Sunday, August 30, 2009

கருணாநிதி:போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர்

தமிழர்களை அழித்ததில் முக்கிய துரோகிகளாக கருணாநிதியும், வீரமணியும் உண்டு என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. இன்னும் அகதி முகாம்களில் இருப்பவர்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் மத்திய அரசினை கொஞ்சி குலாவும் இவரது நடவடிக்கைகள் நீண்ட கால திமுக வாழ்விற்கு ஒரு சரிவே.

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார்.

இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவுக்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள். அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும்-மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன். உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் போய் சேர்ந்துவிட்டதா?

போய் சேர்ந்துவிட்டது.

டில்லியிலே ஒரு பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் போர் நடைபெற்றபோது, இந்திய அரசு மறைமுகமாக உலங்குவானூர்தி உட்பட பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அனுப்பியதாக எழுதியிருக்கிறதே?

ஆயுதங்களோ, போருக்கு தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பலமுறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.



நன்றி புதினம்

0 Comments: