது நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு விடமாகின்றதல்லவா? அப்படியாயின் அந் நபர் யாராக இருந்திருக்கக் கூடும்? உண்மையாக தலைவரின் உருவம் தற்போதய காலங்களில் எப்படியானதாகக் காணப்பட்டது? இது போன்ற பற்பல கேள்விகளுக்குப் பதிலிறுக்க முடியும் போது தலைவர் இருக்கின்றாரா, அப்படியாயின் அவரின் தற்போதைய நிலை, இருப்பிடம் போன்றவற்றுக்கும் சிலவேளைகளில் யாராவது பதிலிறுக்கக் கூடுமென நம்புகிறேன்.
Post a Comment