""பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்'' என்கிறார் அந்த ஈழத்தமிழர். கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியேறி, வன்னிக்காடுகள் வரை சென்று திரும்பியுள்ள அவர், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.
""தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.
இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.
எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதி யிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச் சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே...
ஆமிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்க ணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளை ஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆமி வாகனத்தில் 10, 15 ஆமிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.
யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங் களான்னு கண்காணிக்கும் ஆமிக் காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ் சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெய புரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரி களை வழிமறிச்சு, அதிலிருந்த ஆமிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத் திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட் டான்கள் ஆமிக்காரன்கள்.
காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத் தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.
புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத் துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆமிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியா வின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.
சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில் சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூ ரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.
முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக் கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.
கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அர சாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே... பார்க்கத்தான் போறீர்கள்'' என்றார் அந்த தமிழர்.
-கொழும்பிலிருந்து எழில்
நன்றி நக்கீரன்
Friday, July 31, 2009
புதிய பயிற்சியில் புலிகள், அதிரும் காடுகள்
Posted by நிலவு பாட்டு at 8:00:00 PM 0 comments
Labels: ஈழம்
Thursday, July 30, 2009
சந்தன கடத்தல் வீரப்பனின் கோரிக்கை நிறைவேற்றுகிறது கர்நாடகா
வீரப்பனுக்க்கு இருக்கும் தமிழ் பற்று கருணாநிதிக்கோ, வீரமணிக்கோ இல்லாதது வேதனையே. இன்னும் 3 லட்சம் தமிழர்கள் அகதி முகாம்களில் சிறைகைதிகளாக இருக்கும் போதும் அது பற்றி வாயே துறக்காத இவர்களை என்ன சொல்வது. மத்திய அரசுக்கு நான் அடிமை(கருணாநிதி), மாநில அரசுக்கு நான் அடிமை(வீரமணி), என் சொத்துக்களுக்கு நாங்கள் அடிமைகள்(இருவரும்). அதனை காப்பாற்ற யாருக்க்கும் அடிமையாக இருக்க நாங்கள் தயார்.
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ல் பெங்களூரில் முழு அடைப்பு
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி "பெங்களூர் பந்த்" நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடந்தது. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே (பிரவீண்ஷெட்டி பிரிவு), மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய நகரங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப் பெரியத் திட்டம் உள்ளது. சர்வக்ஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்னை ஏற்படும்போது அச்சிலையை தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். இவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்?
சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் விதானசெதா முன்னால் நிறுவட்டுமே? என்றார்.
பிரபாகர் ரெட்டி (கன்னட வேதிகே தலைவர்): சந்தனக் கடத்தல் வீரப்பனால் மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டிருந்தபோது, அவரை விடுவிக்க வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறப்பதன் மூலம் வீரப்பன் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முற்பட்டுள்ளது.
இது துரதிருஷ்டவமானது. திருவள்ளுவர் சிலையை திறக்க ஆர்வம் காட்டும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் வீரப்பனுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் என்றார்.
சிவராமே கெடா (கர்நாடக ரக்ஷணா வேதிகே): பெங்களூரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். மாநகராட்சி தேர்தலில் அவர்களது வாக்குகளை பெறும் நோக்கத்தோடே அரசு இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறக்க முன்வந்துள்ளது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதால் தமிழர்கள், கன்னடர்களிடையே உள்ள உறவு மேலும் வலுப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது கேலிக்குரியது.
ஒகேனக்கல் பிரச்னை, கன்னடத்துக்கு செம்மொழி வழங்குவதை எதிர்த்து உள்ள வழக்கு ஆகியவை இருக்கும்போது இது எப்படி சாத்தியம் என்றார்
Posted by நிலவு பாட்டு at 12:13:00 PM 0 comments
Wednesday, July 29, 2009
வீரமணியின் மூக்கு உடைப்பு, கருணாநிதியால் பிழைத்தார் தற்காலிகமாக
பெரியார் கருத்துக்களை வெளியிடும் விவகாரம்: பெரியார் திராவிடர் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் தாக்கீது
பெரியார் கருத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடலாம் என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேல் முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இப்பிரச்சனையில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்கும்படி பெரியார் திராவிடர் கழகத்துக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
குடியரசு பத்திரிகையில் வெளிவந்த பெரியாரின் படைப்புக்களை தொகுத்து குறுந்தகடாக வெளியிட பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்து அறிவித்தது. இதை எதிர்த்து திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளையின் தலைவருமான கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ''பெரியாரின் படைப்புகளை வெளியிடும் முழு உரிமையும், பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளைக்குத்தான் உண்டு. பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் வீரமணி கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, திராவிடர் கழக பொதுச் செயலர் கி.வீரமணியின் மனுவை நிராகரித்தார். ''பெரியார் தனது படைப்புகள் குறித்து யாருக்கும் உரிமையை பதிவு செய்து கொடுக்கவில்லை. எனவே அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அறக்கட்டளைக்குத்தான் சொந்தம் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை'' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ''குடியரசு பத்திரிகையில் வெளிவந்த பெரியார் கருத்துக்கள், படைப்புகள் ஆகியவற்றை தொகுத்து குறுந்தகடாக வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த குறுந்தகட்டை குறுக்கு வழியில் கைப்பற்றி பெரியார் திராவிடர் கழகம் வெளியிட முயற்சி செய்கிறது.
இதை தனி நீதிபதி தமது கருத்தில் சொல்லவில்லை. பெரியார் திராவிடர் கழகத்துக்கு அனுமதி அளித்தால் எங்களுக்கு பேரிழப்பு ஏற்படும். எனவே அவர்கள் வெளியிட இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.ரவிராஜபாண்டியன், பி.எஸ். ஜனார்த்தன ராஜா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கி.வீரமணி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் தியாகராஜன், வீரசேகரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அவர்களின் வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி பெரியார் திராவிடர் கழகத்துக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Posted by நிலவு பாட்டு at 11:57:00 AM 1 comments
Tuesday, July 28, 2009
பிரபாகரன் நன்றாக இருக்கிறார் "உறுதியான தகவல் கிடைத்துள்ளது
அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடந்தது. அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:- "பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்க கர்நாடக அரசே முன்வந்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. திருவள்ளுவர் சிலை திறப்பு போராட்டத்துக்கு தலைமை தாங்க நான் பெங்களூர் வந்தபோது நூற்றுக்கணக்கானவர்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். ஒற்றுமையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மின்வேலி முகாம்கள் சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் ïத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை. ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம். இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர். தமிழக முதல்-அமைச்சரை ஏமாற்றினர் சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதல்-அமைச்சரையும் ஏமாற்றி விட்டனர். இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது. பிரபாகரன் நன்றாக இருக்கிறார் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார். விழாவில் அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்திக்கு பெங்களூர் மாவட்ட குடிசைவாசிகள் நலச்சங்கம் சார்பில் `ஏ.பி.எஸ் சண்முக சுந்தரம்' விருதை பழ.நெடுமாறன் வழங்கினார். அப்போது குடிசைவாசிகள் நலச்சங்க தலைவர் வி.ஜி.ஸ்ரீதர், பெங்களூர் மக்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார் உடன் இருந்தனர். முன்னதாக அம்பேத்கார் சட்ட கல்லூரி மாணவர்கள் ஈழத்தமிழர்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். thanks tamilwin"பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
Posted by நிலவு பாட்டு at 11:12:00 AM 2 comments
Labels: பிரபாகரன்
Wednesday, July 22, 2009
ஜோதிடர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது: விடுதலை
ஜூலை 22_ உலக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று முழு சூரிய கிர-கணம் நடந்து முடிந்தது.
சூரிய கிரகணத்தால் சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை பேரி-டர்கள் ஏற்படும் என்றும் இதனால் உலகத்துக்கே பெரும் கெடுதல் ஏற்படும் என்றும் வழக்கம் போல ஜோதிடர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்-பட்-டது. அவர்கள் முகத்தில் கரி பூசும் விதமாக சூரிய கிரகணம் நிகழ்ந்த இன்று உலக அளவில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்பட-வில்லை.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரக-ணம் இன்று நிகழ்ந்தது. இயற்கையின் மிக அரிய நிகழ்வான இதைக் காண உலகம் முழுவதும் மக்-கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்தியாவில் பெரும்-பாலான பகுதிகளில் முழுமையாக சூரிய கிர-கணம் தெரியவில்லை. வாரணாசி, சூரத்தில் மட்டும் முழுமையாக இருந்தது. பிகார் மாநிலம் தெரகானாவில் மேகக் மூட்டத்தின் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் மக்-கள் பெரும் ஏமாற்ற-மடைந்-தனர். -சென்னை-யிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரியவில்லை.
இந்தியாவில் இன்று காலை 5.28 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்-கி--யது. குஜராத் மாநிலம் சூரத்துக்கு அருகே அர-பிக் கடலில் முதலில் சூரிய உதயப் புள்ளியில் கிரகணம் தொடங்கியது.
சூரத் நகரில் ஆயிரக்-கணக்கான மக்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தனர். சூரத் நகர மக்-களால்தான் சூரிய கிரகணத்தை முழுமை-யாக காண முடிந்தது.. பிற பகுதிகளை விட இங்கு-தான் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.
உ.பி. மாநிலம் வார-ணா-சியிலும் சூரிய கிர-கணம் முழுமையாக இருந்தது. அங்கு வைர மோதிரம் போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதிகம் எதிர்பார்க்-கப்பட்ட பிகார் மாநிலம் தெரகானாவில் சூரிய கிரகணம் சரிவரத் தெரி-யவில்லை. மேகக் கூட்ட-மாக இருந்ததால் கிர-கணத்தை சரிவரப் பார்க்க முடியாமல் மக்-கள் ஏமாற்றம-டைந்-தனர். இந்த இடத்தில்தான் சூரிய கிரகணம் முழு-மையாகத் தெரியும் என்று நாசா அறிவித்-திருந்-தது குறிப்பிடத்-தக்கது.
நாசாவைச் சேர்ந்த இரு பிரதிநிதிகள், ஏரா-ளமான விஞ்ஞானிகள், வானியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக தெரகானாவில் கூடியிருந்தனர்.
ஸ்பேஸ் அமைப்பின் பிரதிநிதியான அமிதாப் பான்டே கூறுகையில், மேகம் கூட்டமாக இருந்-த-தால் கிரகணத்தை சரிவர பார்க்க முடியா-மல் போய் விட்டதாக ஏமாற்றம் தெரிவித்தார்.
சூரிய கிரகணம் தொடங்-கியதுமே வட இந்தி-யாவின் பெரும்பாலான பகுதிகளில் இருளாக இருந்தது. சூரிய கிரகணம் இங்கு தெளிவாகத் தெரி-ய-வில்லை. இதனால் மக்-கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆக்ரா, குவஹாத்தி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் பாதி அளவே கிரகணத்தைக் காண முடிந்தது. தலை-நகர் டெல்லியிலும் முக்-கால்வாசி கிரகணத்தை-யேப் பார்க்க முடிந்தது.
டெல்லியில் உள்ள நேரு பிளானட்டோரி-யத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
சென்னையில்...
சென்னையிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரி-யவில்லை. கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்-கத்தில் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க சிறப்பு தொலைநோக்கி வசதி செய்யப்பட்டி-ருந்தது. இதை ஆயிரக்-கணக்கானோர் வரிசை-யில் நின்று பயன்படுத்தி கிரகணத்தைப் பார்த்-தனர். ஆனாலும், மேகக் கூட்டம் காரணமாக கிரகணம் சரிவரத் தெரிய-வில்லை. பாதி அளவே தெரிந்தது. இதற்கிடையே கிர-கண நேரத்தில் சாப்பிட்-டால் பல்வேறு பிரச்சி-னை-கள் ஏற்படும் என்ற பொய்ப் பிரச்சார ஜோதி-டர்களின் புளுகுகளை முறியடிக்கும் வகையில் திராவிடர் கழக ஏற்-பாட்-டில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலை-வர் கி.வீரமணி தலைமை-யில் பகுத்தறிவாளர்-களின் உண்ணும் விரதம் நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு கிர-கண நேரத்தில் காலை சிற்-றுண்டி அருந்தினர். இந்த மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து நிகழ்ச்சியை நேரடி ஒளி-பரப்பு செய்வதற்காக ஏராளமான முன்னணி ஆங்கில தொலைக் காட்சி-கள் பெரியார் திடலில் முகாமிட்டிருந்தன.
சூரிய கிரகணத்தை-யொட்டி இன்று தமிழ-கத்தில் பல்வேறு பள்ளி-களில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மூடநம்-பிக்கைக் கூத்தும் அரங்-கேறியது.
நன்றி விடுதலை
Posted by நிலவு பாட்டு at 6:46:00 PM 0 comments
Tuesday, July 14, 2009
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும்
தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறிஇ பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது.
குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால்இ அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வாலை வெட்டின குட்டி ஆடுகள். ஊளையிட்டபடியே ஓடியது ஓநாய்.
ஆடு நீ... ஆடு நீ... ஓநாய் மாதிரி ஊளையிடாதே.... என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லைஇ வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லைஇ வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல... அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.
உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால்இ உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல்இ எது டூப்ளிகேட்இ எது வதந்திஇ எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.
கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்...
என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்காஇ மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை....மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி..... சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை... என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான்இ 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான்இ தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.
மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லைஇ அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும்இ அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.
மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில்இ அமெரிக்க அதிபராக இருந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட். அவரது மனைவிஇ அன்னா எலீனர் ரூஸ்வெல்ட்இ மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர். நல்ல எழுத்தாளர். அச்சத்தை மட்டும் உங்கள் மனத்திலிருந்து அகற்றிவிட்டீர்களென்றால்இ எவ்வளவு மோசமான அனுபவத்திலிருந்தும் நீங்கள் பலத்தையும் மனோதிடத்தையும் நம்பிக்கையையும் பெறமுடியும் என்றார் எலீனர்.
எவருடைய மனைவி என்பதைவிட அவருடைய எழுத்துதான் எலீனரின் சுய அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. இது ஒருரகம். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்இ இவருடன் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டே நம்மை அச்சுறுத்தும் விதத்தில் எழுதுவது இன்னொரு ரகம். இப்படியெல்லாம் ஜோடனை செய்பவர்களுக்குஇ நம்மை பலவீனப்படுத்துவதைத் தவிர வேறு நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை.
30 ஆண்டுகளாய் தாய் மண்ணில் நின்று போராடியவர்களுக்குஇ அச்சம் தவிர் என்று ஆணையிட்ட பாரதியையும் தெரியும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவமும் தெரியும். எலீனர் சொன்னதும் தெரியும். எதை எங்கே எப்படி 'அப்ளை' செய்வது என்பதும் தெரியும். அவர்களுக்குஇ பாதுகாப்பான இடங்களிலிருப்போரின் போதனை தேவையில்லை.
எலீனர் சொன்னதை விடுங்கள்... லசாந்த விக்கிரமதுங்க சொன்னதையாவது இவர்கள் புரிந்துகொண்டார்களா?. லசாந்த என்ற அந்த ஆண்மை தவறாத பத்திரிகையாளன் இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி சுட்டுக்கொல்லப்படுகிறான். தான் கொல்லப்படலாம் என்பதை அவன் அறிந்தே இருந்தான். கொல்லப்படுவேன் என்பதை அறிந்தே இருக்கிறேன்இ யார் கொலையாளி என்பதும் தெரியும்இ எப்போது என்பதுதான் தெரியவில்லை.... என்று கொல்லப்படுவதற்கு முன்தினம் எழுதியவன் அவன்.
லசாந்தவின் மரணவாக்குமூலமாகவே கருதப்படும் அந்தக் கடைசி தலையங்கம் ராஜபட்சேவை இப்படி எச்சரித்தது: தமிழர் பகுதிகள் முழுவதையும் நீ கைப்பற்றிவிடலாம். போராளிகளை நசுக்கிவிட்டதாக அறிவிக்கலாம். இந்த வெற்றியை நீ கொண்டாடலாம். ஆனால்இ தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்படுபவர்கள் மீண்டும் எழும்போது முன்னிலும் வலுவாக எழுவார்கள்.
லசாந்தஇ விவரமான பத்திரிகையாளன். அதனால்தான்இ பின்னர் என்ன நடக்கும் என்பதை ஜனவரியிலேயே எழுதினான். இதற்கு ஜோதிட அறிவு தேவையில்லைஇ குறைந்தபட்ச வரலாற்று அறிவு இருந்தாலே போதும். கடந்த காலத்தைத் திரும்பிப்பார்ப்பது வரலாற்றின் புதைகுழியிலிருந்து எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்காக அல்லஇ கடந்த காலங்களில் அடியோடு நசுக்கப்பட்ட இனங்களெல்லாம் எப்படி வீறுகொண்டெழுந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்காக.. லசாந்த அதைப் புரிந்துகொண்டிருந்தான். ஒப்பாரிப் பாடகர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?
2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபிறகுஇ அரசுகள்-ஆயுத இயக்கங்கள் என்று உலகம் இரண்டே தரப்பாகப் பிரிந்து விட்டதாகவும் நியாயமான வேட்கைகளுக்காகக் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை உருவானதாகவும் சொல்பவர்கள்இ நடந்ததைத்தான் சொல்கிறார்கள். தங்கள் தாய் மண்ணைச் சுவாசித்து மரணத்தை நேசித்த மாவீரர்களுக்கு புரியாத இந்த "உண்மை"இ இப்போது இதைச் சொல்லும் அறிவாளிகளுக்கு அப்போதே புரிந்திருக்கும் தானே.
அப்போது இருந்த அந்தச் சூழ்நிலையில்- தமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டம் என்பதையும்இ அவர்கள் தங்கள் தாயகத்தை மீட்கத்தான் போராடுகிறார்கள் என்பதையும்இ விடுதலைப் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும் சர்வதேசத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இந்த மகானுபாவர்கள் செய்ததென்ன?
அப்போது இவர்களிடம் பேனா இல்லையாஇ லாப்டாப் இல்லையாஇ இன்டர்நெட் இணைப்பு இல்லையா? நாட்டில் ரத்தம் சிந்திப் போராட இயலாத நிலையில்இ புலத்திலிருந்த தங்களது "ஸ்மார்ட் பவர்"-ஐ இதற்காக இவர்கள் பயன்படுத்தியிருக்க முடியுமே! பயன்படுத்தினார்களாஇ இல்லையா? இல்லையென்றால்இ இவர்களுக்கெல்லாம் ஸ்மார்ட் பவர் இருந்தென்னஇ இல்லாமல் தொலைந்தென்ன!
எந்தத் தலைவனின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லையோ அந்தத் தலைவனைப் பற்றி எழுதிக் குழப்பியவர்கள்இ பிரபாகரனை தமிழ்ச் செல்வன் ஏமாற்றிவிட்டதாக புழுதி கிளப்பியவர்கள்இ திடீரென ஞானோதயம் பெற்றுஇ உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் அனைவருக்கும் நல்லது என்று உபதேசிக்கிறார்கள். புதிய உபதேசிகள்!
உருப்படியாக என்ன செய்யவேண்டுமாம்? இந்தியாவோடு அனுசரித்துஇ இந்தியாவை அரவணைத்துஇ இருதரப்பு நலன்களையும் அகத்திலெடுத்துஇ அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நகர்த்தவேண்டுமாம். பிறப்பால் மேட் இன் இண்டியா-வாக இருக்க நேர்ந்துவிட்டதுகுறித்த குற்ற உணர்வுடன் நாங்கள் கூனிக் குறுகி நிற்கிறோம். இது தெரிந்தும்இ அனுசரிக்க வேண்டும்... அரவணைக்க வேண்டும்... என்று எழுதினால் என்ன அர்த்தம்? அது என்ன மேட் இன் இண்டியா பேனாவா?
எந்த இந்தியாவை அரவணைக்கச் சொல்கிறார்கள்?
1983ல் தொடங்கிய இனப்படுகொலைகள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக அர்ஜென்டைனா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை வழிமொழியக் கூட மறுத்துவிட்ட இந்தியாவையா? தன்னுடைய பிரஜைகளான தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்பவர்களைத் திருப்பிச் சுடத் தெரியாத இந்தியாவையா? அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்துவிட்டு கொலைகார சிங்கள ராணுவத்துக்கு மருந்துகளை அனுப்பிவைத்த இந்தியாவையா? போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருப்பதாக நேசத்துடனிருந்த ஒரு மாநில முதலமைச்சரிடமே கூசாமல் பொய்யுரைத்த இந்தியாவையா?
காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்த எங்கள் திலீபன் கொஞ்சம்கொஞ்சமாக உயிர் நீத்ததை ஹுக்கா பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவையா? ஒருபுறம் புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை வாங்கியபடியேஇ இன்னொருபுறம் புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்கிய இந்தியாவையா? அப்பாவித் தமிழ்மக்கள் மீது குண்டுவீச எந்த விமானத்தளத்திலிருந்து போர்விமானங்கள் புறப்பட்டனவோ அந்த விமானத்தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்த இந்தியாவையா? ஆயிரக் கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்துநின்று குரல்கொடுத்தபிறகும் கள்ள மௌனம் சாதித்த இந்தியாவையா? பல்வேறு நாடுகள் ராஜபட்சேவைக் கண்டிக்கஇ அந்த பிணந்தின்னிக் கழுகுக்குப் பாராட்டுமடல் வாசிக்கும் இந்தியாவையா?
1942 ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவில்இ மும்பை காங்கிரஸில் காந்தி ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அன்று அவரது பேச்சுஇ அவரது வழக்கமான பாணியில் அமைந்திருக்கவில்லை. கடுமையாக இருந்தது.
எங்களுக்கு உடனடியாக சுதந்திரம் வேண்டும்.. முடிந்தால்இ விடிவதற்குள்! செய் அல்லது செத்துமடி என்ற தாரகமந்திரத்தை இந்தியாவுக்குத் தருகிறேன். முடிந்தால் விடுதலை பெறுவோம்... அல்லது அதற்கான முயற்சியில் செத்துமடிவோம் என்று மும்பை நகரே அதிரும்விதத்தில் அந்த கிழட்டுச் சிங்கம் சீறியது.
அந்த காந்தியால் தான்... அண்ணல் காந்தியால்தான் இந்தியா பெருமை பெற்றதே தவிரஇ அன்னை சோனியாகாந்தியால் அல்ல! அன்றைக்கு காந்திக்கு சுதந்திரம் பிறப்புரிமைஇ இன்றைக்கு பிரபாகரனுக்கு சுதந்திரம் பிறப்புரிமை. அதனால்தான் அந்தக் கிழட்டுச் சிங்கம் சொன்னதை இந்த இளம்புலியும் சொன்னது- "செய் அல்லது செத்துமடி!"
இந்தியாவை அனுசரித்துப் போகும்படி நமக்கு போதிப்பவர்கள் காலச் சக்கரத்தில் ஒரு 60 ஆண்டு பின்னோக்கிய பயணம் செய்துகொண்டிருக்கிறார்களோ.... இது மகாத்மா காந்தியின் தேசம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ..
.. ஐரோப்பாவிலிருந்து அழகு சாதனங்கள் மட்டுமின்றி காந்திகள் கூட இறக்குமதி ஆவதை அவர்கள் அறியவில்லையோ.. அவர்களுக்கே வெளிச்சம்.
இவர்களை மாதிரி ஆட்கள்இ தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான்இ எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.
இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன்இ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.
திலீபன் பேசியதுஇ செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன்இ ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம்இ நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லைஇ எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம்இ சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.
நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்துஇ எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களைஇ ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?
புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவேஇ அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான்இ ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!
இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம்இ போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில்இ 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதைஇ வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில்இ 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம்இ 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்�
�ள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்திஇ வரதராஜாஇ சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான்இ உண்மைகள் வெளிவரும்.
அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால்இ ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத்தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்லஇ புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.
இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும்இ ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும்.
தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான்இ இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாகஇ நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.
அடுத்த படி இதைவிட முக்கியமானது.
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும்இ ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும்.
தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கைதான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த.
மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும்இ தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.
ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம்இ நந்திக் கடலில் உடல் கிடைத்ததுஇ எரித்துவிட்டோம்இ கடலில் கரைத்துவிட்டோம்இ கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான்இ அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்திஇ ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.
எனவேஇ ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான்இ அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான்இ கொதிப்பது அடங்கும்.
அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம்.
சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால்இ தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான்இ அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".
குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால்இ இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியதுஇ குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத்தான். குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்றஇ சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன்இ உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம்.
அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலும்இ பிரிட்டன்இ கனடாஇ தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசிஇ ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.)
போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில்இ மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.
தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழுஇ முதலில் முதல்வர் கலைஞரையும்இஅடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும்இ அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன்இ இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம்.
அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம்இ அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகஇ அவரை ஏன் பார்க்கவேண்டும்இ இவரை ஏன் பார்க்கவேண்டும்இ அவர் வந்துவிடுவாராஇ இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகுஇ உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம்.
செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்லஇ சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்கஇ தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகுஇ உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள்தான்.
ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும்இ ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும்இ ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.
இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்குஇ இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது.
சர்வதேச அரங்கில்இ போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான்இ இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில்இ எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றிஇ எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.
ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆகஇ எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.
ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதைஇ அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம்இ நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.
இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல்இ இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்லஇ சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.
மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வதுஇ இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான்.
எனவேஇ துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காகஇ மனிதச் சங்கிலியோஇஇ அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சிஇ எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.
பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்இ
நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்கள்கூட
ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.
வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை
நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த
நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....
ரத்தம் குடித்த ராஜபட்சிகளை
சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....
இறக்கை என்பது இயற்கையின் எல்லைஇ
இயலாதென்று முயலாதவர்கள்
இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.
முத்துக்குமாரின் நினைவோடு
ஒட்டுமொத்த உலகத்தையும்
திரும்பிப் பார்க்கவைத்த
எங்கள் இளையோரின் அகராதியில்
இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.
அந்தப் பொடியன்களின் தலைமையில்
உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....
களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!
ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான்இ கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரைஇ எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்திஇஇன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.
தமிழ்க்கதிருக்காகஇ
காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்
- புகழேந்தி தங்கராஜ்
Posted by நிலவு பாட்டு at 10:32:00 PM 1 comments
Labels: ஈழம்
Sunday, July 12, 2009
கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது
ஜெயில் மாதிரியான ஒரு சூழலில் 3 லட்சம் தமிழ் மக்களை வெளியேற கோரிக்கையினை வைக்காமால் அவர்களை காண செல்லும் இவர்களை என்ன சொல்வது. முதலில் மக்களை முகாமிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்புடா மடையா என்று கேட்கமால் இப்படி சென்று பார்ப்பது என்பது மக்களினை இன்னும் திறந்த சிறையில் முகாமில் வைத்திருப்பது சரியே என்பது போல் உள்ளது இவர் செல்வது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தலைமையிலான தமிழக குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு வருகைதரும் அவர் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.முதலில் தனிப்பட்ட விஜயமாக மேற்கொள்ள நினைத்திருந்தார். பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கனிமொழியை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் அனுப்புவது என்று முடிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்புக்குழ உருவாக்கப்பட்டு அதற்கு தலைமையேற்று கனிமொழி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று வருவார் என்றும் இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனிமொழியுடன் தமிழகத்திலிருந்து மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்குழுவில் இடம்பெறக்கூடும் என்றும் இருவரில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, காங்கிரஸ் சார்பில் இரண்டு எம்.பிக்ககள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் கொண்ட குழு விரைவில் இலங்கைக்கு செல்லும் என்று தெரிகிறது.
நலன்புரி முகாமகளைப் பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் மேலுதம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
தற்போது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபா நிதியுதவி கனிமொழியின் பயணத்தின் பின்னர் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.meenagam.org/?p=5510
Posted by நிலவு பாட்டு at 6:48:00 PM 1 comments
Labels: ஈழம்
Friday, July 10, 2009
பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்
எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன்.
சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உங்களது 27 வருட பாட்டைப் பாடி அதனை இதற்கு ஒப்பிடுகிறீர்களே, உண்மையில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருக்கிறீர்கள் ?புரியவில்லை. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் பொதுமக்கள் எவரும் இல்லாத இடத்தில் புலிகளும் நீங்களும் மட்டும் இருந்த தீவில் நிகழ்ந்ததா? நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். நடந்தது எல்லாம் என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன என்று.
ஒரே இலக்குடன் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நீங்கள் எதற்கு வெவ்வேறு இயக்கங்களை ஆரம்பித்தீர்கள் என்பதே புரியவில்லை எங்களுக்கு. சிவகுமாரன் தொடக்கி வைத்தான். டெலோ அமைப்பின் குட்டிமணி ஜெகன் தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட, பிரபாகரன் என்னும் துடிப்பும் வீரமும் நிறைந்த இளைஞன் வழி தொடர்ந்தான். சரி, சொந்தப் பிரச்சனையால் உமா மகேஸ்வரன் பிரிந்து போனான். புளொட் அமைப்பை உருவாக்கினான். எல்லாம் சரி. அதன் பிறகு சேர்ந்த இளைஞர்கள் ஒன்று பிரபாகரனுடன் அல்லது உமா மகேஸ்வரனுடன் அல்லது டெலோவில் சேர வேண்டியது தானே? எதற்கு மழைக்கு முழைத்த காளான்கள் மாதிரி புது புது இயக்கங்களை உருவாக்கினீர்கள்? தமிழ் ஈழம் என்ற ஒரே கொள்கை தானே உங்களிடம் அன்று இருந்தது? கண்ணீர்த்துளி போல இருக்கும் இலங்கையிலிருந்து பிரியப் போகும் தமிழ் ஈழத்தை ஆளுக்கொரு குறிசசியாகப் பிரித்து ஆட்சி செய்யவா? 8 மாவட்டங்களைக் கொண்ட தமிழ் ஈழத்தை வென்றெடுக்க அமைக்கப் பட்ட இயக்கங்களின் எண்ணிக்கை தெரியுமா? 8 அல்லது அதற்கும் மேல்.டெலோ., L.T.T.E, ஈரோஸ்,புளொட், E.P.R.L.F., E.N.D.L.F., TELF, EPDP, .
இவை என் ஞாபகத்தில் இருப்பவை. இதைவிட இன்னும் இருந்ததோ எனக்குத் தெரியாது.
கிட்டு, எங்கள் பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று கோண்டாவிலில் வைத்து டெலோ தலைவர் உயிர்ப் பிச்சை கேட்டும் சுட்டுக் கொல்லப் பட்டர் என்பதை நினைவு கூருகிறீர்களே,உங்கள் பிரச்சனை என்ன என்று எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? திம்பு பேச்சுவார்த்தைக்குப் போகும் வரையிலும் ஒற்றுமையாய் இராணுவத்தைத் தாக்கிய நீங்கள் அதன் பிறகு உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்.கிடைப்பது எதுவானாலும் அதைப் பெற்றுக் கொள்வோம் என்ற சந்தர்ப்பவாதிகளுக்கும் தமிழ் ஈழம் என்ற நினைத்த குறிக்கோள் வேண்டும் என்ற லட்சிய வாதிக்கும் இடையில் சிக்கி திம்பு பேச்சுவார்த்தை சீரழிந்தது எமக்கும் தெரியும் "தோழர்களே."
உங்களதும் புலிகளும் போராட்டங்கள் என் வயதுடன் வளர்ந்தவை. நித்தம் நித்தம் அவதானித்ததையும் அனுபவித்ததையும் மட்டுமே இங்கு சொல்கிறேன்.ஆனாலும் இந்தக் கொலைகள் விடயத்தில் புலிகளை அப்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டபோது நீங்கள் இப்போது நினைவு கூரும் வாசுதேவாவை,பாரூக்கை தெருவில் சுடப்பட்டுக் கிடந்த ஸ்ரீ சபாரத்தினத்தை நினைத்து வேதனைப் பட்டிருக்கிறேன், எதற்கு இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று ஆத்திரப் பட்டிருக்கிறேன். எங்களைப் புலிகள் இப்படி அழித்திருக்கா விட்டால் நாங்களும் எங்கள் மக்களுக்காகப் போராடியிருப்போம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு உண்மையாக இருக்குமோ என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் யுத்தம் ஆரம்பிக்கும் வரைக்கும் தான்.
புலிகள் காட்டுக்குப் போனதும் இந்திய ராணுவத்தின் ஆளுகைக்குள் நீங்கள் எங்களை நோக்கி வந்தீர்கள். நீங்கள் கூறியபடி சந்தர்ப்பம் உங்களுக்குத் தரப்பட்டது.என்ன செய்தீர்கள் "தோழர்களே?" எங்களுக்காகப் போராட வேண்டாம், நாங்கள் அழிவதை, எங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுவதைத் தடுத்து நிறுத்தினீர்களா? இவற்றையெல்லாம் நீங்களே செய்தீர்களே?புலிகளை மட்டுமா நாங்கள் வளர்த்தோம்?உங்களையும் நாங்கள் தானே வளர்த்தோம்? உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டதற்கு நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பழி தீர்த்துக் கொண்டீர்களே?
84,85 களில் எங்கள் வீட்டில் இருந்தே தினமும் 5 பேருக்கு சாப்பாடு பார்சல் போகும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் என்ற முறையில். ஆனால் புலிகளுக்கு உணவு கொடுத்ததாகச் சொல்லி எங்கள் வீட்டு வாசலில் துப்பாக்கியோடு நின்றீர்கள்.உங்களுக்கும் தானே தந்தோம் என்பதை மறந்து என் சகோதரனை மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? 1988 இல செயின்ட். ஜோன்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் தேவகுமாரனை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து கைது செய்து முகமே அடையாளம் தெரியாதவாறு மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? அவன் செய்த தேசத் துரோகம் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கிடையில் விநியோகித்தது தான்.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானபோது நீங்கள் பிணமாகத் தெருவில் போட்ட தேவகுமாரன் உயிரியல் பாடத்தில் 4 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறியிருந்தான். சொல்லுங்கள் "தோழர்களே" இவர்கள் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
உங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்தர வகுப்பு ஆசிரியர் கிருஷ்னானந்தனை? தெருவோரம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியரின் மகன் அகிலனை? இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைக் கண்டித்து மறியல் போராட்டம் செய்ததற்காக சுட்டுக் கொல்லப் பட்ட மருத்துவபீட மாணவன் சத்தியேந்திராவை, ஏதோ ஒரு உத்வேகத்தில் புலிகள் இயக்கத்துக்குப் போய் விட்டு பயிற்சியின் கடுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 3 மாதத்திலேயே திரும்பி வந்து சாதாரண வாழ்க்கை நடத்திவந்த இளைஞன் மோகனை இந்திய ராணுவத்துக்குக் கூடத் தெரியாமல் விசாரணைக்கு என்று அழைத்துச்சென்றீர்கள். இரண்டு நாள் கழித்து அவனை சத்தகக் காம்பாலேயே உடல்முழுதும் குத்திக் கொலை செய்து கொண்டு வந்து தெருவில் போட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? எங்கேயோ கேட்ட துப்பாக்கிச் சத்தத்துக்கு அருகில் இருந்த கல்லூரிக்குள் சென்று வகுப்பறைக்குள் நீங்கள் சரமாரியாகச் சுட்டதில் பலியான மாணவர்களை, படுகாயமடைந்த மாணவர்களை, ஆசிரியரை,ஞாபகம் இருக்கிறதா?
இவர்களை ஞாபகப் படுத்த எனக்கு எந்தக் குறிப்பேடும் தேவைப் படவில்லை.ஏனெனில் நான் பள்ளி செல்லும் போது வழியில் தெருவில் கண்டு சென்ற பிணங்கள் இவர்கள்.பெண்களையும் சிறுவர்களையும் மயானத்துக்கு செல்ல அனுமதிக்காத சமூகத்தில் உங்கள் தயவாலும் இந்திய ராணுவத்தின் தயவாலும் பிணங்களையும் டயர் போட்டு எரிக்கப் பட்ட எலும்புக் கூடுகளையும் நாங்கள் தெருவில் பார்த்தே வளர்ந்தோம். உங்களால் பலவந்தமாகத் தேசிய இராணுவத்துக்கு என்று பிடித்துச் செல்லப் பட்ட என் ஒன்று விட்ட சகோதரன் இன்றுவரை உயிருடன் உள்ளான இல்லையா என்று எமக்குத் தெரியாது.
சொல்லுங்கள் தோழர்களே இவர்களில் யார் நீங்கள் சொன்னபடி கிட்டு அல்லது அவருடன் சேர்ந்து உங்கள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றார்கள்? துப்பாக்கிகளைக் கையில் வைத்திருந்த உங்கள் தலைவர்கள் யுகப் பிச்சை கேட்டும் புலிகள் கேட்கவில்லை என்று சொல்கிறீர்களே. நாங்கள் உங்களுக்கு எதிராகவோ இந்திய ராணுவத்துக்கு எதிராகவோ சிறு தடியைக் கூட எடுக்காமல் அல்லவே உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்டோம்?.
உங்கள் தலைவர்கள் பெயர் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. இவர்கள் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? கிடையாது. நாங்கள் பாவப் பட்ட பொதுஜனங்கள்.ஆனால் உங்களால் கொலைகாரன் என்று சொல்லப்பட்ட கிட்டுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டு மாமா என்றே அழைத்தோம்.அவருக்கு ஒரு கால் போனதற்கே மக்கள் எப்படித் துடி துடித்துப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். காரணம் அவர்கள் மக்களை நேசித்தார்கள்.
நானும் என் அண்ணனும் வீட்டில் தனியே இருந்தசமயம் உள்ளே நுழைந்த இந்திய ராணுவத்தினர் எங்களை தனித் தனி மூலைகளில் மடக்கியபோது, எனக்கு நடக்கவிருந்த கொடுமையின் முழு வடிவம் கூடத் தெரியாத வயதில் இராணுவத்தால் பக்கத்து அறைக்கு நான் நெட்டித் தள்ளப் பட்ட போது நீங்களும் அருகில் நின்றீர்கள்.விகாரச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தீர்கள்.. என்னைப் பிடித்துத் தன்பின்னே நிறுத்தி தன் துப்பாக்கியை தன் சகாக்களை நோக்கி நீட்டி என்னைக் காக்க ஒரு தமிழகத்துத் தமிழனால் மட்டும்தான் முடிந்தது.
சொல்லுங்கள் "தோழர்களே" உங்கள் கையில் இருந்த ஆயுதங்கள் யாரைக் காக்க யாருக்கு எதிராக ஏந்தப் பட்டவை?ராஜிவ் காந்திக்கு நன்றி. குறைந்த எண்ணிக்கையிலேனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களையும் அமைதிப் படையில் அனுப்பி வைத்ததற்கு.அவர்கள் தான் தங்கள் சகாக்களிடமிருந்து மட்டுமல்ல உங்களிடமும் இருந்தும் தங்களால் முடிந்தவரையில் எங்களைக் காத்தார்கள்.
மேலே நான் சொன்னது அத்தனையும் யாழ் மண்ணில் மூன்று தெருக்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியில் அந்தக் காலப் பகுதியில் தாங்கள் உயர் ஜாதியினர் என்ற அகந்தையும் பரம்பரைக் கல்விமான்கள் என்கின்ற ஆணவமும் கொண்ட சுயநல சமூகமான எங்கள் முதல் தலைமுறைகளும் எங்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தாகக் கொண்டு போனால் போகிறது என்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் அளவுக்கு மட்டும் சமூக அக்கறை கொண்ட எங்கள் தலைமுறைகளும் வாழ்ந்த இடத்தில் – யாருடைய போராட்டத்துடனும் அதிகம் பட்டுக் கொள்ளாத மக்களுக்கு நீங்கள் நடத்திய கொடுமைகளின் சிறிய அத்தியாயம். இவர்களையும் ஆவேசம் உள்ளவர்களாக மாற்றியது உங்கள் நடவடிக்கைகள்.இவர்களுக்கே இப்படி என்றால் உண்மையாகவே முழுமனதுடன் போராட்டத்தை ஆதரித்த மக்களுக்கும், தமிழ் ஈழமண்ணின் எல்லா மாவட்டங்களிலும் நீங்கள் செய்ததைப் பட்டியல் போட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி ரத்தத்தில் தோய்ந்த இதிகாசங்கள் எழுதலாம்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்னும் குணங்களோ கூடப் பிறந்த சகோதரர் , பெற்றோரோ தங்கள் மானத்தைக் காக்க முடியாது என்று உணர்ந்த பெண்களும், தாங்கள் சொல்லும் மந்திரங்களும் கற்பூரம் காட்டும் கடவுள்களும் தங்களைக் காக மாட்டாது என்று பூணூலைக் கழட்டி எறிந்து விட்டு இளைஞர்களும் என எல்லா சமூகத்தவரும் இரவுகளில் வீட்டை விட்டு வெளியேறி கானகம் நோக்கிச் சென்றது உங்கள் அட்டகாசங்களால் தான். தங்கள் மகள் வெளியேறியபின்னர் இனி அவள் மானத்துடன் இருப்பாள் என்ற நிம்மதியில் நீங்கள் வந்து விசாரிக்கும் போது அவள் யாரோடோ ஓடிப் போய் விட்டாள் என்று தலை நிமிர்ந்து பெற்றோர் சொன்ன அதிசயம் நிகழ்த்திக் காட்டியவர்கள் நீங்கள்.
எங்கள் தேசியத்தலைவர் எத்தனை பெரிய தீர்க்கதரிசி என்பது அப்போதுதான் தெரிந்தது. அவர் இடத்தில் நின்று பார்க்க எனக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை என்றாலும் ஒரு கணம் நின்று பார்க்கிறேன்.நீங்கள் சொன்னபடி உங்களுடன் ஒற்றுமையாக நின்று போராடி இருந்தால் என்ன நடந்திருக்கும்? இது என்ன தமிழ் நாட்டு அரசியல் மேடையா கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக் கொள்ள? ஆயுதப் போராட்டம். படைபலத்தை மட்டுமே நம்பி இருப்பது. போராடத் துணிந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையே கொஞ்சம். அதையும் எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வீர்கள்.
அதன் பிறகு போராட்டத்தின் ஆரம்பத்திலேயே காட்டிக் கொடுப்பவர், தலைமைக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் போராட்டத்தைக் கைவிடும் இயக்கம், எதோ கொஞ்ச அதிகாரம் வந்தால் போதும் என்று விலகும் இயக்கம், ஒன்றும் வேண்டாம் மது,மாது, பதவி சுகம் கிடைத்தால் போதும் என்று கைவிடும் இயக்கம் என்று பிரிந்து சென்றால், போராடச் சேர்ந்த இளைஞர்களும் தவறான பாதைக்கு போக நேர்ந்தால், ஒரே லட்சியத்துடன் போராடுபவன் என்ன செய்ய முடியும்? உங்களை அவர்கள் தங்கள் லட்சியப் பாதையிலிருந்து அகற்றிய படியால் தான் தமிழ் ஈழப் போராட்டம் மாபெரும் சக்தியாக எழுந்தது. இன்று உலக நாடுகள் அனைத்தும் , ஐ.நா. வரைக்கும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றது என்றால் அது விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களாலும் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளாலும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலாலும் மட்டுமே தான்.அவர்கள் உங்களை அகற்றிய விதம் தப்பாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் லட்சியத்தின் தடைக் கற்கள், அகற்றப் பட வேண்டியவர்கள் என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்களே? தலைவர் தான் ஆள வேண்டும் என்று இதைச் செய்யவில்லை.போராட்ட இலக்கு தமிழ் ஈழம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே இதைச் செய்துள்ளார். ஈரோஸ் இயக்கத்தை புலிகள் அப்படியே உள்வாங்கிக் கொண்டதும் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் இதற்குச் சான்று.
.உங்களுக்கு வேலை மினக்கெட்டு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை.ஆனால், இப்போது நீங்கள் போடும் ஊடக ஊதல்கள் உங்கள் சுயரூபங்களை நீங்கள் காட்டிய காலப் பகுதிகளை அறியாத இளைஞர்களைக் குழப்பும். அதனால் தான் ஒரு சாதாரண பிரஜையாக உங்களால் மக்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளில் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடுத்துச் சொன்னேன்.
இதோ எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள். துள்ளிக் குதிக்கிறீர்கள்.களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன், தன் மக்களுக்கு உங்கள் எஜமானர்களால் வன்னியில் நடத்தப் பட்ட கொடுமைகளைப் பார்த்து மனமுடைந்து போய்விட்டான். தன் வீரர்களின் துப்பாக்கிகள் இனிமேலும் சத்தம் எழுப்ப மாட்டாது என்று கூறி விட்டான். அர்ப்பணிப்பும் வீரமும் நிறைந்து களமாடி சாதனை படைத்தவர்கள் ஆட்கடத்தலும் கப்பம் கோருதலும் வேறு சுகங்களும் என்று வாழ்ந்த உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.தமிழர்களுக்கா�
�� போராடத் தயாரான எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று. முடியுமா உங்களால்? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தே நன்றாக வாழ்ந்த உங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கருணாவை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. இனிமேலாவது குரல் கொடுப்பீர்களா? இதோ வன்னியில் இருந்து வந்து முகாம்களில் கிடக்கிறோம், வதை முகாம்களில் வதை படுகிறோம், கிளிநொச்சியில் வீடுகளுக்குள் உணவு உடை இரண்டுமே இன்றிக் கட்டிப் போடப் பட்டிருக்கிறோம், பொலனறுவையில் எங்கள் உடல் உறுப்புக்களை எடுப்பதற்காகக் கொல்லப் படுகிறோம். நீங்கள் முதன் முதலில் ஆயுதம் எடுத்ததன் நோக்கத்தில் சிறிதை என்றாலும் நிறைவேற்ற எமக்காகக் குரல் கொடுப்பீர்களா? எங்களை முகாம்களை விட்டு எங்கள் வீடுகளில் குடியேற அனுமதிக்குமாறு குரல் கொடுப்பீர்களா?குறைந்த பட்சம் புலிகளால் எங்களுக்கு கிடைக்கப் போகும் சிறு உரிமைகளை உங்கள் கூற்றுப்படி புலிகள் அழிந்துவிட்ட காரணத்தால் புலிகளின் எதிரிகள் எல்லோருமாகவாவது ஒற்றுமையாக நின்று பெற்றுத் தருவீர்களா? முடியுமா உங்களால்?
முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்
நன்றி
மதியழகி
Posted by நிலவு பாட்டு at 11:24:00 PM 3 comments
Labels: ஈழம்
Wednesday, July 8, 2009
அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை
இதோ அயல் தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்
ஆனால் வாழ்க்கையில்..?
தூக்கம் விற்ற காசில்தான்
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே
இளமை கழிக்கின்றோம்
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்
ஒரு விமானப்பயணத்தினூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்து விடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்
மர உச்சியில் நின்று
ஒரு தேன்கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழுந்த நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்பு நேரத்துக் கஞ்சி
தெல்க - பம்பரம்- சீட்டு- கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுகிழமையாய் எதிர்பார்த்து
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலகக்கோப்பை கிரிக்கெட்!
இவைகளை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம்
விசாவும் பாஸ்போட்டும் வந்து
விழிகளை நனைத்து விடுகிறது
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்
மாப்பிள்ளை அலங்காரம்
கூடிநின்று கிண்டலடித்தல்
கல்யாண நேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்துப் போராட்டம்
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பறிமாரும் நேரம்
எனக்கு நிச்சயத்தவளின் ஓரப்பார்வை
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
“கண்டிப்பாய் வரவேண்டும்”
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே
தொலைந்து விடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல் தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்
நண்பர்களின் மரணசெய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும் தான்
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலேயே கரைந்துவிடுகிறார்கள்!
“இறுதிநாள்” நம்பிக்கையில்தான்
இதயம் சமாதனப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டு பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு
முதல் பார்வை முதல் கழிவு
தினாரும்- திராமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சத்ததை
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே
நாங்கள் தொலைவில் அழும் சத்தம்
யாருக்குக் கேட்குமோ?
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்
தங்கையின் திருமணமும்
தந்தையின் கடனும்
பொருளாதாரமும் வந்து
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
நன்றி இதை எழுதியவருக்கு
Posted by நிலவு பாட்டு at 6:24:00 PM 0 comments
Tuesday, July 7, 2009
மீண்டும் போர்! ஓயாத புலிகள்! அதிர்ச்சியில் ராணுவம்! நக்கீரன்
வாங்கிய அடிக்கு வாய்விட்டு அலறக்கூட முடியாமல் உள்ளுக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசுக்கு இடுப்பு சுளுக்கு ஏற்படும் அளவுக்கு புலிகள் கொடுத்திருக்கும் புதிய அடிதான் சிங்கள ராணுவத் தலைமைக்கு உள்காயத்தை உண்டாக்கியிருக்கிறது.
இறுதி கட்டப் போரின்போதே யுத்த யுக்தியாக ஆயுதங்களேந்தி அணிஅணியாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது விடுதலைப்புலிகளின் படையணி. மாதக்கணக்கில் தாங்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் காட்டிலேயே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில்தான், காட்டுப்பகுதியில் புலிகள் முகாமிட்டிருப்பதை அறிந்து ஜூன் 2-வது வாரத்தில் சிங்கள ராணுவத்தினர் 150 பேர் தாக்குதல் நடத்த வந்தனர். ஆரம்பகட்டத்தில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. பலவீனமான நிலையில் காட்டுக்குள் புலிகள் பதுங்கி யிருப்பதாக நினைத்து முன்னேறிச் சென்றது ராணுவம். நெடுங்கேணி என்ற பகுதிக்குச் செல்லும் வரை ராணுவத்தினர் விசிலடித்துக் கொண்டுதான் போனார்கள். அதன்பிறகுதான்... ... ...
காட்டுப்பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் 150 பேரையும் சுற்றி வளைத்தனர் புலிகள். இது விடுதலைப் புலிகளுக்கேயுரிய தனித்துவமான போர் யுக்தியாகும். ராணுவத்தினரை முன்னேற விடுவதுபோல போக்கு காட்டி, சரியான தருணத்தில் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது புலிகளின் அசாத் திய போர் முறை. அதன்படி நெடுங்கேணியில் சிக்கிய ராணுவத்தினர் மீது புலிகள் கடுமை யான தாக்குதல் நடத்தினர். அவர்களிட மிருந்த ஆயுதமும், சரியான இலக்கும், விடுதலை உணர்வும் சிங்கள ராணுவத்தை சிதறடித்தன. முன்வரிசைகளில் இருந்த ராணுவ வீரர்களின் உயிரற்ற உடல்கள் பொத் பொத்தென தமிழீழக் காடுகளில் விழ, அடுத்த வரிசைகளிலிருந்து ராணுவத்தினர் சிதறி ஓடினர். அவர்களில் பலர், புலிகள் வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி பலியானார்கள். சிங்கள ராணுவம் தப்பமுடியாதபடி படை வளையம் அமைத்த புலிகள், பல திசைகளிலிருந்தும் தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் 125-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் உயிரை விட்டனர். எஞ்சியவர்களில் பலருக்கும் பலத்த காயம். நடை பிணங்களாகத்தான் காட்டிலிருந்து தப்பியுள்ளனர்.
நெடுங்கேணி தாக்குதலை நம்மால் நெடுநாளைக்கு மறக்க முடியாது என்ற கருத்து ராணுவ வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாக புலிகள் செயல் பாட்டுடன் இருப்பதையும் வலுவான ஆயுத பலத்துடன் அவர்கள் இருப்பதையும் நேரில் கண்டுவிட்ட ராணுவம் மிரட்சியின் உச்சத் தில் இருக்கிறது. இலங்கை அதிபர் ராஜ பக்சே, ""உலகத்தை நம்பவைப்பதற்கு அரசுத் தரப்பிலிருந்தும் ராணுவத் தரப்பிலிருந்தும் நாம் பல கதைகளை விடலாம். ஆனால் விடுதலைப்புலிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது'' என்று எச்சரிக்கையான குரலில் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், இந்த பலத்த அடி பற்றிய தகவல் வெளியே கசிந்துவிடக் கூடாது என பொத்தி வைத் துள்ளது ராணுவத் தலைமை.
ஈழத்தின் காட்டுப் பகுதி களுக்குச் செல்லும் ராணுவத் தினரின் உயிருக்கு உத்தரவாத மில்லை என்கிற அளவுக்கு உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிலிருந்து நடத்தும் புலிகள். நெடுங்கேணி பகுதியில் மட்டுமின்றி, பல காடுகளிலும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேரடித் தாக்குதலிலும் கண்ணிவெடி களாலும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கையை மறைப்பதிலேயே குறியாக இருக்கும் சிங்கள அரசு, தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனது படையைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு வசந்தம் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிரமாகிவிட்டது.
தமிழர் பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து அங்கே விளை நிலங்களை உருவாக்குவது என்பதே "வடக்கு வசந்தம்' திட்டமாகும். காடுகளை அழிப்பதன் மூலமாக விடுதலைப்புலி களை அழிக்க முடியும் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால், காட்டுக்குள் நுழைந்தால் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துவதால், "வடக்கு வசந்தம்' திட்டத்திற்காக மலையகத் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களையும் தமிழகத்தின் அகதி முகாம்களில் இருப்பவர்களையும் கொண்டு செல்வதற்கு ராஜபக்சே அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழகத் தமிழர்களுக்கும் தங்கள் செலவில் விசா எடுத்து அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தமிழர்களை நம்பச் செய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாத னை "வடக்கு வசந்த'த்தின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு வழங்குவதாக வெளியுலகுக்கு காட்டி, அவர்களை காடுகள் அழிப்பு திட்டத்தில் இறக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இதன் மூலமாக காட்டுப் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளில் சிங்கள ராணுவத்தினர் சிக்காமல், தமிழர்களை உயிர்ப்பலி கொடுத்து, தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளையும் அழிக்கலாம் என கணக்குப் போட்டுள்ளது ராஜபக்சே அரசு.
காடு அழிப்பில் தமிழர்களை பலி கொடுப்பதுடன் காட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அழிக்க இந்தியாவின் நவீன ரேடார் உதவி தேவை என்பது பற்றியும் சிங்கள அரசும் ராணுவமும் ஆலோசித் துள்ளது. அதன் அடுத்த கட்ட மாகத்தான் ராஜ பக்சேவின் சகோதரர் கள் டெல்லிக்கு விசிட் அடித்தார்கள் என்கிற கொழும்பு வட்டாரத்தினர், கோத்தபய ராஜ பக்சேவும் பசில் ராஜபக்சேவும் இந்தியா பறந்ததன் நோக்கம் இதுதான். தங்களின் திட்டத்திற்கு ஒப்புதலும் உதவியும் பெறுவதற்காகத்தான் இந்திய அரசின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்தனர்.
இந்தியாவின் ஒத்துழைப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என்று கொழும்பு திரும்பியதும் ராஜபக்சே விடம் சகோதரர்கள் தெரிவித்திருக் கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் என்கிறார்கள்.
இந்திய ரேடார்களின் உதவி யுடன் காட்டில் உள்ள புலிகளின் மீது ரசாயன குண்டுகளை வீசிக் கொல்ல வும், காடு அழிப்பில் ஈடுபடும் தமிழர்களை கண்ணிவெடிகளில் பலி கொடுக்கவும் "வடக்கு வசந்தம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கி யுள்ள ராஜபக்சே அரசுக்கு புதிய தாக்குதல்கள் மூலமாக கிலியை உண்டாக்கியிருக்கிறார்கள் புலிகள்.
-கொழும்பிலிருந்து எழில்
நன்றி நக்கீரன்
Posted by நிலவு பாட்டு at 8:09:00 PM 8 comments
Labels: ஈழம்
Monday, July 6, 2009
ஈழத் தமிழர் பற்றி சோனியா ஒருவார்த்தை பேசியது உண்டா? வைகோ
ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி சோனியா எந்த ஒரு இடத்திலாவது இதுவரை ஒரு வார்த்தையாவது பேசியது உண்டா என்று கோவையில் 8.6.2009 அன்று பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. நடத்திய மாபெரும் பொதுக் கூட்டத்தில் வைகோ கேட்டார். உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி.
சென்ற ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் இலங்கைக்கு நாங்கள் இராணுவ உதவி செய்திருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும்? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இராணுவ உதவி செய்து இருக்கிறோம்.
இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்று வதற்கு நீ இராணுவ உதவி செய்வாயா? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீ யார்? நீ என்ன உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டின் ஒருமைப் பாட்டையும் காப்பாற்றுகின்ற காவல்காரனா? அப்படியானால் நீ எப்படி டாக்காவுக்கள் நுழைந்தாய்? உனக்கு டாக்காவில் கிழக்குப் பாகிஸ்தானில் என்னவேலை? நீ எப்படி இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தாய் என்று கேட்க மாட்டார்களா,
அன்றைக்கு மனிதாபிமான அடிப்படையில் மனிதஉரிமைகளைக் காப்பாற்றப் போகிறோம் என்றுசொல்லி இந்திரா காந்தி அவர்கள் அறிவித்தார். நாங்களும் வரவேற்றோம். இன்றும் வரவேற்கிறேன். பூபேஷ்குப்தா ராஜ்யசபாவில் சொன்னார் இது சர்வதேச மனிதஉரிமை பிரச்சனை. இந்திய இராணுவம் செல்லட்டும் என்றார். அப்படியானால், இன்னொரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீ இராணுவத்தை அனுப்புவாயா?
அப்படியானால் கிழக்கு ஆசியாவில் எந்த தேசத்தில் ஒருமைப்பாடு உடையும் என்றாலும் இராணுவத்தை நீ அனுப்புவாயா? பக்கத்தில், தூரத்தில் இருக்கின்ற எந்த நாடுகளிலும் பிரச்சனை என்றால் நீ அங்கு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற இராணுவத்தை அனுப்புவாயா? அந்த ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து இந்திய ஒருமைப்பாட்டை புதைகுழிக்கு அனுப்பி விடாதே.
உனக்கும் எனக்கும் என்ன உறவு? பெரியார் கேட்டார். அவர் கடைசிக் கூட்டத்தில் கேட்டார். பெரியார் வழிவந்த பேரப்பிள்ளைகள் கேட்கிறோம். உனக்கும் எனக்கும் என்ன உறவு என்று கேட்க மாட்டோமா? உனக்கும் எனக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட உறவு 200 ஆண்டுகளுக்குள். யூனியன் ஜாக் கொடி உயர்த்தப்பட்டதற்குபின்னே. பிரிட்டிஷ் காரன் வந்ததற்குப்பின்னே. அவன் லத்திக் கம்பும் துப்பாக்கியும், பல்வேறு நாடுகளாக சிதறிக்கிடந்த பூபாகத்தை ஒன்றாக இணைத்ததற்குப்பின்னே வந்த உறவு. இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறோம் இந்திய ஒருமைப்பாட்டை.
இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்திருக் கிறோம். இறையாண்மையில் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். உறுதிமொழி எடுத்து இருக்கிறோம் நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த உறவு நூறு ஆண்டுகளுக்குள் வந்த உறவு ஆனால், ஈழத்தில் இருக்கிற எங்கள் தமிழ் ஈழ உறவு தொப்பூள்கொடி உறவு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உறவு. கரிகாலனுக்கு முந்தைய உறவு. தொல்காப்பியனுக்கு முந்தைய உறவு. அந்த உறவை நாங்கள் இழந்துவிட முடியாது.
ஆயுதங்கள் அனுப்பினாய் - பணம் கொடுத்தாய் - வட்டியில்லாக் கடன் கொடுத்தாய் - இந்திய இலங்கை கடற்படை தகவல் கூட்டு ஒப்பந்தம் போட்டாய் - விடுதலைப் புலிகளுக்கு வந்த கப்பல்களை கடலில் மூழ்கடித்தாய் - இவ்வளவும் செய்துவிட்டு ஆயுதங்கள் கொடுத்தாயே - ராடார்கள் கொடுக்கவில்லை என்று இப்பொழுது சொல் கிறார்கள். இங்கே வாசித்தாரே ஜெயசூர்யா என்பவனின் கட்டுரையை, இலங்கை இராணுவ இணையதளத்தில் வந்த கட்டுரையை,
நீ கொடுத்த ராடர்களை, இயக்குவதற்கு சிந்தாமணி ரவுத், ஏ.கே.தாகூர் என்று இரண்டு இந்தியர்கள் அவர்கள் போரின்போது காயப்பட்டார்கள். அப்ப நீ இங்கே இருந்து ஆயுதம் அனுப்புவாய் - நிபுணர்களை அனுப்புவாய் - துப்பு கொடுப்பாய் - சாட்டிலைட் காமிராவில் அவர்களது நடமாட்டங்களைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டுவாய் - இந்த யுத்தத்தை இந்திய அரசுதான் நடத்தியது.
ஆகவேதான், சோனியா காந்தி அம்மையார் என்ன திட்டம் போட்டார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கருணாநிதியின் மதுரத் தமிழால் தமிழ்மக்களை வசப்படுத்திக் கொள்வார் அவர் பேச்சில் வல்லவர். இனியதமிழில் - திகட்டாத தமிழில் - தித்திக்கும் தமிழில் பேசுவதில் வல்லவர் எழுதுவதில் வல்லவர் பக்கம் பக்கமாக வர்ணிப்பதில் வல்லவர் அப்படிப்பட்ட மயக்குமொழியில் முரசொலியில் மட்டுமல்ல அனைத்துப் பத்திரிகை களிலும் எட்டுகாலங்கள் அவருடைய கடிதங்கள், முக்கியத் தொலைக் காட்சிகள் எல்லாம் அவர் குடும்ப ஊடகங்கள் அது கோடிக்கணக்கான மக்களைப் போய்ச் சேர்கின்றன.
தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுகிறது 14 பேர் தீக்குளித்தைச் சொன்னேனே ஒருவருக்குக்கூட இன்றைய முதலமைச்சர் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால், இவ்வளவு செய்துவிட்டு ஈழத்தமிழர் களுக்கான ஆதரவு உணர்ச்சி இங்கே எழுந்து விடக் கூடாது என்று அந்த உணர்வை தனக்கு அரசியல் ரீதியாக சாதகமாக்கப் பார்த்தார். உண்ணாவிரதம் இருந்தார் - சட்டமன்றத்தில் தீர்மானம் என்றார் - ராஜினாமா என்றார் - 1956 ஆம் ஆண்டில் இருந்து அவருடைய போராட்டங்களை வர்ணித்தார் - அங்கு மக்கள்படுகிற துன்பத்தை துயரத்தை அவருக்கே உரிய ஆற்றலோடு எழுதினார். ஆக கலைஞரே கவலைப்படுகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி னார்.
ஒருபக்கத்தில் ஆயுதங்களைத் தந்து கொண்டே இருந்தது தில்லி அரசு. தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். தமிழகத்தில் எதிர்ப்பு உணர்வு வேகமாக வந்துவிடக்கூடாது என்று தடுக்கின்ற வேலையில் கருணாநிதி அவர்கள் ஈடுபட்டார்கள். மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்றார். இன்னொரு நாட்டில் இதற்குமேலே தலையிட முடியாது என்றார்.
ஆனால், இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்களே, 1,45,000 மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எங்கே நடக்கும் இந்த இனக் கொலை? இன்றைக்கு உலகில் பலதேசங்கள் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த துயரத்தைத் தடுப்பதற்கு குரல் கொடுக்கிறபோது இந்தியா இலங்கையோடு சேர்ந்து ஓட்டுப் போட்டது. இன்றுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுவிட்சர்லாந்து நாடும், நியூசிலாந்தும் ஐ.நா. பொதுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அந்தத் தீர் மானத்தை இந்தியா தோற்கடித்தது. தோற்கடிப் பதற்கு முழுமூச்சாக வேலை செய்தது.
ஆகவே, உலக அரங்கத்தில் நியாயமாக எழுகின்ற உணர்வுகளைப் பார்க்கிறோம். யார் அந்த பாரக் ஒபாமா? அவருக்கும் தமிழருக்கும் என்ன தொப்பூள் கொடி உறவு? யார் அந்த கார்டன் பிரௌன் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் அவருக்கும் தமிழனுக்கும் என்ன உறவு? யுத்தத்தை நிறுத்து என்று அவர்கள் சொன்னார்கள். நெல்சன் மண்டேலா அவருக்கும் தமிழருக்கும் என்ன உறவு? யுத்தத்தை நிறுத்து என்றார். ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் சொன்னது. தென்னாப்பிரிக்கா சொன்னது. ஆனால், ஏன் மன்மோகன் சிங் கடைசிவரை யுத்தத்தை நிறுத்தச் சொல்லவில்லை?
கடைசி நிமிடம் வரை சோனியா காந்தி இந்தியாவில் எந்தக் கூட்டத்திலாவது ஈழத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று ஒருவார்த்தை உச்சரித்தாரா? தமிழர்களே இதை நீங்கள் யோசிக்கவேண்டும். இன்றைக்கு இந்திய அரசை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற சோனியாகாந்தி ஈழத் தமிழர்களைப் பற்றி எங்காவது ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினாரா? பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் கொல்லப்பட்டார்களே, உணவும் மருந்தும் இன்றி செத்தார்களே, அதுபற்றி எங்காவது சொன்னாரா? எங்கே நடந்தது இந்தக் கொடுமை?
அமெரிக்க ஜனாதிபதி ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய சித்ரவதைக் கூடத்தைப் பார்த்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு முதல்நாள் கெய்ரோவில் பேசுகிறார். நைல் நதிக்கரையில் - பிரமிடுகள் உயர்ந்து இருக்கிற எகிப்து நாட்டுத் தலைநகரில் அங்கே உள்ள பல்கலைக் கழகத்தில் பேசுகிறார். பேசுகிறபோது என்ன சொல்கிறார்? இதைக்கவனிக்க வேண்டும் தமிழர்கள்.
அமெரிக்க நாட்டில் இருக்கிற யூதச் செல்வந்தர்களின் தயவு இருந்தால்தான் அங்கே அரசியலை ஜாக்கிரதையாக நடத்தமுடியும். ஆனால், அங்கே சென்று பேசுகிறார். யூதர்களுக்கும் ஒரு தனிநாடு பாலஸ்தீனியர்களுக்கும் ஒரு தனி நாடு இந்த இரண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று பேசினார். அதோடு நிறுத்தவில்லை.
பாலஸ்தீனியர்களின் பகுதி என்று கருதப்படுகிற இடத்தில் யூதக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். யூதக்குடியேற்றங்கள் பாலஸ்தீன மண்ணில் இடம்பெறக் கூடாது என்று பாரக் ஒபாமா சொல்கிறார். பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இரண்டு தேசங்கள். இரண்டு நாடுகள். அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் தமிழ் ஈழத்துக்கு உண்டே; படித்தவர்களே யோசியுங்கள். தொலைவில் இருந்து கேட்டுக் கொண்டு இருப்பவர்களே யோசியுங்கள்.
பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இருக்கிற பிரச்சனை 4000 ஆண்டுகளாக சிக்கலில் இருக்கிற பிரச்சனை. நான் பாலஸ்தீனியர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பவன். அராபாத் நடத்திய போராட்டங்களை அன்றுமுதல் ஆதரிப்பவர்கள் நாங்கள். இன்றும் பாலஸ்தீனியர்களுக்கு தனிதேசம் வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள். ஆனால், பிரச்சனையின் சிக்கல் முடிச்சு எங்கே அவிழ்க்கபட வேண்டும் என்று சொன்னால் 4000 ஆண்டுகளாக அந்தப் பிரச்சனை இருக்கிறது.
யாருக்குச் சொந்த பூமி? யாருடைய பூர்வீக பூமி என்று. அந்தச் சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை. ஆனால், இங்கே சர்ச்சைக்கே இடம் இல்லையே? வல்வெட்டித்துறையும் - யாழ்ப்பாண மும் தமிழர்களின் பூர்வீக பூமி. வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீகப் பூமி. 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமர் ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுகொடுக்க வேண்டும் என்று துடித்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் சொன்னார்கள் ‘வடக்கிலும் கிழக்கிலும் வாழுகிற தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள். சிங்களவர்கள் அல்ல. தமிழர்கள் பூர்வீகக்குடிமக்கள்’, என்றார்.
அந்த பூர்வீகக் குடிமக்கள் அவர்களுக்கு என்று தனிதேசம் அமைத்து வாழ்ந்தவர்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரசு அமைத்து வாழ்ந்த வர்கள். பாலஸ்தீனிய யூத பிரச்சனையில் இந்த உண்மை களை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசு அமைந்து வாழ்ந்தவர்கள். ஒல்லந்தர் வருவதற்கு முன்பு - போர்ச்சுகீசியர் வருவதற்கு முன்பு - பிரித்தானியர் வருவதற்கு முன்பு - அரசு அமைத்து கொற்றம் நடத்தி வாழ்ந்தவர்கள்.
(தொடரும்)
Posted by நிலவு பாட்டு at 7:27:00 PM 2 comments
Labels: ஈழம்
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் "வடக்கின் வசந்தம்" ஈனச் செயலைக் கண்டிப்போம்! தடுத்து நிறுத்துவோம்!!
வன்னிப் பெண்களுக்கு களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனச் செயலைக்கண்டித்து தடுத்து நிறுத்த தமிழர்களை ஒன்றிணைய நாம் தமிழர் இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது.
நான்காம் ஈழப் போரில் வன்னிப் பெருநில மக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை இராணுவத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மக்களில் இளைஞர்களைப் பிரித்து அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. எனவே முகாம்களில் அதிக அளவில் இருப்பது பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும்தான்.
ஆண்கள் துணையற்ற இந்தப் பெண்களை அவரவர் கிராமங்களில் திரும்பவும் குடியேற்றுவதற்கான திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு “வடக்கின் வசந்தம்” என்று பெயரிட்டிருக்கிறது. அதனை செயல்படுத்துவதற்காக மே 7 ஆம் தேதியன்று 19 பேர் அடங்கிய குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்திருக்கிறது. அந்தக் குழுவில் ஒருவர் கூட தமிழர் இல்லை. அனைவரும் சிங்களவர்களே. இராணுவம், காவல்துறை மற்றும் நிர்வாகத்துறையை சார்ந்த சிங்களவர்கள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளார்கள். நீதித் துறையில் இருப்பவர்கள் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை.
இப்படிப்பட்டத் திட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதியன்று அவர் இலங்கை ஜனாதிபதியை இதற்காக சந்தித்திருக்கிறார். ஜூலை மாதத்தில் இருந்து அவரது குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய ஆராய்ச்சி நிறுவனமும், அதனுடன் தொடர்பு கொண்ட வேறு தனியார் வேளாண் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக வவுனியாவில் இருந்து செயல்பட உள்ளன. மேலும், மன்னார் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்க உள்ளார்.
முகாம்களில் உள்ள வன்னி மக்களில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ள காரணத்தால் வன்னிப் பகுதியின் வேளாண் பணிகளுக்கு இந்தப் பெண்களைப் பயிற்றுவித்து, அவர்களை கிராமங்களில் குடியேற்றப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். விதைப்புக்காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதால் இந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், இந்திய அரசையும் அவர் நிர்ப்பந்தப் படுத்தியிருக்கிறார். இந்தப் பணிக்காக இலங்கை அரசுக்கு, 500 கோடி ரூபாய் உதவியை இந்திய / தமிழ்நாடு அரசுகள் அறிவித்திருக்கின்றன.
வன்னிப் பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சிங்களர்களை மட்டுமே கொண்டுள்ள காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. சிங்கள நிர்வாகிகளை மட்டுமே கொண்டுள்ள நிர்வாகத்துறையும் வன்னிப் பகுதியில் நுழைந்துள்ளது. கூடுதலாக, வன்னியை சீரமைப்பதற்காக சிறையில் உள்ள 30 ஆயிரம் சிங்களக் கைதிகளை விடுவிக்கும் திட்டமும் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்கள் துணையற்ற பெண்களை மட்டுமே கிராமங்களில் குடியேற்றினால் என்ன நடக்கும்? மாண்புள்ள வாழ்க்கையை அவர்களால் நடத்திட முடியுமா?
“வலுக்கட்டாயமாக மீழக்குடியமர்த்தப் படப் போகின்ற இந்தப் பெண்களால் சிங்களமயமாக்கப்பட்டுள்ள வன்னியில் மானத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி பற்றி சிந்திக்க வேண்டியது என்னைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளின் வேலையல்ல. அவர்களின் பசித்த வயிறுக்கு நிரந்தரமாக சோறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவது மட்டுமே என் வேலை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், விதைப்புக் காலம் தொடங்கும் அக்டோபருக்கு முன்பு அவர்களைக் குடியமர்த்தி, பயிற்சிகளை அளித்தாக வேண்டும்” என்ற ஈன வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்கிறார்.
மூன்று பெண்களுக்குத் தந்தையாக இருக்கும் இவரால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது? கும்பகோணம் மக்களுடன் மக்களாக நின்று 1930-களில் யானைக் கால் நோயை ஒழிக்கக் கடுமையாக உழைத்த டாக்டர். மாங்கொம்பு கிருஷ்ண சாம்பசிவனின் மகனா இது? “அறம் பிறழ்ந்த” இந்த ஈன வார்த்தைகளை அந்த மருத்துவரின் மகனால் எவ்வாறு உதிர்க்க முடிந்தது? சுவாமிநாதனின் 11 வயதில் சாம்பசிவன் திடீரென்று இறந்துபோனார். அதன் பிறகு சித்தப்பா கிருஷ்ணசுவாமி, மாமா கிருஷ்ண நீலகண்டன் ஆகியவர்களால் வளர்க்கப்பட்ட அவருக்குு, ஆண்களற்ற குடும்பத்திற்கு உள்ள பிரச்சினைகளை கண்கூடாகத் தெரியும். இருந்தும் கூட, “மானத்தை விட உணவே முக்கியம்” என்ற அற்ப வார்த்தைகளை இந்த 83 வயதிலும் அவரை உதிர்க்கத் தூண்டியது எது?
சோழ நாட்டின் தஞ்சாவூரிலும், சேர நாட்டின் அம்பாலப்புழையிலும் அவரது மூதாதையர்களுக்கு சோழ-சேர மன்னர்கள் “பிரம்மதேயமாக” பல நூறு ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கி, அவர்களின் பாரம்பரியம் தழைக்க வழி செய்து கொடுத்தனர். சேரநாட்டின் அம்பாலப்புழை மன்னரால் சுவாமிநாதனின் மூதாதையரான எஞ்ஜி வெங்கடாச்சல ஐயருக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் ஒருபகுதியிலேயே இன்றும் கேரளத்தின் வயநாட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் தன் ஆய்வுக் நிலத்தைக் கொண்டிருக்கிறது. பல நூறாண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணால் பாதுகாக்கப்பட்ட பரம்பரை ஒன்றில் வந்த ஒருவரால், தம்மை மாண்புடன் வாழ வழி செய்துகொடுத்த ஒரு இனத்தினை முற்றிலும் அழிக்கப் போகின்ற நடவடிக்கைகளுக்கு எவ்வாறு துணை போக முடிந்தது?
பண்டித நேரு காலத்தில் மிக முக்கிய மூத்த அதிகாரியாகவும், நேர்மையாளராகவும் இருந்த திரு.எஸ்.பூதலிங்கம் பிள்ளையின் மகளே சுவாமிநாதனின் மனைவி திருமதி.மீனா. மீனாவின் தாயாரே கிருத்திகா என்ற திருமதி மதுரம். அறம் சார்ந்த அற்புத நாவல்களைத் தமிழுக்கு அள்ளி வழங்கியவர். தருமத்தை எடுத்தியம்பும் குழந்தைக் கதைகளை ஆங்கிலத்திலும் எழுதியவர். 93 வயது வரைப் பெருவாழ்வு வாழ்ந்த அந்த அம்மையாரின் மருமகனின் வாயில் ” பெண்களின் மாண்பை விட உணவே முக்கியம்” என்ற வார்த்தைகள் வந்திருப்பதை என்னென்று புரிந்து கொள்ள?
“சமூக அறத்திற்காக வாழ்வதைக்காட்டிலும் சுய அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளவே நாம் வாழ்ந்தாக வேண்டும் ” என்ற போக்கிரித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் கண்ணோட்டத்தையே அவரின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே அவர் அவரது வாழ்க்கையில் பலமுறை மேற்கொள்ளவும் செய்திருக்கிறார்.
1964 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவுத்துறையுடன் தொடர்புள்ள ஃபோர்டு/ராக்பெல்லர் ஃபௌண்டேஷன்களின் விஞ்ஞானியான நார்மன் போர்லாக்க்குடன் அவர் கூட்டு சேர்ந்து இந்தியாவை மேலை நாடுகளின் பூச்சிக்கொல்லி மற்றும் இராசாயண உர உற்பத்தித் தனியார் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிய “பசுமைப் புரட்சித்” திட்டத்தை செயல்படுத்தியவர் அவரே. இந்தத் திட்டத்தின் விளைவாக 1990-களில் இருந்தே இந்தியாவின் பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசுநிலமாக மாறிவிட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி மூலாதாரங்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபோர்டு/ராக்பெல்லர் ஃபௌண்டேஷன்களுக்கு சொந்தமான சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்குக் கடத்திச் சென்று அதன் தலைவராக 1987 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் அவரே.
மேற்கூறிய அமெரிக்க நிறுவனங்களுக்காக ஆற்றிய உதவிகளுக்குக் கைமாறாகவே 1988 ஆம் ஆண்டில் அந்த அமெரிக்க நிறுவனங்களின் செல்லப்பிள்ளையான நார்மன் போர்லாக்கால் நிறுவப்பட்ட முதல் “உலக உணவுப் பரிசை” அவர் பெற்றார்.
இந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டே 1988 ஆம் ஆண்டில் கலைஞர் அரசால் (முந்தைய காலத்தின் பிரம்மதேயம் போல) சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள தரமணியில் கொடுக்கப்பட்ட இலவச நிலத்தில் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இவ்வாறு தரமணியில் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே இன்று வன்னிப் பெண்மக்களின் மாண்பை சீர்குலைக்க சிங்கள அரசால் தீட்டப்பட்டிருக்கும் “வடக்கின் வசந்தம்” திட்டத்திற்கு உதவி செய்யத் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது.
இந்த ஆய்வு நிறுவனத்தின் ஊடகத்துறைக்கு இந்து ஆங்கில நாழிதளின் தலைவரான என்.ராமே பொறுப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜூலை 3 ஆம் தேதியன்று அவர் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட்டிருக்கிறார்.
“அகதிகள் முகாமைக் கண்ட அனுபவம் என்னை உய்விக்கும் அனுபவமாக இருந்தது. தற்காலிகக் கூடாரங்களில் இயங்கிவரும் பள்ளிகளில் படித்துவிட்டுத் திரும்பிவரும் குழந்தைகள் கல்வி அதிகாரிகளிடமிருந்து அடுத்த மாதம் நடைபெறப்போகும் பரீட்சைக்காக பெற்றுள்ள புத்தகங்களோடு திரும்பும் காட்சி இதில் விசேஷமானது…இந்த முகாம்களில் உள்ள சூழ்நிலைகளை நேரடியாகப் பார்த்தறியாமலேயே மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் அவை குறித்துத் தவறாக எழுதி வருகின்றன.ஆனால் உண்மையில், முகாம்களின் சூழ்நிலை அவை கூறுவதைவிட பன்மடங்கு நன்றாகவே உள்ளது” என்று பரவசப் பட்டிருக்கிறார்..
ஆனால், இதே முகாமை மே 23 ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் தலைவர் பார்வையிட்டபோது “இதுபோன்ற ஒரு கொடூரத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை” என்று வேதனைப்பட்டார்.
இந்த முகாமைப் பார்வையிட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியவர்கள், “இந்த அப்பாவி மக்களுக்கு நாம் பெருந்தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவர்களுக்கு இன்று இழைக்கப்பட்டுக்கொண்டிருக்க�
�ம் தீமைகளை எதிர்த்து இந்த நாட்டின் நீதிம்னறங்களில் அவர்கள் நீதியைப் பெற முடியாத சூழ்நிலையே உள்ளது என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இந்தக் கருத்தை நான் கூறியதற்காக என்ன தண்டனை எனக்குக் கொடுக்கப் பட்டாலும் அதை சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என்றார்.
ஐ.நா.சபையின் தலைவரையும், இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியையுமே திரு.என்.ராம் பொய்யர்கள் என்று கூறத் துணிந்தது எதற்காஅக? இதன் மூலம் தனக்கும், தான் சார்ந்த பத்திரிகைக்கும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அவர் செய்ய நினைப்பது என்ன?
”வடக்கின் வசந்தம்” என்ற நயவஞ்சகத் திட்டத்தின் மூலம் அவர் சார்ந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கப்போகும் பல கோடி ரூபாய் பணத்துக்காகவும், இலங்கை அரசிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் கிடைத்துக் கொண்டிருக்கும் எச்சில் அதிகாரத்திற்கும் அவர் மயங்கிப் போயிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் பார்த்த பின்னரும் கூட, தனக்குக் கிடைத்த அந்த அனுபவத்தை “அது என்னை ஊய்விக்கும் ஒன்றாக உள்ளது” என்று கூறத் துணிந்த அந்த மனிதரை மனித இனத்தின் கடைகோடிக் கழிசடையே இவர் என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு விவரிக்க முடியும்?
இப்படிப்பட்ட கழிசடையின் உதவியோடுதான் எம்.எஸ்.சுவாமிநாதன் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னையும், தன் மூதாதையரையும் பாதுகாத்த ஒரு சமூகத்தை என்.ராம் போன்ற கழிசடைகளின் நட்பால் முற்றுமாக மறந்து போயிருக்கிறார்.
துஷ்டர்களின் துணையால் மதிமயங்கி நின்று தம் மூதாதைகளைப் பாதுகாத்த ஒரு இனத்திற்கு எதிராக எம்.எஸ்.சுவாமிநாதன் செய்ல்பாடுகளை எடுக்க இருக்கிறார். அவரால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த துரோகச் செயல்பாடுகளை அவரது குடும்பமும், உறவினரும், இனத்தோரும், சகாக்களும், “இது ஒரு மாபாதகச் செயல்” என்றும், இந்தப் பாவத்தை எந்த ஒரு கங்கையாலும் கழுவிட முடியாது என்றும் இடித்துரைத்து வாழ்வின் அந்திமக் காலத்திலும் பெருந்தவறு செய்ய முயலும் அவரை நல்வழிப்படுத்திக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
வன்னிப் பெண்டிரின் மாண்பிற்குக் களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கேற்றால், அவரது ஆய்வு நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தைத் தமிழ்நாடு அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படுவதற்கு உடனடியாகத் தமிழ்நாடு அரசு தடையைக் கொண்டுவரவேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழின மக்களான நாமனைவரும் இன்றே ஒன்றிணைவோம்!
நாம் தமிழர் இயக்கம்,
தமிழ் நாடு.
http://www.meenagam.org/?p=5161
Posted by நிலவு பாட்டு at 2:01:00 PM 5 comments
Labels: ஈழம்
Sunday, July 5, 2009
இலங்கையில் உச்சக்கட்ட போரில் நடந்தது என்ன?-புதிய தகவல்கள்
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உச்சக்கட்ட போரின்போது, ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு பிரபாகரன் வெளியேறிவிட்டதாக ஈழமுரசு பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே, நடைபெற்ற போரின்போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது. பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று கூறிவந்த விடுதலைப்புலிகள், பின்னர், அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர். ஆனாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் கூறிவருகின்றனர். பிரபாகரன் மரணம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், ஈழமுரசு என்ற நாளிதழ் வன்னி போரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னிப்போரில் நேரடியாக பங்கேற்ற ஒரு போராளியிடம் நம்பகமான தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளாத அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 4 அல்லது 5 ஆம் தேதி பிரபாகரனை அந்த போராளி பார்த்தபோது, அவர், மீசையின்றி இருந்ததாகவும், ஆனால், ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சியில் காண்பிக்கப்பட்ட நபருக்கு அடர்த்தியாக மீசை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த 12 நாட்களில் இந்த அளவிற்கு அடர்த்தியாக மீசை வளர வாய்ப்பில்லை என்றும் அந்த போராளி தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினமே, நந்திக்கடல் பகுதி வழியாக, ராணுவ முற்றுக்கையை உடைத்துக்கொண்டு பிரபாகரன் வெளியேறிவிட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் 15 ஆம் தேதி விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், பிரபாகரன் உத்தரவுப்படி எரித்துவிட்டதாகவும் அந்த போராளி கூறியதாக ஈழமுரசு செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி குமுதம்
Posted by நிலவு பாட்டு at 6:39:00 PM 0 comments
Labels: ஈழம்
கரும்புலிகள் நாள் ஒளித் தொகுப்பு
பகைவருக்குள் வாழ்ந்து,
அவர்கள் உயிர் சாய்த்து,
உயிர் எறிந்த உறவாய்,
முகம் மறைத்த புலியாய்,
உணர்வுகள் புதிராய்,
வாழாது வாழ்கின்ற இவர்களை
நினைவு கூருவோம்.
முதல் கரும்புலி கப்டன்.மில்லர்
http://www.vakthaa.tv/play.php?vid=4613
ஈரமும் வீரமும்...
http://www.vakthaa.tv/play.php?vid=4618
முதல் பெண் தரைக்கரும்புலியின் வாழ்வியல் பதிவுகள்...
http://www.vakthaa.tv/play.php?vid=4614
புதிய திசையொன்றின் புலர்வுதினம் - புதுவை இரத்தினதுரை கரும்புலிகள்நாள்
http://www.vakthaa.tv/play.php?vid=4617
Posted by நிலவு பாட்டு at 5:06:00 PM 0 comments
Labels: ஈழம்
கரும்புலிகள் நாள் ஒளித் தொகுப்பு, Black Tigers Video's
பகைவருக்குள் வாழ்ந்து,
அவர்கள் உயிர் சாய்த்து,
உயிர் எறிந்த உறவாய்,
முகம் மறைத்த புலியாய்,
உணர்வுகள் புதிராய்,
வாழாது வாழ்கின்ற இவர்களை
நினைவு கூருவோம்.
முதல் கரும்புலி கப்டன்.மில்லர்
http://www.vakthaa.tv/play.php?vid=4613
ஈரமும் வீரமும்...
http://www.vakthaa.tv/play.php?vid=4618
முதல் பெண் தரைக்கரும்புலியின் வாழ்வியல் பதிவுகள்...
http://www.vakthaa.tv/play.php?vid=4614
புதிய திசையொன்றின் புலர்வுதினம் - புதுவை இரத்தினதுரை கரும்புலிகள்நாள்
http://www.vakthaa.tv/play.php?vid=4617
Posted by நிலவு பாட்டு at 11:29:00 AM 0 comments
Labels: ஈழம்
Saturday, July 4, 2009
கருணாநிதி காங்கிரஷ்-க்கு மட்டுமல்ல, சிங்களவனுக்கும் நல்லாவே ஜால்ரா அடிக்கிறார்
இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், அங்குள்ள தமிழர்களின் சமஉரிமைக்குப் போராடுவோம்'' என்று, அண்மையில் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
`ஒபாமா அமெரிக்க அதிபரானதைப் போல வருங்காலத்தில் ஓர் இலங்கைத் தமிழர்கூட இலங்கையின் பிரதமராகும் காலம் வரலாம். நாம் சிங்களவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி, அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது' என்பதெல்லாம் அவரது பேச்சில் தெறித்த இதர சிதறல்கள்.
`இனி தமிழ்ஈழம் எல்லாம் வேண்டாம்' என்ற ரீதியில் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சு தமிழ் மக்களின் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கும் நிலையில், இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரனை நாம் சந்தித்து கருத்துக் கேட்டோம்.
``சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இலங்கையில் கூட்டாட்சி ஏற்பட்டு தமிழ்மக்களுக்கு சமஉரிமை கிடைக்குமா என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை அது கூட்டாட்சி நாடு அல்ல. அங்கு மாநில அரசு, மத்திய அரசு எல்லாம் கிடையாது. 1948-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகத்தான் இருந்து வருகிறது. அங்குள்ள தமிழ் மக்களும், இடதுசாரி இயக்கங்களும் அந்த நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்ற எத்தனையோ முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால், அறுபது ஆண்டு காலமாகியும் அதற்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகவே நீடித்து வருகிறது.
அங்கே கூட்டாட்சி இல்லை, சமஉரிமையும் இல்லை என்ற நிலையில்தான் தனிநாடு கோரிக்கை எழுந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட ஒரு காலத்தில் தனிஈழக் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர்தான். அதை நாம் மறந்து விடமுடியாது.
ஒற்றையாட்சி முறை காரணமாக இலங்கை ராணுவ சர்வாதிகாரத்துடன் செயல்படும் ஓர் அரசாக மாறிவிட்டது. சில தினங்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், அந்த நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு சில தனிப்பட்ட ராணுவ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டிற்குத்தான் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கடந்த அறுபதாண்டு காலமாக அங்குள்ள தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்திலும் அப்படியொரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில்வைத்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் ஓர் அரசியல் அதிகாரத்தை வாக்கெடுப்பின்மூலம் முடிவு செய்து கொள்ளும் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள ராணுவம் முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட ராணுவம். காவல்துறையிலும் அதே கதைதான். அரசு பதவி, அதிகாரம் போன்றவற்றில் தமிழர்கள் தொடர்ந்து ஒதுக்கிவைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்மக்கள் எப்படி சமஉரிமை பெற முடியும்?
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி சமஉரிமையைப் பெற்றுத் தரலாம் என்றால், நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் எண்பது சதவிகிதம் பேர் சிங்களவப் பிரதிநிதிகள். வெறும் இருபது சதவிகிதத்திற்கும் குறைவான பேர்தான் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்கூட அங்கே தமிழ்மக்களுக்கு நன்மை தரக்கூடிய கூட்டாட்சி நாடாளுமன்றம் அமைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில், ஒபாமா அமெரிக்க அதிபரானதைப் போல எந்த இலங்கைத் தமிழர் இலங்கையின் தலைவராக முடியும்? அதற்கான வாய்ப்பே இல்லை.
இலங்கை ஒரே நாடாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், சிங்கள மக்களைப் போல மிகத் தொன்மையான பாரம்பரியம் கொண்ட தமிழ் மக்களுக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்.
`இலங்கை ஒரேநாடு என்பதற்கு அடையாளமாக ஒரே குடியரசுத்-தலைவரை நியமித்து, இலங்கையின் இருபெரும் இனங்களான தமிழ், சிங்கள மக்களுக்காகத் தனித்தனியாக இரு பிரதமர்களைத் தேர்வு செய்யலாம். இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்' என உலக அளவில் பல வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, `தமிழ்ஈழம் வேண்டாம்' என்று சொல்லும் தமிழக முதல்வர், வல்லுனர்களின் இந்தக் கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
கலைஞர் அவரது சட்டமன்ற உரையில், `சிங்களவர்களின் கோபத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார். அறுபது ஆண்டுகால இலங்கை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் யார் யாரைக் கோபப்படுத்தியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதற்கு அடையாளமாக தேசியக் கொடியில் அசோக சக்கரத்தை வைத்துள்ளது. ஆனால், அன்பைப் போதிக்கும் அகிம்சை நாடாக தன்னைக் காட்டிக் கொள்ளும் இலங்கை அரசின் தேசியக் கொடியில் ஒரு சிங்கம் வாள் ஏந்தியுள்ளது. இதிலிருந்தே சிங்களவர்கள் தமிழ்இனத்திற்கு எதிரானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் போன்றவர்களைச் சுட்டுக்கொன்றவர்கள்தானே சிங்கள ராணுவத்தினர்?
ஆகவே, யார் யாரைக் கோபப்படுத்துகிறார்கள் என்பதை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று முடித்தார் மகேந்திரன்.
நன்றி குமுதம்
Posted by நிலவு பாட்டு at 6:46:00 PM 2 comments
Labels: ஈழம்
Friday, July 3, 2009
ஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா?
13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா?
இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம்
ஈழ தமிழர்களின் அரசியல் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா? அங்குள்ள மக்கள் வதைமுகாம்களில் சிக்கி சின்னாபின்னபட்டு கொண்டு இருக்கும் போது ‘இந்தி’யன் ஆயில் கார்பரேசன் மூலமாக பெட்ரோல் பங்கு திறக்கிறார்களாம்.அதுவும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் .. அதேபோல கடலுக்கடியில் மின்சாரம் அனுப்ப போகிறார்களாம் .. இதில் கொடுமை என்னவென்றால் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து.. அங்கே தமிழர்கள் வதைமுகாம் களில் இருக்கும் போது இந்த பொந்தியா காரணமில்லாமல் ஏன் இவற்றை செய்கிறது? இங்கே தான் நாம் சிறிது சிந்தித்து பார்க்கவேண்டும்..ஈழ தமிழர்களை சாகடித்தோர் இனி சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்..ஆரியர்களுக்கு தூரபார்வை அதிகம்!இதை தமிழர்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும் இல்லையென்றால் ஆடு மாடு மேய்த்து கொண்டிருந்த இக் கைபர் போலன் கும்பல்கள் இன்று நம் தலை மீது ஏறி மிளகாய அரைக்கும் நிலைவந்திருக்குமா? இந்தி அரசு காரணமில்லாமல் இவ்வேலைகளை செய்யவில்லை.. கூர்ந்து கவனித்தால் ஈழ தமிழர்களை பூண்டோடு ஒழித்துவிட்டு எப்படியும் நம் சிங்கள பங்காளிகள் அங்கு குடியேறிவிடுவார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தூர நோக்கிலான செயல்பாடே அது!இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்..
இனி புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் செய்யவேண்டியது என்ன?
இனி ஈழதமிழர்கள் இந்தியா நம் தந்தையர்நாடு பாட்டி நாடு கூறுவதை முதலில் நிறுத்தவேண்டும்..பகைநாடு என்று கூறுதல் வேண்டும்! இவ்வளவுக்கும் காரணமான பொந்திய தேசத்தினை இனியும் இவ்வாறு கூற மானமுள்ள ஈழ தமிழன் முன்வரமாட்டான்.. தொப்புள் கொடி உறவு அவரை கொடி என்று வீரமுள்ள ஒரு தலைவர் கூட இல்லை..சொல்ல போனால் நாங்களே இங்கு அடிமைகளாக உள்ளோம்.. இந்தி தேசியத்தினை பொறுத்தவரை தன் தேசியத்தில் ஒற்றுமை பிறர் தேசியத்தில் வேற்றுமை இதுவே அது கடைபிடிப்பது!இன்று தமிழர்களுக்கு 4 மாநிலம் இலங்கையில் உருவாக்குவோம் என்று இந்தி தேசியத்தின் குரலாய் ஒலிக்கிறதே கோடாலிகாம்பு சிதம்பரத்தின் குரல் காரணம் என்ன? யாழ்பாணத்தான் ,மட்டகிளப்பாண்,திரிகோணமலையான்,வவுனியான் என பிரித்து தமிழர்களுக்குள்ளேயே ஒருவனை ஒருவன் மோதவிடும் செயல்திட்டங்களே அவை! இவைகளை எப்படி முறியடிப்பது? ஈழ அரசியல் தலைவர்கள் இங்கு முந்தி கொள்வது அவசியமாகிறது! ஈழ அரசியல் தலைவர்கள் ஈழத்திற்கான சுயநிர்ணய அடிப்படையுடன் கூடிய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. புதிதாக வேறு ஏங்கும் தேட வேண்டாம் ஏற்கனவே உள்ள பிற நாட்டு அரசியல் அமைப்பை முன்மொழிய வேண்டும்..புதிதாக தமிழீழம் அமைந்த பிறகு நாம் ரூம் போட்டு யோசித்து கொள்ளலாம்! இப்போதைக்கு தேவை சுய நிர்ணய உரிமை! அதை உள்ளடக்கிய நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் எங்குள்ளது என தேடலாம் உதாரணம் கனடா. அங்கு க்யூபக் மாகாணத்தில் பிரெஞ்சு பேசும் மொழியினருக்காக தனி க்யுபக் நாடு வேண்டுமா என வாக்கெடுப்பு நடைபெற்றது..அதை உதாரணமாக கொள்ளலாம்.
தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்களுக்கு எப்படி உதவலாம்?
நாமக்கல் முட்டையும்,கோழியையும்,தஞ்சை பொன்னி அரிசியையும் நெய்வேலி மின்சாரம் உட்பட அனைத்தையும் தின்று தமிழன் முகத்தில் காறி உமிழும் இந்த அண்டை மாநில கும்பல்களை விட.. இவ்வளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் வாழும் தமிழனுக்காக பொன் பொருள் என வாரிவழங்கிட தயாராக இருந்தும் கூட.. கடைசிகாலம் வரை மறைந்த அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் உட்பட சிங்கள் தேசம் .. சர்வதேசம் .. சரியாக உணவு அனுப்பவில்லை என புலம்பி கொண்டு இருந்தது ஏன்? நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி அனைத்திற்கும் காரணம் நாமே ஆகும்..தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் வெறும் 18 கி.மி தொலைவே இருக்கும் அவர்களுக்காக நாம் அனுப்பமுடியாதா? தடுப்பது எது இந்த இந்தி தேசம் தானே? நம் முதுகில் குத்தும் மலையாளிக்கு அரிசி,பழம் ,பால் அனுப்பும் நாம் .அதையேன் நம் ரத்த உறவுகளுக்கு செய்யமுடியவில்லை? அடசரி வியாபரமாகவே வைத்துகொண்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்காக செய்ய தயராகவே உள்ள நிலையில் தடுப்பது எது? முட்டையில் மயிர் புடுங்கும் இந்தி தேசம் தானே? சிங்கு எவனையாது இப்படி பட்டினி போட்டு கொல்வார்களா? இங்கு விடுதலை அடையவேண்டியது ஈழதமிழன் மட்டுமல்ல நாமும்தான் என புரிந்து கொள்ளுதல் வேண்டும்!
எப்படி இந்த இந்தி நாட்டை அணுகுவது?
சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.
இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.
நன்றி : http://siruthai.wordpress.com/2009/07/03/ஒடுக்கபட்ட-தமிழினத்திற்/
புரட்சிகர தமிழ் தேசியம்
விழிதெழு தமிழா! விழிதெழு!
Posted by நிலவு பாட்டு at 11:35:00 PM 0 comments
Labels: ஈழம்