Monday, September 21, 2009

பிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர், ‘’நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்’’என்று தெரிவித்தார்


நன்றி நக்கீரன்

2 Comments:

Anonymous said...

அடேங்கப்பா,அப்பேற்பட்ட புத்திசாலியா இந்த சீமான் முண்டம்.

சிறுத்தை said...

தோழர்! நிலவுபாட்டு.. செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் ஆரம்பிக்கபட்டுள்ளது.. அதில் கட்சி உறுப்பினர் படிவங்களும் உள்ளன இணைய விரும்புவோர் ஆன் லைனிலெயெ இணைந்து கொள்ளலாம்.. இச்செய்தியை தனி இடுகையாக வெளியிடுவீர்க்ள் என நம்பிக்கையுடன்..

http://naamtamilar.org

தோழர் சிறுத்தை..