நண்பர்களே நாத்திகம் பற்றி மட்டுமே நீங்கள் பேசி கொண்டிருப்பது என்பது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான், மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை முதலில் கவனியுங்கள்.
1) தொழிலாளர்கள் வேலை நேரம் கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு அதிகமாக போகக்கூடாது.
2) வாரத்திற்கு இரு நாட்கள் விடுமுறை
3) வருடாந்திர கம்பெனி லாபத்தில் 10% மாவது தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
4) வருடத்திற்கு 30 நாட்கள் விடுமுறை வார விடுமுறை போக
உதாரணத்திற்கு இந்த பெரிய, பெரிய கடைகளில் rmkv, pothys, chennai silks இவர்களை சற்று கவனியுங்கள், இவர்கள் தினமும் தொழிலாளர்களை 12 முதல் 15 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் கொடுப்பதோ 2000 ரூ இதே போல் பல தொழிற்சாலைகள், கம்பெனிகள் எனக்கு தெரிந்த பலர் பத்திரிக்கை துறையை சார்ந்த பலர் அடிமையாக முழு நேரமும் நாயாக உழைக்க வைக்கப்படுகின்றனர். எந்த ஒரு விடுமுறையும் கிடையாது.
எப்படி நஷ்டம் வந்தால் மட்டும் வேலை விட்டு நீக்க தெரிகிறதோ அதே போல் லாபத்திலும் பங்கு கொடுக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும்.
முதலில் மக்கள் சிந்திக்க நேரம் ஏற்படுத்தி கொடுங்கள்
Saturday, August 1, 2009
வீரமணி மற்றும் வினவு கும்பலுக்கு
Posted by நிலவு பாட்டு at 5:05:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
மக்களுக்கு என்னதான் பிரச்னைகள் என்றாலும், மக்கள் தங்கள் பெரும்பகுது வாழ்க்கையை ஆன்மிகம் என்பதில் செல்வழிக்கிறார்கள். எனவே, ஆன்மிக வேடதாரிகள் மக்களின் பணத்தைப்பிடுங்க அலைகிறார்கள். அவர்களை மக்களுக்கு இனம் காட்டி அவர்களில் ஜேப்படி வித்தைகளை வெளிக்காட்டு மக்களை எச்சரிக்கை செய்வதுதான் நல்ல நாத்திகத்தின் கடப்பாடு. எனவே, நாத்திகர்கள் அப்பணியைத் தொடர்ந்து செய்து மக்களுக்கு அறப்பணி செய்தே ஆக வேண்டும்.
கடைகளில் ஊழியர்கள் பிழியப்படுவது, நாட்டின் வேலையில்லாத் திண்டாத்தையம், கற்ற கல்விக்கு ஏற்ற வேலை, அல்லது, வேலைக்கு வேண்டாத கல்வி - என்றெல்லாம் சொல்லலாம்.
ஊழியர்கள் ஏன் அங்கு போய் சேர்ந்து கொள்கிறார்கள்? ஏன் தங்களைப் பிறர் சுரண்டலுக்கு விடுகிறார்கள்? நீங்கள் சொல்லும் துணிக்கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பெரும்பாலோர் பட்டம், அல்லது, மேனிலைப்ப்ள்ளி கற்றவர்கள். இவர்கள் கற்ற கல்வி , சிறுமை கண்டு பொஙுகுவாய்...வா..வா..வா..எனச் சொல்லவில்லையா?
இந்த வேலை உயர்ந்த வேலை, தாழ்ந்த வெலை என்பது தவறு. யாரவது ஒருவர் அவர்களுக்கு கிடைக்கதான் செய்வார்கள்.
அப்படியானால் படிக்காதவர்கள் இப்படிதான் அடிமையாக இருக்க வேண்டுமெ என்று கூற நினைக்கிறீர்களா வெண்தாடி.
Post a Comment