ஏற்கெனவே போர்ப்படைத் தாக்குதலால், அழிந்துபட்ட கிளி நொச்சியை விட்டு மக்கள் வெளியேறி விட்ட நிலையில், மக்கள் நட மாட்டம் இல்லாத வெறும் கிளிநொச்சியைப் பிடித்த இலங்கை ராணுவ வெற்றி, தோல்விக்குச் சமமான வெற்றி என விவரித்துத் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமிகு அறிக்கை வருமாறு:-
நேற்று மதியம் ஒரு நாளேட்டின் செய்தியாளர் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன வென்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்தபோது நான் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வ மான செய்தி வரட்டும்; அதற்குப் பிறகு அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று மிகச் சுருக்கமாகப் பதிலளித்தேன்.
காலி செய்துவிட்ட நகரம்
ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்கள்; வாழ்வா, சாவா என்ற அந்த ஜீவ மரணப் போராட்டத்தில், விடுதலைப்புலி களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், தமிழ் இனத்தையே கூண்டோடு, பூண்டோடு அழித்துவிடத் திட்டமிட்டுள்ளது இலங்கையின் சிங்கள இராஜபக்சே அரசு!
விடுதலைப்புலிகளின் தலைமையிடமாக இருந்த கிளிநொச் சியைக் கைப்பற்றி விட்டோம் என்று அறிவித்ததை அதிகாரப் பூர்வமாக புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
இதுபற்றிய அவர்தம் இணைய தளத்தில்,
மக்கள் நடமாட்டம் அறவே இல்லாதது கிளிநொச்சி. ஆள் நடமாட்டம் இல்லாமல் கிட்டத்தட்ட ஆவி நகரம்போல் மாறிவிட்ட நகரைத்தான் (சிங்கள) இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந்நகரைவிட்டு பொதுமக்கள் எப்போதோ காலி செய்து வடகிழக்குப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
இங்குள்ள கட்டடங்கள் இராணுவத்தின் தொடர் தாக்குதலில் அழிந்துவிட்டன. கடுமையான தாக்குதலுக்குப் பிறகும் புலிகள் தரப்பில் உயிரிழப்பு குறைவே என்றும் அச்செய்தி மேலும் தெரி வித்துள்ளது.
இழந்ததைப் பிடித்தனர் புலிகள்
முன்னதாக 1996 இல் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. அதை 1998 பிப்ரவரியில் மீண்டும் புலிகள் கைப்பற்றினர் என்பது பழைய வரலாறு.
சுமார் 7 நாடுகளின் - வல்லரசு நாடுகள் உள்பட வியூகம் வகுத் துதான் ஆள் நடமாட்டமில்லாத சூன்யப் பிரதேசமான கிளி நொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறிடும் நிலையில், இது ஒரு தற்காலிகப் பின்னடைவு ஏற்கெனவே புலிகள் தரப்பில் பின் வாங்குதல் என்பது, எந்த ஒரு யுத்தத்திலும் வெற்றி கரமான வாபஸ் (Successful Retreat) என்பது பலரும் பயன் படுத்தும் போர்த் தந்திரங்களில் ஒரு பகுதிதான் என்பது உலகறிந்த ரகசியம்.
தோல்விக்கு ஈடான வெற்றி
யாரும் வசிக்காமல், மக்களும், அவர்களைப் பாதுகாக்கப் போராடும் புலிகளும் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி (Phyrhic
Victory - இப்படி ஒரு ஆங்கிலச் சொல் உண்டு)யாகும்.
அதுபோலவே, ‘Battles may be lost; but war will be won’ சண்டைகளில் தோற்பது உண்டு; ஆனால், அவர்கள், போரில் வெல்லுவோம் என்று உறுதி படைத்த போராளிகளாவார்கள்.
வாழ்வுரிமைக்குப் போராடும் நிலையில், இலங்கையில் கிளி நொச்சியைப் பிடித்துவிட்டதால் போர் முடிந்துவிட்டது என்று அவர்களே கூட ஒப்புக்கொள்ள முடியாத நிலையில்தான் சிங்கள அதிபரும், அதன் தளபதியும் உள்ளனர்!
அங்கே நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போரில் இப்படிப் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள்.
பதுங்கும் புலி - பாயும்
புலி பதுங்கினால் மேலும் தீவிரமாகப் பாயும் என்பது தமிழ்ப் பழமொழி.
எப்படியாயினும் இடையில் எமது ஈழத் தமிழர்கள் இப்படிக் குண்டு மழையால் கொல்லப்பட்டு மடிகின்றனரே, எவ்வளவு காலம் இந்த ரத்த ஆறு ஓடவேண்டுமோ?
ஓ... தமிழ்ச் சாதியே! உன் நிலைக்கு என்றுதான் விடுதலை? விடியல்? என்றே இதயத்தில் வடியும் இரத்தத் துளிகளையும் துடைத்துக் கொண்டு கேட்கிறோம்!
விடியாத இரவுகள் இல்லை; முடியாத போர்களும் இல்லை! ஈழத் தமிழரின் சுதந்திர உணர்வுக்குக் கொடுக்கும் விலைகளும், தலைகளும் இப்படி நாளும் பெருகவேண்டுமோ?
அய்யகோ!
இன உணர்வுமட்டுமா - மனிதநேயம்கூட செத்து சுண்ணாம் பாகிவிட்டதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!
பத்துத் தடவை பாடை வராது என செத்து மடிய செருகளம் கண்ட போராளிகளுக்காக நாம் வருந்தவில்லை.
சாகத் தேவையில்லாத அப்பாவி மக்கள், பிஞ்சுகள்- என்னருந் தமிழ் இனம் இப்படி நாளும் அழியவேண்டுமா?
நியாயம் பேசும் உலகமே! நீ ஏன் ஊமையானாய்?
3.1.2009
தலைவர்,
திராவிடர் கழகம்.
Saturday, January 3, 2009
நாளும் சாகும் எம் தமிழ் இனம் காத்திட -
Posted by நிலவு பாட்டு at 2:37:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment