இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது.
ஆனந்த விகடனின் தலையங்கம்:
'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது சிறிலங்கா இராணுவம்.
'ஒரு தமிழனைக் கொன்றால், நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என சிறிலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது.
கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!
இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்து கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவிசாய்க்கவில்லை.
நம் இராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 'மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திரமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது டெல்லி!
இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணா மூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ சிறிலங்கா அரசு என்ற பலமான சந்தேகம்தான் எழுகிறது!
நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!
'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?' என்று பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!
Friday, January 9, 2009
ஆனந்த விகடன்:தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே:
Posted by நிலவு பாட்டு at 8:33:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
http://pithatralgal.blogspot.com/2009/01/blog-post_10.html
தமிழினத் தலைவர் is just acting..
He just want to be in power..
People will not believe him anymore..
சரி தான் வீட்டுக்கு போக சொல்லுங்கள்,
தமிழகமாவது உருப்படும்
///'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?'///
அது என்னய்ய கேள்வி?
//நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!//
//நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!
//
இதை நினைச்சாதான் தலை முதல் கால் வரை பத்திக்கிட்டு எரிகிறது!
//நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!
//
கனிமொழி உறுப்பினராவதற்கும், மாறனை தூக்குவதற்கும், ராஜா க்கு கப்பல் துறை வாங்கிவதற்கும் தெரிந்த இவருக்கு தமிழன் இனபடுகொலையை தடுக்க தெரியாத என்ன, ஏன் இந்த மவுனம்.
Post a Comment