Sunday, July 5, 2009

இலங்கையில் உச்சக்கட்ட போரில் நடந்தது என்ன?-புதிய தகவல்கள்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உச்சக்கட்ட போரின்போது, ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு பிரபாகரன் வெளியேறிவிட்டதாக ஈழமுரசு பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே, நடைபெற்ற போரின்போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது. பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று கூறிவந்த விடுதலைப்புலிகள், பின்னர், அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர். ஆனாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் கூறிவருகின்றனர். பிரபாகரன் மரணம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், ஈழமுரசு என்ற நாளிதழ் வன்னி போரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னிப்போரில் நேரடியாக பங்கேற்ற ஒரு போராளியிடம் நம்பகமான தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளாத அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 4 அல்லது 5 ஆம் தேதி பிரபாகரனை அந்த போராளி பார்த்தபோது, அவர், மீசையின்றி இருந்ததாகவும், ஆனால், ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சியில் காண்பிக்கப்பட்ட நபருக்கு அடர்த்தியாக மீசை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த 12 நாட்களில் இந்த அளவிற்கு அடர்த்தியாக மீசை வளர வாய்ப்பில்லை என்றும் அந்த போராளி தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினமே, நந்திக்கடல் பகுதி வழியாக, ராணுவ முற்றுக்கையை உடைத்துக்கொண்டு பிரபாகரன் வெளியேறிவிட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் 15 ஆம் தேதி விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், பிரபாகரன் உத்தரவுப்படி எரித்துவிட்டதாகவும் அந்த போராளி கூறியதாக ஈழமுரசு செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி குமுதம்

0 Comments: