Wednesday, February 18, 2009

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள் கண்டனம்: 2 முறை சபை ஒத்திவைப்பு

திமுக மவுனம் அடே திமுக துரோகிங்களா(மன்னிக்க வேண்டும், இது தொண்டர்களை குறிப்பிடுவது அல்ல), நீங்கள் ஒரு நாளும் நல்லாவே இருக்க மாட்டீங்கடா. உண்மை தமிழன் சீமானை பிடிப்பதற்கு நீங்கள் காட்டும் வேகமென்ன, ஆனால் தமிழின கொலையை தடுப்பதில் உங்களின் வேகத்தை ஆமை கூட கை கொட்டி சிரிக்கிறது.

ஈழத்தில் அப்பாவி தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மக்கள் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்கள் அவையில் இலங்கை இனச்சிக்கல் குறித்து இன்று புதன்கிழமை அறிக்கை அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கையில் தமிழ் சமுதாயத்திற்கு விடுதலைப் புலிகள் பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் சமுதாயத்திற்கு அவர்கள் நன்மை செய்ய விரும்பினால் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்ட போது போர் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர் என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ம.க., ம.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று முழக்கம் எழுப்பினர்.

விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்தக் கருத்துக்களை பிரணாப் முகர்ஜி திரும்பப் பெற வேண்டும். இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மக்கள் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் பா.ம.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களின் நிலைப்பாட்டை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இலங்கை இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இரு கட்சிகளின் உறுப்பினர்களும் கறுப்புச் சட்டை அணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இரு கட்சிகளின் போராட்டத்தால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து,
பிற்பகல் 2:00 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் சரன்ஜித்சிங் அத்வல்
அறிவித்தார்.

பிற்பகல் 2:00 மணிக்கு அவை கூடியபோதும் இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க, ம.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து இரு கட்சிகளின் உறுப்பினர்களும் உரையாற்ற அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அனுமதி அளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பா.ம.க. உறுப்பினர் செந்தில்,

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்து வருவது அக்கிரமமானது என்று குற்றம் சாட்டினார்.

அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முறையானதல்ல என்றும் அவர் கூறினார்.

அதன் பின் பேசிய பொன்னுசாமி (பா.ம.க.), இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களைச் செயற்படுத்தப் போவதாக இந்தியா கூறுகிறது. முதலில் போரை நிறுத்துங்கள். அதன் பிறகுதான் மறுவாழ்வுத் திட்டங்களைப் பற்றி பேச முடியும் என்றார்.

ம.தி.மு.க உறுப்பினர் கிருஸ்ணன் உரையாற்றிய போது, இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்ய இந்தியாதான் ஆயுதங்களை வழங்குகிறது. சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழர்களைக் கொல்ல ஆயுதங்களை வழங்குவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவாதத்திற்கு விடையளித்துப் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, தாம் ஏற்கெனவே கூறிய கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்திக்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அங்கு நடைபெற்று வரும் போரை நிறுத்தும்படி அந்நாட்டு அரசைக் கட்டாயப்படுத்த இந்தியாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே இலங்கையில் போரை நிறுத்தும்படி வலியுறுத்த முடியாது என்று கூறினார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அரசு உறுதி பூண்டிருக்கிறது என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். பிரணாப் முகர்ஜியின் இந்தக் கருத்துகள் மனநிறைவளிக்கவில்லை என்று கூறி பா.ம.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

http://puthinam.com/full.php?2b1VoKe0dIcYe0ecAA4y3b4M6DB4d2f1e3cc2AmS3d434OO3a030Mt3e

1 Comment:

LKritina said...

Sonia/Rahul/Priyanka Led Indian govt is actively driving the rascist war in sinhalese srilanka; this war is unjust, against humanity; killing 100's of Tamils daily; This Indian govt Foot Soldiers Manmohan singh/Pranab/Chidambaram should all be hanged in public for war crimes!!! World Tamils will never forget & forgive the congress-Sonia/Rahul/Priyanka for the war crimes on innocent Tamils!!!