Sunday, August 30, 2009

முதலாளி கொள்ளையர்களின் சொர்க்கம் சுவிஸ்

சுவிஸ் வங்கியில் ரூ.7 லட்சம் கோடி இந்திய கருப்புபணம் முடக்கம்

இந்திய தொழில் அதிபர்கள் பலர் சுவிஸ் வங்கிகளில் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரகசிய கணக்குகள் மூலம் இந்த கருப்பு பணம் முடங்கிக் கிடக்கிறது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்தது. ஆனால் சுவிஸ் வங்கி கூட்டமைப்பு இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டது.

மேலும் ரகசிய கணக்குகளில் உள்ள பணத்தை திருப்பிதர இயலாது என்றும் சுவிஸ்வங்கிகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டுடன் வரும் டிசம்பர் மாதம் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே சுவிஸ் வங்கிகளில் இந்திய தொழில் அதிபர்கள் பணம் எவ்வளவு உள்ளது என்று தகவல்கள் திரட்டப்பட்டன. அப்போது சுவிஸ் வங்கிகளில் ரூ.7 லட்சம் கோடி கருப்புப்பணம் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

எந்தெந்த தொழில் அதிபர்களுக்கு சுவிசில் எவ்வளவு கருப்பு பணம் உள்ளது என்ற ஆய்வும் ரகசியமாக நடந்து வருகிறது

0 Comments: