ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென்று காணாமல் போய்விட்டதை அடுத்து, இன்று புதன்கிழமை காலையிலிருந்து அவரின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் வனப்பகுதியில் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் இருந்து சித்தூருக்கு காலை சுமார் எட்டரை மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர்.
கர்னூலைக் கடந்து செல்லும்போது சுமார் ஒன்பதரை மணி அளவில்
அவரது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதுவரை முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட பல ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால், அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
முதல்வரைப் பற்றியும் அவரது ஹெலிகாப்டர் பற்றியும் தகவல் கிடைத்தால் கிராமப்புற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆந்திர மாநில நிதியமைச்சர் ரோசையா மற்றும் தலைமைச் செயலர் ரமாகாந்த் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியை நாடியிருப்பதாகவும், மேலும், அமெரிக்காவின் செயற்கைக் கோள்கள், இன்று காலை ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் சென்றபோது ஏதாவது படம் பிடித்திருந்தால் அதுபற்றிய விவரங்களைக் கொடுக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே டெல்லியில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, இரவு நேரத்திலும் தேடுதல் நடவடிக்கையைத் தொடருமாறு ஆந்திர அரசை அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்
Wednesday, September 2, 2009
ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொடர்கின்றன
Posted by நிலவு பாட்டு at 8:25:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இந்த ஹெலிகாப்டர் எங்க முதல்வருக்கு வாடகைக்கு கிடைக்குமா ??
வாடகைக்கு என்ன சொந்தமாகவே வாங்கி கொடுத்து விடலாம்.
Post a Comment