Sunday, November 29, 2009

தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் – சரத்

தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் – சரத்

எழுதியவர்வன்னியன் ON NOVEMBER 29, 2009
பிரிவு: செய்திகள்

sarath_fonseka_sivilஈழப்போர் 4 ஆம் கட்டத்தில் தமிழர்களைக் கொல்லும்படி தமக்கு பணிப்புரை விடுத்தது கோத்தபாயதான் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி என அறிவித்தல் வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.

இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ்ப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

வன்னிப் போரின்போது நடந்த யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமெரிக்க அரசு அழைத்தபோது தப்பினால் போதும் என ஓடிவந்த சரத் இப்போது ஒரு பத்திரிகையாளரிடம் கூறுபவற்றை அங்கு அமெரிக்காவிடம் கூறியிருக்கலாமே. இதை சிறீலங்கா பத்திரிகையில் கூறி என்ன பயன். எல்லாப் பழியையும் கோத்தபாயமேல் போட்டு சரத் தான் தப்பிக்கப் பார்க்கிறார். சிங்கள இனத்தவரிடையே தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதற்காக சில கசப்பான உண்மைகள் சில விரைவில் வெளியாகும்.

என்ன தான் எதிரியாக இருந்தாலும் சரத் கோத்தபாயவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கவில்லை, ஆனால் சில தமிழர்களோ என்ன செய்தாவது அரசுடன் ஒடியிருக்கவும், மகிந்தவைக் கட்டி அணைக்கவும் காத்திருக்கின்றனர். எப்போது திருந்தப்போகிறார்கள் இவர்கள்

நன்றி மீனகம் http://www.meenagam.org/?p=17719

Saturday, November 28, 2009

மீன் பிடிதொழில் சட்டத்தை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி!

 
?ui=2&view=att&th=125255b49247db41&attid=0.1&disp=attd&realattid=ii_125255b49247db41&zw





தமிழனை அழிப்பதற்கான அனைத்து வேலைகளிலும் கருணாநிதியும், சோனியாவும் இறங்கி விட்டார்கள். இது குறித்து கருணாநிதி ஒரு வார்த்தை கூட பேசப்போவதில்லை. எவன் செத்தாலென்ன, எனக்கு தேவை சோனியா, காங்கிரஸ் என் குடும்பம், செத்து மடியுங்கடா மடதமிழன்களா என்று தமிழனை அழிக்க நினைக்கிறார்.
மத்திய அரசின் மீன் பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூர் மீனவர்கள் கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.  

கடலில் 12 நாடிகல் மைகளுக்குமேல் சென்று மீன் பிடிக்கக்கூடாது, மீனவர்கள் அனைவரும் மத்தியஅரசிடம் பதிவு செய்துகொண்டு அனுமதி பெற்று மீன்பிடிக்கவேண்டும், விதிமுறைகளை மீறினால் படகுபறிமுதல், 9லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவரவுள்ளது.  

மத்திய அரசின் இந்த சட்டமுன்வரைவுக்கு நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் திருந்செந்தூரில் உள்ளிட மீன்பிடிகிராமமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பலகட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

இன்று மீனவகிராமமான அமலிநகரில் திரண்ட மீனவ இளைஞர்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அக்கிராமத்தில் இருந்த அரசியல் கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டன. அனைத்துக்கட்சிக்கொடி கம்பங்களிலும் கறுப்புக்கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரித்தனர்.

நன்றி : http://www.thenaali.com/thenaali.aspx?N=4190


லாவண்யா
மும்பை


நாம் தமிழர் இயக்கதின வளர்ச்சி கண்டு தொடை நடுங்கும் கருணாநிதி, சோனியா

நாம் தமிழர் இயக்கத்திற்கு கலைஞர் மற்றும் இந்திய அரசால் கொடுக்கப்படும் அத்தனை கஷ்டங்களும் நமது வளர்ச்சிக்கே. அதன் வளர்ச்சி கண்டு பொறுக்காத இவர்கள் அதனால்தான் இவர்கள் மேல் வழக்கு போடுதல், சிறுபிள்ளை தனமாக கனடா அரசுக்கு சொல்லி சிண்டு முடிய பார்ப்பது என அனைத்து வேலைகளிலும் இறங்கியுள்ளது.

சீமானின் கரத்தினை வலுப்படுத்துவோம். இந்த தமிழின துரோகிகளின் முகத்திரையினை கிழிப்போம். காங்கிரசை குளிர்விப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் இந்த 80 வயது முதியவர், பதவி ஆசை பிடித்தவர், குடும்ப அரசியலை வளர்த்து திமுகவிற்கு என்றும் அழியாத கெட்ட பேரை ஏற்படுத்த நினைக்கும் கலைஞருக்கு சரியான பாடம் புகட்டுவோம்.

சோனியாவுக்கு பிடிக்குமானால் நடு ராத்திரியில் குளத்திலே இறங்கி கும்மாளம் போடுவார் போல.

பிரபாகரன் மற்றும் தளபதிகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பிரபாகரன் மற்றும் முக்கியத் தளபதிகளில் பாதுகாப்பாக வேறு ஒரு தளத்தில இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.piraba

சிங்கள ராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் படுகொலையில் தலைவர் பிரபாகரனும் தளபதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் மற்றும் இலங்கை அரசு உலகை நம்ப வைத்தாலும், தமிழ் மக்களின் பெரும்பான்மையானோர் பிரபாகரனின் இருப்பு குறித்த நம்பிக்கை மாறாத மனநிலையில்தான் உள்ளனர். காரணம் பிரபாகரன் என்பவர் ஒரு இனத்தின் அடையாளமாக, குறியீடாகத் திகழ்வதுதான்.

மேலும் கடந்த மே 16-ம் தேதி வரை தலைவர் பிரபாகரன் களத்தில் நின்று போராடினாலும், பின்னர் இயக்கம் மற்றும் தமிழீழ போராட்டத்தின் நன்மை கருதி போர்க்களத்திலிருந்து வெளியேறினார் என போராளிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர். கரும்புலிகள் அணியுடன் பிரபாகரன் வெளியேறியது உண்மையே என இப்போதும் செய்திகள் வருகின்றன.

மேலும் தமிழர்கள் யாரும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில் பிரபாகரன் தனது தளபதிகளுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக தமிழீழ ஆதரவு தளங்களில் கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன.

அதேநேரம், இந்த மாவீரர் தினத்தில் அவர் வெளிப்படுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது என்றும், அவர் வெளிப்படுவதற்கான காலம், புறச் சூழல் இன்னும் அமையவில்லை என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம்-

இலங்கை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில துரோகப் புலிகளை வைத்து ஒரு பொய்யான மாவீரர் உரையைத் தயாரித்து, வரும் 27-ம் நாளன்று வாசித்துக் காட்டி, பிரபாகரன் இல்லை என்ற தங்கள் புனைவை நிலை நிறுத்த முயற்சிப்பதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளி வருகின்றன.

எனவே மாவீரர் உரை / அறிக்கை என்ற பெயரில் வெளியாகும் எதனையும் நம்ப வேண்டாம் என்றும் புலிகளின் தலைமைப் பீடமான பிரபாகரன் மூலம் வருவது ஒன்று மட்டுமே உண்மையான அறிக்கை என்றும் அதிர்வு உள்ளிட்ட தமிழர் தளங்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன

Friday, November 27, 2009

சிங்கள அரசினை அச்சுறுத்திய செந்தமிழன் சீமான் தாயகம் திரும்புகின்றார்.

தாயக விடுதலைக்காகப் போராடிய தமிழர்களை நினைவு கூறும் வண்ணம் உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் நினைவு கூறும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் கனடா சென்றிருந்தார்.
 
மாவீரர் தினத்திற்கு முந்தைய தினமான 25-11-2009 அன்று கனடாவின் இளையோர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு அங்கு குழுமியிருந்த தமிழர்களிடையே எழுச்சி உரையாற்றினார்.
 
அது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.இன்று நடைபெறும் மாவீரர் உரை மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றது.
 
இந்நிலையில் அவரது மாவீரர் தின உரையை விரும்பாத சிங்கள இனவாதம் ராஜபக்‌ஷே சகோதரர்கள் மூலம் பல்வேறு வகையில் தனது அழுத்தங்களை கனடா அரசாங்கம் மீது பிரயோகித்தது.
 
அதற்குப் பணிந்த கனடா அரசாங்கம் செந்தமிழன் சீமானை கனடா நேரப்படி நேற்றுக் காலை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்றது.
 
நீண்ட நேரம் நடைபெற்ற விசாரணையின் முடிவில் செந்தமிழன் சீமானை திரும்பவும் தனது தாய்த்திரு நாட்டிற்குச் செல்ல வேண்டியது.அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு செந்தமிழன் சீமான் கனடாவில் இருந்து கிளம்பி விட்டார்.
 
இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.அவரை வரவேற்க நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் விமான நிலையம் வந்து சேரும்படிக்கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பிரபாகரன் தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.

நினைத்தது மாதிரியே இங்கெ வந்து புலம்ப ஆரம்பிச்சிடான்யா, எங்கே பிரபாகரன் மாவீரர் தினத்திற்கு வரவில்லை என்று இந்த தமிழின துரோகிகள்.

டேய் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா. இன்னும் புலிகளையும் தலைவர் பத்தியும் பேசாவிடில் உங்களின் சன்மானம் இலங்கை அரசிடமிருந்து குறைக்கபடுகிறதா.

பிரபாகரன் இன்னும் 3 வருடத்துக்கு எங்கிருந்தாலும் வரமால் இருப்பதுதான் நல்லது. உங்களின் விருப்பபடி பிரபாகரன் இல்லை என்று வைத்து கொள்வோம். நீங்களும் இந்த உலகமும் இப்ப என்னடா இந்த தமிழ் சமூகத்துக்கு செய்ய போறீங்க. அதை பார்க்கத்தான் எங்கள் தலைவர் இன்னும் காத்து கொண்டிருக்கிறார்.

அவர் என்றும், எப்பொழுது தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.

Tuesday, November 24, 2009

ஈழத்துப் புறநானூற்றுக் கதை


நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம்.

அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது.

தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய்.

அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.