ஜெயில் மாதிரியான ஒரு சூழலில் 3 லட்சம் தமிழ் மக்களை வெளியேற கோரிக்கையினை வைக்காமால் அவர்களை காண செல்லும் இவர்களை என்ன சொல்வது. முதலில் மக்களை முகாமிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்புடா மடையா என்று கேட்கமால் இப்படி சென்று பார்ப்பது என்பது மக்களினை இன்னும் திறந்த சிறையில் முகாமில் வைத்திருப்பது சரியே என்பது போல் உள்ளது இவர் செல்வது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தலைமையிலான தமிழக குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு வருகைதரும் அவர் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.முதலில் தனிப்பட்ட விஜயமாக மேற்கொள்ள நினைத்திருந்தார். பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கனிமொழியை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் அனுப்புவது என்று முடிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்புக்குழ உருவாக்கப்பட்டு அதற்கு தலைமையேற்று கனிமொழி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று வருவார் என்றும் இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனிமொழியுடன் தமிழகத்திலிருந்து மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்குழுவில் இடம்பெறக்கூடும் என்றும் இருவரில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, காங்கிரஸ் சார்பில் இரண்டு எம்.பிக்ககள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் கொண்ட குழு விரைவில் இலங்கைக்கு செல்லும் என்று தெரிகிறது.
நலன்புரி முகாமகளைப் பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் மேலுதம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
தற்போது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபா நிதியுதவி கனிமொழியின் பயணத்தின் பின்னர் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.meenagam.org/?p=5510
Sunday, July 12, 2009
கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது
Posted by நிலவு பாட்டு at 6:48:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
http://www.mdmkonline.com/news/latest/kanimozhi-and-namal-rajapakse.html
Post a Comment