Saturday, June 13, 2009

இறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்: இலங்கை இராணுவம் அத்து மீறல்: மனித உரிமை குழு

இந்தியாவின் ஆசியோடு, கருணாநிதியின் கையாலாகதனத்தோடும் இலங்கை அரசின் இந்த இன அழிப்பு இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கையில் வன்னியில் கடைசி கட்ட போரில் குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, இறந்தவர்களோடு சேர்த்து இராணுவத்தினர் புதைத்தனர் என்று மனித உரிமை குழு கூறியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைக்காக போராடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையை லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

இலங்கை இராணுவத்தினர் கடைசி கட்ட போரின்போது மேலதிகாரிகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள உத்தரவிட்டபோது அதற்கும் ஒரு படி கீழிறங்கி நடந்து கொண்டனர்.

அப்பாவி மக்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த பதுங்கு குழிகள் மீது இராணுவத்தினர் இராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கினர்.

காயம் அடைந்து குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, அவர்களை இறந்தவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக புதைத்தனர்.

சரணடைந்த விடுதலைப் புலிகளையும் சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சர்வதேச கருணை கழகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் கடைசி கட்ட போரின் போது நடந்த அத்துமீறல்கள், சித்திரவதை பற்றி சர்வதேச கமிஷனை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளது.

11 Comments:

ttpian said...

நாம் வாழ்ந்தால் என்ன?
வாழவிட்டல் என்ன?
மங்சல் துன்டு வியாபாரம் கொடிகட்டி பரக்கிரது!
மாம வேலை செஇவதில் கெட்டிக்காரகள்

டுபுக்கு said...

டேய் ஒப்பாரி பாட்டு
உன் மேலயும் புல்டோசர் ஏத்தி இருந்தா தமிழ் பதிவுலகம் பிழைத்து இருக்கு,

ஒதுங்கு போய் வேற ஏங்கயாச்சும் ஒப்பாரி வை

மைக் மாமா said...

டேய் காப்பி தானே அடிக்கிற காப்பி அடிக்கும் இடத்தை மறக்காமல் பதிவில் போடுடா பண்ணாடை

மைக் மாமா said...

டேய் பிரபாகரன் செத்து போய்டாண்டா
இழவு பாட்டு போய் வேற எங்காச்சும் ஒப்பாரி வைய்யடா

நிலவு பாட்டு said...

/* டேய் ஒப்பாரி பாட்டு
உன் மேலயும் புல்டோசர் ஏத்தி இருந்தா தமிழ் பதிவுலகம் பிழைத்து இருக்கும் */

இந்த அளவு குடுமிகளுக்கு பயமிருந்தால் சரிதான்.

மைக் மாமா said...

@இந்த அளவு குடுமிகளுக்கு பயமிருந்தால் சரிதான்@.

உன்னை பார்த்து பயமா லூசு
நீ எல்லாம் ஒரு ஆளு

ஆனா நீ ரொம்ப நல்லவண்டா
எத்தனை அடிச்சாலும் தாங்கறே

RUDRA said...

very good We are Tamils

நிலவு பாட்டு said...

/* ஆனா நீ ரொம்ப நல்லவண்டா
எத்தனை அடிச்சாலும் தாங்கறே */

அதான் அடிச்சே கொல்வதத்கு பக்சே இருக்கிறானே. உனக்கு எல்லாம் கொஞ்சமாவது மனசில இரக்கம், பாவம் அப்படின்னு ஒன்னு இருக்குதாடா சிங்கள காடையனே.

பாரதி said...

அண்ணே, ஈழத்தமிழரை சாட்டி எத்தனையோ பேர் பிச்சையெடுத்துப்பிழைக்கிறான்.நீயும் வாழ்ந்திற்றுப் போ.
சுப்ரமணி

நிலவு பாட்டு said...

/* அண்ணே, ஈழத்தமிழரை சாட்டி எத்தனையோ பேர் பிச்சையெடுத்துப்பிழைக்கிறான்.நீயும் வாழ்ந்திற்றுப் போ.
சுப்ரமணி */

உங்களுக்கு ஏண்டா எரியுது தமிழர்கள் அப்படின்னு ஒரு உணர்வே வராதாடா உங்களுக்கெல்லாம். எல்லாம் அந்த குடுமியும், சிங்களவன் போடற பிச்சையும் தாண்டா காரணம். ரெண்டையும் வெட்டி விட்டு வாடா விளக்கெண்ணெய்.

கண்டும் காணான் said...

ஏன் பாரதி , உங்களுக்கெல்லாம் நிதானமே இல்லையா ? இந்த நிலவுப் பாட்டு என்ன வியாபாரமா பண்ணுகின்றார் ? சரியாக வாசிக்காமல் சும்மா மேலாக பார்த்து விட்டு குற்றம் சொல்லி உண்மையான தமிழின உணர்வாளர்களை காயப் படுத்தாதீர்கள்.