Saturday, September 5, 2009

நண்டு கொழுத்தால் வளையில இருக்காது, விஜய் கொழுத்தால் ?

நிஜத்திலும் நல்லா அப்பாவி போலே நடிக்கிறானயா,இந்த விஜய்!! ஆமை புகுந்த வீடும், சோநியா புகுந்த நாடும் அம்பேல்

நண்டு கொழுத்தால் வளையில இருக்காது; நரி கொழுத்தால் காட்டுல இருக்காது; இப்போது இந்த நடிகர் கொழுத்திருக்கிறார் போலிருக்கிறது. இவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லையோ என்னவோ? எல்லோரும் எம். ஜி. இராமச்சந்திரனாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இவர்கள் இவர்களாகவே இருக்க முடியாத போது...............? எப்படியிருந்தாலும் இவர் எதற்கும் தகுதியில்லாதவர்தான். இதன் மூலம் அதை நிரூபிக்கப் போகிறார்.

தமிழர்களை கொன்று குவித்துவிட்டு வரும் காங்கிரசுடன் கூட்டு சேர்வதற்கு தம் தொழிலுக்காக தமிழர்களை நம்பி இருக்கும் நடிகர்கள் சேர எப்படி துணிச்சல் வருகிறது? தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்!

தமிழ் நாட்டு தமிழருக்கும், ஈழதமிழருக்கும் துரோகத்தையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் காங்கிரசுடனா கூட்டு. இதுவரை நான் விஜயின் படங்களை பார்த்து வந்துள்ளேன், இனி பார்கமாட்டேன். உலக தமிழர்கள் அனைவரும் விஜயின் படங்களை புறக்கணிக்கவேண்டும். பணத்தாசை யாரை விட்டது.

4 Comments:

Anonymous said...

//தமிழ் நாட்டு தமிழருக்கும், ஈழதமிழருக்கும் துரோகத்தையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் காங்கிரசுடனா//

விஜய் மட்டும் என்ன புடுங்கிவிட்டான்னு அவன் படத்த தொடர்ந்து பார்த்து வந்தீங்க?

Joe said...

As such, most of his movies were/will be trash, so good4u!

Gokul said...

என்னங்க காங்கிரசுக்கு 17 எம்.பி சீட் அள்ளி கொடுத்த தமிழ் மக்கள்கிட்ட போய் நீங்க என்ன என்னவோ எதிர் பாக்கறிங்க...

தி.மு.க / காங்கிரஸ் கூட்டணியின் அமோக வெற்றியே 'ஈழம் , ஈழ ஆதரவு' போன்ற வார்த்தைகளை நீர்த்து போக செய்து விட்டது.

இப்போது தமிழக வாக்காளர்களுக்கு தேவை சினிமா கவர்ச்சி, தேர்தலில் பணம் , குவார்டர் , பிரியாணி ..மற்றபடி எதுவும் இல்லை.

Raj said...

இங்கே எவன் யோக்கியமா இருக்கான். உனக்கு வாய்ப்பு கிடச்சா நீயும் சேருவே.