இன்று காலை கிளிநொச்சி 58வது இராணுவ தலைமை காரியாலய முகாமினுள் ஆயுதங்களை பாரஊர்தி ஒன்றினுள் ஏற்றிக் கொண்டிருந்தபோது தற்செயலாக குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஏற்றும்போதே குண்டு வெடித்ததாகவும், இதன்போது எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-
இன்று காலை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் 58 வது படைப்பிரிவின் முகாமில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாகக் கேட்ட இக் குண்டுவெடிப்பால் கிளிநொச்சி அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சேத விபரங்கள் எதுவும் தற்போது கிடைக்கப்பெறவில்லை.
Sunday, October 4, 2009
கிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெடிப்பு
Posted by நிலவு பாட்டு at 6:23:00 PM
Labels: ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment