Saturday, November 28, 2009

மீன் பிடிதொழில் சட்டத்தை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி!

 
?ui=2&view=att&th=125255b49247db41&attid=0.1&disp=attd&realattid=ii_125255b49247db41&zw





தமிழனை அழிப்பதற்கான அனைத்து வேலைகளிலும் கருணாநிதியும், சோனியாவும் இறங்கி விட்டார்கள். இது குறித்து கருணாநிதி ஒரு வார்த்தை கூட பேசப்போவதில்லை. எவன் செத்தாலென்ன, எனக்கு தேவை சோனியா, காங்கிரஸ் என் குடும்பம், செத்து மடியுங்கடா மடதமிழன்களா என்று தமிழனை அழிக்க நினைக்கிறார்.
மத்திய அரசின் மீன் பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூர் மீனவர்கள் கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.  

கடலில் 12 நாடிகல் மைகளுக்குமேல் சென்று மீன் பிடிக்கக்கூடாது, மீனவர்கள் அனைவரும் மத்தியஅரசிடம் பதிவு செய்துகொண்டு அனுமதி பெற்று மீன்பிடிக்கவேண்டும், விதிமுறைகளை மீறினால் படகுபறிமுதல், 9லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவரவுள்ளது.  

மத்திய அரசின் இந்த சட்டமுன்வரைவுக்கு நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் திருந்செந்தூரில் உள்ளிட மீன்பிடிகிராமமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பலகட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

இன்று மீனவகிராமமான அமலிநகரில் திரண்ட மீனவ இளைஞர்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அக்கிராமத்தில் இருந்த அரசியல் கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டன. அனைத்துக்கட்சிக்கொடி கம்பங்களிலும் கறுப்புக்கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரித்தனர்.

நன்றி : http://www.thenaali.com/thenaali.aspx?N=4190


லாவண்யா
மும்பை


0 Comments: