Saturday, February 28, 2009

எதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது

கட்டுரைகள் தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல - அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது.


தற்போது புலிகளைத் தான் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வரின் புலிகள் மீதான பாசப்பிணைப்புகளைப் பார்த்தால் தலை சுற்றும். ராமதாஸ், வைகோ, திருமா போன்றவர்களின் புலிப்பாசத்திற்கு கொஞ்சமும் சளைந்ததல்ல முதல்வரின் புலிப்பாசம். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் பாராட்டியும் / உருகியும் பக்கம் பக்கமாக கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர் தான் தி.மு.க தலைவர். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்செல்வன் இறந்தபோது இரங்கற்பா பாடிய கலைஞருக்கு அப்போது தெரியவில்லை புலிகள் சர்வாதிகாரிகள் பயங்கரவாதிகள் என்று. இப்போதுதான் தெரிந்துள்ளது உண்மை - அதாவது தனி ஈழம் மலர்ந்தால் அங்கே பிரபாகரன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும் என்று… மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தயவு தனக்கு தாராளமாகத் தேவை என்ற இன்றைய நிலையில் இவரது இத்தகைய அந்தர் பல்டியை புலிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மேலிடம் நிச்சயம் எதிர்பார்த்தது - கேட்டது கிடைத்தது அவர்களுக்கு. ஆனாலும் தனது மறைமுக புலிப்பாசத்தால் தான் காங்கிரசை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திருமா, சீமான் போன்ற ஆட்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம் காட்டுகிறார் கருணாநிதி.முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது என்பது தி.மு.க தலைவருக்கு கைவந்த கலை. ஒரு காலத்தில் குல்லுக பட்டர், குள்ளநரி என்று கருணாநிதியால் விமர்சிக்கப்பட்டவர் ராஜாஜி. காமராஜரைத் தோற்கடிக்க தி.மு.கவிற்கு ராஜாஜியின் தயவு தேவைப்பட்டபோது ராஜாஜி ஒரு குள்ளநரி என்று சொன்ன அதே கருணாநிதி மூதறிஞர் ராஜாஜி என்று கூறினார். அதைப் போலவே எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை திட்டித் தீர்த்த கருணாநிதி தமிழகத்தில் தான் ஆட்சி அமைக்க இந்திராவின் தயவு தேவை என்று வந்தபோது - நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!! என்றெல்லாம் புகழ்ந்தார். ஹிந்தி எதிர்ப்பு விஷயத்திலும் இதே கதைதான். இவர் சொன்னதற்காக இந்தி மொழியை படிக்காமல் வீராப்பாக இருந்துவிட்டு தற்போது இந்தி பேசத்தெரியாமல் நாட்டின் பிற பகுதிகளில் அவதிப்பட்டுவரும் பலரும் - இந்தி தெரிந்த ஒரே காரணத்தால் இன்று டெல்லியில் கோலோச்சும் அவரது மகளையும் பேரனையும் பார்த்து வயிறெரிந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பேச்சுகளுக்கான சில உதாரணங்கள் தான்.




தமிழர்களுக்கு நல்வாழ்வு மலர தாங்கள் ஆட்சியைத் துறக்கத் தயார் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்றும் பலவிதமாக நாடகம் நடத்திய முதல்வர் சில நாட்களுக்கு முன்பாக “ஈழத்தமிழர்களே கூறிவிட்டார்கள் நாங்கள் ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று - நாங்கள் ஆட்சியில் இருந்தால்தான் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்..” என்று கூசாமல் அறிக்கை விடும் இவரைப் பற்றி / இவரது நாவன்மை பற்றி சொல்ல இன்னும் என்ன இருக்கிறது ?

”மத்திய அரசின் நெருக்குதலால் வேறு வழியில்லாமல் தான் எங்கள் தலைவர் புலிகளைப் பற்றி அப்படிக் கூறினார்..” என்று பல வருடங்களுக்குப் பிறகு இவரது அடிபொடிகளில் ஒருவர் அறிக்கை விடுவார்.

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.. காங்கிரஸ¤ம் ஜெயலலிதாவும் புலிகளை காலம் காலமாக எதிர்க்கிறார்கள் - அவர்களது நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லை. பழநெடுமாறன், வைகோ போன்றவர்கள் புலிகளை காலம் காலமாக ஆதரிக்கிறார்கள் - அவர்களது நிலையிலும் கொஞ்சமும் மாற்றமில்லை. ஆனால் புலிகளை ஆதரிப்பதாக கூறிய தி.மு.க இன்று சொந்த லாபத்திற்காக புலி எதிர்ப்பாளர்களாக மாறியுள்ளது.. நாளை பா.ம.க, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதையே செய்யலாம்.. “போர்களத்தில் உனக்கு எதிரில் துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம் - ஆனால் உன் கூடாரத்தில் உனக்குப் பக்கத்திலேயே இருக்கும் துரோகியை நம்பாதே” என்பது பழமொழி. மக்களே இதன் உள் அர்த்தத்தை நீங்கள் உணர்வீர்களா ? எதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது என்பதை இத்தகைய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் உணர்த்துவீர்களா///

thanks http://www.nerudal.com/nerudal.1185.html

தமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு மட்டும்

தமிழினத்தை அழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கள அரசு தனது அராஜகப் படையை ஏவி விட்டிருக்கிறது. அந்த அராஜகப் படை தமிழ் மண்ணிலே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி தினம் தினம் நூற்றுக் கணக்கான எம்முறவுகள்; கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

தமது பகுதிக்கும் வந்த மக்களைக் கூடச் சிங்களப் பேரினவாதம் முகாம்களிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துகிறது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்படுகிறார்கள். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமது மானத்தையே உயிராக நினைக்கும் தமிழ் சகோதரிகள் இந்த அவமானம் தாங்காது முகாம்களிலேயே தற்கொலை செய்து கொள்வதான செய்தி தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.

'தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்திற்கு விருந்தாக வேண்டும். தமிழ் ஆண்களின் இரத்தத்தால் இந்து சமுத்திரம் சிவக்க வேண்டும்' என்று மஹிந்தவின் தம்பி மமதையுடன் சொல்லித் திரிகிறான்

சிங்கள அரசின் இந்தக் கோரத் தாண்டவத்தை ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் மௌனமாய் இருந்து ஆமோதித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் இந்த மௌனத்திற்கு 'பயங்கரவாதத்தையே அழிக்கிறோம்' என்று சிங்கள அரசு உள்;நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வரும் பொய்ப் பிரச்சாரமும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் சிங்கள அரசினாலும் அவர்களது கைக்கூலிகளினாலும் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு எம் தமிழர்களில் சிலர்
முட்டுக் கொடுத்துக் கொண்டு நிதிப் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

உதாரணமாக சிங்களவர்களின் பிரச்சார நோக்கங்களுக்காக இங்கிலாந்திலிருந்து நான்கு பத்திரிகைகளும் கனடாவிலிருந்து இரண்டு பத்திரிகைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகளின் பிரதான வருமான மார்க்கமான விளம்பரங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது என்பதை ஜீரணிப்பதற்குக் கஸ்டமாயிருந்தாலும் அதுதான் உண்மை.

இவ்வாறு விளம்பரங்களை வழங்கி எமது எதிரியின் ஊடகங்களைப் போசிப்பவர்களில் பிரபல வியாபார நிறுவனங்கள், சட்டத்தரணிகள், வீட்டு விற்பனை முகவர்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன.

அதுமட்டுமன்றி இந்தப் பத்திரிகைகளைத் தமது வியாபார நிலையங்களில் காட்சிப் படுத்தி விநியோகம் செய்வதிலும் தமிழ் நிறுவனங்களே முன்னிற்கின்றன.
தாயகத்தில் சிறுபான்மையினமாக இருந்த எங்கள் மீது சிங்களம் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதனால் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து இந்த நாடுகளில் தாய் மண் குறித்த ஏக்கத்தோடும் கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாடுகளிலாவது எம்மை அமைதியாக வாழ சிங்கள அரசும் அவர்களது அடிவருடிகளும் அனுமதிக்கிறார்களா?

வர்த்தகத்தில் அல்லது கலைத்துறையில் அல்லது கல்வித் துறையில் பரிணமிக்கும் எம் தமிழர்கள் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தப் படாதபாடு படுகிறார்கள்.

தமிழ் மக்கள் ஏதாவது ஒரு கவனயீர்ப்பு ஒன்று கூடலை ஒழுங்கு செய்தால் ஏட்டிக்குப் போட்டியாக அதே இடத்தில் தாமும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து எம்மை வம்புக்கு இழுக்கிறது சிங்களம்.

தமிழர் தாயகம் வல்வளைப்புச் செய்யப்பட்டதை வெற்றி விழாவாக்கி தமிழர் செறிவாக வாழும் பகுதிகளில் பட்டாசுகளைக் கொழுத்தியும் ஆரவாரம் செய்தும் வாகனப் பேரணிகளில் சென்றும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

சிங்களத்தின் பிரச்சார ஊடகங்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வர்த்தகர்களே!

ஒரு சிறு தொகையினராக இருக்கும் இவர்களைக் கவர்வதற்காக, உங்களது சொற்ப வர்த்தக நலன்களுக்காக 5 இலட்சத்திற்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மன உணர்வை, ஆதங்கத்தை, உள்ளக் குமுறல்களை எல்லாம் புறந்தள்ளிச் செயற்படப் போகிறீர்களா?

ஒரு சிறு தொகையினரான மக்களைக் கவர்வதற்காக எம்மினத்தையே காட்டிக் கொடுக்கும் இந்தப் பாதக செயலைத் தொடர்ந்து செய்யப் போகிறீர்களா?

பெரும்பான்மையான தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எதிரியின் பிரச்சார ஊடகங்களுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள்.

அறிந்தோ அறியாமலோ சிங்கள ஊடகங்களைப் போசித்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தம் தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நம்புவோம். ஆனால் இனியும் முட்டுக் கொடுப்போம் என்று முரண்டு பிடிக்கும் வணிக நிலையங்களுடன் எமது தொடர்பைத் தொடர்ந்து பேணப் போகிறோமா?

ஆயிரம் அவலங்களைச் சுமந்து கொண்டு வாழ்வா சாவா என்று எம் சகோதரர்கள் துடித்துக் கொண்டிருக்க அற்ப வியாபார நோக்கத்திற்காக எதிரியிடமே மண்டியிடும் இவர்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்கத் தயாராவோம்

தாயகத்தில் அவலப்படும் எம்முறவுகளுக்காக என்ன செய்வது என்ற ஏக்கத்தோடும் எம் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகி விடுகின்றனவே என்ற ஆதங்கத்தோடும் இருக்கும் உறவுகளே.

அற்ப சலுகைகளுக்காக எம்மிடையே இருக்கின்ற இந்த எட்டப்பர்களை இனங் கண்டு ஒதுக்கி வைப்பதும் எமது உறவுகளுக்காக செய்கின்ற பணிகளில் ஒன்று தான் என்பதை நினைவில் கொள்வோம்.

உணவின்றி மருந்தின்றி ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு எம்முறவுகள் காத்திருக்க அந்த மரண அரக்கனுக்கே விருந்தோம்பல் செய்யும் பச்சோந்தித்தனத்தை துடைத்தெறிவது புலம் பெயர் தமிழர் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

ஒன்றுபட்ட தமிழர் பலத்தின் முன்னால் எட்டப்பர்களும் அடிவருடிகளும் தொலைந்து போகட்டும்.

ஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்

அண்மையில் இ-மெயிலில் வந்த உண்மை தமிழின வரலாறு. இப்போது யூ-ட்யூப்பில் உங்களினது பார்வைக்காக.

சீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.

நண்பர்களே தமிழனுக்கு ஒரு விடிவு தர ஒரு தலைவன் வரமாட்டானா என தேடி, தேடி அலுத்து விட்டோம். இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து தலைவர்களும் பணம், பொருள், பதவி ஆசையில் ஏதாவது ஒன்றில் சிக்கி தமிழின அழிவிற்கு உதவியாக உள்ளனரே தவிர தமிழனை காப்பாற்ற சில தலைவர்கள் நினைத்தாலும் அவர்களால் அது முடியவில்லை.

நாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.

சீமான் அண்ணா உங்களின் அன்பு தம்பியின் அன்பு கட்டளை தமிழர்களை நீங்கள்தான் வழி நடத்தி செல்ல வேண்டும். என்ன பண்ணூவிர்களோ எப்படியாவது எங்களை வழி நடத்தி இந்த தமிழின அடிமைதனத்திலிருந்து விடிவு கிடைக்க வழி செய்யுங்கள்.

எவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம்.

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒருவர் தீக்குளிப்பு

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒருவர் தீக்குளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.பீ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றதாக கருதப்படும் இந்த தீக்குளிப்ப்பை அடுத்து லண்டன் அம்பியூலன் சேர்விஸ் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அவரை உடனடியாக வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் லண்டன் காவற்துறையை மேற்கோள் காட்டி ஏ.பீ செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் தீக்குளித்தவர் யார் என்பது பற்றியோ அவரது தற்போதைய நிலை என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.



http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=6541&cat=13

Monday, February 23, 2009

தமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்பரா உருவினார், டி.ஆர்

Sunday, February 22, 2009

பார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை

எதிர்பாராத சம்பவம் நடைபெற்று விட்டது. இந்த சம்பவம் பற்றி உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுவதற்கு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி ஆகியோரை அனுப்பியுள்ளேன். இந்தப் பிரச்சனையில் வக்கீல்கள் மீது தவறு உள்ளதா, போலீசார் மீது தவறு உள்ளதா என்பதை கண்டறிவதற்கும் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்கும் உங்களது ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்சனையில் நீதி நிலை நாட்டப்படவும் அமைதி ஏற்படவும் தங்களது மதிப்பு மிக்க கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தாலும் தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன்’’ என்று தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயவுக்கு கடிதம் எழுதி விட்டுக் காத்திருக்கிறார் தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.கருணாநிதி.

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ரத்த வேட்டையை நடத்தி முடித்து விட்டு பிரச்சனையின் மூல வேரைத் தேடுவது இருக்கட்டும். உயர்நீதிமன்றத்துக்குள் காவல்துறையை அனுமதித்தது யார்? தமிழக முதல்வர் கருணாநிதியின் உத்தரவில்லாமல் காவல்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்ததா? அல்லது சென்னை மாநகர கமிஷனர் சொன்னது போல சமரசத்திற்கு அழைத்ததனால் உள்ளே போனோம் என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நூற்றுக்கணக்கான அதிரடிப்படையோடு உள்ளே நுழைவதுதான் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமாதானத்துக்குப் போகிற லட்சணமா?

உயர்நீதிமன்றத்துக்குள் என்னதான் நடந்தது? சுப்ரமணியசுவாமி மீது முட்டைகளை வீசி அடித்து உதைத்ததாக 20 வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்ய கோர்ட் வளாகத்துக்குள் சென்றது போலீஸ். வழக்கறிஞர்களோ ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ், எங்களை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய சு.சுவாமியை முதலில் கைது செய்யுங்கள், அதன்பின் நாங்களாகவே வந்து கைதாகிறோம்’ என்று சொல்ல, போலீசாரோ சு.சாமியின் வழக்கில் தொடர்புடைய இருபது பேரை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்ற வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதே நேரம் நீதிமன்றத்திற்கு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேபிட் போர்ஸ் என்றழைக்கப்படும் அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து போலீஸ் வேனைச் சுற்றி நின்ற வழக்கறிஞர்களைத் தாக்கத் தொடங்கினர். அப்போதுதான் போலீஸ் அந்த நரவேட்டையைத் தொடங்கியது.

உயர்நீதிமன்றத்தின் எல்லா கட்டிடங்களுக்குள்ளும் நுழைந்த போலீஸ் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக அடித்துக் காயப்படுத்தியது. இதில் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என யாரும் தப்ப முடியவில்லை. காவல்துறை அதிகாரி ராமசுப்ரமணியே அதிரடிப்படையை தாக்கச் சொல்லி உத்தரவிட்டதாகவும், அதை ஒட்டியே காவல் படைகள் அத்துமீறி மிகக் கோரமான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. சு.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப் போன வழக்கறிஞர்களையே அந்த வழக்கில் கைது செய்ய போலீஸ் முயற்சித்தபோது, ஒரு பக்கம் தாக்குதல் இன்னொரு பக்கம் கைதுகள் என கடுப்பாகிப் போன வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதே சமயம் காவல் நிலையத்துக்கு வெளியில் நின்ற வக்கீல்களின் வாகனங்களுக்கு தீவைத்தது போலீஸ்காரர்கள்தான். அது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற அலுவலகங்களை சூறையாடியதும் அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து நொறுக்கி நரவேட்டையாடியதும் காவல்துறையினர். இந்தக் கலவரத்திற்கு முழு காரணமும் காவல்துறைதான்.

ஆனால் இதில் மிக மோசமான பாதிப்பையும் சந்தித்து, கருணாநிதியின் ஆதரவு ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்படுபவர்களும் வழக்கறிஞர்களே! சன், கலைஞர், ராஜ் போன்ற காட்சி ஊடகங்கள் ஏதோ வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல் என்று சித்தரிக்க, மக்கள் தொலைக்காட்சியும் தமிழன் தொலைக்காட்சியும் மட்டுமே ஓரளவுக்கு உண்மையை வெளியில் கொண்டு வந்தன. அங்கு இருந்த சில பத்திரிகையாளர்கள் மட்டும்தான் போலீசின் அராஜகத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். கருணாநிதியின் குடும்ப நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிருபர்களோ எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். ‘‘சார் நாங்க எடுத்தாலும் போட மாட்டாங்க சார்’’ என்று புலம்பினர். அத்தோடு வழக்கறிஞர்களின் பேட்டிக்காக இந்தத் தொலைக்காட்சிகள் சென்றபோது அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டனர். ‘‘போங்கப்பா உங்க தொலைக்காட்சியில் என்ன வர வேண்டும் என முடிவு ஏற்கனவே ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுத்தாயிற்று அதனால் உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறோம் தயவு செய்து போங்கள்’’ என்று சொன்னபோது அந்த வழக்கறிஞர்களின் நியாத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாக வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்குமான மோதல் என்பது தொழில் ரீதியானது. காக்கிச் சட்டைகளையும் கருப்பு அங்கிகளையும் எதிர் எதிராக நிறுத்தி பின்னப்படுவதே ஒரு வழக்கின் யதார்த்தம். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இருக்கிற போர்க்குணமோ சுயமரியாதையோ போலீசுக்கு நிச்சயம் இருக்கப் போவதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் வீசுகிற எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் நன்றியுள்ள கூட்டமாக இதை மாற்றி எத்தனையோ ஆண்டுகள் ஆகிப் போய்விட்டது.

இன்றைக்கும் பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டமாக இருந்தாலும் சரி வீதிக்கு வந்து போராடுகிறவர்கள் வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் மட்டுமே. பெருமளவு கிராமப்புறங்களில் இருந்து வரும் இவர்களிடம் மட்டுமே இன்று சமூக பொறுப்புகள் கொஞ்சமேனும் மிஞ்சி இருக்கின்றன. இந்நிலையில்தான் ஈழத் தமிழர்கள் மீதான இனவெறிப் போரை நிறுத்தக் கோரி முத்துக்குமார் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்திய அந்த இளைஞன் தன் மரணசாசனத்தில் கூட கல்லூரி மாணவர்களையும் வழக்கறிஞர்களையுமே போராடத் தூண்டி குறிப்பிட்டு எழுத மாணவர்களும் வழக்கறிஞர்களும் முத்துக்குமாரின் உடலின் பொறுப்பை ஏற்று தங்களின் போராட்டத்தை தீவீரப்படுத்தினார்கள். கடந்த பல நாட்களாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வீதிக்கு வந்து பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் வழக்கறிஞர்கள்.

பல நேரங்களில் இந்தப் போராட்டங்கள் தமிழக அரசுக்கு தலைவலியாக மாறியது. காங்கிரஸ்காரர்கள் வழக்கறிஞர்களை கைது செய்யச் சொல்லி போராடத் துவங்கினர். அதே சமயம் இந்தப் போராட்டத்தைக் குழப்ப வழக்கறிஞர்கள் மூலமாகவே திமுக எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் வக்கீல்களை அடக்க தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பாக வந்து கிடைத்தவன்தான் இந்த சு.சாமி. ‘‘முட்டையை பைல்ஸ்சில் வீசுனாங்கோ. கொட்டையில் வீசினாங்கோ’’ என்றுதான் சு.சாமி சொன்னானே தவிற என மூஞ்சியில் வீசினாங்க குமட்டுலயே குத்துனாங்க என்று சு.சாமி கடைசி வரை சொல்லவே இல்லை. யாரும் புகார் பதிவு செய்யவும் இல்லை. அப்படி இருக்கும்போது வழக்கறிஞர்களை எந்த முகாந்திரத்தில் கைது செய்யக் கிளம்பியது காவல்துறை? அப்படியே கைது செய்ய வேண்டும் என்றாலும் நீதிமன்றத்திற்கு வெளியேதான் அந்தக் கைதுகளை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் நீதிபதிகள் உதவியை போலீஸ் நாடி இருபது பேரை சரணடையச் சொல்லி இருக்கலாம்.

ஆனால் உண்மையில் கைது செய்வது ஒரு நோக்கம் என்றால் இனிமேல் வழக்கறிஞர்கள் எவனும் போராட்டம் கீராட்டம் என ஒன்று சேரக் கூடாது என்கிற திட்டத்தோடு, யாரோ ஒரு பெரிய தலையின் அறிவுறுத்தலில் தமிழக போலீஸ் செயல்பட்டிருப்பது தெரியவருகிறது. உண்மையில் போலீஸ் நீதிமன்றத்திற்குள் நுழைந்தது கருணாநிதிக்குத் தெரியுமா, தெரியாதா என்கிற கேள்விதான் இங்கே முக்கியம்.

வழக்கறிஞர் போலீஸ் மோதல், அல்லது சு.சாமி வழக்கறிஞர் மோதல், அல்லது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மோதல் என்று எத்தனை கோணத்தில் பார்த்தாலும் இந்தப் பிரச்சனையில் அடிநாதத்தில் இருப்பது பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்குமான மோதலே! அரசும் போலீசும் இங்கே பார்ப்பானுக்காக நிற்கிறது. சூத்திரர்களுக்காக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து நின்று சு.சாமி, சோ.சாமி, ஹிந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர் என பார்ப்பனர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். நடந்து கொண்டிருக்கும் கலவரங்களின் மூல வேரை ஈழ விடுதலைக்கான போரோடு தொடர்புப்படுத்திப் பார்ப்பது எவ்வளவு நியாயமானதோ அது போல திராவிட ஆரியர்களுக்கான மோதலாகவும் இதைப் பார்த்தே ஆகவேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலை வரலாறும் திராவிட ஆரிய இனத்தின் நீண்ட காலப் போரின் இறுகிய வடிவமே! அதன் மிச்சப்பட்ட மேம்போக்கான வடிவங்கள்தான் கலகங்களாகவும் கலவரங்களாகவும் தமிழகத்தில் வெடிக்கின்றன. அதுதான் உண்மை.

இதை மார்க்சிஸ்டுகள் உட்பட பார்ப்பன ஜெயலலிதாவோ, காங்கிரஸோ, பிஜேபியோ, நிறம் மாறிப் போன கருணாநிதியோ ஏற்றுக் கொள்ள முடியாது. தத்துவ ரீதியிலான சம நீதிக்கான சம வாய்ப்புக்கான போராட்டங்களையும் அதை ஒட்டி எழும் இம்மாதிரி கலகங்களையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக பார்ப்பதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம். அதே சமயம் பிரச்சனையின் மூல வேர் என்பதின் துவக்கத்தை நான் முத்துக்குமாரின் மரணத்திலிருந்து பார்க்கிறேன். கருணாநிதியோ வக்கீல்களைக் கைது செய்ய விடாமல் தடுத்த நிகழ்விலிருந்து பார்க்கிறார்.

கடைசியாய் ஒன்று..

சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதலின்போது கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸை நாம் திட்டினோம். ‘இப்போது அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என நீதிமன்றத்திற்குள் நுழைந்து லத்திசார்ஜ் பண்ணினால் அதற்கும் திட்டுகிறீர்களே!’ என புத்திசாலிகள் சிலர் கேள்வி கேட்கிறார்கள். சட்டக் கல்லூரியில் நடந்த மோதலில் மாணவர்கள் இரு பிரிவாக நின்று மோதிக் கொண்டார்கள். அங்கே தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்தது எவ்வளவு மோசமான முன்னுதாரணமோ, அதுபோல ஒற்றுமையாக சு.சாமிக்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை அத்துமீறித் தாக்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டது மன்னிக்கவே முடியாத குற்றம்.

வழக்கறிஞர்களை தாக்கிச் சிதைத்தது இனிமேல் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடக் கூடாது என்பதற்காகத்தான். இதில் இலங்கை அரசின் துணைத்தூதராக சென்னையில் இருக்கும் அம்சா, இந்திய உளவு நிறுவனமான ரா, பார்ப்பனக் கும்பல், அவர்களுக்கு காவடி தூக்கும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற துரோகச் சக்திகளின் விருப்பங்களும் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. அவர்கள் நினைத்ததை அவர்கள் நடத்தி முடித்து விட்டார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழக அரசே!

அத்துமீறி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்து!

சாதிப்பெயரைச் சொல்லி வழக்கறிஞர்களை இழிவாகப் பேசிய சுப்ரமணியசுவாமியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு!

என்பதுதான் இன்று நாம் முன்வைக்கும் கோரிக்கைகள். ஆனால் வழக்கறிஞர்களோடு இணைந்து மாணவர்களும் பொதுமக்களும் சகலதுறையினரும் அவர்களுக்காகப் போராடுவதோடு ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை முன்னெடுக்கும் இலங்கை அரசுக்கு எதிராகவும், அதை முட்டுக் கொடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில்தான் வழக்கறிஞர்கள் மீதான் ஒடுக்குமுறையை நாம் ஒடுக்க முடியும்.

நண்பர்களே! வழக்கறிஞர்களுக்கு உங்களின் ஆதரவினைத் தெரிவியுங்கள்! அவர்களின் தீரமிக்க போராட்டத்தில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நீங்களும் ஒன்றிணையுங்கள்.

(படங்கள் - நன்றி: தினந்தந்தி)

நன்றி : http://www.keetru.com/literature/essays/ponnila_4.php

Friday, February 20, 2009

''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல்!''--விகடன்

திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!

மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!

மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க, புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.

எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.

அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். அது பாதுகாப்பான மயானங்கள்!

எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!

இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால்,

ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.

பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.

'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.

காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.

இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம் கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்துகிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''

முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக் கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.

அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன. காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!

மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.

மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

இன்னொரு பக்கம் பார்த்தால்....

உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.

விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.

அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழ மக்களின் கோரிக்கையாக இருக் கிறது.

புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப் போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும் புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனை களைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.

''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா. சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.

அது பற்றி நமக்கென்ன கவலை?

நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.

மனத்தைரியம் உள்ளவர்கள் மட்டும் படங்களை பார்க்க......

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

வாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ

அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்--நகைச்சுவை

சுபிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த சு.சுவாமி எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும்.

தொடர்ந்தும் அவர் இனியும் தொடர்ந்து தங்க பாலு , சோ போன்றோரும் என்போல பதிக்கப் பட்டால் , அவர்களுடன் கூட்டணி வைத்து , பாதிக்கப்பட்ட எல்லோரும் மண் மோகன் சிங்கை சந்தித்து மர்கஜர் கொடுக்க டெல்லி பயணமா இருப்பதாக தெரிவித்தார்.

தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது -

‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி:முகில்,ஹரன்

http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2419:2009-02-19-17-20-57&catid=50:time-pass&Itemid=110

Thursday, February 19, 2009

நக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும்பினா உதைக்கிறா

சென்னை உயர்நீதி மன்றம். 17-ந் தேதி காலை.

விசாரிக்கப்பட இருந்த வழக்குகளின் பட்டி யலில்... தீட்சிதர்களின் வழக்கு 54-வது வழக்காக இருந்தது. போராட்டத்தில் குதித்திருந்த வழக்கறிஞர் களுக்கு... சுப்ரமணியசாமி தீட்சிதர் வழக்குக்காக கோர்ட்டில் உட்கார்ந்திருக்கும் தகவல் வர அவர்களில் ஒரு பகுதியினர் ஆவேசமாகக் கிளம்பி 11.45-மணிக்கு அந்தக் கோர்ட்டுக்கு வந்தனர். பிறகு?

அங்கு நடந்ததை கோர்ட் ஊழியர்கள் சிலரே விவரித்தனர்.’""ஆவேசமாக உள்ளே நுழைந்த அந்த வழக்கறிஞர் கும்பல்... கோர்ட் அறைக்குள் இருந்த காவல்துறை ஏ.சி.காதர் மொய்தீனை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, கதவை மூடியது. பின்னர்... "தமிழீழம் வாழ்க. இஸ்ரேலின் உளவாளி சுப்பிரமணிய சாமி ஒழிக... இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை வாங்கிக்கொடுக்கும்... இனத்துரோகி சு.சாமியே நாட்டை விட்டு ஓடு... ராஜீவ்காந்தி கொலையாளியே ஓடிப்போ...'’’ என்பது போன்ற முழக்கங்களை சாமிக்கெதிராய் முழங்கியது. அதேபோல் பெண் வழக்கறிஞர்கள் சாமியை முற்றுகையிட்டு... "சு.சாமியே உனக்கு மானம் ஈனம் இருக் கிறதா?' என்று கோஷம் போட்டனர். திகைத்துப்போன நீதியரசர்கள் பி.கே.மிஸ்ராவும், கே.சந்துருவும், "இங்கே என்ன நடக்கிறது?' என்றார்கள் கோபமாய்.

அப்போது அழுகிய முட்டை ஒன்று பறந்து வந்து சாமியின் தலையில் 'பட்'டென்று விழுந்து உடைய... ஒரு வழக்கறிஞர் ஓடி வந்து சாமியின் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு 'தொம்' என்று அவர் முதுகில் குத்துவிட்டார். தொடர்ந்து சாமியை குறிவைத்து முட்டைகள் வீசப்பட்டன. சில முட்டைகள் நீதியரசர்களின் அருகே அடுக்கப் பட்டிருந்த சட்டப் புத்தகங்களின் மீது உடைந்து தெறித்தன.

அப்போது இன்னொரு குரூப் சந்தடி சாக்கில்... கோர்ட் அறையின் இன்னொரு மூலையில் உட்கார்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ். சார்புடைய - விஜில் அமைப் பைச் சேர்ந்த ராதா ராஜனைப் பிடித்து கீழே தள்ளியது. நிலைமை விபரீதமாய் போய்க்கொண்டி ருப்பதைப் பார்த்த நீதியரசர்கள் கடுமையான குரலில்... "நீங்கள் எல்லோரும் வெளியே போகா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுப் போம்'னு சொல்ல... இதன்பிறகே அந்தக் கும்பல் வேளியே போனது. பிறகு அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லாவை அழைத்து "கோர்ட்டிற்குள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு ஏன் செய்ய வில்லை' என்றும் நீதியரசர்கள் விசாரித் தார்கள். "எங்க கோர்ட் அனுபவத்தில் இப்படியொரு கலாட்டாவை நாங்க பார்த்த தில்லை' என்றார்கள் படபடப்பு மாறாமல்.

"கோர்ட்டுக்குள் நடந்த கலாட்டா வைப் பற்றி தலைமை நீதிபதியிடம் புகார் தரப்போகிறோம்' என அங்கேயே அறிவித்த நீதியரசர்கள்... தீட்சிதர்கள் வழக்கை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்கள். அத்தனை கலாட்டாவும் ஓய்ந்தபின் பாதுகாப்புப் படை வீரர்கள்... சுப்ரமணிய சாமியை பாதுகாப் பாய் அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர். வெளியே பத்திரிகையாளர்களைப் பார்த்த சாமி ""தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. ஆட்சியைக் கலைக்கணும். இதை சும்மா விடமாட்டேன். சுப்ரீம் கோர்ட்டுக்கும் போவேன்'' என்றபடி கிளம்பினார்.

அந்த கோர்ட் அறையில் பந்தோபஸ்துப் பணியில் இருந்த ஏ.சி.காதர்மொய்தீனோ “""திடீர்னு கோர்ட்டிற்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் என்னை வெளியே தள்ளி உள்பக்கம் கதவை மூடிவிட்டார் கள். சு.சாமியின் பாதுகாப்புப் படை வீரர்கள் கோர்ட்டிற்குள் நுழைய முயன்றபோது... சு.சாமியே உள்ளே வரவேண்டாம்னு கைகாட்டி தடுத்து விட்டார். கோர்ட்டிற்குள் எங்களால் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது'' என்றார் நம்மிடம்.

சம்பவத்தின்போது அதே கோர்ட் அறையில் இருந்த அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லாவிடம் கேட்டபோது...’’ ""கோர்ட்டிற்குள் போலீஸுக்கு எந்த பவரும் இல்லை. கோர்ட் வளாகம் முழுக்க தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் பகுதி. எனவே அவரது உத்தரவு இல்லா மல் போலீசால் எந்த ஆக்ஷனையும் எடுக்க முடியாது. எங்களுக்கு இருக்கும் சந்தேகம்... வந்தவர்கள் எல்லோரும் உண்மையில் வழக்கறி ஞர்கள்தானா? என்பதுதான். ஏனென்றால் பல முகங்கள் புதுமுகங்களாக இருந்தன. அதேபோல் அன்று தீட்சிதர்களின் வழக்கு 54-வதாகத்தான் விசாரணைக்கு வருகிறது என்று தெரிந்தும்... சுப்ரமணியசாமி ஏன் முன்னதாகவே கோர்ட்டிற்கு வந்து உட்கார்ந்தார் என்றும் தெரியவில்லை'' என்று சந்தேகம் எழுப்புகிறார். சாமி தரப்பிலிருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. எனினும் ஸ்பாட் டுக்கு வந்து பார்வையிட்ட சிட்டி கமிஷனர் ராதாகிருஷ்ணன், ""இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவை இடுகிறதோ அதன்படி செயல்படுவோம்''’ என முடித்துக்கொண்டார்.

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வந்த சாமியை துக்ளக் சோ சென்று பார்த்திருக்கிறார். “ ""திடீர்னு அத்தனை பேர் வருவான்னு நினைக்கலை. லெப்ட் சைட்லயிருந்து முட்டை அடிக்கிறான்னு பார்த்தா உடனே ரைட் சைட்லயிருந்து ஒருத்தன் முட்டையை வீசறா. இப்படி திரும்புனா அடிக்கிறா, அப் படி திரும்புனா உதைக்கிறா.. வந்தவா யாரும் சாதாரண வக்கீலா இருக்க மாட்டா...தி.க. காரா, கம்யூனிஸ்ட்காரா, நக்ச லைட்காராலாதான் இருக்கணும். பெரியார் காலத்திலேயே இப்படி எல்லாம் நடந்துண்டது கிடையாது. அப்போல் லாம் வெறும் பேச்சோடதான் இருப்பா. இப்ப இங்க இருக்கிறவாளெல்லாம் விடுதலைப் புலியா மாறிட்டான்னு தெரியறது. இப்பவே இப்படின்னா ஈழம் கிடைச்சா என்னெல்லாம் பண்ணுவான்னு தெரியலை. நம்மவா ஒருத்தரையும் விடமாட்டா''’ என்று படபடத்திருக்கிறார் சாமி. ""நாம சந்திச்சு பேசுனது தெரிஞ்சா எல்லா பார்ப்பனர்களும் ஒண்ணாயிட்டாங்கன்னு பேசுவார் கருணாநிதி என்று சொன்ன சோ, மதுரை கூட்டத்துக்கு போகவேண்டாம். அங்கேயும் இப்படி நடக்கலாம்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் முன்பே... சு.சாமி தாக்கப்பட்ட விவகாரம் பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

-சகா

திமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN

பிரணாப் முகர்ஜியின் அறிக்கை:தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விடக் கொடூரமானவை : வைகோ

http://sinnakuddy1.blogspot.com/2009/02/cnn-ibn.html


இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையானது ஈழத் தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விடக் கொடூரமானது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.



இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் தமிழ் இன மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தாய்த் தமிழகத்து மக்களின் உள்ளம் வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கையில், அந்த நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடும் அக்கிரமத்தை இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சிங்கள கொடியோரின் ஊது குழலாக மாறி அறிக்கை தந்துள்ளார்.


மத்திய அரசின் மீது நான்காண்டு காலமாக நான் கொடுத்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு பிரணாப் முகர்ஜி தந்த அறிக்கையே ஒப்புதல் வாக்குமூலம் ஆகிவிட்டது.


உலகின் பல நாடுகளில் இருந்தும் பெற்றுள்ள ஆயுத பலத்தோடும், இந்தியா வழங்கி உள்ள மிக சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களின் உதவியோடும் சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தின் பகுதிகளை ஆக்கிரமித்ததை ராஜபக்ச கெக்கலிகொட்டி கொக்கறிப்பதைப் போல பிரணாப் முகர்ஜியும் அதே மமதையோடும், கும்மாளம் போடும் குதூகலத்தோடும் வார்த்தைகளை வீசியுள்ளார்.


சிங்கள இராணுவம் பாரிய வெற்றிகளை பெற்றுவிட்டதாகவும். கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாகவும். ஆனையிறவைக் கைப்பற்றி விட்டதாகவும் முல்லைத்தீவுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தம்பட்டம் அடிக்கிறார் பிரணாப் முகர்ஜி.


வெறும் 150 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதுவும் 70 ஆயிரம் தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.


தமிழர்களை சிங்கள இராணுவம் துடிக்க துடிக்க கொல்வதை மூடி மறைத்து தமிழர்களை விடுதலைப் புலிகள் கொல்கிறார்கள் என்று மனச்சாட்சியை குழிதோண்டி புதைத்து விட்டு பிரணாப் முகர்ஜி மிக ஏளனமாகக் குற்றம் சாட்டுகிறார்.


முல்லைத்தீவு பகுதியில் ஏற்கனவே மூன்று லட்சம் தமிழர்கள் இருந்தனர். இப்போது வவுனியாவில் இருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் இரண்டு லட்சத்து இருபதாயிரம் மக்கள் முல்லைத்தீவுக்குள் வந்துள்ளனர்.


தமிழ் இனத்தையே அழிக்க தன் கொலைகார இராணுவத்தை ஏவி உள்ள ராஜபக்ச கூறியதை இந்திய வெளிவிவகார மந்திரி அப்படியே வழிமொழிகிறார். 35 ஆயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்துவிட்டார்களாம். சிறிலங்கா அரச தலைவர் சொன்னதை இந்தியாவின் மந்திரியும் சொல்கிறார்.


அது மட்டுமல்ல, போர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் எல்லாம் முடிந்து விடும் என்றும், அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விடவேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


புலிகள் ஏற்கனவே தமிழ் இனத்திற்கு கேடுசெய்து விட்டார்களாம். 23 வருடங்களாக இலங்கைத் தீவில் இருந்த அமைதியின்மை ஒரு முடிவுக்கு வரப்போகிறதாம். அமைதி திரும்பப் போகிறதாம். அதன்பிறகு தமிழர்கள் பகுதிகளில் பொருளாதார மறுவாழ்வுக்கு இந்தியா உதவுமாம்.


தமிழீழத்தை சுடுகாடாக்கிவிட்டு அதற்குப்பின் இந்தியா அங்கே புதுவாழ்வு கொடுக்கப்போகிறதாம். நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டு வீசியதில் இராணுவத்தின் பீரங்கிகள் தாக்கியதில் மருத்துவமனையில் இருந்தவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டு விட்டார்கள்.


இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உள்ளனர். பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் வயது முதிர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர்.


இக்கொடூர தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், நெஞ்சைப் பிளக்கும் இந்தக் கொடிய துயரம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையில் சொல்லவில்லை. தமிழ்ப் பெண்கள் வவுனியா முகாமில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு, அந்த இராணுவ மிருகங்களால் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டு அதன் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


சிங்களக் காடையர்கள் பிடியிலிருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறியதை அறியும் போதே நம் அங்கம் எல்லாம் பதறுகிறது. இதயமே நொறுங்குகிறது.


ஆனால், இத்தனை கொடுமைகளையும், தமிழர் இன அழிப்புப் போரையும் சிங்கள அரசு செய்வதற்கு முழுக்க முழுக்க ஆயுதம் உதவி மட்டுமின்றி எல்லாவிதமான உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதால்தான் ஒப்புக்கு கூட போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்திய அரசு தயாராக இல்லை.


ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிடலாம் என்று கருதி நல உரிமைப் பேரவை என்று நாடகம் நடத்துகிறார். போரை நடத்துவதே இந்திய அரசு. அந்த இந்திய அரசு மூலம் ஐக்கிய நாடுகள் சபையை அணுகப் போகிறாராம்.


'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைப் பிளந்து வைகுண்டத்தை காட்டுவேன்' என்று மார்தட்டுவதைப் போல முதலமைச்சர் 'இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டுகிறார்.


மொத்தத்தில் இந்திய அரசின் துரோகத்திற்கு முழுப் பங்காளி கலைஞர் கருணாநிதிதான் ஆவார். பிரணாப் முகர்ஜியின் அறிக்கை ஈழத்தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை விட கொடுமையானது. தமிழ் மக்கள் அருந்தும் தண்ணீர் தடாகத்தில் கலக்கப்படுகின்ற ஆலகால விடம் ஆகும்.


இந்தத் துரோகத்திற்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது. தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட கொடூர சதித்திட்டத்தை யார் வகுத்தார்களோ அந்த மாபாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. வினையை விதைத்து இருக்கிறார்கள். வினையை அறுப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 18, 2009

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள் கண்டனம்: 2 முறை சபை ஒத்திவைப்பு

திமுக மவுனம் அடே திமுக துரோகிங்களா(மன்னிக்க வேண்டும், இது தொண்டர்களை குறிப்பிடுவது அல்ல), நீங்கள் ஒரு நாளும் நல்லாவே இருக்க மாட்டீங்கடா. உண்மை தமிழன் சீமானை பிடிப்பதற்கு நீங்கள் காட்டும் வேகமென்ன, ஆனால் தமிழின கொலையை தடுப்பதில் உங்களின் வேகத்தை ஆமை கூட கை கொட்டி சிரிக்கிறது.

ஈழத்தில் அப்பாவி தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மக்கள் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்கள் அவையில் இலங்கை இனச்சிக்கல் குறித்து இன்று புதன்கிழமை அறிக்கை அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கையில் தமிழ் சமுதாயத்திற்கு விடுதலைப் புலிகள் பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் சமுதாயத்திற்கு அவர்கள் நன்மை செய்ய விரும்பினால் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்ட போது போர் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர் என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ம.க., ம.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று முழக்கம் எழுப்பினர்.

விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்தக் கருத்துக்களை பிரணாப் முகர்ஜி திரும்பப் பெற வேண்டும். இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மக்கள் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் பா.ம.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களின் நிலைப்பாட்டை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இலங்கை இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இரு கட்சிகளின் உறுப்பினர்களும் கறுப்புச் சட்டை அணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இரு கட்சிகளின் போராட்டத்தால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து,
பிற்பகல் 2:00 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் சரன்ஜித்சிங் அத்வல்
அறிவித்தார்.

பிற்பகல் 2:00 மணிக்கு அவை கூடியபோதும் இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க, ம.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து இரு கட்சிகளின் உறுப்பினர்களும் உரையாற்ற அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அனுமதி அளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பா.ம.க. உறுப்பினர் செந்தில்,

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்து வருவது அக்கிரமமானது என்று குற்றம் சாட்டினார்.

அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முறையானதல்ல என்றும் அவர் கூறினார்.

அதன் பின் பேசிய பொன்னுசாமி (பா.ம.க.), இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களைச் செயற்படுத்தப் போவதாக இந்தியா கூறுகிறது. முதலில் போரை நிறுத்துங்கள். அதன் பிறகுதான் மறுவாழ்வுத் திட்டங்களைப் பற்றி பேச முடியும் என்றார்.

ம.தி.மு.க உறுப்பினர் கிருஸ்ணன் உரையாற்றிய போது, இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்ய இந்தியாதான் ஆயுதங்களை வழங்குகிறது. சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழர்களைக் கொல்ல ஆயுதங்களை வழங்குவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவாதத்திற்கு விடையளித்துப் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, தாம் ஏற்கெனவே கூறிய கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்திக்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அங்கு நடைபெற்று வரும் போரை நிறுத்தும்படி அந்நாட்டு அரசைக் கட்டாயப்படுத்த இந்தியாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே இலங்கையில் போரை நிறுத்தும்படி வலியுறுத்த முடியாது என்று கூறினார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அரசு உறுதி பூண்டிருக்கிறது என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். பிரணாப் முகர்ஜியின் இந்தக் கருத்துகள் மனநிறைவளிக்கவில்லை என்று கூறி பா.ம.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

http://puthinam.com/full.php?2b1VoKe0dIcYe0ecAA4y3b4M6DB4d2f1e3cc2AmS3d434OO3a030Mt3e

இலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு

"போபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியா" என்ற இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முஹமது அலி ஜின்னா இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கையில்,

"அப்பாவி தமிழர்கள் குறிப்பாக பெண்களும்,குழந்தைகளும் பலியாகின்றனர்.குறிப்பாக மருத்துவமனையில் கூட குண்டுகள் வீசபடுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜக போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சட்டபேரவையில் தீர்மானம் போட்டும்,உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தியும் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினரை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து வரும் வேளையில் பாதிக்கப்படும் ஈழ தமிழர்களுக்காக இஸ்லாமியர்கள் குரல் குடுப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இறையாண்மை காப்பதற்கா? கொல்வதற்கா?

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாடு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அளித்துள்ள விளக்கம் வினோதமாகவும், நம்மை திசை திருப்பி ஏமாற்ற அரசியல்வாதிகள் எதையும் காரணமாக்குவார்கள் என்பதையும் காட்டியுள்ளது.

சென்னை மாநகரில் மயிலை மாங்கொல்லையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய ‘காங்கிரஸின் நிலை விளக்கப் பொதுக் கூட்ட’த்தில், போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை இந்தியா வற்புறுத்த முடியாது என்று பேசிய சிதம்பரம், ஏன் வற்புறுத்த முடியாது என்பதற்கு அளித்த விளக்கம் ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்று கருதும் தமிழ்நாட்டு மக்களுக்கு கோபக் கொந்தளிப்பிலும் சிரிப்பை வரவழைத்திருக்கும்.

“இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல, நம் காலனியாதிக்க நாடும் அல்ல, அது ஒரு இறையாண்மை மிக்க தனி சுதந்திர நாடு. எனவே ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மீக உரிமை இந்தியாவிற்கு இல்லை” என்று அமைச்சர் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.

தனது வாதத்திற்கு வலு சேர்க்க காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் பிரிவினை கோரி போராடும் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார் (இதில் கூட ஒரு உண்மையை மறைத்துள்ளார் சிதம்பரம். நாகா தேசிய விடுதலை முன்னனியுடன் ஒரு போர் நிறுத்தம் செய்து கொண்டுதான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது)

அமைச்சர் சிதம்பரம் கூறியதில் உண்மையும், அடிப்படையும் எந்த அளவிற்கு உள்ளது என்பது விவரமறிந்த எவருக்கும் தெரியும். ஒரு பிரச்சனையில் கடைசி பத்தாண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் கூட மக்கள் மனதில் இருக்காது என்று உறுதியாக நினைத்தால் மட்டுமே ஒரு அமைச்சரால் இவ்வாறு பேச முடியும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் நிறுத்தம் ஏற்பட்டதும், அதனைத் தொடர்ந்து நார்வே நாட்டின் அனுசரணையுடனும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் ஆகியன மட்டுமின்றி, இந்தியாவின் ஆதரவுடனும் அமைதி பேச்சு நடைபெற்றது அனைவருக்கும் நினைவிருக்கும்.

முதலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அந்தப் பேச்சுவார்த்தை துவங்கியது, அதன்பிறகு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது, பிறகு சிங்கப்பூரிலும், கடைசியாக ஜெ‌‌னீவா நகரிலும் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முதிலில் இருந்து இறுதிவரை தான் ஒப்புக்கொண்ட எதையும் சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதும், அதன் காரணமாகவே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்பதும் தமிழர் இனப் பிரச்சனை குறித்து அறிந்த, ஆர்வத்துடன் அவதானித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘ஆயுதத்தை கீழே போட்டுவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வா’ என்றா சிறிலங்க அரசு நிபந்தனை விதித்தது? இல்லையே. அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நார்வேயோ அல்லது ஆதரவளித்த (பேச்சுவார்த்தையை ஆதரித்த இந்தியா உட்பட) எந்த நாடாவது அப்படிப்பட்ட நிபந்தனையை விதித்தனவா? இல்லையே. பிறகு எந்த அடிப்படையில் அமைச்சர் சிதம்பரம், ‘புலிகள் ஆயுதத்தை கைவிடும்வரை' பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்த முடியாது என்று கூறுகிறார்?

ஆக, தமிழக மக்களுக்கு இதெல்லாம் மறந்துவிட்டிருக்கும் என்றோ அல்லது அதைப்பற்றியெல்லாம் தான் மறந்த நிலையிலோதான் இவ்வாறு சிதம்பரம் பேசியிருக்க முடியும்.

பேச்சுவார்த்தைக்கா தமிழகம் வற்புறுத்தியது?

மத்திய அரசிற்கு தமிழக மக்களும், தமிழ்நாட்டு அரசும், எதிர்க்கட்சிகளும், மற்ற பொது அமைப்புகளும் விடுத்த கோரிக்கை என்ன? தமிழினப் படுகொலையை தனது முப்படைகளைக் கொண்டும் மேற்கொண்டுவரும் சிறிலங்க அரசை போர் நிறுத்தம் செய்யச் சொல் என்பதுதானே?

பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியா தமிழக சட்டப்பேரவையிலும், வெளியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா? பேரணிகளும், பொதுக் கூட்டங்களும், கடையடைப்பும், மனித சங்கிலிப் போராட்டங்களும் நடத்தப்பட்டதா? கோரிக்கையை பேசாமல், கேட்காததை எதற்குப் பேசுகிறார் சிதம்பரம்?


போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறையல்ல மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி பேசியதென்ன? முதலில் அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். பிறகு அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை (சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் - அதுவும் நார்வே என்று குறிப்பிட்டே) நடத்தப்பட வேண்டும், அதன்மூலம் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். இங்கிருந்து தீ்ர்வு என்று எதையும் (ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்பதை நினைவில் கொள்க) திணிக்கக் கூடாது என்றுதானே கூறினார்?

உண்மை இப்படியிருக்க பேச்சுவார்த்தை நடத்து என்று வற்புறுத்த முடியாது என்று கூறுவது எதற்கு?

இறையாண்மை ஒரு தடையா?

“இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல, அது இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு” என்று கூறுகிற அமைச்சர் சிதம்பரம், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது, அந்நாடு உரிமை கேட்டுப் போராடும் தனது நாட்டு மக்களாக உள்ள ஒரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பதற்குக் கூட உரிமையளிப்பதா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் இறையாண்மை என்பது என்ன? தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளவும், தனது மக்களின் நலனை பேணவும், தனது எல்லைகளைக் காத்துக் கொள்ளவும் அதற்கு உள்ள உரிமைதானே இறையாண்மை என்பது. அந்த உறுதியான, அசைக்க முடியாத தன்னுரிமை அதற்கு எங்கிருந்து கிடைக்கிறது? அல்லது பெறுகிறது? எந்த மக்களைக் காக்கவும், அவர்களின் நலனைப் பேணவும், அந்நிய தாக்குதலில் இருந்த தன்னை காத்துக் கொள்ளவும் அரசமைப்பு ரீதியாக பெற்ற உரிமைதானே அது? அதனை உரிமை கேட்டு போராடிய - தனது நாட்டின் அங்கமாக, தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அழிப்பதற்கா? ஒரு பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, ஒரு சிறுபான்மை இனத்தை முற்றிலுமாக அழித்திடவா அதற்கு இறையாண்மை உதவும்?

நமது நாட்டின் குறிப்பிடத்தக்க சட்ட நிபுணர்களில் ஒருவரான அமைச்சர் சிதம்பரம் கூறும் விளக்கம், ராஜபக்ச அரசு மேற்கொண்டுவரும் இன அழித்தலை இறையாண்மையின் பெயரில் நியாயப்படுத்துவதாக அல்லவா உள்ளது? இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று அமைச்சர் சிதம்பரமோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தமிழக மக்களிடம் கூறிடத் தயாரா?

அதிபர் ராஜபக்சயின் சகோதரரும், சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ச, சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் இனப் படுகொலை குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதே? அறிவாரா சிதம்பரம்?


இந்தக் கட்டுரைகளுக்கிடையே பதிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை உலகத்தின் எந்த நாட்டவராவது பார்க்கட்டும். இதற்கெல்லாம் காரணமான அரசு தனது இறையாண்மைக்கு உட்பட்டுத்தான் செய்துள்ளது என்று கூறுவார்களா? சொந்த நாட்டு மக்கள் மீது வெள்ளை பார்பரஸ் குண்டுகளைத் தாக்கி எரித்துக் கொல்லும் அரக்க நெஞ்சு கொண்ட அதிபர் ராஜபக்சவுடன், நல்லுறவு பற்றிப் பேசியதாக அறிக்கைவிடும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் இறையாண்மை என்பதற்கு இதுதான் பொருளோ?

ராஜபக்ச, ஜெயவர்த்தனே உள்ளிட்ட சிறிலங்க தலைவர்கள் கொண்டுள்ள இனவெறி மனப்பாங்கை காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கிறதோ? அதனால்தான், அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை சுட்டுக் கொன்றவர்கள் இரண்டு சீக்கியர்கள் என்பதற்காக, டெல்லிப் பட்டணத்தில் 3,000 அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவித்தனரோ? அந்தச் செயல் இறையாண்மைக்கு கட்டியம் கூறுகின்றதோ? காங்கிரஸ் கட்சியும், அமைச்சர் சிதம்பரமும்தான் விளக்கிட வேண்டும்.

மீனவர் பிரச்சனையில் இறையாண்மை மீறப்படவில்லையா?

இறையாண்மை குறித்து இவ்வளவு ஆழமாக பேசிய அமைச்சர் சிதம்பரம், தமிழக மீனவர்கள் 400க்கும் அதிகமானவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே, அப்போது இந்தியாவின் இறையாண்மை என்ன செய்து கொண்டிருந்தது என்று விளக்கியிருக்கலாம்.

அதனைச் செய்யவில்லை. அப்படி ஒரு நிகழ்வு வேறு எந்த ஒரு மாநில மீனவருக்கும், ஏன் பாகிஸ்தான் மீனவருக்கும் கூட நேராதது ஏன் அமைச்சரே? நமது நாட்டின் மீனவர்கள் மீது, பலமுறை நமது கடற்பகுதிக்குள்ளேயே அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றனரே, அப்போதெல்லாம் இறையாண்மை ஏன் மத்திய அரசிற்கு நினைவிற்கு வரவில்லை? நமது கடற்படைக்கு ஏன் அந்த எண்ணம் பிறக்கவில்லை? நமது கடலோர காவற்படை நமது மீனவர்களைக் காப்பாற்ற ஏன் முன்வரவில்லை? இது தமிழ்நாட்டின் மீனவர்கள் மனதில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள கேள்வி என்பதை அமைச்சர் சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும்.


ஒரு மிகப் பெரிய நாடான இந்தியா - அதுவும் அணு ஆயுதங்களைக் கொண்ட 6வது வல்லரசு, அதன் மீனவர்களை ஒரு சிறிய தீவின் கடற்படை எந்தத் துணிச்சலில் சுட்டது, சுட்டுக் கொண்டிருக்கிறது? மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் பெறப்பட்டதே, அதன் பிறகும் தாக்குதல் தொடர்கிறதே? சிறிலங்காவிற்கு யார் துணிச்சலைக் கொடுத்தது? இப்படிப்பட்ட துணிச்சல் பாகிஸ்தானிற்கு இல்லையே ஏன்?

நமது நாட்டின் மீனவனையே நடுக்கடலில் அத்துமீறிச் சுட்டு நாசம் செய்யும் ஒரு கடற்படையைக் கொண்ட அரசு, தன் நாட்டில் வாழும் தமிழர்களுக்கா சம உரிமை கொடுக்கப் போகிறது? யாரை ஏமாற்றப் பேசுகிறீர்கள்? தமிழர்க்கு சிந்திக்கத் தெரியாது என்று நினைக்கிறீர்களா?

தமிழக மீனவர்களின் உரிமை, ஈழத் தமிழர்களின் நலன் ஆகிய இரண்டையும் விட்டுத் தந்துவிட்டு, சிங்கள மேலாதிக்க அரசுடன் ஒரு நட்பை உறுதி செய்கிறது மத்திய அரசு என்பதை, கடந்த மாதம் இலங்கை சென்றுவந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த அறிக்கையில் இருந்தே தெளிவாகத் தெரிந்ததே.

http://tamil.webdunia.com/

அந்த அறிக்கையில் போர் நிறுத்தம் பற்றியும் பேசவில்லை, தமிழர்களின் நலம், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை ஆகிய எதைப் பற்றியும் பேசவில்லை!

மத்திய அரசை, காங்கிரஸை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள், அவர்களை இல்லாத காரணங்களைக் கூறி குழப்பிட முனைவது பயனைத் தராது. தமிழ்நாட்டு மக்களை விட்டு எங்கோ சென்றுவிட்டது காங்கிரஸ் கட்சி. அது எந்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை அவர்களின் வாக்குப் பலம் காட்டும், அதுவே அவர்களின் நலனையும், தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களின் நலனையும் காப்பாற்றும்.

Tuesday, February 17, 2009

சீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.

நண்பர்களே தமிழனுக்கு ஒரு விடிவு தர ஒரு தலைவன் வரமாட்டானா என தேடி, தேடி அலுத்து விட்டோம். இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து தலைவர்களும் பணம், பொருள், பதவி ஆசையில் ஏதாவது ஒன்றில் சிக்கி தமிழின அழிவிற்கு உதவியாக உள்ளனரே தவிர தமிழனை காப்பாற்ற சில தலைவர்கள் நினைத்தாலும் அவர்களால் அது முடியவில்லை.

நாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.

சீமான் அண்ணா உங்களின் அன்பு தம்பியின் அன்பு கட்டளை தமிழர்களை நீங்கள்தான் வழி நடத்தி செல்ல வேண்டும். என்ன பண்ணூவிர்களோ எப்படியாவது எங்களை வழி நடத்தி இந்த தமிழின அடிமைதனத்திலிருந்து விடிவு கிடைக்க வழி செய்யுங்கள்.

எவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம்.

Monday, February 16, 2009

உலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போரை முறியடிப்போம் விரைவீர்

உலகத்தமிழர் செய்தி அன்பார்ந்த தமிழ் உறவுகளே தற்காலத்தில் இணையதளமானது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக உள்ளது. தற்பொழுது நமது இனத்தினை தாயகத்தில் அழித்துக்கொண்டிருக்கும் சிங்களர்கள் இணையதளத்தின் மூலமாக தவறான கருத்துக்களை இவ்வுலகிற்கு பரப்பிவருகின்றனர்.

நம்மீதான இணையதள கருத்தியல் போரினை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

சர்வதேச ஊடகவியலாளர்கள் இணையத்தில் நம் நிலவரங்களை தெரிவித்து வரும் வேளையில் சிங்களர்கள் அக்கருத்துக்கள் தவறானது என்று பரப்பி வருகின்றார்கள். தமிழீழத்துக்கு ஆதரவாக எழுதியுள்ள சர்வதேச எழுத்தாளர்களின் கட்டுரைகளில் மறுப்பு தெரிவித்து தவறென்று சிங்களவர்கள் அதிகளவு கருத்து தெரிவித்துள்ளனர். ஆயுதப்போராட்டம் , அரசியல் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே புலம்பெயர் மக்களாகிய நாம் இணையதள ஊடகப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாம் செய்யவேண்டிய வேலை நமக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் சர்வதேச ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நம் ஆதரவு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். புலம்பெயர் வாழ்மக்களாகிய நாம் தாயக விடுதலைப்போராட்டத்துக்கு இவ்வகையான கருத்தியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உலகத்தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தளங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவிக்க விரைந்து தெரிவிக்குமாறு உணர்வுகளுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. Leading article: A military victory that will sow the seeds of hatred (The Independent - UK)
http://www.independent.co.uk/opinion/leadi...ed-1609198.html


2. British envoy banned in war without witnesses (The Independent - UK)
http://www.independent.co.uk/news/world/as...es-1609188.html

3. Robert Evans MEP: Who can protect Tamil civilians caught in the conflict?(The Independent - UK)
http://www.independent.co.uk/opinion/comme...ct-1609189.html

CNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக

நண்பர் ஒருவர் சொல்லியதன் பேரில் ireport.com ல் நானும் பதிவு பண்ணி அண்மையில் லண்டனில் நடந்த வீடியோவை ஏற்றினேன். ஏற்றிய 1 மணி நேரத்தில் cnnல் இருந்து ஒரு இ-மெயில். உங்கள் வீடியோ நன்றாக இருக்கிறது. இதை பயன்படுத்தி கொள்ள விருப்பமாக உள்ளது என வந்தது. ரொம்ப சந்தோசம் எம் இன படு கொலையை உலகுக்கு எடுத்து செல்லுங்கள் என்று சொல்லி என் சம்மதத்தை தெரிவித்தேன்.

இப்போது அநத ஒளிப்பதிவி உங்களின் பார்வைக்காக. வெகுவிரைவில் நீங்கள் தொலைகாட்சியில் காணலாம்.


அந்த நண்பருக்கு(தமிழ்) எனது மனமார்ந்த நன்றிகள்

இந்த பதிவின் பின்னூட்டத்தில் http://nilavupattu.blogspot.com/2009/02/youtube.html#comments அவர் தெரிவித்திருந்தார்.



http://www.ireport.com/docs/DOC-213212


ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்த்துவோம்: தமிழக மக்கள் உறுதியேற்பு

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து வீரச்சாவடைந்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

"தேனிசை" செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் "விடுதலை" இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.




தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,

இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.

தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,

ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் "விடுதலை" இராசேந்திரன் ஆற்றிய உரையில்,

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

ஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.

தமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று கேட்டுக் கொண்டார்.




திரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,

எத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.

இரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.

அதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது.

பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக "விண்" தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/full.php?2b1VoKe0docYe0ecAA4e3b4M6Dh4d2f1e3cc2AmS3d434OO3a030Mt3e

Sunday, February 15, 2009

பொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும்

சமகால அரசியல் பொஸ்னியா சேபியாவில் சுமார் ஏழாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை போன்றே இலங்கையின் வன்னியில் அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட வைத்தியசாலை மீதான தாக்குதல்கள்

மற்றும் பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல்கள் அமைந்திருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் நிர்வாகத்தில் துணை சட்டமா அதிபராக இருந்தவரான புருஸ் பெய்ன்

தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்தை இன்று "பொஸ்டன் குளோப்" சஞ்சிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த படுகொலைகளுக்கு அமெரிக்காவின் இரட்டை வதிவிட விசாவைக் கொண்ட பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவும், இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுமே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினர் தமிழ் கிறிஸ்தவ தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவே கருத வேண்டியுள்ளது. இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு அடங்கிய 1000 பக்க குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க சட்டமா அதிபர் எரிக் எச் ஹோல்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தமது பதவிகளை ஏற்ற சரத் பொன்சேகாவும் கோட்டாபய ராஜபக்சவும் தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் சுமார் 3800 படுகொலைகளுக்கும் காணாமல் போதலுக்கும் பொறுப்பாளிகளாவர்.அத்துடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் காயங்களுக்கு பொறுப்பானவர்களாவர்.

பாடசாலைகள் கோயில்கள் மற்றும் வீடுகள், வைத்தியசாலைகள் என பல பொதுஇடங்களிலும் குண்டுவீச்சுகளை நடத்தி இயல்புவாழ்க்கையை ஸ்தம்பித்துள்ளனர். இது பொஸ்னியாவிலும் கொசோவோவிலும் சேபியப்படையினர் நடத்திய படுகொலைகளுக்கு நிகரான, சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டகூடிய குற்றங்களாகும்.

இலங்கையில் பாதுகாப்பு வலயங்கள் மீது அண்மைக்காலமாக படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயமடைந்துள்ளனர். பாதைகள் மூடப்பட்டு தன்னார்வு ஊழியர்கள் தடுக்கப்பட்டதுடன் வன்னியில் இருந்து மனிதாபிமான பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஐக்கிய அமெரிக்கா, சேபியாவில் படுகொலையை மேற்கொண்ட சுலோபொடன் மிலோசவிச், ரடோவன் கராட்சிக், ரட்கோ லாடிவிக் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கையை எடுத்தது.

இதன் அடிப்படையிலேயே தமது பிரஜைகளான கோட்டாபய ராஜாக்சவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் எதிராக அமரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என புருஸ் பெய்ன் கோரியுள்ளார்.


நன்றி தராக்கிராம்
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2367:2009-02-15-15-50-24&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

இலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - விஜயகாந்த்

தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கை நாட்டின் தூதரகத்தை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இழுத்து மூடவேண்டும் இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



இராமநாதபுரத்தில் ஒரு திருமண விழாவில் உரையாற்றிய தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக உரையாற்றும் பொழுது

இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன்.

இலங்கை தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோதுஇ கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? இன்று எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை.

இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று பேசுகிறார்கள்.
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐ.நா. சபையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும்.

வரும் 21ந் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்" என்றார்.


நன்றி http://www.pathivu.com/news/337/54//d,view.aspx

தமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு

வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட - வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று சனிக்கிழமை இரவு "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் - தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி "புதினம்" செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்

தமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது

கருணாவின் துரோகத்தினாலே தினமும் நூற்றுகணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், அதே போல் சில சிங்கள கருங்காடைகள் இங்கே உலாவுகின்றன தமிழன் என்று சொல்லி கொண்டு. மகிந்தவிடம் பணம் பெறுவதே இவர்களின் குறிக்கோள். அதற்க்காக தமிழர்களை அழிப்பதற்கான அனைத்து பொய்களையும் வெளியிடுகின்றன.

தமிழர்களின் மேல் பற்று கொண்ட தமிழ் மணமே, ஒரு கருணா துரோகி போதாதா, ஏன் இவர்களை இன்னும் தமிழ் மணத்தில் இணைத்திருக்க வேண்டும். இவர்களின் குறிக்கோள் தமிழர்களின் போராட்டத்தினை திசை திருப்புவதே. தமிழ் இன அழிப்பை விரைவு படுத்துவதே இவர்களின் குறிக்கோள். ஒரு தமிழன் செத்தால் அதற்கு 1000 டாலர் வாங்கும் இனதுரோகிகள்.

தயவு செய்து இவர்களை தடை செய்ய வேண்டும். தமிழ் வாழ தமிழன் வேண்டும், ஆனால் அழிப்பவனால் தமிழுக்கு எந்த பயனும் இல்லை.

Saturday, February 14, 2009

நக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்க வைக்கிறது

நக்கீரன் தலைப்பு : வழக்கே வா! மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால்.

கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்துவிட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த்தமிழகத்தினர். வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரி கைகளின் தார்மீக கடமை. தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பிப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, "ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்' என்ற செய்திக் கட்டுரை.

சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச (!) ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீர னுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.

பிப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது' என தெரிவித்திருப்பதுடன், "இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ்விஷயத்தை அணுகப்போவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இருநாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத்தூதர், தனது அதிகாரவரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு. துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு. சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக் குத் தொடரப் போகிறார்? உள்ளூர் நீதிமன்றத்திலா? உலக நீதிமன்றத் திலா? எங்கே இருந்தாலும் "வழக்கே வா' என வரவேற்கிறது நக்கீரன்.

போரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா? அவமரியாதையா? அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது? எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.

நாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக் சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட் டும். எதிர்கொள் கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை? இதே பாணி யில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்குமீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான ரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்து வதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது. தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.

தூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.

-ஆசிரியர்

இலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்?--ராஜபக்ஷேவின் நாஜி டெக்னிக் ஜீ.வி

''முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!'' என்று ராஜபக்ஷே சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கு சிங்கள அரசு

திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஐந்து வதை முகாம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. ஹிட்லர் உருவாக் கியது போன்ற இந்த வதை முகாம்களில், தமிழர்கள் நிரந்தரமாக சிறை வைக்கப்படுவார்கள். இதற்காக ரகசிய ஆவணம் ஒன்றைத் தயாரித்து சர்வதேச நாடு களில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் சிங்கள அரசு சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. அதற்காக நிதி திரட்டும் முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது.



கடைசித் தாக்குதலுக்கான 'கவுன்ட் டவுன்':

முல்லைத் தீவில் கடைசிக்கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு சிங்கள அரசு தயாராகிவிட்டது. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டால், குறைந்தபட்சம்ஐம்பதாயிரம் தமிழர்களாவது கொல்லப்படுவார் கள் என்று எல்லோருமே அச்சம் தெரிவிக்கிறார்கள். அவ்வ ளவு பேர் கொல்லப்பட்டால், அது சர்வதேச நாடுகளில்

பெரிய பதற்றத்தை ஏற்படுத்தும், அதனால் சிங்கள அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு. தமிழர்கள் கொல்லப்படுவது வெளியே தெரிந்தால்தானே பிரச்னை. அதை மூடி மறைத்துவிட்டால், சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகிறது என்ற ரீதியில் ராஜபக்ஷே திட்டம் தீட்டி வருகிறார்.

முல்லைத் தீவில் நடப்பதை வெளியே தெரிவிக்கும் அளவுக்கு இப்போது புலிகளின் தகவல் தொடர்பு பலமாக இல்லை. சிங்கள ராணுவம் என்ன சொல்கிறதோ, அதுமட்டும்தான் இப்போது வெளியே வருகிறது. இதனால்தான் ராஜபக்ஷே தன்னுடைய கடைசி 'கவுன்ட் டவுனை' ஆரம்பித்திருக்கிறார்.

உண்மை பேசினால் உதை:

போர் நடக்கும் இடங்களில் செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. அதைக்கூட இப்போது சிங்கள அரசு மதிப்பதற்குத் தயாராக இல்லை. வன்னியில் இருந்து காயம்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலோடு, அங்கு தங்கியிருந்த செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் இரண்டு பேர் வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். வன்னியில் சுமார் இருபது பேர் அளவுக்குத்தான் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் இருந்தார்கள். தற்போது வெளியேறியுள்ள அந்த இரண்டு பேரைத் தவிர, மற்ற எல்லோரும் உள்ளூர்க்காரர்கள். ராணுவத்தின் தாக்குதல்களைப் பற்றி உள்ளூர்க்காரர்கள் எவ்வளவுதான் சொன்னாலும், அதை சர்வதேச சமூகம் நம்பாது. வெளிநாட்டவர்கள் சொன்னால்தான் உண்மையென்று நினைப்பார்கள். மருத்துவமனைகளில் குண்டு வீசப்படுவதை செஞ்சிலுவை சங்கத்தினர்தான் வெளியுலகுக்கு எடுத்துச் சொன்னார்கள். அதுவும், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது என்ற தகவல், அவர்கள் மூலம்தான் வெளி உலகுக்கே தெரிந்தது. இதே செய்தியை ஏற்கெனவே விடுதலைப் புலிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை சர்வதேச நாடுகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. செஞ்சிலுவை சங்கம் இப்படி உண்மைகளை எடுத்துச் சொன் னதும் சிங்களர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

ராஜபக்ஷேவின் தூண்டுதலால் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகம் கொழும்பில் தாக்கி நொறுக்கப்பட்டது. இப்போது செஞ்சிலுவை சங்கத்தினரை இலங்கையை விட்டே விரட்டியடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கள அரசின் அச்சுறுத்தலால், இப்போது வன்னியைவிட்டு வெளியேறுவதென்று செஞ்சிலுவைச் சங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் வெளியேறக்கூடாது என்று தமிழர்களெல்லாம் கெஞ்சிக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

நியூஸ் பிளாக் அவுட்:

இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை சிங்களப் பத்திரிகையாளர்கள் சிலர் வெளியுலகுக்குத் தெரிவித்து வந்தார்கள். அதில் ஒருவர்தான் லசந்த. அவருடைய படுகொலைக்குப் பிறகு, அங்கிருந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேறி, அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.

நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த 'லங்கா டிசன்ட்' என்ற இணையதளம் மூடப்பட்டு விட்டது. இந்நிலையில், சிங்கள அரசின் இன அழித்தொழிப்பு பற்றிய செய்திகள், சர்வதேச செய்தி நிறுவனங்கள் மூலமாகத்தான் வெளியில் கசிந்து கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக பி.பி.சி.,

சி.என்.என் போன்ற நிறுவனங்கள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்தன. பி.பி.சி. 'தமிழோ சை'யின் செய்திகள் இலங்கை வானொலி மூலம் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்ததால், இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள தமிழர்கள் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது. இதைத் தடுக்கவேண்டும் என்று முடிவு செய்த சிங்கள அரசு, இப்போது பி.பி.சி மறு ஒலிபரப்பை ரத்து செய்து விட்டது. அது மட்டுமல்லாமல் பி.பி.சி.,

சி.என்.என். போன்ற செய்தி நிறுவனங்களுக்கும் தடை விதித்து விட்டது. சிங்கள ராணுவம் கொடுக்கின்ற செய்திகளைத் தவிர, இப்போது தனிப்பட்ட முறையில் யாரும் இலங்கையில் செய்தி சேகரிக்க முடியாது என்ற நிலை! அப்படி யாராவது முயற்சித்தால், அவர்களை காலி செய்வதற்கும் சிங்கள அரசு ஏற்பாடு செய்துவிட்டது. இந்தியாவிலிருந்து இலங்கை அரசாங்கத்தால் அழைத்துச் செல்லப்படுகிற பத்திரிகையாளர்கள்கூட, அங்கே சிங்கள ராணுவம் என்ன செய்தியைக் கொடுக்கிறதோ, அதை மட்டுமே வெளியிட வேண்டிய நிலை. இப்படி இப்போதே முழுமையான இருட்டடிப்பு. முல்லைத்தீவில் நடக்கவிருக்கும் மாபெரும் இனப்படுகொலை இனிமேல் வெளியுலகுக்கு தெரியவருவது என்பது சந்தேகமே.

ராஜபக்ஷேவின் நாஜி டெக்னிக்:

'ஹிட்லரின் மறு உருவம்' என்று ராஜபக்ஷேவை தமிழர்கள் வர்ணிப்பதுண்டு. அது பொய்யில்லை. அவர் தன்னுடைய டெக்னிக்குகளை ஹிட்லரிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறார். முல்லைத்தீவில் தற்போது சிக்கிக்கொண்டிருக்கும் தமிழர்களில் குறைந் தது ஐம்பதாயிரம் பேரையாவது கொல்வது... மிச்சமிருப்பவர்களை சிறைப்பிடித்து, நிரந்தரமாக வதை முகாம்களில் அடைத்து வைப்பது என்பதுதான் அவருடைய திட்டம். இதற்காக ஐந்து வதை முகாம்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வவுனியா மாவட்டத்தில் நான்கு வதை முகாம்களையும், மன்னார் மாவட்டத்தில் ஒரு முகாமையும் அமைப்பதற்கு சிங்கள அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக வவுனியாவில் ஆயிரம் ஏக்கர் நிலமும், மன்னாரில் நூறு ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வதை முகாம்களில் முப்பத்தொன்பதாயிரம் தற்காலிக வீடுகள், ஏழாயிரத்து எண்ணூறு கழிவறைகள் மற்றும் தபால் அலுவலகம், வங்கி முதலானவற்றைக் கட்டப்போவதாக சிங்கள அரசு கூறியிருக்கிறது. நாற்பது பள்ளிகளை உருவாக்கப்போவதாகவும் அது சொல்லியிருக்கிறது. இந்தப் பள்ளிகளை கட்டுவதற்காக மட்டும் பதினான்கு மில்லியன் டாலர் நிதியுதவி தேவையென்று சிங்கள அரசு தொண்டு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

வதை முகாம் என்பது என்ன?

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரால் உருவாக்கப்பட்டதுதான் 'வதை முகாம்' என்ற திறந்தவெளிச் சிறைச்சாலை. யூதர்களையும், ரஷ்யர் களையும் சிறைப்பிடித்து அந்த முகாம்களில் ஹிட்லர் அடைத்து வைத்தான். முகாம்களைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டது. அங்கிருந்து எவரும் வெளி யேறவோ, தப்பித்துச் செல்லவோ முடியாது. அங்கு அவர்களிடம் கட்டாய வேலை வாங்கப்பட்டது. போதுமான உணவுகூட தரப்படவில்லை. பல்லாயிரக் கணக்கானவர்கள் அந்த முகாம்களிலேயே செத்து மடிந்தார்கள். அப்படிச் சாகிறவர்களை குப்பை கூளங்களைப்போல அள்ளிச்சென்று மொத்தமாகக் குழியில் போட்டுப் புதைத்தார்கள். அங்கிருப்பவர்களில் யாரேனும் சிறிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்களைப் பிடித்து விஷவாயுக் கிடங்குகளில் போட்டுக் கொன்றார்கள்.

உலக யுத்தம் முடிந்த பிறகுதான் ஹிட்லரின் இந்த கொடூரச் செயல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. உலகமெங்கும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. அந்தப் படுபாதகமான டெக்னிக்கைத்தான் இப்போது ராஜபக்ஷே பின்பற்ற விரும்புகிறார்.

தமிழர்களுக்கான வதை முகாம்கள்:

ராஜபக்ஷே அமைக்கப்போகும் வதை முகாம்கள் 'மறுவாழ்வுக் கிராமங்கள்' என்ற பெயரில் அழைக்கப் படுமாம். 'அப்படிச் சொன்னால்தான் உலக நாடுகளி டமிருந்து உதவி பெறலாம்' என்பது அவருடைய நரித் திட்டம். இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'இந்த முகாம்களை நிர்வகிக்கப்போவது யார்?' என தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், இலங்கை அரசிடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்கே, ''அங்கே இருக்கப்போகிறவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்களால் எங்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நீங்கள் உணரவில்லையா? சிங்கள மக்களின் உயிர்களோடு நாங்கள் ஒருபோதும் விளையாட முடியாது. எனவே, இந்த முகாம்களை ராணுவம்தான் நிர்வகிக்கும்...'' என்று கூறியிருக்கிறார். இந்த முகாம்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் அதற்காக நிதியுதவி வேண்டுமென்றும் சிங்கள அரசு கேட்டிருக்கிறது.

ஏற்கெனவே, இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள். இனி அவர்கள் திறந்தவெளிச் சிறைகளான வதை முகாம்களில் நிரந்தர அடிமைகளாக வைக்கப்படப் போகிறார்கள். நமக்காக வாதாட யார் இருக்கிறார்கள் என்று பரிதவிக்கிறது தமிழினம்.

தற்போது பெயரளவுக்கு தமிழர் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டணியையும் தடை செய்து, அந்த எம்.பி-க்களையும் பதவியிழக்கச் செய்வதற்கு இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. 'தாய் தமிழகம் எப்படியாவது தங்களைக் காப் பாற்றிவிடும்' என்பதுதான் ஈழத்தமிழர்களுக்கு இப்போ திருக்கும் ஒரே நம்பிக்கை!

நன்றி:ஜீனியர் விகடன்

மரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் சுவிஸ் தமிழர்கள் போர்க்குரல்

இன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர்.
ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர்.

தொடர்ந்து தாயகத்தினதும் தமிழீழ விடுதலையினதும் அளப்பரிய பற்றினால் நாடு கடந்து வந்து மனித உரிமை மன்றத்துக்கு முன்னால் தீ மூட்டி உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனின் மரணம் உலகத் தமிழ் மக்களை ஆற்றாத துயரத்துக்குள் தள்ளியுள்ள இவ்வேளையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற நேரம் முதல் ஐநாவை நோக்கி வருகை தந்த வண்ணமிருந்தனர்.

கதறியழும் தாய்மார் கண்ணீர் விட்டு அழும் மாணவர்கள் உணர்வுகளை அடக்கமுடியாது தவிக்கும் தமிழர்கள் என்று எல்லோரும் சோகம் சூழ எமது மக்கள் மீதான சிறீலங்கா அரசின் கொலை வெறி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென முழக்கம் இட்டவாறு ஐ.நா முன்றலை ஊடறுத்துச் செல்லும் பிரதான சாலையை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.


http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG773b4P9EC4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e

Friday, February 13, 2009

மீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை

சில தமிழ் துரோக பன்னிகள், மகிந்தவின் 100 கோடி யில் கண் வைத்து கொண்டு, ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு இங்கு வட்டமடிக்கின்றன.

இவனுங்களை செருப்பால அடித்தாலும் புத்தி வராது. தமிழனை அழிப்பதை பற்றி ஒரு வார்த்தை பேசதெரியாத இந்த பன்னிகளுக்கு, விடுதலை புலிகளை வக்கனை பேச தெரியுதுன்னா, அதுல 100 கோடி பங்கு இருப்பது நன்றாகவே தெரிகிறது.

புலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. என ஈழத்தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் சென்னை மெமோரியல் அரங்கில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், நடிகர் சத்யராஜ் , அன்பாலயா பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் தொடர்ந்து கூறியதாவது:-, அரசியல் உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் படிப்படியாக வளர்ந்து ஒருவர் புகழ் அடைவார். ஆனால் முத்துக்குமார் மரணத்துக்கு பின் புகழ் அடைந்துள்ளார். அவர் தனது கடிதம் மூலம் மிகப்பெரிய அறிவாளி என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வு பூர்வமாக ஒன்றுபட வேண்டும். உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. இங்கு ஒலிபெருக்கி, மைக் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இது ஜனநாயகம் ஆகாது. தமிழ் சினிமா படங்களில் நல்ல கேரக்டருக்கு முத்துக்குமார் பெயர் சூட்டி கெளரவிக்க வேண்டும்.

கூட்டத்தில் பேசிய பாரதிராஜா, ஈழத்தமிழர்களை பாதுகாக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இராமேஸ்வரத்தில் ஊர்வலம் நடத்தினோம். சென்னையிலும் நடந்தது. நாங்கள் படைப்பாளிகள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். இதில் சுயநலம் கிடையாது. அரசியலும் இல்லை. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப்புலிகளுக்கு சமம். இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா படங்களிலும் நல்ல தொரு கேரக்டருக்கு முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும். படங்களின் டைட்டிலிலும் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகத்தை இடம் பெறச் வேண்டும் என்றார்.

டைரக்டர் சீமான் பேசும்போது, திலீபன் போல் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்ய நான் திட்டமிட்டேன். டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் தடுத்து விட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசுதான் போர் நடத்துகிறது. முத்துக்குமாரை சந்தித்தது இல்லை. இறந்த பிறகுதான் அவரது தியாகமும், உணர்வும் தெரிய வந்தது என்றார்.

நன்றி http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG7X3b4P9E84d2g2h3cc2DpY2d436QV2b02ZLu3e

Thursday, February 12, 2009

youtube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத்து சொல்வோம்

நண்பர்களே, நம்முடைய அடுத்த கடமை, இலங்கை அரசின் கொடுமைகளை/தமிழின அழிப்பை உலகுக்கு எடுத்து சொல்வது. சுதந்திரா புரத்தில நடந்ததை youtube போட்டுள்ளேன், ஒரு முறை பாருங்கள். அங்கு உங்கள் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் தெரிவியுங்கள்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு போட்டோவோ அல்லது வீடியோவையோ youtube-ல் போடுங்கள். செய்தியை உலகுக்கு விரைவில் பரப்புவோம்.

போட்டாவாக இருந்தால் windows movie maker-ல் வீடியோவாக மாற்றி போடுங்கள்.


மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.,

கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்


http://www.yarl.com/forum3/index.php?showtopic=52385

Wednesday, February 11, 2009

தமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்

சமகால அரசியல் இயக்குநர் சீமானின் கார் எரிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் எரிப்பு என, ஈழப் பிரச்னையில் பெரிதாகக் குரல் கொடுப்பவர்கள் மீது பழிவாங்கல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. தா.பாண்டியனின் கார் எரிப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பதற்கான முகாந்திரத் தைக்கூட போலீஸால் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை!
இந்நிலையில், 'சென்னையில் கருணா ஆட்கள் முகாமிட்டிருக்கிறார்கள்' என்கிற செய்தி ஈழ ஆர்வலர்களைப் பரபரக்க வைத்திருக்கிறது.

ஈழத்தமிழர் போராட்டங்களில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் சிலர் நம்மிடம், ''சிங்கள விமானப்படை வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படுவதாகச் செய்தி கிளம்பியபோதே...

அவர்களுடன் கருணாவின் ஆட்களும் சென் னைக்கு வந்திருக்கிறார்கள் என்கிற செய்தியும் கசிந்தது. அதனால்தான் சிங்களவிமானப்படை வீரர்களைத் துரத்தியடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தமிழக அரசும் மத்திய அரசை நிர்ப்பந்தித்து அவர்களை தாம்பரத்தில் இருந்து அனுப்பிவிட்டதாகச் சொன்னது. ஆனால், இப்போது அந்த சிங்கள வீரர்களுக்கு தாம்பரத்தில் தான் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, கருணாவின் ஆட்கள் இங்கே தங்கி இருப்பதும் அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது.

இதெல்லாம் தமிழக அரசுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? ஈழப் பிரச்னைக்காகத் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வம்படியாகக் கலந்த சிலர் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்திவிட முடியாதா என்ற நோக்கோடு வன்முறையைத் தூண்டப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் எரித்ததற்குப் பின்னணியிலும் கருணா ஆட்களின் கைங்கர்யம் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள இலங்கையின் நுண்ணறிவுப் புலனாய்வுப் படையினர்தான் கருணாவின் ஆட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. கருணா ஆட்களின் மூலமாகத் தமிழகத் தலைவர்களுக்கு குறி வைக்கும் சதி திட்டங்களும் நடக்கிறது. தமிழகத்தில் ஈழ விடிவுக்காக உண்டாகி இருக்கும் எழுச்சியை எப்படியாவது தகர்த்துவிடவேண்டும் என்பதுதான் இலங்கையின் திட்டம். அதற்கான அபாயங்களை கருணாவின் ஆட்கள் நிறைவேற்றுவதற்குள் தமிழக அரசு உஷாராக வேண்டும்!'' என்றார்கள்.

இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவரான வைகோவிடம் பேசினோம்.

''கருணாவின் ஆட்கள் பற்றி என் காதுகளுக்கும் செய்தி வந்தது. ஆனால், இதைச் சொன்னால் 'இதை வைத்துக்கூட வைகோ பரபரப்பைக் கிளப்பி தனிப்பட்ட ரீதியில் விளம்பரத்தைத் தேடப் பார்க் கிறார்!' என கருணாநிதி கூட்டம் அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிடக் கூடும் என்றெண்ணி அமைதியாக இருந்தேன். சதித் திட்டங்களைத் தீட்டுவதும் கொடூரங்களை அரங்கேற்றுவதும் சிங்கள வெறி பிடித்த ராஜபக்ஷேவுக்குகைவந்த கலை.

அவருடைய திட்டப்படிதான்சென்னைக்கு துரோகி கருணாவின் ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான அசைண் மென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஒன்று, ஈழ விவகாரத்தில் உறுதியாகக் குரல் கொடுக்கும் தலைவர்களைக் காலி செய்து பீதியைக் கிளப்புவது....

அடுத்தது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசும் தலைவர்களில் யாரையாவது ஒருவரைக் காலி செய்துவிட்டு பழியை புலிகளின் மீதே திருப்பி விடுவது... இலங்கையில் நடக்கும் போரைக் கண்டித்து சர்வதேச அளவில் பல நாடுகளும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

போர்நிறுத்தம் கோரி இந்தியா ஒரு வார்த்தை சொன்னாலே, அடுத்த கணமே மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் போர்நிறுத்தம் செய்யச் சொல்லி கண்டனங்களை எழுப்பத் தொடங்கிவிடும். தமிழர்களின் கோரிக்கைக்கு இந்தியா செவி சாய்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆனாலும், 'தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது' என்றும், 'தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு திரும்பவேண்டும்' என்றும் ஒப்புக்குச்சப்பாக நம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இலங்கையில் உள்ள தமிழர்களைப் பூண்டோடு அழித்துவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ஷே அரசால், தமிழகத்தின் எழுச்சியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் தமிழகத்தில் சதி வேலைகளைக் கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்!'' எனச் சீறிய வைகோ,

''இன்றைக்கு ராஜபக்ஷேயின் வலையில் சிக்கி துரோகியாக மாறியிருக்கும் கருணா, 'வைகோவும் ராமதாஸ§ம் என்னிடமே பணம் பெற்றுச் சென்றார்கள்' என்றும், 'வைகோவும் நெடுமாறனும் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தினார்கள்' என்றும் சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். புலிகள் இயக்கத்தில் அனைத்து மட்ட தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

ஆனால், கருணா கறுப்பா சிவப்பா என்றுகூட எனக்குத் தெரியாது. ஈழ விவகாரத்தில் முன்னின்று செயல்படும் தலைவர்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பிவிட்டு, தமிழகத்தின் எழுச்சியை அடக்க நினைத்த கருணா, அதில் தோல்வியடைந்து விட்டார். அதனால் இப்போது தன்னுடைய ஆட்கள் மூலமாக மிகப் பெரிய சதித் திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை ஒழித்துக் கட்டவேண்டும் என்பது காங்கிரஸின் திட்டமாக இருந்தாலும், அதன் சூத்ரதாரியாக இருப்பவர் யார் என்று தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும். வேலூர் சிறைக்குப் போய் நாடகம் நடத்தியவர்கள் கருணாவின் திட்டங்களுக்குத் துணை போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? கருணாவின் ஆட்கள் சென்னையில் சதித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் பின்னணியில் மத்திய அரசோ, ரா-வோ இருப்பதாக நான் அபாண்டமாகச் சொல்ல விரும்பவில்லை.

ஆனால், தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத ஆட்கள், அதிகாரத் தரப்புக்குத் தெரியாமல் இங்கே வந்து பதுங்கி இருக்க வாய்ப்பில்லை. ஈழ விவகாரத்தில் வேகம் காட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இதர தலைவர்களுக்கும் கருணா ஆட்களைப் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. எனவே, அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் தமிழக அரசும் போலீஸ§ம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!'' என உணர்ச்சிவசப்பட்டார் வைகோ.

இது குறித்து தமிழக போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ''தா.பாண்டியனின் கார் எரிப்பு பின்னணியில் சம்பந்தப்பட்டவர்கள்விரை விலேயே பிடிபடுவார்கள். இதில் இலங்கை யைச் சேர்ந்தவர்களுக்கு சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. கருணாவின் ஆட்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கள் பரப்புபவர்களின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டுமே தவிர, அதில் எள்ளளவுக்கும் உண்மை இல்லை. அதனால், தமிழகத் தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்!'' என்றார்கள்.

- இரா.சரவணன்

http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2302:2009-02-11-12-46-00&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

பொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை: விடுதலைப் புலிகள் அதற்கு மறுப்பு

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது. அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது.


குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது.


அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர்.


அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.


ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர்.


போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும்.


ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம்.


இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என தமீழீழ விடுதலைப் புலிகள் மேலும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நன்றி பதிவு
http://www.pathivu.com/news/272/54/.aspx