Friday, November 27, 2009

சிங்கள அரசினை அச்சுறுத்திய செந்தமிழன் சீமான் தாயகம் திரும்புகின்றார்.

தாயக விடுதலைக்காகப் போராடிய தமிழர்களை நினைவு கூறும் வண்ணம் உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் நினைவு கூறும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் கனடா சென்றிருந்தார்.
 
மாவீரர் தினத்திற்கு முந்தைய தினமான 25-11-2009 அன்று கனடாவின் இளையோர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு அங்கு குழுமியிருந்த தமிழர்களிடையே எழுச்சி உரையாற்றினார்.
 
அது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.இன்று நடைபெறும் மாவீரர் உரை மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றது.
 
இந்நிலையில் அவரது மாவீரர் தின உரையை விரும்பாத சிங்கள இனவாதம் ராஜபக்‌ஷே சகோதரர்கள் மூலம் பல்வேறு வகையில் தனது அழுத்தங்களை கனடா அரசாங்கம் மீது பிரயோகித்தது.
 
அதற்குப் பணிந்த கனடா அரசாங்கம் செந்தமிழன் சீமானை கனடா நேரப்படி நேற்றுக் காலை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்றது.
 
நீண்ட நேரம் நடைபெற்ற விசாரணையின் முடிவில் செந்தமிழன் சீமானை திரும்பவும் தனது தாய்த்திரு நாட்டிற்குச் செல்ல வேண்டியது.அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு செந்தமிழன் சீமான் கனடாவில் இருந்து கிளம்பி விட்டார்.
 
இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.அவரை வரவேற்க நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் விமான நிலையம் வந்து சேரும்படிக்கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

0 Comments: