Saturday, November 28, 2009

பிரபாகரன் மற்றும் தளபதிகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பிரபாகரன் மற்றும் முக்கியத் தளபதிகளில் பாதுகாப்பாக வேறு ஒரு தளத்தில இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.piraba

சிங்கள ராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் படுகொலையில் தலைவர் பிரபாகரனும் தளபதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் மற்றும் இலங்கை அரசு உலகை நம்ப வைத்தாலும், தமிழ் மக்களின் பெரும்பான்மையானோர் பிரபாகரனின் இருப்பு குறித்த நம்பிக்கை மாறாத மனநிலையில்தான் உள்ளனர். காரணம் பிரபாகரன் என்பவர் ஒரு இனத்தின் அடையாளமாக, குறியீடாகத் திகழ்வதுதான்.

மேலும் கடந்த மே 16-ம் தேதி வரை தலைவர் பிரபாகரன் களத்தில் நின்று போராடினாலும், பின்னர் இயக்கம் மற்றும் தமிழீழ போராட்டத்தின் நன்மை கருதி போர்க்களத்திலிருந்து வெளியேறினார் என போராளிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர். கரும்புலிகள் அணியுடன் பிரபாகரன் வெளியேறியது உண்மையே என இப்போதும் செய்திகள் வருகின்றன.

மேலும் தமிழர்கள் யாரும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில் பிரபாகரன் தனது தளபதிகளுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக தமிழீழ ஆதரவு தளங்களில் கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன.

அதேநேரம், இந்த மாவீரர் தினத்தில் அவர் வெளிப்படுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது என்றும், அவர் வெளிப்படுவதற்கான காலம், புறச் சூழல் இன்னும் அமையவில்லை என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம்-

இலங்கை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில துரோகப் புலிகளை வைத்து ஒரு பொய்யான மாவீரர் உரையைத் தயாரித்து, வரும் 27-ம் நாளன்று வாசித்துக் காட்டி, பிரபாகரன் இல்லை என்ற தங்கள் புனைவை நிலை நிறுத்த முயற்சிப்பதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளி வருகின்றன.

எனவே மாவீரர் உரை / அறிக்கை என்ற பெயரில் வெளியாகும் எதனையும் நம்ப வேண்டாம் என்றும் புலிகளின் தலைமைப் பீடமான பிரபாகரன் மூலம் வருவது ஒன்று மட்டுமே உண்மையான அறிக்கை என்றும் அதிர்வு உள்ளிட்ட தமிழர் தளங்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன

1 Comment:

indian said...

i believe this statement. NETHAJI SUBASH CHANDRABOSE for INDIA. PRABAKARAN for TAMIL EEZHAM.
this is true. MALARUM TAMIL EEZHAM SOON