Monday, June 1, 2009

எதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) !!

16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா?

அப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் குரலை உயர்த்தி பிடித்தார்களா? இல்லையே! அல்லது இந்த துப்பு கெட்ட அரசியல் வியாதிகள் வெளியுறவு துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கினார்களா?நம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்?இவர்களை சொல்லி குற்றமில்லை வயிற்று வலியும் வேதனையும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்..

இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை
ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லை!இவர்கள் தமிழினத்தை காப்பார்கள் என அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

போராட்டம் செய்வதும் சாலைமறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் மெண்டல்களுக்கான ஒருவழிமுறையே இதை இந்த இந்தி தேசம் நமக்கு புரியவைத்து விட்டது.. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்? நம்மில் எத்தனை பேருக்கு (IFS) என்ற ஒரு படிப்பு இருக்கிறது என தெரியும்..நம்மில் எல்லொருமே நம் மகன்/மகள் நிறைய சம்பாதிக்க வைக்கும் துறையை தேர்ந்தெடுத்தோமே தவிர நம் இனத்திற்காக நன்மை கிடைக்கும் என தூர நோக்கில் எத்தனை பேர் சிந்தித்தோம்

இன்று சசிதரூர்,விஜய நம்பியார்,சிவசங்கர மேனன் ,வயலார்ரவி,அந்தோணி,எம்.கே நாராயணன் ஆகிய மலையாளி கும்பல் ஈழ தமிழனை கொன்று அவன் பிணத்தின் மீது ஆடித்திரிகிறானே! நம் திராவிட கழிசடைகள் திமுகாகாரன் அதிமுககாரனை அடிப்பதும் அவன் இவனை அடிப்பதும் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு சாகிறோமே ஒழிய தமிழ்நாட்டில் 2 லட்சம் மலையாளிகள் டீ கடை நடத்தி வருகிறார்கள் என அப்போதே புரியவைத்து இருந்தால் சிறிதாவது அடங்கி இருப்பான்!

இனி எழவு வீட்டில் (ஈழம்) ஆக்கபூர்வமாக சிந்திப்போம் எனக்கு தெரிந்து ஜி.பார்த்தசாரதி என்று தமிழர் ஒருவர் இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்து ஈழபிரச்சனையை மிகச்சரியாக எடுத்து கூறி அவரை செயல்படுத்தினார்.நரசிம்ம ராவை அனுப்பி சிங்கள் அதிபனை தமிழர்கள் அங்கு மட்டுமல்ல இங்கும் இருக்கிறார்கள் மிரட்டினார்..எனக்கு தெரிந்து தமிழீழ தேசத்தின் குரல் அண்டன் பாலசிங்கம் கூட தன் ஆரம்ப பணிகாலங்களில் பிரிட்டிஷ் தூதுவராலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்தார் என படித்துள்ளேன்..மிகச்சாதரண் மொழிபெயர்ப்பாளரான அவரால் தமிழீழ தேசிய போராட்டத்தின் நியாயத்தினை உலகம் முழுமைக்கு சென்று சேர்த்தார் எனில் அதில் உள்ள மகிமை நமக்கு புரிகிறது..இங்கு நாம் வெளிப்படையாக பேசுவது போல் உலகத்திடம் பேச முடியாது.. உதாரணதிற்கு நான் திரி கோணமலையை தருகிறேன் நீ என் தமிழீழ தேசியத்தினை அங்கீகரி என. இங்கு ராஜ தந்திர மொழி என்று ஒன்று உண்டு ..அதை தூதரகத்தில் பாலசிங்கம் பார்த்து பழகினார் அதனால் அவரால் சுலபமாக செயல்படுத்த முடிந்தது

இனி நம் இனத்திற்கு செய்யவேண்டியது அதுவே! வரும் நவம்பர்/டிசம்பர் மாதங்களில் (IFS)- INDIAN FOREIGN SERVICE EXAM படிப்பிற்கான நுழைவுதேர்வு வருகிறது இதற்கு தனி தேர்வு என்று ஒன்று இல்லை.. UPSC Civil Services Preliminary Examination 2009 என்ற பொதுதுறை வழியாகவே நடை பெறுகிறது பிறகு திறமைக்கு ஏற்றவாறு தகுதியானவர்கள் IFS படிப்பை தேர்ந்தேடுத்து கொள்ளலாம்.. வீட்டில் 5 பிள்ளைகள் இருந்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நம் இனத்திற்கான தேவை குறித்து தமிழ் உணர்வாளர்கள் உணரசெய்து தேர்வில் பங்கேற்க செய்யலாமே! தேர்வில் வெற்றி தோல்வி என்ற நிலை காணப்பட்டாலும் 100 கற்கள் எறிந்தால் அதில் ஒரு கல் படாமலா போய்விடும்!இப்போதே பொது அறிவு மற்றும் துறைசார்ந்த புத்தகங்களை வாங்கி அத்தேர்வுகாக தயார் செய்யுங்கள்..செய்வார்களா?

மேலும் விபரங்களுக்கு:

1) http://entrance-exam.net/upsc-civil-services-preliminary-examination-2009/

இது கடந்த வருட விளம்பரம் ஆனாலும் சில விபரங்களுக்கு

2) http://fsi.mea.gov.in/

நன்றி http://siruthai.wordpress.com/2009/06/01/எதிர்காலத்தில்-உலகத்தமி/

3 Comments:

www.mdmkonline.com said...

Good posting and suggestion.

-Tholar.
www.mdmkonline.com

ஐந்திணை said...

//அரசியல் வியாதிகள்?//

மறுக்க முடியாத உண்மை! தீர்க்க முடியாத நோய்!!

மயாதி said...

ஈழத்தை எழவு வீடு என்றது ஈரமான உண்மைதான்.
உலகத்தின் எங்கேயோ ஒரு மூலையிலாவது , ஒருமுறையாவது தமிழனால் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நிலை என்றாவது ஒரு நாளாவது வருமா?

தமிழகத்தின் தலைவன் , தமிழின் காவலன் என்று தம்பட்டம் அடிப்பவரே தான் அடிமையாக இருப்பதாய் சொல்லிவிட்டாரே அப்படியானால் தலைவனானாலும் தமிழன் என்றால் அடிம்மையாகத்தன் இருக்க வேண்டுமா?

முத்தமிழ் வித்தகர் என்கிறாரே வித்தகர் எப்படி அடிமையாக இருக்க சம்மதிக்கலாம்?

மாற வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல, மக்கள்.
வெட்கம் இல்லாமல் ஒரு அடிமைக்கு அடிமையாக இருக்கிறார்களே!!!!!!!!!!!!