Friday, September 11, 2009

தமிழக அடிமைகளை நாடிபிடித்து பார்க்கவந்த ராகுல் என்ற ஆரிய முதலாளி!

இத்தனை நாள் தமிழ்நாடு தமிழர்கள் என்றால் வேப்பங்காயாய் இருந்த தமிழ் எதிரிகளுக்கு இன்று குளிர்விட்டு போய்விட்டது ராகுல் என்பவன் தமிழ்நாட்டிற்கு வந்து தாராளமாக சுற்றி திரிகிறான்.. ஈழ தமிழர்களுக்காக தானும் தங்கள் குடும்பமும் உயிரை குடுத்து(எடுத்து) பாடுபடுவதாக புளுகுகிறான்.இவர்களை வளர்த்து விட்ட திராவிடம் பேசும் கழுதைகள் இன்று அவர் நம்மை வந்து சந்திக்கவில்லையாம் ..ஒப்பாரி வேறு!

உண்மையில் அவன் வந்தது தமிழக ஆட்டு மந்தைகள் எதற்கு விலைபோவார்கள் என கணிப்பதற்கே! கல்லூரி மாணவர்கள் இருந்து காய்கறி வியாபாரிகள் வரை..அரவணிகள் வரை .. அனைவரும் போராடி பார்த்தும்..16 பேருக்கும் மேல் தீக்குளித்து செத்தும் கொஞ்சம் தமிழுணர்வு மேல் எழும்பிய அந்த நேரத்தில் அதை அரசியல் சாணக்கியமும் தமிழின வரலாற்றின் முதுபெரும் தமிழ் ஈன தலைவர் எப்படி அமுக்கினார்.. நமக்கு கொஞ்சமும் தமிழ்நாட்டில் தேறாது என நினைத்த பாராளுமன்ற தேர்தலில் இந்த இந்திய விசுவாசி இவ்வளவு சீட்டுகளை பெற்று கொடுத்திருக்கிறாரே! எப்படி இது சாத்தியம்? என ஆராயவே மெனக்கெட்டு இங்கு வந்திருக்கிறான்.. தமிழனை சக தமிழனை பற்றி தேர்தல் நேரத்தில் சிந்திக்க விடாமல் செய்தது எது? இதை இந்த மந்தைகளிடம் ஆராய்ச்சி செய்ய வடகத்தியான்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம் கீழுள்ள படங்களே சான்று!.




பகுத்தறிவு ..பகுத்தறிவு..என ஓலமிட்டு பகுத்தறிவு இல்லாமல் இந்த தமிழ் சமுதாயத்தினை சிந்திக்கவிடாமல் பாழ்படுத்தியவர்களே! அதே ஆயுதத்தினை ஏந்தி உங்கள் வேலைக்கும் ஆப்புவைக்க ஒருவன் கிளம்பி விட்டான்..இனி சட்டமன்ற தேர்தல் வரபோகிறது.. அடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரசு கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையோடு சொல்கிறான்.. தமிழ் தமிழ் நான் தமிழனுக்காக கடலில் மிதப்பேன்.. செருப்பாய் இருப்பேன்.. என நீங்கள் பீலா விட்டாலும் தமிழனுக்கு மேல் உள்ள படங்களில் உள்ளதை கொடுத்தால் போதும்! இனவுணர்வாவது மண்ணாங்கட்டியாவது.. இங்கு தமிழனுக்கு பிரச்சனை யார் அதிகம் கொடுப்பார்கள் என்பது? நிச்சயமாக நீங்கள் அதிகம் கொடுக்க முடியாது.. வடகத்தியான்களிடம் பணத்தால் போட்டி போட முடியாது..
சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொண்டீர்கள்! இனி இருப்பதையாவது காப்பாற்றி கொள்ளுங்கள்.. அதாவது உங்கள் தொல்லை காட்சிகளை மானாட மார்பாட அதை பார்த்து தமிழன் கோவணத்தோடு ஆட..

கபில் சிபில் என்ற கபோதி இந்த மந்தைகளின் ஆட்டத்தினை பார்த்துதான் சொல்கிறான் இந்தியை தமிழகத்தில் கட்டாயம் ஆக்குவோம் என்று..ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிட வில்லையே! புரியவில்லையா? அடுத்த அறிக்கை இப்படித்தான் வரும்.. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அன்றே சொன்னார் அண்ணா! புரியவில்லையா? உடன் பிறப்பே? என.. இந்த பதிவை படித்துவிட்டு செல்லும் அனைவரும் “ஏக் காவுமே ஏக் கிசான் ரகுதாத்தா”! என பேசி பழகவும்

பின் குறிப்பு: இது யாரையும் இழிவுபடுத்தி எழுதும் நோக்கமல்ல பெரும்பான்மையோர் தமிழகத்தில் இவ்வாறுதான் உள்ளார்கள் என்பதற்காகவே!(தமிழுணர்வாளர்கள் பொறுத்தருள்வார்களாக)..யாரையும் புண்படுத்தி இருந்தால் முன்கூட்டியே மன்னிக்க வேண்டுகிறேன்! நான் தமிழ் இன வெறியன் இல்லை. உலகை ஆண்ட தமிழினம் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனைப்படும் உங்களில் ஒருவன். 5000 வருட தமிழன் என்கிற அடையாளம் மறந்து இந்தியன் என்கிற போலி அடையாளத்தை மறுப்பவன்.

நன்றி http://siruthai.wordpress.com/2009/09/11/தமிழக-அடிமைகளை-நாடிபிடித/

0 Comments: