Friday, January 30, 2009

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்

ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.




அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.

எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
http://puthinam.com/full.php?2a3cPS24b33F8Ej04dcvWp5db0eAaCZ34d2ITtE3e0dgZSvQce03e7c32cc4Xe3dbe

Thursday, January 29, 2009

கருணாநிதி புடவைக் கட்டிக்கொள்ளலாம்?

நம் அரசியல்வாதிகளை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. சிங்கள மிருகம் சரத பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னபோது இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அவனாவது வாயால்தான் சொன்னான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் மானங்கெட்ட காங்கிரசு அரசோ இவர்களை கோமாலிகளைவிட கேவலமான கேனையனாக்கிவிட்டார்கள். ஆனால் நம்மவர்களுக்கு அது உரைத்ததாக தெரியவில்லை. உரைக்கவும் உரைக்காது. அவர்கள் போட்ட எலும்பு துண்டை நக்கியே வளர்த்த உடலாயிற்றே. கருணாநிதியும் சட்டசபையில் பிராணாப் இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாக அறிவித்து முழக்கமிட்ட அன்பழகனும் அதற்கு மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டிக்குப் பதில் புடவைக் கட்டிக்கொள்ளலாம். இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை ஒட்டுமொத்த தமிழினமும் காதில் பூச்சுற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்று நினைக்கிறார்களா? பிரணாப் ராசபக்சேவுடன் விருந்துசாப்பிட்டுவரத்தான் இவர்கள் டெல்லிக்குப் பறந்து சென்று மனு கொடுத்துவிட்டு வந்தார்களா? அதுவும் எங்கள் வரிப்பணத்தில்!


நாம் கொடுத்த வரிப்பணத்தில் சப்ளை செய்த ஆயுதங்களால்தான் நம் சகோதரிகளின் தாலி அறுக்கிறான் சிங்களவன். இந்தியாவின் இறையாண்மையென்று எதையோ சொல்லி எங்களை ஏமாற்றும் துரோகிகளே! எங்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தைக்கொண்டே எங்களின் சொந்தங்களை கருவறுக்க உதவுவதுதான் காந்தி கண்ட தேசத்தின் இறையாண்மையா? மானங்கெட்டத்தமிழனே சிந்திக்கமாட்டாயா? தங்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கும் ஒரு நாட்டில் வாழும் தமிழன் தன்னை இந்தியன் என்று எப்படி மனமார இனங்காட்டிக்கொள்வது? திபத்திற்கும் வங்காளதேசத்திற்கும் ஒரு கொள்கை எங்கள் தமிழனத்திற்கு ஒரு கொள்கையா? நீங்கள் பிரித்துக்கொடுத்த வங்கதேசத்தில் இருந்துதானே அனுதினம் தீவிரவாதி எங்களுக்கு குண்டுவைக்கிறான். உங்களின் ஏகாதிபத்திய ஆசையால் போர்களில் எங்கள் சொந்தங்கள் உயிர்விட்டதற்கு நீங்கள் தானே காரணம். இப்படி எங்களின் பல ஆயிரம் உயிர்களை அழித்த நீங்கள் இங்கு போய்விட்ட ஒரு உயிருக்காக ஓலமிட்டு எங்கள் இனத்தையே அழிக்க நினைக்கிறீர்களே? உங்களின் தவறான முடிவால் அழிந்துபோன எங்களின் ஆயிரக் கணக்கான உயிர்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?

நாங்கள் என்ன உங்களை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமா தரச்சொன்னோம். அங்கே போரைத்தானே நிறுத்தச்சொன்னோம். போர் என்ற பெயரில் ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான் சிங்களவன். எங்களின் ஏதுமறியா குழந்தைகளும் சிறுவரும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். புலிகளின் நிலைகளை வேவு பார்த்துச்சொல்கிற உங்கள் விமானங்களின் கண்களுக்கு அப்பாவி மக்கள் கூண்டோடு கொள்ளப்படுவது மட்டும் தெரியவில்லையா? ஐநா வும் சர்வதேச சமூகமும் கண்டிக்கிற போது நீங்கள் மட்டும் விருந்துக்கு போய் கொட்டிக்கொள்கிறீர்களே? நீங்களெல்லாம் மனிதர்களா? இன்னும் இவர்களின் அரசுகளில் ஒட்டிக்கொண்டு இன்னும் சில்லரைகளை பொறுக்கிக்கொண்டிருக்கும் தமிழ் மந்திரி அவதானிகளே! உங்களின் உடம்பில் ஒடுவது என்ன? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போட்டுச் சரணடைந்தால் பிரச்சினைத்தீரும் என்று கூறும் செயலலிதாவே! ஏன் நீங்கள் இதையே சிங்களவனைப் பார்த்து சொல்லக்கூடாது? விடுதலைப்புலிகளுக்காக சிங்களவர்கள் அப்பாவி பொதுமக்களை கொள்வதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? தமிழினத்தின் அழிவைப்பற்றி உங்களுக்கென்ன கவலை. அவனதான் நீங்கள் ஏறி மிதித்தாலும் உங்கள் கால்களில் விழுந்துகிடக்கிறானே. தன் இனத்தை அழிக்கும் சிங்களவனுடன் கைகோர்க்கும் அரக்கிகளையும் அம்மா என்று அழைத்து கொண்டாடும் மானங்கெட்ட இனம் தமிழினமே! உன்னை யார் காப்பாற்றுவது?

காட்டிக்கொடுத்த கருணாவுக்கு மூன்று பக்கம் ஒதுக்கும் பத்திரிக்கைகளே! எங்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படப்போது மட்டும் வாயை இறுக்கி மூடிக்கொள்கிறீர்களே! ஏன்? உங்களின் மேலாதிக்க வெறி இன்னும் அடங்கவில்லையா? எம்மக்கள் போடும் பிச்சைக் காசிலே கொழுத்த நீங்கள் சாப்பிட்ட இலையிலேயே மலம் கழிக்கிறீர்களே?

உணர்வுள்ள தமிழர்களே ! இனியாவது விழித்தெழுங்கள்! இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள். நம்மால் இயன்ற அளவுக்கு நம் எதிர்ப்பை சர்வதேச சமூகத்திற்கு தெரிவியுங்கள். தமிழினத் துரோகிகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கள்.

http://jakartananban.blogspot.com/2009/01/blog-post_29.html

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் : நக்கீரன்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.



உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.



இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமார் தெரிவித்தார்.



மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.



இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.



26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.



ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட இந்த தமிழர் ஈழப்பிரச்சனை குறித்து கடைசியாக எழுதிய கடிதம் இதோ:





விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...


வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.


உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.


வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?


ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.


ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?


ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.


மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?


கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் லி இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.


காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...


பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.


உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.


ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.


உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.


இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.


உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?


தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...


உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.


தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...


உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.


ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் லி அதுதான், இந்திய உளவுத்துறை லி ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.



களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...


அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,


உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?


வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.


புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா லி என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.


நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.


ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.


ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.


இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.


உதாரணம் ரணில்லி கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?


அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.


காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.


1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.


2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.


3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.


4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.


8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.


10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.


14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,


அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னைலி99



அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 28, 2009

சோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண்டு?

நன்றி:வயல்வெளி-முரளி

"துக்களக்" சோ ராமசாமி ஐ பி என் க்கு அளித்த பேட்டியில் கீழ்கண்டவாறு தன் திருவாய் மலர்ந்துள்ளார்...

இந்திய அரசு " இலங்கையில் போரை நிறுத்தும்படி " இலங்கை அரசை நிர்பந்திக்ககூடாதாம். இது இந்தியாவின் நலனை கருதி இவர் சொல்கிறாராம். இவ்வாறு செய்தால் அது விடுதலைப்புலிகளை மீண்டும் பலம் பெற்ற அமைப்பாகவே மாற்றிட உதவிடுமாம். போரை தொடர்ந்து நடத்தி புலிகளை அழித்தொழிக்கவேண்டுமாம். (அப்போதுதானே தமிழர் மீதான தன் நெடுநாள் வெறி வஞ்சம், குரோதம் தீரும்)

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்திடும் பொருட்டு தானே போர் நிறுத்தத்தை தமிழக கட்சிகள் கேட்கிறது, அது நியாயம் தானே என்ற கேள்விக்கு சோ வின் பதில்:




தமிழக கட்சிகள் அப்படி கோருவது தவறு மட்டுமல்ல, அது உண்மைக்கு புறம்பானதும் கூட. அங்கிருக்கும் தமிழர்களை கொல்வது இலங்கை அரசின் ரானுவம் அல்ல (அம்மாவின் வார்த்தையை அப்படியே பின்பற்றுகிறாராம்..), விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை கொலைக்கு காரணம். இலங்கை ராணுவம் தமிழர்கள் நலன் கருதி???#$##$ , அவர்களை போர் எல்லையை விட்டு வரும்படி சொல்கிறது., அவர்களுக்கு பாதுகாப்பு மிக்க இடங்களை அளிக்கிறது, (அப்போ முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையத்தில் குண்டு போட்டு 300 தமிழர்கள் கொல்லப்பட்டது?) ஆனால், விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை அங்கிருந்து போகவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. தங்களை காத்துக்கொள்ள இவர்களை கேடயமாக ஆக்கியுள்ளது.



பிரபாகரனை பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சோ -




ஆம், அப்படி கேட்கவேண்டும், ஆனால் செயல்படுத்தக்கூடாது. நான் அந்த பொறுப்பில் இருந்தால் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கேட்பேன் (ஆவனங்களில் அந்த கோரிக்கை இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக) மற்றபடி பிரபாகரனை இங்கு கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டேன்.. ஏனென்றால், இங்கே கொண்டு வந்து சிறை பிடித்து, வழக்கு நடத்தினால், அது நீன்ட காலம் போகும், மேலும் அதுவே தமிழக மக்களிடம் ஒரு அனுதாப உணர்வையும், பிரபாகரன் மேல் ஏற்படுத்திவிடும் ஆகவே கோருவேன் ஆனால் நடைமுறைப்படுத்தமாட்டேன்..(என்ன ஒரு ராஜதந்திர ரெட்டை வேடம் பாருடா.. அப்படி நினைக்கறவன் எதுக்கு ஆவனங்களுக்காக மட்டும் அப்படி கோரவேண்டும்.. )




இந்திய அரசு இலங்கைக்கு உதவ வேண்டுமா என்ற கேள்விக்கு சோ -



ஆம், இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும், வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து உதவவில்லை என்றாலும், (வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து.. ..?? என்ன ஒரு விஷத்தனம் சோவிற்கு..) வேறு வழிகளில் எல்லைக்குட்பட்டு , இலங்கைக்கு உதவிட வேண்டும், இதன் மூலம் விடுதலைப்புலி அமைப்பை ஒழித்திட வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டலும், அவர்களின் பலத்தை, ஆயுத பலத்தை, படை பலத்தை அழித்து, அது ஒரு தீவிரவாத அமைப்பு என்ற அளவில் மட்டும் நடமாட விடவேண்டும், இது இந்தியா, இலங்கை, இலங்கை தமிழர் (தமிழர் மீது என்ன ஒரு பாசம் இவருக்கு... புல்லரிக்குது)அனைவருக்கும் நல்லது.. (இதை சொல்லும் போது தான் சோவின் முகத்தில் அத்தனை பிரகாசம்)

சோ ராமசாமியை எது கொண்டு அடித்தால் சரியாக இருக்கும்??

Tuesday, January 27, 2009

More than 300 civilians feared killed, people bleed to death on streets Tuesday, 27 January 2009 - 12:16 AM SL TimeTamilnet In a scene of carnage of untold proportion on civilian targets hit by hundreds of Sri Lanka Army fired artillery shells, more than 300 people have died and several hundreds are bleeding to death within the last 24 hours, amidst pouring rain inside the `saftey zone` declared by the Colombo government. Houses and vehicles burn for a stretch of three km between Va l lipunam Kaa li temple and Moongkilaa ru towards Paranthan road, reports from Vanni said on Monday. Unattended bodies and injured people unable to move are lying around everywhere, while a remaining doctor fled and helpless ICRC officials virtually cried at the scene from their bunkers, TamilNet correspondent said.
www.tamilnet.com

There is a huge genocide happening in Sri Lanka in full throttle under name of 'WAR ON TERRORISM', Which is totally hidden to entire world.
Independent Reporters and NGOs are barred to these areas by Government of Sri Lanka.It is sad to see there are so many countries are supporting and supplying military hardwaresto be a part of Genocide against Tamils.
All media in Sri Lanka is under-control of President of Sri Lanka. Whoever write or Broadcastbravely on the truth about Government,either they will be killed or attacked by Special Killing Forcescall 'MAHASONA BALGAYO' (Ghost Army) who always travel in white van without number platesinside Colombo and more Tamil populated areas.
This is to help SL Army to carry out there genocide freely against tamil.
Any Worldwide news channels also not allowed to collect news from any war zones within the country,they can release the news which are provided by MOD (Ministry Of Defense) which is undercontrol of President's brother.
TO YOUR EYE SRI LANKA IS A BEAUTIFUL TROPICAL ISLAND WITH GREENERY!HERE IS THE OTHER SIDE OF SRI LANKA!
Please watch below links to see out what Government forces doing to the Tamils living in Sri Lanka.
Current situation in north. (26-01-2009)


http://eurotvlive.com/download/20090124/20...l_attack_03.wmv
http://212.227.250.237/ondemand/news_clips...l_attack_03.wmv
http://212.227.250.237/ondemand/news_clips...hell_attack.wmv
http://212.227.250.237/ondemand/news_clips...HELL_ATTACK.wmv
http://wmstreaming.eurotvlive.com/ondemand...l_attack_02.wmv


TO FIND MORE VIDEOS : http://wmstreaming.eurotvlive.com
HISTORY OF TAMILS LIVING IN SRI LANKA. (E-BOOK)


http://www.pagegangster.com/p/2Lweq/

More than 300 civilians feared killed, people bleed to death on streets

In a scene of carnage of untold proportion on civilian targets hit by hundreds of Sri Lanka Army fired artillery shells, more than 300 people have died and several hundreds are bleeding to death within the last 24 hours, amidst pouring rain inside the `saftey zone` declared by the Colombo government. Houses and vehicles burn for a stretch of three km between Va l lipunam Kaa li temple and Moongkilaa ru towards Paranthan road, reports from Vanni said on Monday. Unattended bodies and injured people unable to move are lying around everywhere, while a remaining doctor fled and helpless ICRC officials virtually cried at the scene from their bunkers, TamilNet correspondent said.

www.tamilnet.com



There is a huge genocide happening in Sri Lanka in full throttle
under name of 'WAR ON TERRORISM', Which is totally hidden to entire world.

Independent Reporters and NGOs are barred to these areas by Government of Sri Lanka.
It is sad to see there are so many countries are supporting and supplying military hardwares
to be a part of Genocide against Tamils.


All media in Sri Lanka is under-control of President of Sri Lanka. Whoever write or Broadcast
bravely on the truth about Government,either they will be killed or attacked by Special Killing Forces
call 'MAHASONA BALGAYO' (Ghost Army) who always travel in white van without number plates
inside Colombo and more Tamil populated areas.

This is to help SL Army to carry out there genocide freely against tamil.

Any Worldwide news channels also not allowed to collect news from any war zones within the country,
they can release the news which are provided by MOD (Ministry Of Defense) which is under
control of President's brother.

TO YOUR EYE SRI LANKA IS A BEAUTIFUL TROPICAL ISLAND WITH GREENERY!
HERE IS THE OTHER SIDE OF SRI LANKA!


Please watch below links to see out what Government forces doing to the Tamils living in Sri Lanka.

Current situation in north. (26-01-2009)

http://eurotvlive.com/download/20090124/20...l_attack_03.wmv

http://212.227.250.237/ondemand/news_clips...l_attack_03.wmv

http://212.227.250.237/ondemand/news_clips...hell_attack.wmv

http://212.227.250.237/ondemand/news_clips...HELL_ATTACK.wmv

http://wmstreaming.eurotvlive.com/ondemand...l_attack_02.wmv

TO FIND MORE VIDEOS : http://wmstreaming.eurotvlive.com


HISTORY OF TAMILS LIVING IN SRI LANKA. (E-BOOK)

http://www.pagegangster.com/p/2Lweq/

Monday, January 26, 2009

ஈழத்தமிழர்களுக்காக 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து தெரிவிப்பு

ஒரு மனித நேயம் இல்லா திமுக வே, ஆட்சியில் இருந்தும் ஒருவரும் குட சென்று இந்த மாணவர்களை பார்க்காதது, உங்களுக்கு உள்ள மனித நேயத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மாணவர்களாலே வளர்ந்த திமுக இன்று அந்த மாணவர்கள் அழிவதை வேடிக்கை பார்க்கிறது


ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரி, செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக, செங்கல்பட்டில் 5 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்ச அரசு நடத்தி வரும் தாக்குதலுக்கு, இந்திய அரசு துணை போகிறது. ராடர்கள், பணம், நிபுணர் குழுக்களையும் இந்திய அரசு அங்கு அனுப்பி இருக்கிறது. இது பச்சை துரோகம். மன்னிக்க முடியாத செயல் என்றார்.



நன்றி:

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dvj0A0ecQG7L3b4F9Es4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

Sunday, January 25, 2009

சிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும்

கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது.


இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது.


ஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச தரப்போ, விடுதலைப் புலிகளோ இது குறித்த தகவல்களை வெளியிடவில்லையென்கிற யதார்த்தம் உணரப்படவில்லை.


சிங்களம் தொடுக்கும் உளவியல் பரப்புரைச் சமரின் ஒரு அங்கமாகவே, பூதாகாரமாக்கப்பட்ட, ஆதாரமற்ற இத் தகவல்களை நோக்க வேண்டும்.5000 இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளரென்பது போன்றும், கிளிநொச்சியை நோக்கி விடுதலைப் புலிகள் வேகமாக முன்னோக்கி நகர்வதாகவும், அரியாலை மற்றும் மண்டைதீவில் மோதல்கள் நடைபெறுவது போல பல வதந்திகள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன.


அண்மையில் மகிந்தர் வெளியிட்ட அவசர அழைப்புச் செய்தியை நாம் உற்று நோக்க வேண்டும்.சர்வதேச மட்டத்தில், தமது நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், அதனை முறியடிப்பதனை பிரதான இலக்காக் கொண்டு, வெளிநாட்டுத் தூதுவர்கள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.


அதாவது மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு மற்றும் தூதுவரக முற்றுகைப் போராட்டங்கள், சிறிலங்கா அரசிற்கு பாரிய இராஜதந்திர நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. சிங்களத்தின் தமிழின அழிப்பு செயற்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழும், தமிழ் மக்களின் பங்களிப்பும் வீரியமடைகின்றது.ஆகவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அந்த வெற்றிச் செய்திகள், வெகுஜன போராட்டங்களில் ஈடுபடும் தமிழ் மக்களின் குவிமையப் படுத்தப்பட்ட சிந்தனையை, திசைதிருப்பி விடலாம்.இம் மாற்றத்தினையும், பிறழ்வினையுமே சிங்களம் எதிர்பார்க்கிறது.


அதேவேளை தம்மால் அவிழ்த்துவிடப்பட்டுள்ள இச் செய்திகள், சிங்கள ஊடகங்களிடம் சென்றடையாதவாறு மிகச் சாதுரியமாக தடுத்துள்ளது. இச் செய்தி கேட்டு புளகாங்கித மடைந்த தமிழர்கள், இதன் போலித் தன்மையை மறுநாள் உணரும் போது, தேசியத் தலைமை மீது சோர்வும், விரக்த்தியும் அடைவார்களென்று சிங்களம் கணிப்பிடுகிறது.


ஆகவே சிங்களத்தின் உளவியல் சமர்ப் பொறிக்குள் வீழ்ந்து விடாமல், தற்போது மேற்கொண்டிருக்கும் பணியை, தொடர்ந்து தீவிரமாக முன்னகர்த்திச் செல்வதே இன விடுதலைக்கு பலம் சேர்க்கும்.ஆதலால் தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்படும் கள செய்திகளே, உண்மையானவை என்பதனை இனியாவது எமது மக்கள் புரிந்து, தெளிவு பெற வேண்டும்.
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

புலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்திருக்கவும்.

வணக்கம் எம் தமிழ் உறவுகளே...!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த கல்மடு பிரதேசத்தை இராணுவம் இறுதி முற்றுகையிட பல நுாறு படை அணிகளுடன் சமராடி சென்ற வேளை கல் மடு குள அணை குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு தேங்கி நின்ற பல அடி தண்ணீர் சுனாமி அலைபோல பாய்ந்து சென்று அப்பகுதியில் முன்னேற்ற முயற்சியை மெற் கொண்ட படையணிகள் பலரை நீர் அடித்து சென்றுள்ளது.

அவர்கள் அந்த கள முனை குளமருகில் நகர்தி நின்ற பலரக கனரக ஆயுதங்களும் அந்த நீரில் அடித்த செல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கத்தைய பிரபல ஊடகம் ஒன்றிற்கு இலங்கை இராணுவப்பேச்சாளர் தெரிவிக்கையில் தமது படையினருக்கு இழப்பு எற்பட்டுள்ளதாகவும்
பலநுாநு படையினர் கொல்லப்பட்டும் காணமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இவரது அறிவிப்பின்னாலேயே அங்கு நகர்ந்து நின்ற ஜயாயிரத்திற்கு மேற்ப்பட்ட படையணிகள் இந்த வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டும் அழிவுற்றிருக்கலாமென தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த இராணுவத்தின் மேற்படி தகவலை வைத்த உலகமெல்லாம் பரந்து விரிந்து கிடக்கின்ற ஊடகங்கள் பலவிதமாக இராணுவ
எண்ணிக்கை விகிதங்களை தெரிவித்து வருகின்றன.

ஆனால் அடிப்படையில் இராணுவத்திற்கு பலத்த சேதம்
ஏற்ப்பட்டுள்ளது உண்மையே. அதை இராணுவம்
ஒப்பு கொண்டுள்ள போதும் எதிர் வரும் தேர்தலை
கருதி அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

இராணுவத்தின் கூற்றின் படி விடுதலைப்புலிகளால்
இந்த அணைக்கட்டு
உடைக்கப்பட்டு இருப்பின் இராணுவ தந்திரோபாய
அடிப்படையில் மிக சிறந்த
உத்தியாக கருதப்படும்.

இந்த அணைக்கட்டை உடைத்த விடுதலைப்புலிகள் வெறுமனெ முன்னேறி வரும் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் உத்தியை
கையாள மாட்டார்கள் மாறாக பாரிய நில மீட்பு போரை நடத்துவார்கள்.

அப்படி பாரியமரபு வழி கெரில்ல யுத்த தாக்குதல்களை தீவிர
படுத்தி நில மீட்பை நடத்தினால் பல்லாயிரம் இராணுவத்தின் விநியோகங்கள் தடுக்கப்பட்டால் அந்த இராணுவ அணிகள்
விடுதலைப்புலிகளின் முற்றுகைக்கள் சிக்கியிருப்பார்கள்.

அப்படி ஒரு நிலை வருமேயானல் உலக நாடுகளிடம்
இலங்கை அரசு தமது இராணுவத்தை காப்பாற்றுங்கள் என
அறை கூவல் விடும். அப்போது அந்த வௌிநாட்டு படைகள்
இராணுவத்தை காக்க வருமேயானல் இதை வைத்து விடுதலைப்புலிகளை
இல்லாதொழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு செய்யும்.

இதன் பின்புல இராணுவ நகர்வுகளை விளங்கி கொண்ட
விடுதலைப்புலிகள் தற்போது தாக்குதல் நடைபெறுமாயின்அந்த
தாக்குதல்களை வௌியிடாமல் மூடி மறைக்கலாம்.

நிலங்களை மீட்ட பின்னர் வௌியிட கூடிய சாத்தியங்கள்
உள்ளன. அரசு தனது இழப்பு விகிதத்தை ஒத்து கொள்ளாது
வௌியிடாது.

காரணம் எதிவரும் தேர்தலை மையமாகவைத்து இதனை
அரசு வௌியிட்டு தனது ஆட்சியை இழக்க விரும்பாது.

எனவே இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெறுகின்றதாயின்
விடுதலைப்புலிகள் அந்த இராணுவ இழப்புக்களை
அறிவிக்கும் வரை
இலங்கை அரசும் மௌனம் காக்கும்.

எனவே தற்போது வௌிவருகின்ற அணைத்து ஊடக செய்திகளும்
இராணுவம் வௌியிட்ட செய்திகளை மையமாகவைத்தும்
அந்த களமுனையில் நின்ற இராணுவ பட்டாலியன்களையும்
வைத்தே கணிக்கப்பட்டு வௌியிடப்படுகின்றன.

எனவே விடுதலைப்புலிகள் இவ்வாறனதொரு தாக்குதல்
நடைபெறுவதாக இருந்தால் அதன் முடிவில் செய்திகளை
வௌியிடுவார்கள் அல்லாது அங்குள்ள மக்கள் மூலம் நாளடைவில்
செய்திகள் கசியும் என நம்பலம்.

அதுவரை மக்களே அமைதிகாக்கமாறு வேண்டுகிறோம்.

நன்றி : http://www.nerudal.com/content/view/5819/1/

கல்மடுகுளம் தகர்ப்பை தொடர்ந்து புலிகள் தாக்குதல் 4000 படையினர் பலி

வன்னியில் நேற்று சனிக்கிழமை கல்மடுக்குளம் தகர்க்கப்பட்டதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் ஊடாக விடுதலைப்புலிகளும் ஊடறுத்து படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன்போது சுமார் 4000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்போது பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப்புலிகளினால் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின்போது சுமார் 4000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பை ஆதாரம் காட்டி தமிழக ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

அடித்துச்செல்லப்பட்ட வெள்ளம் காரணமாக பல படைப்பிரிவுகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் இலங்கை படைத்தரப்பை ஆதாரம் காட்டி செய்திவெளியிட்டுள்ளது.

இதன்போது விடுதலைப்புலிகளினால் தாக்குதல் தொடுக்கப்பட்டதுடன் படையினரின் கனரக ஆயுதங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் இன்றை பிற்பகல் செய்தியில் தெரிவித்துள்ளது.

நன்றி : http://www.swissmurasam.net/news/breakingnews-/11590------4000--.html

சிங்கள அடிவருடிகள் கவனிக்க வேண்டியது

சிங்களவனுக்கு காவடி எடுக்கும் ஒட்டு பொறுக்கிகளே, நேற்றும், இன்றும் தமிழ் மணத்தின்
அணைத்து சூடான இடுகைகளும், தமிழீழம் பற்றியதே. இலங்கை இனவெறி அரசின் தமிழின அழிப்பு 100 கோடி முதலீட்டில், நீ எத்தனை வாங்கினாலும் தமிழன் தமிழனே. அவன் உணர்வை நீ ஒரு நாளும் மாற்ற முடியாது.

சிங்கள இனவெறி காடைகளே, உங்கள் மனசாட்சியை கேட்டுபாருங்கள். கல்மடு உடைந்து இறந்தது ராணுவம், ஆனால் இலங்கை அரசின் குண்டு வீச்சில் அழிவது பொது மக்களே.

இதில் எது தீவிரவாதம்.

Saturday, January 24, 2009

சொன்னதை செய்த புலிகள்: தத்தளிக்கும் ராணுவத்தினர்(விளக்கப்படம்) : நக்கீரன்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளை தாக்கிக்கொண்டே முன்னேறிச்சென்றது ராணுவம். பின்வாங்கிக்கொண்டே வந்தனர் புலிகள்.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு அணைக்கட்டின் பக்கம் ராணுவத்தினர் வந்த போது புலிகள் அணையை உடைத்துவிட்டனர்.

பீறிட்டெழுந்த தண்ணீரில் சிங்களப்படையினர் திணறியிருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்திணறலில் இறந்துள்ளனர்.

இன்று இரவு இந்த தாக்குதல் முடிந்துள்ளதால் இதுவரை 500 சிங்களப்படையின் சடலங்களை மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தண்ணீரில் சிங்களப்படையின் ஆயுதங்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரைவில் வெற்றி செய்தி வரும் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.சொன்னது போல்வே இன்று செய்து முடித்துள்ளனர் புலிகள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2434

நன்றி : நக்கீரன்

Thursday, January 22, 2009

இவ்வளவு அவலத்தை திணித்த சிங்களவரோடு இனியும் சேர்ந்து வாழ முடியுமா...?? பார்த்து முடிவை எடுங்கள்... வன்னி நிலபரம்..., காணொளி.. EUROTV

இவ்வளவு அவலத்தை திணித்த சிங்களவரோடு இனியும் சேர்ந்து வாழ முடியுமா...?? பார்த்து முடிவை எடுங்கள்... வன்னி நிலவரம்..., காணொளி.. EUROTV

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50766

Saturday, January 17, 2009

ஏமாற்றம் தரும் சிவசங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் இராமதாஸ்

இந்திய - சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி கூறினார்.

இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக உண்ணாநிலை இருந்து வருகிறார். அவர் உண்ணாநிலை இருந்து வரும் மறைமலை நகருக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்த இராமதாஸ், அவரது உடல் நலம் கருதி உண்ணாநிலையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.

பின்னர் அங்கு பேசிய அவர்,

வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், கொழும்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து என்ன பேசினார் என்பது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை "இந்து'' நாளேட்டில் வெளிவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி பேசினார்.



பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பொன்னாடை போர்த்துகிறார்


திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி பொன்னாடை போர்த்துகிறார்

சிறிலங்காவுடனான இந்திய உறவு இதுவரையில் இல்லாத அளவிற்கு ஆழமாகவும், உறுதியாகவும் மாறியிருக்கிறது என்றும் மிகவும் இக்கட்டான காலங்களில்தான் நட்பின் உண்மையான தன்மை வெளிப்படும் என்றும் அதற்கு சிறந்த உதாரணமாக சிறிலங்காவுடனான இந்திய உறவு திகழ்கிறது என்றும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று "இந்து" நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது.

சிறிலங்காவுடனான நட்பு ஆழமாகவும், உறுதியாகவும் இப்போது மாறியிருக்கிறது என்று சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பதை வாக்குமூலம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை சிவ்சங்கர் மேனனின் இந்த அறிவிப்பு புலப்படுத்துகிறது என்று குறிப்பிட்ட இராமதாஸ், இவரது பயணத்தை தான் முக்கியமான நிகழ்வு என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.

நம்புவோம், காத்திருப்போம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறிய இராமதாஸ், இதற்கு மேலும் நாம் எப்படி நம்ப முடியும். காத்திருக்க முடியும் என்றும் வினா எழுப்பினார்.



கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் பொன்னாடை போர்த்துகிறார்


திருமாவளவனை மருத்துவ பரிசோதனை செய்கிறார் மருத்துவர் இராமதாஸ்

அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லிக்குச் சென்று முறையிட்டிருக்கிறோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அங்கே சண்டை நிறுத்தப்படவில்லை. வெட்கத்தாலும், வேதனையாலும் தலைகுனிந்து நிற்கிறோம் என்றும் கூறிய இராமதாஸ், இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க முதலமைச்சர் கலைஞர் பல்வேறு காலக் கட்டங்களில், பாடுபட்டிருக்கிறார் என்றும் இப்போதும் அவர்களைக் காக்க அவரைத்தான் அவர்களும், இங்குள்ள தமிழர்களும் நம்பியிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

நம்மிடையே அரசியல் கருத்து வேறுபாடுகளும் கூட்டணி வேறுபாடுகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு கலந்தாய்வு நடத்தி முடிவெடுப்போம் என்று அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். நல்ல முடிவெடுப்போம். அந்த முடிவு நாட்டையே உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும். முடிவெடுத்து முதல்வரை செயற்பட வைப்போம் என்றும் வலியுறுத்தினார் மருத்துவர் இராமதாஸ்.

உண்ணாநிலையை கைவிடுமாறு இராமதாஸ் கோரிக்கை

உண்ணாநிலை மேற்கொண்டு வரும் தம்பி திருமாவளவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சோர்வு ஏற்பட்டிருக்கிறது. குருதியில் சீனியின் அளவும் குறைந்து வருகிறது. இதற்கு மேலும் குறைந்தால், நிலைமை மோசமாகிவிடும். இதனை ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். அனைத்து ஒடுக்கப்பட்ட நலன் கருதி, அவர் தனது உண்ணாநிலையை உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று அவர் தனது உண்ணாநிலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆனால், இன்று போய் நாளை வா என்கிற வகையில் அவர் என்னிடம் பேசியிருக்கிறார். நாளையாவது அவர் உண்ணாநிலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் இராமதாஸ் வலியுறுத்தினார்.

நன்றி:புதினம்

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : திருமாவளவனுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை மறைமலைநகரில் 3வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தொல்.திருமாவளவன் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதனை மேற்கொண்டது. அதில் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொல்.திருமாவளவன் மிகவும் சோர்வாகக் காணப்படுவதாகவும், அவருக்கு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருமாவளவன் கைது செய்யப்பட்டதாக மதுரையில் இன்று வதந்தி பரவியதை அடுத்து, அவரது கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

Friday, January 16, 2009

உலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களிற்கு ஓர் திறந்த மடல்:

அன்புடையீர்,

தாயகத்தில் இனவாதிகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வன்னியில் இன்னுமோர் சோமாலியா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தெருநாய்களாக தவிக்கவிடப்பட்டு உள்ளார்கள். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வியாதிக்காரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற துணிவில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு தனது சகல வளங்களையும் ஒன்றிணைத்து, அவற்றை உச்சரீதியாக பிரயோகித்து தமிழர் தாயகத்தில் இனஅழிப்பை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று இங்கு செய்தியில் காட்டினார்கள்; ஓர் தாய் வன்னியில் கதறி அழுது தனது கஸ்டங்களை கூறுவதை; ஒவ்வொரு இடம்பெயர்வின்போதும் ஒவ்வொரு பொருட்களாக, சொத்துக்களாக இழந்து இப்போது தன்னிடம் அடகுவைக்க எஞ்சி இருப்பது ஒருசோடி காதணிகளே என்று அவர்கூறி இருந்தார். ஆனாலும்.. இந்த இக்கட்டான நிலமையிலும் அவர் இறுதியாக கூறிய வார்த்தை உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. "ஆக்கிரமிப்பு இராணுவத்தை அவர்கள் வந்தவழியாகவே நாங்கள் பழைய இடத்துக்கு துரத்தி அடித்து கலைப்போம்!" என்று அந்தத்தாய் உறுதியுடன் கூறி இருந்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு தாயக விடுதலைப் போராட்டத்தில் தற்போது இல்லாத நம்பிக்கை, உறுதி தாயகத்தில் வாழ்கின்ற மக்களிடம் காணப்படுவதற்கு காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோருக்கு தாயகத்தில் நடைபெறும் விடயங்கள் வெறும் அன்றாடச் செய்திகளே. இதற்கு நேர் எதிர்மாறாக, தாயகத்தில் வாழும் மக்களிற்கு இது வாழ்வா, சாவா என்கின்ற உயிர்வாழ்விற்கான போராட்டம்.

எப்படியும் வாழலாம் என்று விரும்பிய பல இலட்சம் தமிழர்கள் தென்னிலங்கைக்கும், தென்னிந்தியாவிற்கும், உலகில் வெவ்வேறு நாடுகளிற்கும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமது இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்தார்கள். எனினும், இப்படித்தான் வாழவேண்டும் என்று விரும்பிய தன்மானம் உள்ள சில இலட்சம் தமிழர்கள் தாயகத்தில் வாழ்வா, சாவா எனப்படுகின்ற விடுதலைப் போராட்டத்தில் தம்மை நேரடிப் பங்காளிகளாக இணைத்துக்கொண்டார்கள்.

விடுதலைப் போராட்டங்கள் என்பவை எப்போதும் ஓர் இனம் அல்லது பகுதி நசுக்கப்படும்போதே எழுகின்றன. ஒவ்வொரு புரட்சியின் பின்னாலும் ஓர் நியாயபூர்வமான காரணம் இருக்கின்றது. சமமான வசதிகள், வாய்ப்புக்கள், சுதந்திரமான வாழ்வு என்பன கிடைக்கும் இடங்களில், சந்தர்ப்பங்களில் எப்போதும் அதிக அளவில் ஒற்றுமையே நிலவும். அங்கு பிணக்குகள் தோன்றினாலும் அவை குறுகிய காலத்தில் மறைந்துவிடும். இந்தவகையில், தாயகத்தில் விடுதலைப்போராட்டத்தை சிறீ லங்கா இனவாத அரசே ஆரம்பித்து வைத்தது.

"நோய்நாடி நோய் முதல்நாடி
வாய்நாடி வாய்ப்பச் செயல்!"

என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ஓர் பிரச்சனை ஏற்பட்டால் அதன் மூல காரணத்தை கண்டு அறிந்து, அதன்பின்னர் அப்பிரச்சனையை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். பிரச்சனைக்கான மூலகாரணம் கண்டு அறியப்படாதவரை பிரச்சனை தீரப்போவதில்லை. சிறீ லங்கா இனவாத அரசு காலங்காலமாக ஒரே தவறை திரும்பவும், திரும்பவும் செய்துகொண்டு இருக்கின்றது. இன்றும் தாயகத்தில் இதுவே நடைபெறுகின்றது.

பல்வேறுவிதமான அடக்குமுறைகளை பிரயோகிப்பதன் மூலம் தமிழினத்தை அடிபணியவைத்து தமக்குகீழ் அடிமைகளாக வாழவைக்க சிங்கள பேரினவாதிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றார்கள். பேரினவாதிகளின் இந்த அடக்குமுறை இன்று மிகப்பாரிய இன அழிப்பாக தாயகத்தில் விசுவரூபம் எடுத்து இருக்கின்றது. உலக வல்லரசுகளினதும், அவற்றின் முகவர்களினதும் ஆசியுடன் 'பயங்கரவாத ஒழிப்பு' என்கின்ற முகத்திரையுடன் சிறீ லங்கா இனவாத அரசு 'தமிழின அழிப்பில்' இறங்கி இருக்கின்றது.

'நேற்றைய பயங்கரவாதி நாளைய சுதந்திர தியாகி' என்று ஓர் பொன்மொழி இருக்கின்றது. நெல்சன் மண்டேலோ தொடக்கம் மகாத்மா காந்திவரை அனைத்து சுதந்திர தியாகிகளுமே வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களில் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவ்வாறே தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் மீதும் நுனிப்புல் மேயும் அரசியல் ஞானிகளினால் - இந்த அஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுகளினால் பயங்கர வாத இலச்சினை பொறிக்கப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் அதர்மம் மேலோங்கும். ஆனால் தர்மமே இறுதியில் வெல்லும் என்று கிருஷ்ண பகவான் பகவத்கீதையில் சொல்லி இருக்கின்றார். அளவுக்கு மிஞ்சிய வலியினை அனுபவித்த பின்னரே ஓர் தாய் குழந்தையை பிரசவிக்கின்றாள். தாயகத்தில் தற்போது மக்கள்படுகின்ற வேதனைகள் எல்லாம் ஓர் பிரசவத்திற்கான அறிகுறியே தவிர தாய்நாட்டின் மரணத்துக்கான எச்சரிக்கை மணி அல்ல. ஒவ்வொரு தடவையும் சிறீ லங்கா பேரினவாத அரசு ஏற்படுத்துகின்ற தடைக்கற்கள் தாயக மக்களுக்கு படிக்கற்களாகவே அமைந்துவிடுகின்றன.

ஓர் உதாரணத்தை கூறினால், 1983ம் ஆண்டு இனக்கலவரம், அதன்பின்ரான இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கள் காரணமாக பல இலட்சம் தமிழ்மக்கள் அகதிகளாக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தனர். சிங்கள இனவாதிகளும் சிறீ லங்கா நாட்டைவிட்டு தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் ஓடித்தப்புவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இப்போது இடம்பெயர்ந்து உலகின் ஒவ்வொரு மூளையிலும் ஒதுங்கியுள்ள இந்த அகதிமக்களின் வளங்கள் தாயகபோராட்டத்திற்கு மிகுந்த பலத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீ லங்கா இனவாத அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக அவர்கள் தமிழ்மக்களிற்கு வைத்த பொறிக்கிடங்கினுள் சிங்கள இனவாதிகளே மீளமுடியாதவாறு அகப்பட்டுக்கொண்டார்கள். அதாவது ஒவ்வொரு தீமைக்குப்பின்னாலும் ஓர் நன்மை இருக்கின்றது. குறுகியகால நோக்கில் ஓர் விடயம் வேதனையை ஏற்படுத்தினாலும், நீண்டகால நோக்கில் அதேவிடயம் பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடும்.

தாயகத்தில் வாழ்வியல் ஆதாரம்தேடி நியாயபூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவவேண்டிய தார்மீக பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ்மக்களிற்கும் உள்ளது. எமது நாளாந்த வாழ்வை எடுத்துக்கொண்டால் சில கருமங்களை ஆற்ற ஒருவர் மட்டும் போதும். சில கருமங்களை ஆற்ற இருவர் போதும். சில கருமங்களை ஆற்ற பலர் வேண்டும். நீங்கள் முத்துக்குளிப்பதுபற்றி அறிந்து இருப்பீர்கள். ஒருவர் தனியாகச் சென்று முத்துக்குளிக்க முடியாது. ஆகக்குறைந்தது கடலின் அடியினுள் ஒருவரும், கடலின் மேற்பரப்பில் இன்னொருவரும் பாதுகாப்பான முத்துக்குளித்தலுக்கு தேவை. தாயக விடுதலைப் போராட்டமும் இவ்வாறானதே! பல இலட்சம் தமிழ் மக்கள் கைகொடுத்து இழுக்கவேண்டிய தேர் இது!

ஓர் கடிகாரத்தில் பெரியமுள் சுற்றினால்தான் சிறியமுள் சுற்றும். பெரிய முள் தனது நகர்வை நிறுத்திவிட்டால் சிறிய முள்மூலம் தன்னிச்சையாக அசையமுடியாது. தாயக மக்கள் சிறியமுள் என்றால் நாங்கள் பெரியமுள்...! புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் தடுமாற்றம் இல்லாத தொடர்ச்சியான வேலைத்திட்டங்களே தாயகத்தில் உள்ள மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டங்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்யும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வினைத்திறனுடன் பணியாற்றவேண்டிய ஓர் முக்கியதேவை எப்போதும் இருந்துவருகின்றது. இங்குள்ள தமிழ்மக்கள் தமது தாயக உறவுகளுக்காய் சர்வதேசத்தின்முன் ஓங்கிக்குரல் கொடுக்கும்போது சிறீ லங்கா அரச பயங்கரவாதிகள்கூட தமது இன அழிப்பு இயந்திரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றார்கள் அல்லது அதன் வேகத்தை சற்று குறைக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் வாய்மூடி மெளனிகளாக - மெளனசாமிகளாக - வாயினுள் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு - உம்மாண்டிகளாக இருக்கும்போது சர்வதேசம் எமது இந்த மெளனத்தை சிறீ லங்கா தீவிரவாத அரசு செய்கின்ற தாயக மக்களின் இன அழிப்பிற்கு நாங்கள் கொடுக்கும் அங்கீகாரமாக எடுத்துக்கொள்கின்றது.

எனவே, சிறீ லங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது தினமும் நடாத்துகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களிற்கு உலகெங்கனும் வாழும் தமிழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு விதமான போராட்டங்களை செய்யவேண்டிய தேவைகள் இருக்கின்றன. 'வாழ்வா அல்லது சாவா' என்ற வாழ்வியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயக மக்கள் தினம்தினம் படும் வேதனைகள் கண்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற பல்லாயிரம் தமிழர்கள் இரத்தக்கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்.. இவர்களால் சரியான முறையில் தமது உள்ளக் குமுறல்களை, எதிர்ப்புக்களை சர்வதேச சமூகத்தின் முன் வெளிப்படுத்த முடியவில்லை.

இதற்கான காரணங்கள் எவை? வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதா? இல்லையே..! எம்மவர்களிடம் வளங்கள் தாராளமாகவே இருக்கின்றன. அப்படியாயின் பயம் காரணமா? இல்லையே..! பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் இவற்றை நம்மவர்கள் தாராளமாகவே பயன்படுத்தி வருகின்றார்கள். அப்படியாயின் சரியான தலமை ஒன்று இல்லாது இருப்பது காரணமா? அப்படியும் இருக்கமுடியாது. ஏனெனில்... சிறந்த தலமைகளின் வழிகாட்டல்களுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை பலநூறு அமைப்புக்களும், ஊடகங்களும் செய்து வருகின்றன. அப்படியாயின் இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற மக்கள் தமது உணர்வுகளை பொத்திப்பொத்தி வைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடியது என்ன? உங்களுக்கு விடை தெரிகின்றதா?

விடை இலகுவானது. எம்மவர்களிடையே காணப்படும் ஒற்றுமை இன்மையே - எமக்குள் நாம் பிணக்குப்பட்டுக்கொண்டு இருப்பதே வினைத்திறனான முறையில் எம்மவர்கள் செயல் ஆற்றுவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது.

இது இங்கு கட்டுரை ஆசிரியனாகிய நான் உருவாக்கிய எதேச்சையான ஓர் விடை அல்ல. பலருடன் தாயகமக்கள் தற்போதுபடும் அவலங்கள் பற்றி பேசும்போது அவர்கள் இதைத்தான் சொல்லி கவலைப்பட்டுக் கொள்கின்றார்கள். 'நம்மவர்கள் - நம்மவர் அமைப்புக்கள், சங்கங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பொதுவான சில விசயங்களிலாவது ஒற்றுமையாக எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து காரியம் ஆற்ற மாட்டார்களா? அப்படியான ஓர் பொற்காலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஏற்படாதா?' என்கின்ற ஆதங்கத்தில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

கூட்டாளிகள் பிரிந்தால் எதிரிக்கு கொண்டாட்டம் என்று கூறுவார்கள். ஒற்றுமையின் பலம் பற்றி பலநூறு கதைகளை நாங்கள் எல்லோரும் சிறுவயதில் வாசித்து, கேட்டு, அறிந்து இருக்கின்றோம். விதம், விதமாக... வகை, வகையான ஒற்றுமையின் பலத்தை வலியுறுத்தி எத்தனை எத்தனை கதைகளை எங்களுக்கு கூறினார்கள்...! ஆனால்.. எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் தான்...!

எம்மவர் ஒருவர் அல்லது எம்மவர் அமைப்பு ஒன்று ஆக்கபூர்வமான ஓர் செயற்திட்டத்தை ஆரம்பித்தால் அவருடன் அல்லது அந்த அமைப்புடன் கருத்து முரண்பாடு உள்ளவர் அல்லது ஏற்கனவே பிணக்குப்பட்டவர் குறிப்பிட்ட அந்த ஆக்கபூர்வமான செயற்திட்டத்தை நேரடியாக எதிர்ப்பார் அல்லது மறைமுகமாக குழப்புவார் அல்லது ஆதரவு கொடுக்காமல் விலகி இருப்பார். இவ்வாறு இவர் ஆக்கபூர்வமான ஓர் செயலுக்கு ஆதரவு கொடுக்காமல் இருக்கும்போது இவர்சார்ந்த சமூகவட்டம் - இவர் தலமையின் பின்னால் செல்கின்ற மக்கள் கூட்டமும் குறிப்பிட்ட ஆக்கபூர்வமான செயற்திட்டத்துக்கு ஆதரவு கொடுக்காமல் விலகிச் செல்கின்றார்கள்.

இப்படியான நிலமை பலநூறு அமைப்புக் களினிடையேயும், பலநூறு தனிநபர் களினிடையேயும் விளங்கும்போது ஆயிரக்கணக்கில் ஒட்டுமொத்தமாக சிறிய சிறிய விசயங்களில் தமிழர் சமூக வட்டங்களிடையே பிரிவினைகள் தோன்றுகின்றன. மனித வலுக்கள் வீண்விரயம் செய்யப்படுகின்றன. வினைத்திறனான முறையில் ஓர் செயற்திட்டத்தை நம்மவர்கள் செய்வதற்கு இப்படியான பிரச்சனை மிகுந்த சவாலாக இருக்கின்றது.

கடைசியில் நடைபெறுவது என்ன? கடிகாரத்தின் பெரிய முள் தடுமாற்றம் கொண்டு நிலைமாறுகின்றது. தனது வேகத்தை குறைக்கின்றது. இது கடிகாரத்தின் சிறிய முள்ளின் அசைவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இறுதியில்....? தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் இரும்புக்கரங்களினால் நசித்து நெரிக்கப்படுகின்றது. திட்டமிட்ட இனஅழிப்பு வெற்றிபெறுகின்றது. சிறீ லங்கா இனவாத அரசிற்கு தேவையானது இதுவேதான். தமிழர்களின் ஒற்றுமையே தமது இருப்புக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்பதை சிறீ லங்கா இனவாத அரசு மாத்திரம் அல்ல, தமிழினத்தை உலக அளவில் ஒடுக்க நினைக்கின்ற பல்வேறு புல்லுருவிகளும் மிகநன்றாகவே அறிந்து வைத்து இருக்கின்றார்கள். அப்படியாயின்...

நாம் செய்யக்கூடியது என்ன? எம்மவர்களிடையே ஒற்றுமையை கட்டி எழுப்புவது எப்படி? எம்மவர்களிடையே ஒற்றுமையை குழப்புபவர்களை கண்டுபிடிப்பது எப்படி? எம்மவர்களிடையே ஒற்றுமையை சிதைப்பவர்கள் பற்றி எச்சரிக்கை கொள்வது எப்படி? உலகத் தமிழர்கள் தம்மிடையே 'பலமான ஒற்றுமையை பேணக்கூடிய வகையில்' சம்மேளனங்கள் ஏதாவது வைத்து இருக்கின்றார்களா? உலகில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மிடையே 'பலமான ஒற்றுமையை பேணி' ஏதாவது சம்மேளனங்கள் வைத்து இருக்கின்றார்களா?

ஏற்கனவே இருக்கும் சம்மேளனங்கள் வினைத்திறனானவையா? வினைத்திறன் உடையவையாக இருந்தால் ஏன் தமிழரிடையே ஒற்றுமையீனம் நிலவுகின்றது? நம்மவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க சிறு சிறு அமைப்புக்கள் பல பலநூறுசேர்ந்து உருவாகும் சம்மேளனங்கள் எப்படியான வேலைத்திட்டங்களை செய்ய முடியும்? சிறிய சிறிய அமைப்புக்களின் தலைவர்கள், தனிநபர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க தயாராக இருக்கின்றார்களா? நிரந்தரமான கைகோர்ப்புக்களாக இல்லாவிட்டாலும் தற்காலிக கைகோர்ப்புக்களுக்காவது நம்மவர்கள் தயாராக இருக்கின்றார்களா?

இவை எல்லாம் நம்மவரிடையே நடக்கக்கூடிய விசயமா? அல்லது ஓர் பகல் கனவா? இது வெறும் பகல் கனவாக இருந்தால் ஒன்றை மட்டுமே நிச்சயம் எதிர்வு கூறமுடியும். நடைமுறையில் நடக்கவேண்டிய இப்படியான விடயங்கள் தமிழருக்கு கனவாகினால் அது சிறீ லங்காவில் சிங்கள பேரினவாத சாம்ராச்சியத்தின் வெற்றிக்கும், தமிழர் தாயகத்தில் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிப்புக்குமே கட்டியம் கூறும்...!

நன்றி! வணக்கம்!

பி/கு: இந்த மடலின் எழுத்துருவுக்கு மாத்திரமே நான் சொந்தக்காரன். ஆனால்.. இங்கு கூறப்பட்டுள்ள, வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள், சிந்தனைகள், உள்ளக் குமுறல்கள், மற்றும் உணர்வுகளின் சொந்தக்காரர்கள் உங்களைச்சுற்றி வியாபித்துள்ள சாதாரண தமிழ் மக்களே! எனவே நீங்கள் ஓர் ஊடகவியலாளர்களாகவோ, ஊடகங்களுடன் தொடர்புபட்டவர்களாகவோ அல்லாதுவிடின் ஊர்ச்சங்கங்கள், தமிழர் பொதுநல அமைப்புக்கள் சார்ந்தவர்களாகவோ இருந்தால் வாதங்களை தவிர்த்து இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளிற்கான உங்கள் பதில்களை விரைவில் நடைமுறை செயற்பாடுகளாக உலகெங்கும் வாழும் சாதாரண தமிழ் மக்களிடம் காண்பித்துவிடுங்கள்.

நன்றி : http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230

Thursday, January 15, 2009

துரோகி கருணாவின் ஒருபக்கம்!

தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங் காவின் தேசிய தொலைக் காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என்றும் தற் போதைய நிலையில் விடுதலைபு புலிகள் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பத்திற்கு வித்திடவர் தான் என்றும், இப்படி பலவாறாக உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார். இந்த வேளையிலே கருணா கூறும் பொய்யான பல தகவல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுதல் பொருத்தமானதாக இருக்கும்.

1977ற்குப் பிந்திய காலங்களிலே மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கத்திற்கு வித்திட்டவர் யோகன் பாதர் அவர்கள். அவர் தேசியத் தலைவரை நேராகச் சென்று சந்தித்து அதற்கான திட்டங்களை துவக்கினார். அதன் பின்னர் மட்டக்களப்பில் பல தளபதிகள் பணியாற்றினார்கள். தளபதி காக்க, தளபதி அருணா, தளபதி குமரப்பா எனப்பலர் கிழக்கில் தளபதிகளாக இருந்தது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டார்கள்.

அதன் பின்னர்தான் 1983ல் கருணா இணைந்து கொண்டு இந்தியாவில் 3வது பயிற்சிப் பாசறையில் பயிற்சிகளை பெற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட போராளிகளே அதிகம் வீரச்சாவடைந்ததாக கருணா கூறுகின்றார். விடுதலைப் புலிகள் மாவீரர் நாளில் வெளியிடும் தரவுகளை உற்றுநோக்கினால், யாழ். மாவட்டத்திலேயே அதிகமான போராளிகள் வீரச் சாவடைந்துள்ளார்கள் என்பது சாதாரணமான ஒருவருக்குப் புரியும். தளபதியாக இருந்த கருணாவுக்கு தரவுகள் கூட தெரியாதுபோலுள்ளதுஅப்போதும் சரி, இப்போதும் சரி அனைத்து போராளிகளுமே தமிழீழக் கனவுடன் மரணித்தவர்கள் என்பது கருணாவுக்கு தெரியாத ஒன்றல்ல.

கருணாவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு களமாடி மடிந்த மாவீரர்களின் கனவுகள் நனவாக கருணா என்ன செய்யப்போகின்றார்? ஆனால், இன்று அவர் சிங்கள அரியணையின் விசுவாசியாக மாறி அந்த மாவீரர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு துரோகியாக மாறிவிட்டார்.

அத்தோடு, தமிழீழ விடுதலை போரின் அந்தரங்கங்கள் எல்லாவற்றையுமே சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்த கருணா கிழக்கு மக்களை வைத்து இப்போது போடும் நாடகத்தில் கதாநாயகன் பாத்திரம் எடுத்துக்கொண்டுள்ளார். இன்று கருணா 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகையின் அடிப்படையின் மாகாண சபை அதிகாரம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக கிடைத்தால் போதுமானது என்று கூறுகின்றார்.

இதற்காகவா தமிழரின் விடுதலைப் போர் இவ்வளவு இழப்புக்களையும் சோதனைகளையும் தாண்டிவந்துள்ளது. சிங்களத்தின் அதிகாரப்பரவலாக்கம் என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையென்பது கருணாவக்கு தெரியாத ஒன்றல்ல. இருந்தும் சிங்களத்தின் விசுவாசியாக இருப்பதற்கு கருணா கூறுபவைகள் கொஞ்சம் அதிகமானதுதான். தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல வெற்றிகளைச் சாதித்ததாகவும், பல வெற்றிகளுக்குப்பின்னணியில் இருந்ததாகவும் கருணா கூறுகின்றார்.

கருணா அப்படி கூறும் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட ஒரு கருணாவை காரணமாக சொல்லமுடியாது. தமிழீழ விடுதலை போரின் ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் முகம் தெரியாத பல இருக்கின்றார்கள். பலரின் வியர்வையும் குருதியும் சிந்தப்பட்டுள்ளது. கருணாவின் உதவிகள் இல்லாமல் ஓயாத அலை-1, மாங்குளம், கொக்காவில் தாக்குதல், சூரியகதிர், யாழ்தேவி முறியடிப்பச்சமர்கள் போன்ற சமர்களிலே புலிகள் வரலாற்று வெற்றிகளை சாதித்தார்கள் என்பது கருணாவுக்கு மீண்டும் ஒருதடவை ஞாபகமூட்டுவோம்.

உரிமை கேட்டு 21 வருடங்கள் புலிகள் அமைப்பிலிருந்து போராடிய கருணா இன்று கிழக்கு மக்களை சிங்கள தேசத்திடம் அடகுவைத்து, தானும் தனது நண்பர்களும் சிங்களத்தின் நடாளுமன்றத்தை அலங்கரிப்பதோடு கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகின்றார்களாம். விடுதலைப் புலிகளை அழிக்கப்போகின்றோம், விரைவில் அழித்தவிடுவோம் என சிங்களம் தொண்டை கிழிய கத்திவரும் வேளையில் சிங்களம் ஒருவேளை விடுதலை புலிகளை அழித்துவிட்டால் கருணா செல்லாக்காசாகிவிடுவார் என்பதனை இந்த இடத்தில் ஞாபகமூட்டுகின்றறோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கும் வரைக்குமே கருணா என்கின்ற துரோகிக்கு சிங்களம் முக்கியத்துவம் கொடுக்கும். அதன் பின்னர் அவர் நாய்க்கும் கேவலமான ஒரு நிலைக்கு வருவார் என்பது இன்று ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் விளங்கும் வேளையில் கருணா மட்டும் புரிந்துகொள்ள மறுப்பது வேதனை தருகின்றது. அடுத்துவரப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலினை குறிவைத்திருக்கும் கருணா ஒட்டு மொத்த தென் தமிழீழ மக்களின் வாக்குகளையும் சூறையாடி சிங்கள அரசுக்கு அர்ப்பணித்து தானும் தனது சகாக்களும் சுகபோக வாழ்வு வாழ பெரும்திட்டம் தீட்டியுள்ளமை அவரது நேர்காணலில் மூலம் தெரிகின்றது.

தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டிய நேரமிது. அவ்வாறு இருப்பதன் மூலம் துரோகிகளை வரலாற்றில் இருந்து துடைத்தெறியமுடியும்.

தமிழ் மக்கள் ஒன்றியம்
மட்டக்களப்பு மாவட்டம்

நன்றி பதிவு
http://www.pathivu.com/news/1304/34//d,view.aspx

Wednesday, January 14, 2009

தமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது ?

அருமையாக ஆங்கிலத்தில் ஓளிப்பட காட்சியுடன் சிறப்பான முறையிமல் தொகுக்கப்பட்ட இந்த பதிவு அழகாக தமிழர்களின் நிலையை எடுத்து காட்டுகிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.

Tuesday, January 13, 2009

உலகே இந்த கொடுமை நீ கண்டும் காணாமல் இருப்பது ஏன்

இந்த வீடியோவை பாருங்கள், என்ன ஒரு பயம் இவர்களிடம். இதை பார்த்துமாடா நீங்க இன்னும் சிங்கள ஜால்ரா அடிக்கறீங்க.





http://www.tamilkathir.com/videos

Monday, January 12, 2009

திருமாமளவன் சாகும்வரை உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்ற

உண்மையான தமிழன்

நான் இதை வரவேற்று அந்த உணர்வாளனிற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எம்மிலும் பலர் இருக்கின்றார்கள் எங்கே தங்களை இனம்காட்டலாம் என்றுதான் முன்வருவார்களேயொழிய இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்

நன்றிகள் எங்களுக்காக சாகத்துனிந்த தமிழன் பாராட்டுக்கள்


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27997

பொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49973

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி
[ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 05:50 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இந்த எறிகணைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பொதுமக்கள் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் வீடொன்றின் மீது வீழ்ந்து வெடித்துள்ள எறிகணைகளால் முல்லைத்தீவு சிலாவத்தையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

காத்தான் துரைச்சாமி (வயது 60)
துரைச்சாமி சின்னம்மா (வயது 55)
துரைச்சாமி தமிழினி (வயது 17)

ஆகியோருடன் சிறுவனான சு.தவக்குமார் (வயது 17) என்பவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கலாதீபன் திவ்யா (வயது 05)
கலாதீபன் மஞ்சு (வயது 25)
மரியம்மா (வயது 60)
ச.சுப்பையா (வயது 62)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சுப்பையா தனது கால்களை இழந்துள்ளார்.

நன்றி: புதினம்

சென்னையில் சிங்கள பிக்குககள், வக்கீல்கள் மோதல் !

சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிட்சுக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிட்சுக்கள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம்.

இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் நேற்று புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர்.

அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிட்சுக்களைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் பார் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த புத்த பி்ட்சுக்கள், வக்கீல்களுடன் வாதம் புரிந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது புத்த பிட்சுக்கள், வக்கீல்களை தாக்கியுள்ளனர்.

பதிலுக்கு லஷ்மன் என்கிற பிட்சுவை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

பின்னர் இரு தரப்பும் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வக்கீல் காமராஜ் மற்றும் பிட்சுக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

காமராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிட்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் பரிசீலித்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

Sunday, January 11, 2009

இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா?

அன்றைக்குத் தமிழர்கள், `கங்கைகொண்டான்', `கடாரம் வென்றான்' என்பது மட்டும் பழங்கதையாகவில்லை.இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா? என தமிழகத்திலிருந்து வரும் வார இதழ் குமுதம் கேள்வி எழுப்பியுள்ளது....

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....

தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் `கெடு' விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப்போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் `சுற்றுலா' போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர்களைத் தூக்கிச் சிறையில் தள்ளினார்கள்.

இன உணர்வைக் காப்பதாகச் சொல்லி கவிதையும் எழுதலாம். கூட்டணி தர்மம் அதைவிட மேலோங்கித் `தண்டனை'யும் அளிக்கலாம்.

இன உணர்வுக்கு வால்; கூட்டணி உறவுக்குத் தலை.

இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துவிட்டதாக அறிவிக்கிறது. முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஒண்டியிருந்த கொஞ்சம் நிழலையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனைப் பிடிக்கும் முயற்சியில் நடக்கும் இந்த இனக் கொடூரத்தை விலகி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இலங்கை பற்றி எரியும்போது இங்குள்ள கட்சிகள் திருமங்கலத்தில் தங்களுக்குள் மோதி துணை ராணுவத்தை வரவழைக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன.

புலிகளுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது என்பது வேறு; இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது வேறு.

இந்த இரண்டையும் சேர்த்துக் குழப்பி, ஈழத் தமிழர்களின் பிரச்னையைப் பார்க்க மறுக்கிற எதிர்நிலையில் காங்கிரஸுக்கு இங்குள்ள கட்சிகள் எந்தவிதத்திலும் சளைத்தவை அல்ல.

இல்லையென்றால் இவர்களின் மௌனத்திற்கும் செயலற்ற தன்மைக்கும், இயலாமைக்கும் என்ன அர்த்தம்? என கேட்டுள்ளது.

http://www.tamilseythi.com/tamilnaadu/kumu...2009-01-11.html

Ramasamy slams Indian PM over Sri Lanka war

A Malaysian Tamil politician came down heavily on Prime Minister Manmohan Singh for not condemning the killing of Tamils in Sri Lanka in the ongoing ethnic war and, instead, referring to Gaza and sympathising with Palestinians.

Penang Deputy Chief Minister P. Ramasamy, who was the guest of honour at the session on media and entertainment at the Pravasi Bharatiya Divas here, said: “Hundreds of Tamils are being killed in Sri Lanka. Yet, the Prime Minister did not make a single statement about it. We Tamils in Malaysia are concerned about our brothers and sisters in Sri Lanka.”

He pointed out that Singh talked about the Gaza killings.

On the situation in Malaysia, he said Tamils there would want “India to take a look at the situation.”

The session turned out to be one where speakers from the Indian diaspora aired views ranging from criticising their governments to inviting investments to their cities.

Loganathan Naidoo, Deputy Mayor of eThekwini (Durban), said his city was inviting Indian producers to film their movies there.

A public-private partnership studio was being set up in Durban along the coast. Naidoo said his city wanted a sister city partnership with Chennai so that both could “help build bridges across the Indian Ocean.” He was awaiting a response from Chennai.

N. Ravi, editor of The Hindu, chaired the session. Responding to a question on how India should be projected abroad, Ravi said it should be open and transparent.

“We should be vigorous in our debates. Let the outside world see us as we are. We have nothing to hide in a democracy.”

He disagreed with the view that good news alone should be projected abroad.

Shan Chandrasekar, chief executive officer, Asian Television Network International, Canada, detailed his network’s presence and how they operated in a niche market.

He was “emotionally touched” with the observations of the Malaysian deputy chief minister, and said if a migrant population did not absorb the local culture, it ran the risk of ending up at the receiving end as in Fiji or Uganda. — The Hindu

thanks http://tamilinsight.org/mydesk/blog/ramasamy-slams-indian-pm-over-sri-lanka-war/

Saturday, January 10, 2009

சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப் படுகொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முரசுமோட்டைப் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் முன்னரங்க பகுதிக்கு இன்று சனிக்கிழமை பொதுமக்கள் சென்றபோது அவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களில் சிறுவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் தப்பியவர்கள் படையினரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்களின் உடலங்களும் படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

உடலங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் பிடிபட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை.

http://www.puthinam.com/full.php?2b24OOA4b33C6Df04dctVo0da0eA4AA24d2ISmA3e0dC0Mtlce02f1eW2cc4OcY4be

Friday, January 9, 2009

ஆனந்த விகடன்:தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே:

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது.
ஆனந்த விகடனின் தலையங்கம்:

'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது சிறிலங்கா இராணுவம்.

'ஒரு தமிழனைக் கொன்றால், நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என சிறிலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது.

கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!

இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்து கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவிசாய்க்கவில்லை.

நம் இராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 'மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திரமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது டெல்லி!

இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணா மூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ சிறிலங்கா அரசு என்ற பலமான சந்தேகம்தான் எழுகிறது!

நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!

'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?' என்று பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

Wednesday, January 7, 2009

தமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்

ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர் களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பெறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (11.01.2009) வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் சில பகுதிகள்:

பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் சிறீலங்கா வசம் போய்விட்டது புலிகளுக்கு பின்னடைவுதானே..?

கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல கட்டுப்பாட்டுக் குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.

தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப்புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்...?

யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவ தென்பது தந்திரோபாயம்

இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது சிறீலங்கா அரசு?

முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே சிறீலங்கா அரசு நினைக்கின்றது. ஈழத்தமிழர்கள் யாருமற்ற அனா தைகள் அல்லர் என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர் கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை யும் சிறீலங்கா அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா...?

வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டடங்களை உருவாக்கு வோம். ஆனால் காவல்துறை வங்கி, நிதித்துறை என்பன இடம் பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப் பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.

சமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உறித்தெறிந்து சிங்களப் படையினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களை பற்றி...?

சிங்கள அரசப் படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயற்பாடானது சிங்கள அரசின் பேரினவாதச் சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறான அநாகரிகச் செயற்பாடுகளைப் பார்த்த பின்னராவது அனைத்துலகச் சமூகம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உரிமைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும்.

புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட் டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா?

உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத் திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.

புலிகளைவிட சிறிலங்கா அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே...?

இது எமக்கு மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்தியா வின் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையோடு பிற நாடுகள் கைகோத்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டு மென எதிர்பார்க்கிறோம்.

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?

தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத் துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட் களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்றார் நடேசன்.

நன்றி : http://files.periyar.org.in/viduthalai/20090107/news09.html

Sunday, January 4, 2009

தமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள்.

http://news.yahoo.com/s/prweb/20090101/bs_prweb/prweb1810364;_ylt=Ahg68ML7xeCxlt317AAiIC3NybYF

இப்படி ஜரோப்பிய புலம் பெயர் தமிழரும் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து சென்று சுதந்திரமாக வாழ் விரும்புகிறோம் என எமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

இதை ஒரு தேர்தல் மாதிரி நடாத்தி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

Saturday, January 3, 2009

நாளும் சாகும் எம் தமிழ் இனம் காத்திட -

ஏற்கெனவே போர்ப்படைத் தாக்குதலால், அழிந்துபட்ட கிளி நொச்சியை விட்டு மக்கள் வெளியேறி விட்ட நிலையில், மக்கள் நட மாட்டம் இல்லாத வெறும் கிளிநொச்சியைப் பிடித்த இலங்கை ராணுவ வெற்றி, தோல்விக்குச் சமமான வெற்றி என விவரித்துத் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமிகு அறிக்கை வருமாறு:-

நேற்று மதியம் ஒரு நாளேட்டின் செய்தியாளர் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன வென்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்தபோது நான் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வ மான செய்தி வரட்டும்; அதற்குப் பிறகு அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று மிகச் சுருக்கமாகப் பதிலளித்தேன்.

காலி செய்துவிட்ட நகரம்

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்கள்; வாழ்வா, சாவா என்ற அந்த ஜீவ மரணப் போராட்டத்தில், விடுதலைப்புலி களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், தமிழ் இனத்தையே கூண்டோடு, பூண்டோடு அழித்துவிடத் திட்டமிட்டுள்ளது இலங்கையின் சிங்கள இராஜபக்சே அரசு!

விடுதலைப்புலிகளின் தலைமையிடமாக இருந்த கிளிநொச் சியைக் கைப்பற்றி விட்டோம் என்று அறிவித்ததை அதிகாரப் பூர்வமாக புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

இதுபற்றிய அவர்தம் இணைய தளத்தில்,

மக்கள் நடமாட்டம் அறவே இல்லாதது கிளிநொச்சி. ஆள் நடமாட்டம் இல்லாமல் கிட்டத்தட்ட ஆவி நகரம்போல் மாறிவிட்ட நகரைத்தான் (சிங்கள) இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்நகரைவிட்டு பொதுமக்கள் எப்போதோ காலி செய்து வடகிழக்குப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

இங்குள்ள கட்டடங்கள் இராணுவத்தின் தொடர் தாக்குதலில் அழிந்துவிட்டன. கடுமையான தாக்குதலுக்குப் பிறகும் புலிகள் தரப்பில் உயிரிழப்பு குறைவே என்றும் அச்செய்தி மேலும் தெரி வித்துள்ளது.

இழந்ததைப் பிடித்தனர் புலிகள்

முன்னதாக 1996 இல் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. அதை 1998 பிப்ரவரியில் மீண்டும் புலிகள் கைப்பற்றினர் என்பது பழைய வரலாறு.

சுமார் 7 நாடுகளின் - வல்லரசு நாடுகள் உள்பட வியூகம் வகுத் துதான் ஆள் நடமாட்டமில்லாத சூன்யப் பிரதேசமான கிளி நொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறிடும் நிலையில், இது ஒரு தற்காலிகப் பின்னடைவு ஏற்கெனவே புலிகள் தரப்பில் பின் வாங்குதல் என்பது, எந்த ஒரு யுத்தத்திலும் வெற்றி கரமான வாபஸ் (Successful Retreat) என்பது பலரும் பயன் படுத்தும் போர்த் தந்திரங்களில் ஒரு பகுதிதான் என்பது உலகறிந்த ரகசியம்.

தோல்விக்கு ஈடான வெற்றி

யாரும் வசிக்காமல், மக்களும், அவர்களைப் பாதுகாக்கப் போராடும் புலிகளும் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி (Phyrhic
Victory - இப்படி ஒரு ஆங்கிலச் சொல் உண்டு)யாகும்.

அதுபோலவே, ‘Battles may be lost; but war will be won’ சண்டைகளில் தோற்பது உண்டு; ஆனால், அவர்கள், போரில் வெல்லுவோம் என்று உறுதி படைத்த போராளிகளாவார்கள்.

வாழ்வுரிமைக்குப் போராடும் நிலையில், இலங்கையில் கிளி நொச்சியைப் பிடித்துவிட்டதால் போர் முடிந்துவிட்டது என்று அவர்களே கூட ஒப்புக்கொள்ள முடியாத நிலையில்தான் சிங்கள அதிபரும், அதன் தளபதியும் உள்ளனர்!

அங்கே நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போரில் இப்படிப் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள்.

பதுங்கும் புலி - பாயும்

புலி பதுங்கினால் மேலும் தீவிரமாகப் பாயும் என்பது தமிழ்ப் பழமொழி.

எப்படியாயினும் இடையில் எமது ஈழத் தமிழர்கள் இப்படிக் குண்டு மழையால் கொல்லப்பட்டு மடிகின்றனரே, எவ்வளவு காலம் இந்த ரத்த ஆறு ஓடவேண்டுமோ?

ஓ... தமிழ்ச் சாதியே! உன் நிலைக்கு என்றுதான் விடுதலை? விடியல்? என்றே இதயத்தில் வடியும் இரத்தத் துளிகளையும் துடைத்துக் கொண்டு கேட்கிறோம்!

விடியாத இரவுகள் இல்லை; முடியாத போர்களும் இல்லை! ஈழத் தமிழரின் சுதந்திர உணர்வுக்குக் கொடுக்கும் விலைகளும், தலைகளும் இப்படி நாளும் பெருகவேண்டுமோ?

அய்யகோ!

இன உணர்வுமட்டுமா - மனிதநேயம்கூட செத்து சுண்ணாம் பாகிவிட்டதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!

பத்துத் தடவை பாடை வராது என செத்து மடிய செருகளம் கண்ட போராளிகளுக்காக நாம் வருந்தவில்லை.

சாகத் தேவையில்லாத அப்பாவி மக்கள், பிஞ்சுகள்- என்னருந் தமிழ் இனம் இப்படி நாளும் அழியவேண்டுமா?

நியாயம் பேசும் உலகமே! நீ ஏன் ஊமையானாய்?

3.1.2009


தலைவர்,
திராவிடர் கழகம்.