பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.
தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.
தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி,
31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,
மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 99வீதமான பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் "தமிழீழமே" இறுதித் தீர்வென மக்களாணை தெரிவித்துள்ளனர். இன்னமும் அஞ்சல் மூலமான வாக்குகளின் முடிவுகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.
இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை நகர ரீதியாக பார்வையிட இங்கே அழுத்தவும்.
Monday, December 14, 2009
பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 99 வீதமான வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"
Posted by நிலவு பாட்டு at 9:12:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment