ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர் களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பெறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (11.01.2009) வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் சில பகுதிகள்:
பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் சிறீலங்கா வசம் போய்விட்டது புலிகளுக்கு பின்னடைவுதானே..?
கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல கட்டுப்பாட்டுக் குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.
தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப்புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்...?
யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவ தென்பது தந்திரோபாயம்
இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது சிறீலங்கா அரசு?
முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே சிறீலங்கா அரசு நினைக்கின்றது. ஈழத்தமிழர்கள் யாருமற்ற அனா தைகள் அல்லர் என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர் கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை யும் சிறீலங்கா அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா...?
வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டடங்களை உருவாக்கு வோம். ஆனால் காவல்துறை வங்கி, நிதித்துறை என்பன இடம் பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப் பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.
சமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உறித்தெறிந்து சிங்களப் படையினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களை பற்றி...?
சிங்கள அரசப் படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயற்பாடானது சிங்கள அரசின் பேரினவாதச் சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறான அநாகரிகச் செயற்பாடுகளைப் பார்த்த பின்னராவது அனைத்துலகச் சமூகம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உரிமைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும்.
புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட் டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா?
உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத் திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.
புலிகளைவிட சிறிலங்கா அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே...?
இது எமக்கு மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்தியா வின் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கையோடு பிற நாடுகள் கைகோத்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?
இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டு மென எதிர்பார்க்கிறோம்.
தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?
தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத் துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட் களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்றார் நடேசன்.
நன்றி : http://files.periyar.org.in/viduthalai/20090107/news09.html
Wednesday, January 7, 2009
தமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்
Posted by நிலவு பாட்டு at 9:36:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//தமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம் //
அரசியல்வாந்திகளை தவிர!
Post a Comment