இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் மிகவும் கவலையளிக்கிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் இவான் லீவிஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக அந்நாட்டு பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்,
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்பபடும் விதம் குறித்து பிரிட்டிஷ் அதிகளவு கவலையடைந்துள்ளது.
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் நடமாட சுதந்திரமில்லை. இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் கட்டுப்பாடுகள், இடம் பெயர்வின்போது தங்கள் குடும்பத்தவர்களை பிரிந்த குழந்தைகளை மீண்டும் பெற்றோர்களிடம் இணைத்தல் போன்ற விஷயங்கள் குறித்து கவலை அடைந்துள்ளோம்.
இலங்கையில் அதிகளவிற்கு தமிழ் மக்களைப் பாதிக்கும் ஆள்கடத்தல்கள், காணாமற்போதல், ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் என்று தொடர்ந்து வெளியாகும் தகவல்களாலும் நாங்கள் கவலையடைந்துள்ளோம்.
இந்த விஷயங்கள் குறித்து இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதுடன், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துவற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கையில் வட பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை சர்வதேச தராதரத்துடன் நடத்துமாறு ஒவ்வொரு சந்தப்பத்திலும் இலங்கை அரசுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
நன்றி நக்கீரன்
2 Comments:
அய்யா இத்தனை நாள் என்னுடைய இடுகையை தாங்கள் வெளியிடவில்லை இதையாவது வெளியிடுவீர்க்ள்
http://siruthai.wordpress.com/2009/09/11/தமிழக-அடிமைகளை-நாடிபிடித/
என நம்பிக்கையோடு...நான் அத்தனை பிரபல பதிவர் இல்லை நான் இடுகையை சேர்த்தாலும் அதை தமிழ்மணத்தில் நீக்கிவிடுகிறார்கள்!
மன்னிக்க வேண்டும் நண்பரே பின்னூட்டங்களை சரியாக பார்க்க நேரமில்லை, அதனால் உங்களது விடுபட்டுள்ளது.
கண்டிப்பாக உங்கள் பதிவினை இடுகிறேன். எப்போதெல்லாம் புதிய பதிவு இடுகிறோர்களோ அப்போதெல்லாம் ஒரு பின்னூட்டம் இடுங்கள் கண்டிப்பாக பதிவிடுகிறேன்.
Post a Comment